2942. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْد ٍ ـ رضى الله عنه ـ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ يَوْمَ خَيْبَرَ "" لأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلاً يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ "". فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى، فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى فَقَالَ "" أَيْنَ عَلِيٌّ "". فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ، فَأَمَرَ فَدُعِيَ لَهُ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ، فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّهُ لَمْ يَكُنْ بِهِ شَىْءٌ فَقَالَ نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا. فَقَالَ "" عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللَّهِ لأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ "".
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2942. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, ‘‘நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப் போகிறேன்; அவருடைய கரங்களால் அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறக் கேட்டேன். உடனே நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்ற ஆசையோடு மறுநாள் வந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அலீ எங்கே?” என்று கேட்டார்கள். ‘‘அவருக்குக் கண் வலி” என்று கூறப்பட்டது.

உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்துவரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தமது) உமிழ்நீரை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போன்று குணமாகிவிட்டது. உடனே அலீ (ரலி) அவர்கள், ‘‘நம்மைப் போன்று அவர்களும் (ஏக இறையை ஏற்போராக) ஆகும்வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதான மாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குவீராக! பிறகு அவர்களை இஸ்லாத் திற்கு அழைத்து (அதை அவர்கள் ஏற்கும் பட்சத்தில்) அவர்கள்மீது கடமையாகின்ற வற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நல்வழி யளிக்கப்படுவது (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உமக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 56
2943. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا غَزَا قَوْمًا لَمْ يُغِرْ حَتَّى يُصْبِحَ، فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ بَعْدَ مَا يُصْبِحُ، فَنَزَلْنَا خَيْبَرَ لَيْلاً.
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2943. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார்மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும்வரை தாக்குதலைத் தொடங்கமாட்டார்கள். (அந்த மக்களிடையே) தொழுகை அறிவிப் பின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்தமாட்டார்கள். தொழுகை அறிவிப்பின் ஓசையைக் கேட்காவிட்டால், காலை நேரம் வந்தபின் தாக்குதல் நடத்துவார்கள். கைபருக்கு நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.


அத்தியாயம் : 56
2944. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا غَزَا بِنَا.
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2944. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அறப்போருக்குச் சென்றால்.... (என்று ஹதீஸ் தொடங்குகிறது)86


அத்தியாயம் : 56
2945. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى خَيْبَرَ فَجَاءَهَا لَيْلاً، وَكَانَ إِذَا جَاءَ قَوْمًا بِلَيْلٍ لاَ يُغِيرُ عَلَيْهِمْ حَتَّى يُصْبِحَ، فَلَمَّا أَصْبَحَ، خَرَجَتْ يَهُودُ بِمَسَاحِيهِمْ وَمَكَاتِلِهِمْ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "".
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2945. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். லிஅவர்கள் ஒரு சமுதாயத்தாரிடம் இரவு நேரத்தில் சென்றால், காலை நேரம் வரும்வரை அவர்கள்மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள். அவ்வாறே காலையான தும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது, ‘‘முஹம்மதும் (அவரது) ஐம் படையும் (வந்துள்ளனர்)” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் முற்றத்தில் (அவர் களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 56
2946. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَمَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، فَقَدْ عَصَمَ مِنِّي نَفْسَهُ وَمَالَهُ، إِلاَّ بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ "". رَوَاهُ عُمَرُ وَابْنُ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 102 இஸ்லாத்தையும் தாம் இறைத்தூதர் என்பதையும் ஏற்குமாறும், அல்லாஹ்வை விடுத்து (மக்களில்) சிலரைச் சிலர் தெய்வங்களாக ஆக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதம், ஞானம், நபித்துவம் ஆகியவற்றை வழங்கிய பிறகு அவர் மக்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னை வழிபடுவோராக இருங்கள்” என்று கூற அவருக்கு அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருப்பதால் இறையைச் சார்ந்தவர்களாக இருங்கள் (என்றே அவர் கூறுவார்). (3:79)
2946. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று கூறுகின்ற (நிலை ஏற்படும்)வரை மக்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட்டுள் ளேன். யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று கூறுகிறாரோ அவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக்கொள்வார்; நியாயமான காரணம் இருந்தால் தவிர. அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே நபிமொழியை உமர் (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2947. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ ـ رضى الله عنه ـ وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدُ غَزْوَةً إِلاَّ وَرَّى بِغَيْرِهَا.
பாடம் : 103 அறப்போருக்குச் செல்ல விரும்பி, வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி மறைப்பதும் வியாழக்கிழமையன்று போருக்குச் செல்ல விரும்புவதும்
2947. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஓர் அறப் போருக்கு (தலைமை தாங்கி)ச் செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி அதை மறைக்காமல் இருக்கமாட்டார்கள்.

இதை, ‘‘தபூக் போரின்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தாம் பின்தங்கியது தொடர்பாக என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்” என அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

கஅப் (ரலி) அவர்க(ள் முதுமை அடைந்து கண்பார்வையிழந்துவிட்டபோது அவர்க)ளை, அவர்களுடைய மக்களி லேயே கைப்பிடித்து அழைத்துச் செல்பவ ராயிருந்தவர்தான் அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள்.


அத்தியாயம் : 56
2948. وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَلَّمَا يُرِيدُ غَزْوَةً يَغْزُوهَا إِلاَّ وَرَّى بِغَيْرِهَا، حَتَّى كَانَتْ غَزْوَةُ تَبُوكَ، فَغَزَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَرٍّ شَدِيدٍ، وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيدًا وَمَفَازًا، وَاسْتَقْبَلَ غَزْوَ عَدُوٍّ كَثِيرٍ، فَجَلَّى لِلْمُسْلِمِينَ أَمْرَهُمْ، لِيَتَأَهَّبُوا أُهْبَةَ عَدُوِّهِمْ، وَأَخْبَرَهُمْ بِوَجْهِهِ الَّذِي يُرِيدُ.
பாடம் : 103 அறப்போருக்குச் செல்ல விரும்பி, வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி மறைப்பதும் வியாழக்கிழமையன்று போருக்குச் செல்ல விரும்புவதும்
2948. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அறப்போருக்கு(த் தலைமையேற்று)ச் செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி அதை மறைப்பார்கள். தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள்.

தொலைதூரப் பயணத்தையும் வனப் பகுதியையும் அவர்கள் எதிர்நோக்கினார் கள். அதிக (எண்ணிக்கையிலான) எதிரி களைச் சந்திப்பதையும் எதிர்பார்த்தார்கள். தமது எதிர்பார்ப்பை முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார் கள். முஸ்லிம்கள் தம் பகைவர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்காக இப்படிச் செய்தார்கள். தாம் விரும்பும் இலக்கை முஸ்லிம்களுக்கு அறிவித்து விட்டார்கள்.


அத்தியாயம் : 56
2949. وَعَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ كَانَ يَقُولُ لَقَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْرُجُ إِذَا خَرَجَ فِي سَفَرٍ إِلاَّ يَوْمَ الْخَمِيسِ.
பாடம் : 103 அறப்போருக்குச் செல்ல விரும்பி, வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி மறைப்பதும் வியாழக்கிழமையன்று போருக்குச் செல்ல விரும்புவதும்
2949. அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டால் பெரும்பாலும் வியாழக்கிழமையன்றுதான் புறப்படுவார்கள்” என்று கூறிவந்தார்கள்.


அத்தியாயம் : 56
2950. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمَ الْخَمِيسِ فِي غَزْوَةِ تَبُوكَ، وَكَانَ يُحِبُّ أَنْ يَخْرُجَ يَوْمَ الْخَمِيسِ.
பாடம் : 103 அறப்போருக்குச் செல்ல விரும்பி, வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி மறைப்பதும் வியாழக்கிழமையன்று போருக்குச் செல்ல விரும்புவதும்
2950. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தபூக் போருக்கு வியாழக்கிழமையன்றுதான் புறப்பட் டார்கள். வியாழக்கிழமையன்று (பயணம்) புறப்படுவதை அவர்கள் விரும்பி வந்தார்கள்.

அத்தியாயம் : 56
2951. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِالْمَدِينَةِ الظُّهْرَ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، وَسَمِعْتُهُمْ يَصْرُخُونَ بِهِمَا جَمِيعًا.
பாடம் : 104 லுஹ்ர் தொழுகைக்குப் பிறகு பயணம் புறப்படுவது
2951. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தமது ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ர் தொழுகையை நான்கு ரக்அத்களாகவும் அஸ்ர் தொழுகையை துல்ஹுலைஃபா எனுமிடத்தில் இரண்டு ரக்அத்களாகவும் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் (தல்பியாவை) உரக்கக் கூறுவதை நான் செவியுற்றேன்.87

அத்தியாயம் : 56
2952. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِخَمْسِ لَيَالٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ، وَلاَ نُرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ إِذَا طَافَ بِالْبَيْتِ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَنْ يَحِلَّ. قَالَتْ عَائِشَةُ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ نَحَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ. قَالَ يَحْيَى فَذَكَرْتُ هَذَا الْحَدِيثَ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ فَقَالَ أَتَتْكَ وَاللَّهِ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ.
பாடம் : 105 மாத இறுதியில் பயணம் புறப்படு வது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜுக் காக) மதீனாவிலிருந்து துல்கஅதா மாதம் முடிவடைய ஐந்து நாட்கள் எஞ்சியிருந்த போது புறப்பட்டு, துல்ஹிஜ்ஜாவின் நான்கு நாட்கள் கழிந்தபோது மக்கா நகருக்கு வந்தார்கள்.88
2952. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் துல்கஅதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந்தபோது (துல்கஅதா பிறை 25ல்) புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்ற எண்ணியிருந்தோம். மக்காவை நாங்கள் நெருங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானி பிராணியைத் தம்முடன் கொண்டுவராதவர்கள் கஅபாவை தவாஃப் செய்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி முடித்ததும் இஹ்ராமிலிருந்து விடுபடும்படி உத்தரவிட்டார்கள்.

பிறகு நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா 10ஆம்) நாளில் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான், ‘‘இது என்ன?” என்று கேட்டேன். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியரின் சார்பாக (குர்பானி பிராணியை) அறுத்துப் பலியிட்டார்கள்” என்று பதிலளித்தார் கள்.89

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நான் இந்த ஹதீஸை காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஹதீஸை முறைப்படியே உம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் உங்களி டம் செல்லியுள்ளார்கள்” என்றார்.

அத்தியாயம் : 56
2953. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ أَفْطَرَ. قَالَ سُفْيَانُ قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ. وَسَاقَ الْحَدِيثَ.
பாடம் : 106 ரமளான் மாதத்தில் பயணம் புறப் படுவது
2953. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி யின்போது) ரமளான் மாதத்தில் பயணம் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். யிகதீத்’ எனுமிடம் வந்தபின் நோன்பை விட்டுவிட்டார்கள்.90

அத்தியாயம் : 56
2954. وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْثٍ، وَقَالَ لَنَا "" إِنْ لَقِيتُمْ فُلاَنًا وَفُلاَنًا "". ـ لِرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ سَمَّاهُمَا ـ فَحَرِّقُوهُمَا بِالنَّارِ. قَالَ ثُمَّ أَتَيْنَاهُ نُوَدِّعُهُ حِينَ أَرَدْنَا الْخُرُوجَ فَقَالَ "" إِنِّي كُنْتُ أَمَرْتُكُمْ أَنْ تُحَرِّقُوا فُلاَنًا وَفُلاَنًا بِالنَّارِ، وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلاَّ اللَّهُ، فَإِنْ أَخَذْتُمُوهُمَا فَاقْتُلُوهُمَا "".
பாடம் : 107 (பயணத்தின்போது) விடைபெறுவதும் வழியனுப்புவதும்
2954. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை ஒரு படையில் அனுப்பி வைத்தார்கள். அப்போது எங்களிடம், ‘‘நீங்கள் இன்னாரையும் இன்னாரையும் சந்தித்தால் லிஎன்று குறைஷியரில் இருவரின் பெயர் குறிப்பிட்டுலி அவ்விரு வரையும் நெருப்பால் எரித்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் பயணம் புறப்பட முனைந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் விடைபெற்றுக்கொள்ளச் சென்றோம். அப்போது அவர்கள், ‘‘நான் இன்னாரையும் இன்னாரையும் நெருப்பால் எரித்துவிடும்படி உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், நெருப்பால் வேதனை செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. எனவே நீங்கள் அவ்விருவரையும் பிடித்தால் (நெருப்பால் எரிக்க வேண்டாம்;) கொன்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.91

அத்தியாயம் : 56
2955. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ، مَا لَمْ يُؤْمَرْ بِالْمَعْصِيَةِ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ "".
பாடம் : 108 தலைவரின் சொல்கேட்டு, கட்டுப்பட்டு நடப்பது
2955. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

அல்லாஹ்வுக்கு மாறு செய்யுமாறு கட்டளையிடப்படாத வரை, (தலைவரின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ் வுக்கு மாறுசெய்யுமாறு கட்டளையிடப் பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
2956. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ ".
பாடம் : 109 தலைவரைக் காக்கப் போரிடுவதும் அவர் மூலம் (மற்றவர்கள்) காக்கப் படுவதும்
2956. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நாம்தான் (காலத்தால்) பிந்தியவர்கள்; (மறுமையில் தகுதியால்) முந்தியவர்கள்” என்று கூற நான் கேட்டேன்.92


அத்தியாயம் : 56
2957. وَبِهَذَا الإِسْنَادِ " مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ، وَمَنْ يُطِعِ الأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي، وَمَنْ يَعْصِ الأَمِيرَ فَقَدْ عَصَانِي، وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ، فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ وَعَدَلَ، فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا، وَإِنْ قَالَ بِغَيْرِهِ، فَإِنَّ عَلَيْهِ مِنْهُ ".
பாடம் : 109 தலைவரைக் காக்கப் போரிடுவதும் அவர் மூலம் (மற்றவர்கள்) காக்கப் படுவதும்
2957. (தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார்.

(என்னால் நியமிக்கப்பட்ட) தலைவர் ஒரு கேடயம். அவரைக் காக்கப் போரிடப் படும்; அவர் மூலம் (மற்றவர்கள்) காக்கப்படுவர். அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக்கொள்ளுமாறு கட்டளை யிட்டு நீதியுடன் நடந்துகொண்டால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் கிடைக்கும். அதுவல்லாத (தீய)வற்றை அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவரை(யும்) சாரும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2958. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ رَجَعْنَا مِنَ الْعَامِ الْمُقْبِلِ فَمَا اجْتَمَعَ مِنَّا اثْنَانِ عَلَى الشَّجَرَةِ الَّتِي بَايَعْنَا تَحْتَهَا، كَانَتْ رَحْمَةً مِنَ اللَّهِ. فَسَأَلْتُ نَافِعًا عَلَى أَىِّ شَىْءٍ بَايَعَهُمْ عَلَى الْمَوْتِ قَالَ لاَ، بَايَعَهُمْ عَلَى الصَّبْرِ.
பாடம் : 110 யிபோரில் பின்வாங்கி ஓடக் கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது சிலர், யிபோரில் மரணத்தைச் சந்திக்க தயாராயிருப்பதாக உறுதிமொழி வாங்குவது’ என்று அறிவித்துள்ளனர். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பொதுவாகவே) கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான். (48:18)93
2958. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஹுதைபியா உடன்படிக்கை கையொப்பமான ஆண்டிற்கு) அடுத்த ஆண்டு (ஒப்பந்தப்படி உம்ரா செய்யத்) திரும்பி வந்தோம். யிநாங்கள் (ஹுதைபியா ஆண்டில்) எந்த மரத்திற்குக் கீழே (நபி (ஸல்) அவர்களின் கரத்தில்) உறுதிமொழி எடுத்துக்கொண்டோமோ அந்த மரம் இது தான்’ என்று எங்களில் எந்த இருவரும் ஒருமித்த கருத்துக் கொள்ளவில்லை. அது அல்லாஹ்வின் அருளாக அமைந்தது.

அறிவிப்பாளர் ஜுவைரியா பின் அஸ்மா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு இதை எங்களுக்கு அறிவித்த) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நாங்கள், ‘‘எதன்மீது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து உறுதிமொழி பெற்றார் கள்? மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்ப தற்காகவா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. ஆனால், (நிலை குலைந்துபோகாமல்) பொறுமையாக இருக்குமாறுதான் அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 56
2959. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ زَمَنَ الْحَرَّةِ أَتَاهُ آتٍ فَقَالَ لَهُ إِنَّ ابْنَ حَنْظَلَةَ يُبَايِعُ النَّاسَ عَلَى الْمَوْتِ. فَقَالَ لاَ أُبَايِعُ عَلَى هَذَا أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 110 யிபோரில் பின்வாங்கி ஓடக் கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது சிலர், யிபோரில் மரணத்தைச் சந்திக்க தயாராயிருப்பதாக உறுதிமொழி வாங்குவது’ என்று அறிவித்துள்ளனர். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பொதுவாகவே) கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான். (48:18)93
2959. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்ஹர்ரா’ போரின்போது என்னிடம் ஒருவர் வந்து, ‘‘அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்கள், மக்களிடம் மரணத்தைச் சந்திக்க தயாராயிருக்கும்படி உறுதிமொழி வாங்குகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபியாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்கமாட்டேன்”என்று கூறினேன்.94


அத்தியாயம் : 56
2960. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ثُمَّ عَدَلْتُ إِلَى ظِلِّ الشَّجَرَةِ، فَلَمَّا خَفَّ النَّاسُ قَالَ "" يَا ابْنَ الأَكْوَعِ، أَلاَ تُبَايِعُ "". قَالَ قُلْتُ قَدْ بَايَعْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" وَأَيْضًا "". فَبَايَعْتُهُ الثَّانِيَةَ،. فَقُلْتُ لَهُ يَا أَبَا مُسْلِمٍ، عَلَى أَىِّ شَىْءٍ كُنْتُمْ تُبَايِعُونَ يَوْمَئِذٍ قَالَ عَلَى الْمَوْتِ.
பாடம் : 110 யிபோரில் பின்வாங்கி ஓடக் கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது சிலர், யிபோரில் மரணத்தைச் சந்திக்க தயாராயிருப்பதாக உறுதிமொழி வாங்குவது’ என்று அறிவித்துள்ளனர். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பொதுவாகவே) கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான். (48:18)93
2960. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (யிஇறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறைவழியில் துன்பங்களைச் சகிப்பேன்’ என்று) நபி (ஸல்) அவர்களிடம் (ஹுதைபியாவில்) உறுதிமொழியளித்தேன்; பிறகு மரத்தின் நிழலில் (சற்று) ஒதுங்கினேன். (நபி (ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘அக்வஉ உடைய மகனே! (சலமாவே!) நீர் உறுதிமொழியளிக்க வில்லையா?” என்று கேட்டார்கள். ‘‘நான் ஏற்கெனவே உறுதிமொழியளித்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மீண்டும் (அளிப்பீராக!)” என்று கூறினார்கள். ஆகவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழியளித்தேன்.

அறிவிப்பாளர் யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இதை எனக்கு அறிவித்த சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம்) நான், ‘‘அபூமுஸ்லிமே! அன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி (ஸல்) அவர்களிடம்) உறுதிமொழியளித்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மரணத்தைச் சந்திக்கவும் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 56
2961. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَتِ الأَنْصَارُ يَوْمَ الْخَنْدَقِ تَقُولُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا عَلَى الْجِهَادِ مَا حَيِينَا أَبَدَا فَأَجَابَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَأَكْرِمِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ
பாடம் : 110 யிபோரில் பின்வாங்கி ஓடக் கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது சிலர், யிபோரில் மரணத்தைச் சந்திக்க தயாராயிருப்பதாக உறுதிமொழி வாங்குவது’ என்று அறிவித்துள்ளனர். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பொதுவாகவே) கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான். (48:18)93
2961. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது (மதீனாவாசிகளான) அன்சாரிகள்,

‘‘நாங்கள்”முஹம்மத் (ஸல்) அவர்களிடம்உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்.வாழும்வரைஎப்போதும்அறப்போர் புரிவோம்”

என்று பாடியவண்ணம் (அகழ் தோண் டிக்கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்,

‘‘இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும்;ஆகவே,அன்சாரிகளையும்முஹாஜிர்களையும்கண்ணியப்படுத்துவாயாக!”

என்று (பாடலிலேயே) பதிலளித் தார்கள்.


அத்தியாயம் : 56