3310. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ أَبِي يُونُسَ الْقُشَيْرِيِّ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقْتُلُ الْحَيَّاتِ ثُمَّ نَهَى قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم هَدَمَ حَائِطًا لَهُ، فَوَجَدَ فِيهِ سِلْخَ حَيَّةٍ فَقَالَ " انْظُرُوا أَيْنَ هُوَ ". فَنَظَرُوا فَقَالَ " اقْتُلُوهُ ". فَكُنْتُ أَقْتُلُهَا لِذَلِكَ.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3310. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பாம்புகளைக் கொன்றுவந்தார்கள். பிறகு (அவற்றைக் கொல்வதைத்) தடை செய்தார்கள். (அதற்கு விளக்கம் கூறும் வகையில்) அவர்கள் சொன்னார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது (வீட்டுச்) சுவர் ஒன்றை இடித்தார்கள். பாம்புச் சட்டையொன்றை அதில் கண்டார்கள். அப்போது ‘‘அந்தப் பாம்பு எங்கேயிருக் கிறது என்று பாருங்கள்” என்று உத்தர விட்டார்கள். மக்கள் (தேடிப்பார்த்து அதைக்) கண்டுபிடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைக் கொன்றுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அதனால்தான் நான் அவற்றைக் கொன்றுவந்தேன்.

அத்தியாயம் : 59
3311. فَلَقِيتُ أَبَا لُبَابَةَ فَأَخْبَرَنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقْتُلُوا الْجِنَّانَ، إِلاَّ كُلَّ أَبْتَرَ ذِي طُفْيَتَيْنِ، فَإِنَّهُ يُسْقِطُ الْوَلَدَ، وَيُذْهِبُ الْبَصَرَ، فَاقْتُلُوهُ ".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3311. (தொடர்ந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)

(இந்த நிலையில்) அபூலுபாபா (ரலி) அவர்களை நான் சந்தித்தேன். அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள், (வீட்டிலுள்ள மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்லாதீர்கள்;112 குட்டைவால் உள்ள, முதுகில் இரண்டு வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட பாம்புகளைத் தவிர. ஏனெனில், அவை (கருவிலுள்ள) குழந்தை யைச் சிதைத்துவிடும்; பார்வையைப் பறித்துவிடும். ஆகவே, அவற்றைக் கொன்று விடுங்கள்” எனக் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்.113

அத்தியாயம் : 59
3312. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقْتُلُ الْحَيَّاتِ
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3312. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் பாம்பு களைக் கொன்றுவந்தார்கள்.

அத்தியாயம் : 59
3313. . فَحَدَّثَهُ أَبُو لُبَابَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ الْبُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا.
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3313. (தொடர்ந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

அப்போது அபூலுபாபா (ரலி) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய, வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்வதைத் தடை செய்தார்கள்” என்று தெரிவித்தார்கள். ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் அவற்றைக் கொல்வதை நிறுத்திவிட்டார்கள்.

அத்தியாயம் : 59
3314. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عَنْهَا ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْفَأْرَةُ، وَالْعَقْرَبُ، وَالْحُدَيَّا، وَالْغُرَابُ، وَالْكَلْبُ الْعَقُورُ "".
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3314. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங் கள் புனித (ஹரம்) எல்லையிலும் கொல்லப்படும். அவையாவன: எலி, தேள், பருந்து, (நீர்க்) காகம், வெறி நாய்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.114

அத்தியாயம் : 59
3315. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" خَمْسٌ مِنَ الدَّوَابِّ مَنْ قَتَلَهُنَّ وَهْوَ مُحْرِمٌ فَلاَ جُنَاحَ عَلَيْهِ الْعَقْرَبُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ، وَالْغُرَابُ، وَالْحِدَأَةُ "".
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3315. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து வகை உயிரினங்கள் உள்ளன. அவற்றை (ஹஜ் அல்லது உம்ராவுக்காக) யிஇஹ்ராம்’ கட்டிய ஒருவர் கொன்றுவிட் டாலும் அவர்மீது குற்றமேதும் இல்லை. தேள், எலி, வெறிநாய், (நீர்க்) காகம், பருந்து ஆகியவைதான் அவை.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115

அத்தியாயம் : 59
3316. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ كَثِيرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ رَفَعَهُ قَالَ "" خَمِّرُوا الآنِيَةَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْعِشَاءِ، فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً، وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ، فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتِ الْفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ "". قَالَ ابْنُ جُرَيْجٍ وَحَبِيبٌ عَنْ عَطَاءٍ فَإِنَّ لِلشَّيَاطِينِ.
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3316. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்துவையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். மாலையில் உங்கள் குழந்தை களை (வெளியே செல்ல விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவிச் செல்வதும் (பொருள்களையும் குழந்தைகளையும்) பறிப்பதும் நடக்கும்.

தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கி ழைக்கக்கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச்சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக் கூடும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்து. அவற்றில் சிலவற்றில் (யிஜின்கள்’ என்பதற்குப் பதிலாக) யிஷைத்தான்கள்’ என இடம்பெற் றுள்ளது.

அத்தியாயம் : 59
3317. حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَارٍ فَنَزَلَتْ {وَالْمُرْسَلاَتِ عُرْفًا} فَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ، إِذْ خَرَجَتْ حَيَّةٌ مِنْ جُحْرِهَا فَابْتَدَرْنَاهَا لِنَقْتُلَهَا، فَسَبَقَتْنَا فَدَخَلَتْ جُحْرَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا "". وَعَنْ إِسْرَائِيلَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ قَالَ وَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ رَطْبَةً. وَتَابَعَهُ أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ. وَقَالَ حَفْصٌ وَأَبُو مُعَاوِيَةَ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ.
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3317. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, யிவல்முர்சலாத்தி உர்ஃபன்’ (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படு கின்றவைமீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று, தன் புற்றிலிருந்து வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கொல்ல விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு தன் புற்றுக்குள் நுழைந்துவிட்டது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கி லிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.117

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஒன்றில், ‘‘அதை நாங்கள் அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 59
3318. حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خِشَاشِ الأَرْضِ "". قَالَ وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3318. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவு மில்லை; பூமியிலுள்ள புழுபூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை (அவிழ்த்து)விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.118

அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழி யாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 59
3319. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ، فَأَمَرَ بِجَهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا، ثُمَّ أَمَرَ بِبَيْتِهَا فَأُحْرِقَ بِالنَّارِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلاَّ نَمْلَةً وَاحِدَةً "".
பாடம் : 16 ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தர விட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தர விட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது.

அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘‘உங்களைக் கடித்தது ஒரேயோர் எறும்பல் லவா? (அதற்காக ஓர் எறும்புக் கூட்டத் தையே எரிக்கலாமா?)” என்று யிவஹீ’ அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.119

அத்தியாயம் : 59
3320. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي عُتْبَةُ بْنُ مُسْلِمٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ بْنُ حُنَيْنٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ، ثُمَّ لِيَنْزِعْهُ، فَإِنَّ فِي إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالأُخْرَى شِفَاءً "".
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3320. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன் றில் நிவாரணமும் இருக்கிறது.120

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 59
3321. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْحَاقُ الأَزْرَقُ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، وَابْنِ، سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" غُفِرَ لاِمْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ الْمَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ "".
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3321. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தனது நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முகத்திரையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். (ஆகவே, அது பிழைத்துக் கொண்டது.) ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையின் காரணத்தால் அவளுக்கு (பாவ)மன்னிப்பு வழங்கப் பட்டது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 59
3322. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْتُهُ مِنَ الزُّهْرِيِّ كَمَا أَنَّكَ هَا هُنَا أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أَبِي طَلْحَةَ ـ رضى الله عنهم ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ "".
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3322. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.121

இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 59
3323. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ.
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3323. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொல்லை தரும்) நாய்களைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள்.

அத்தியாயம் : 59
3324. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَمْسَكَ كَلْبًا يَنْقُصْ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ، إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ كَلْبَ مَاشِيَةٍ "".
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3324. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவு குறைந்துவிடுகிறது; விவசாயப் பண்ணை யைப் பாதுகாக்கும் நாயையும், கால்நடை களைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.122

அத்தியாயம் : 59
3325. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، قَالَ أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ الشَّنَئِيَّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ اقْتَنَى كَلْبًا لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ "". فَقَالَ السَّائِبُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِيْ وَرَبِّ هَذِهِ الْقِبْلَةِ.
பாடம் : 17 ‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3325. சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஷனூஆ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் எவர் (தேவையின்றி) நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல் களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக் குக் குறைந்துவிடும்’ என்று கூறுவதை நான் கேட்டேன்” என்று சொன்னார்கள்.

நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; இந்த கிப்லா (இறையில்லம் கஅபா)வின் அதிபதியின் மீது சத்தியமாக!” என்று பதிலளித்தார்கள்.123

அத்தியாயம் : 59

3326. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَلَقَ اللَّهُ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا، ثُمَّ قَالَ اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنَ الْمَلاَئِكَةِ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ. فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ. فَقَالُوا السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ. فَزَادُوهُ وَرَحْمَةُ اللَّهِ. فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الآنَ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3326. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களிமண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘‘நீங்கள் சென்று அந்த வானவர் களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். அது தான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததி களின் முகமனும் ஆகும்” என்று சொன்னான்.

அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி பொழியட்டும்)” என்று கூறினார்கள். அதற்கு வான வர்கள், ‘‘உங்கள்மீதும் சாந்தியும் இறைக் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். யிஇறைவனின் கருணையும் (உங்கள்மீது பொழியட்டும்)› எனும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) கூடுதலாகச் சொன்னார்கள்.

ஆகவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும், அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 60
3327. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، لاَ يَبُولُونَ وَلاَ يَتَغَوَّطُونَ وَلاَ يَتْفِلُونَ وَلاَ يَمْتَخِطُونَ، أَمْشَاطُهُمُ الذَّهَبُ، وَرَشْحُهُمُ الْمِسْكُ، وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ الأَنْجُوجُ عُودُ الطِّيبِ، وَأَزْوَاجُهُمُ الْحُورُ الْعِينُ، عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ، سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3327. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் நுழையும் முதல் அணி ‘னர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத் தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும்மாட்டார் கள்; எச்சில் துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும்மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும்.

அவர்களுடைய துணைவியர் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டி ருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத் தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அத்தியாயம் : 60
3328. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ الْغُسْلُ إِذَا احْتَلَمَتْ قَالَ "" نَعَمْ، إِذَا رَأَتِ الْمَاءَ "". فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ، فَقَالَتْ تَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَبِمَا يُشْبِهُ الْوَلَدُ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3328. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளிப்பு கடமையாகுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவள்மீது குளிப்பு கடமையாகும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘‘பெண் ணுக்குக்கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பின் குழந்தை, (தோற்றத் தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.3

அத்தியாயம் : 60
3329. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ مَقْدَمُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَأَتَاهُ، فَقَالَ إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ نَبِيٌّ، {قَالَ مَا} أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ وَمِنْ أَىِّ شَىْءٍ يَنْزِعُ الْوَلَدُ إِلَى أَبِيهِ وَمِنْ أَىِّ شَىْءٍ يَنْزِعُ إِلَى أَخْوَالِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَبَّرَنِي بِهِنَّ آنِفًا جِبْرِيلُ "". قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلاَئِكَةِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ. وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ. وَأَمَّا الشَّبَهُ فِي الْوَلَدِ فَإِنَّ الرَّجُلَ إِذَا غَشِيَ الْمَرْأَةَ فَسَبَقَهَا مَاؤُهُ كَانَ الشَّبَهُ لَهُ، وَإِذَا سَبَقَ مَاؤُهَا كَانَ الشَّبَهُ لَهَا "". قَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ. ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ قَوْمٌ بُهُتٌ، إِنْ عَلِمُوا بِإِسْلاَمِي قَبْلَ أَنْ تَسْأَلَهُمْ بَهَتُونِي عِنْدَكَ، فَجَاءَتِ الْيَهُودُ وَدَخَلَ عَبْدُ اللَّهِ الْبَيْتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَىُّ رَجُلٍ فِيكُمْ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ "". قَالُوا أَعْلَمُنَا وَابْنُ أَعْلَمِنَا وَأَخْبَرُنَا وَابْنُ أَخْيَرِنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَفَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ "". قَالُوا أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ. فَخَرَجَ عَبْدُ اللَّهِ إِلَيْهِمْ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَقَالُوا شَرُّنَا وَابْنُ شَرِّنَا. وَوَقَعُوا فِيهِ.
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3329. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘தங்களிடம் நான் மூன்று விஷயங் களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள்.

பிறகு, ‘‘1. இறுதி நாளின் அடையாளங் களில் முதலாவது அடையாளம் எது?2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்? அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சற்று முன்புதான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனது நீர்(விந்து உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என நான் உறுதிகூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித்திளைத்த சமுதாயத்தார் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து)கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘‘உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அவர் எங்களில் (மார்க்க) ஞானம் மிக்கவரும், எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித் தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரெனில் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்று வானாக!” என்று சொன்னார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.” என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், ‘‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.

அத்தியாயம் : 60