2918. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، مُسْلِمٍ ـ هُوَ ابْنُ صُبَيْحٍ ـ عَنْ مَسْرُوقٍ، قَالَ حَدَّثَنِي الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ، قَالَ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِحَاجَتِهِ ثُمَّ أَقْبَلَ، فَلَقِيتُهُ بِمَاءٍ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ، فَذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْهِ فَكَانَا ضَيِّقَيْنِ، فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتُ، فَغَسَلَهُمَا وَمَسَحَ بِرَأْسِهِ وَعَلَى خُفَّيْهِ.
பாடம் : 90 பயணத்திலும் போரிலும் நீளங்கி அணிதல்
2918. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் போரின்போது) தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொள்ளச் சென்றார் கள். பிறகு திரும்பி வந்தபோது, நான் தண்ணீருடன் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டு நீளங்கியொன்றை அணிந்திருந் தார்கள். அவர்கள் (நான் கொண்டுசென்ற தண்ணீரில்) வாய் கொப்புளித்து, மூக்கில் நீர் செலுத்தி (மூக்கைச் சிந்தி)னார்கள்; முகத்தைக் கழுவிக்கொண்டார்கள்.

நீளங்கியின் கைப் பகுதிகள் வழியாக தம் கைகளை வெளியே எடுக்கலானார்கள். அவை மிகவும் இறுக்கமாக இருந்தன. ஆகவே, கீழ்ப் பகுதி வழியாக இரு கைகளையும் வெளியே எடுத்து, அவற் றைக் கழுவினார்கள்; தலைமீது (ஈரக் கையால்) தடவினார்கள்; காலுறைகளின் மீதும் தடவிக்கொண்டார்கள்.69

அத்தியாயம் : 56
2919. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ فِي قَمِيصٍ مِنْ حَرِيرٍ، مِنْ حِكَّةٍ كَانَتْ بِهِمَا.
பாடம் : 91 போரில் பட்டாடை அணிவது
2919. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்குச் சொறி சிரங்கு இருந்த காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்துகொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 56
2920. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ عَبْدَ، الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَالزُّبَيْرَ شَكَوَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ يَعْنِي الْقَمْلَ ـ فَأَرْخَصَ لَهُمَا فِي الْحَرِيرِ، فَرَأَيْتُهُ عَلَيْهِمَا فِي غَزَاةٍ.
பாடம் : 91 போரில் பட்டாடை அணிவது
2920. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஸுபைர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம், (தம் உடலில் சிரங்கை உண்டாக்கும்) ஒட்டுண்ணிகளைக் குறித்து முறையிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் பட்டாடை அணியச் சலுகை கொடுத்தார் கள். எனவே, ஓர் அறப்போரில் அவ்விரு வரும் பட்டாடை அணிந்திருப்பதை நான் கண்டேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 56
2921. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، أَخْبَرَنِي قَتَادَةُ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ فِي حَرِيرٍ.
பாடம் : 91 போரில் பட்டாடை அணிவது
2921. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் ஸுபைர் பின் அல் அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் பட்டாடை அணிய நபி (ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 56
2922. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رَخَّصَ أَوْ رُخِّصَ لِحِكَّةٍ بِهِمَا.
பாடம் : 91 போரில் பட்டாடை அணிவது
2922. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவ்விருவருக்கும் இருந்த சொறி சிரங்கின் காரணமாக, அவர்களுக்கு (பட்டாடை அணிய) நபி (ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்; அல்லது சலுகை கொடுக்கப்பட்டது.

அத்தியாயம் : 56
2923. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْكُلُ مِنْ كَتِفٍ يَحْتَزُّ مِنْهَا، ثُمَّ دُعِيَ إِلَى الصَّلاَةِ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ وَزَادَ فَأَلْقَى السِّكِّينَ.
பாடம் : 92 கத்தி(யின் பயன்பாடு) தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை
2923. அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (ஆட்டின்) ஒரு தொடை இறைச்சியை (கத்தியால்) துண்டு போட்டு உண்பதை நான் பார்த்தேன். பிறகு தொழுகைக்கு அழைக்கப்பட்டவுடன் அவர்கள் தொழுதார்கள். (ஆனால், புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில், ‘‘தொழுகைக்கு அழைக்கப் பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் கத்தி யைக் கீழே போட்டுவிட்டார்கள்” என்று கூடுதலாக வந்துள்ளது.70

அத்தியாயம் : 56
2924. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، أَنَّ عُمَيْرَ بْنَ الأَسْوَدِ الْعَنْسِيَّ، حَدَّثَهُ أَنَّهُ، أَتَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ وَهْوَ نَازِلٌ فِي سَاحِلِ حِمْصَ، وَهْوَ فِي بِنَاءٍ لَهُ وَمَعَهُ أُمُّ حَرَامٍ، قَالَ عُمَيْرٌ فَحَدَّثَتْنَا أُمُّ حَرَامٍ أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ الْبَحْرَ قَدْ أَوْجَبُوا "". قَالَتْ أُمُّ حَرَامٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَا فِيهِمْ. قَالَ "" أَنْتِ فِيهِمْ "". ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ مَدِينَةَ قَيْصَرَ مَغْفُورٌ لَهُمْ "". فَقُلْتُ أَنَا فِيهِمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" لاَ "".
பாடம் : 93 (கிழக்கு) ரோமானியருடன் போரி டுவது தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை71
2924. உமைர் பின் அஸ்வத் அல் அன்ஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் (சிரியாவில் உள்ள) யிஹிம்ஸ்’ கடற்கரையில் தமது கட்டடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம் (ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் எம்மிடம் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் முதலில் கடலில் (சென்று) அறப்போர் புரியும் படையினர் (சொர்க்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள்” என்று கூறி னார்கள்.72

இதைச் செவியுற்ற நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அவர்களில் ஒருத் தியா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவர் தான்” என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் கைஸர் (சீசர்) உடைய நகரம் (கான்ஸ்டான்டி நோபிள்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.73

‘‘அவர்களில் நானும் ஒருத்தியா? அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 56
2925. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" تُقَاتِلُونَ الْيَهُودَ حَتَّى يَخْتَبِيَ أَحَدُهُمْ وَرَاءَ الْحَجَرِ فَيَقُولُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ "".
பாடம் : 94 யூதர்களுடன் போரிடுதல்
2925. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்துகொள்ள, அந்தக் கல், ‘‘அல்லாஹ் வின் அடியாரே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்றுவிடு” என்று கூறும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2926. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ "".
பாடம் : 94 யூதர்களுடன் போரிடுதல்
2926. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் யூதர்களுடன் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் வராது. எந்த அளவுக்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்துகொண்டு) இருப் பான். அந்தக் கல், ‘‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்துகொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்றுவிடு” என்று கூறும்.74

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2927. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا يَنْتَعِلُونَ نِعَالَ الشَّعَرِ، وَإِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا عِرَاضَ الْوُجُوهِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ "".
பாடம் : 95 துருக்கியர்களுடன் போர் புரிதல்
2927. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

முடியாலான காலணிகளை அணிகின்ற ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போரிடுவது, யுகமுடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரிவது இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.75

இதை அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2928. حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ الأَعْرَجِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ صِغَارَ الأَعْيُنِ، حُمْرَ الْوُجُوهِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ "".
பாடம் : 95 துருக்கியர்களுடன் போர் புரிதல்
2928. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சிறிய கண்களும் சிவந்த முகங்களும் சப்பையான மூக்குகளும் உள்ள துருக்கியர் களுடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங் களைப் போன்று இருக்கும். முடியாலான காலணிகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 56
2929. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ "". قَالَ سُفْيَانُ وَزَادَ فِيهِ أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً "" صِغَارَ الأَعْيُنِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ "".
பாடம் : 96 முடியாலான காலணி அணிபவர் களுடன் போர் புரிவது
2929. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

முடியாலான காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(யிதோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன்’ என்பதற்கு முன்னால்)லி யிசிறிய கண்களும் சப்பை மூக்குகளும் உள்ளன என்னும் சொற்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம் : 56
2931. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَلأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا، شَغَلُونَا عَنِ الصَّلاَةِ الْوُسْطَى حِينَ غَابَتِ الشَّمْسُ "".
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2931. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ் (அஹ்ஸாப்) போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ், (எதிரிகளான) அவர்களின் வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை) ‘லிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56
2932. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ ذَكْوَانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُو فِي الْقُنُوتِ "" اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ سِنِينَ كَسِنِي يُوسُفَ "".
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2932. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹ் தொழுகை யில்) குனூத் (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதும்போது, ‘‘இறைவா! சலமா பின் ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆ வைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக!77

இறைவா! யிமுளர்’ குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக!78 இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 56
2933. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ عَلَى الْمُشْرِكِينَ فَقَالَ "" اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ، اللَّهُمَّ اهْزِمِ الأَحْزَابَ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ "".
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2933. அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போர் நாளில் இணைவைப்பாளர் களுக்கு எதிராகப் பிரார்த்தனை புரிந்தார் கள். அப்போது, ‘‘இறைவா! குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கெடுப்ப வனே! இறைவா! இக்கூட்டுப் படையின ரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர் களைத் தோல்வியுறச்செய்து நடுக்கத்திற் குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.

அத்தியாயம் : 56
2934. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ظِلِّ الْكَعْبَةِ، فَقَالَ أَبُو جَهْلٍ وَنَاسٌ مِنْ قُرَيْشٍ، وَنُحِرَتْ جَزُورٌ بِنَاحِيَةِ مَكَّةَ، فَأَرْسَلُوا فَجَاءُوا مِنْ سَلاَهَا، وَطَرَحُوهُ عَلَيْهِ، فَجَاءَتْ فَاطِمَةُ فَأَلْقَتْهُ عَنْهُ، فَقَالَ "" اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ "". لأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ، وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُبَىِّ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ. قَالَ عَبْدُ اللَّهِ فَلَقَدْ رَأَيْتُهُمْ فِي قَلِيبِ بَدْرٍ قَتْلَى. قَالَ أَبُو إِسْحَاقَ وَنَسِيتُ السَّابِعَ. وَقَالَ يُوسُفُ بْنُ إِسْحَاقَ عَنْ أَبِي إِسْحَاقَ أُمَيَّةُ بْنُ خَلَفٍ. وَقَالَ شُعْبَةُ أُمَيَّةُ أَوْ أُبَىٌّ. وَالصَّحِيحُ أُمَيَّةُ.
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2934. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தொழுதுகொண்டி ருந்தார்கள். அப்போது அபூஜஹ்லும் குறைஷியரில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பையின் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்துவர அவர்கள்) ஆளனுப்பினார்கள். பின்னர் அதன் கருப்பைச் சவ்வை கொண்டுவந்து, நபி (ஸல்) அவர்களின் (தோள்)மீது போட்டார்கள்.

அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷியரை நீ கவனித் துக்கொள். இறைவா! குறைஷியரை நீ கவனித்துக்கொள். ஹிஷாமின் மகன் அபூஜஹ்லையும் உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உபை பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரையும் (நீ கவனித்துக்கொள் வாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள்.

இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங்கிணற்றில் கொல்லப்பட்டவர் களாக (எறியப்பட்டிருக்க)க் கண்டேன்.79

அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தித்த ஏழாமவனின் பெயரை நான் மறந்து விட்டேன்” என்று கூறுகிறார்கள்.80

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில், (யிஉபை பின் கலஃப்’ என்பதற்குப் பதிலாக) யிஉமய்யா பின் கலஃப்’ என இடம்பெற்றுள்ளது. மூன்றாவது தொடரில் யிஉமய்யா அல்லது உபை’ என்று காணப்படுகிறது. யிஉமய்யா’ என்பதே சரியானதாகும்81

அத்தியாயம் : 56
2935. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ الْيَهُودَ، دَخَلُوا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَلَعَنْتُهُمْ. فَقَالَ "" مَا لَكِ "". قُلْتُ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ "" فَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ وَعَلَيْكُمْ "".
பாடம் : 97 தோல்வியின்போது தோழர்களை அணிவகுக்கச் செய்து, (தலைவர்) தமது ஊர்திப் பிராணியிலிருந்து இறங்கி (இறையிடம்) உதவி கோருவது 2930 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அபூஉமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது வெருண்டு ஓடினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் கூறி னார்கள்: இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் சில இளைஞர் கள் ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுத பாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு விட்டனர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் அம்பெய்யும் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர் களின் எந்த அம்பும் குறி தவறவில்லை. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்புகளை எய்தார்கள். ஆகவே, அங்கு முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர் களின் தந்தையின் சகோதரர் மகன் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள்; (செய்தியறிந்ததும் அதிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘‘நான் இறைத்தூதர்தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.76 பாடம் : 98 இணைவைப்பாளர்களுக்குத் தோல்வியும் நிலநடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது
2935. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) ‘‘அஸ்ஸாமு அலைக்க” (‘‘உங்கள்மீது மரணம் உண்டாகட்டும்”) என்று கூறினார்கள்.

நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)” என்று கேட்டார்கள்.

நான், ‘‘அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (அவர்களுக்குப் பதிலளித்தபோது) அவர்களிடம்,யிவ அலைக்கும்லி (உங்கள்மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)› என்று கூறியதை நீ கேட்கவில்லையா?” என்று சொன்னார் கள்.

அத்தியாயம் : 56
2936. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَتَبَ إِلَى قَيْصَرَ، وَقَالَ "" فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ "".
பாடம் : 99 வேதக்காரர்களுக்கு முஸ்லிம் (இஸ்லாத்துக்கு) வழிகாட்டலாமா? வேதத்தைக் கற்பிக்கலாமா?
2936. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசருக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில்) ‘‘நீர் (இஸ்லாமிய அழைப்பைப்) புறக்கணிப்பீ ராயின், உம் (பாமரக்) குடிமக்கள் (இஸ்லாத்தை ஏற்காமல்போவதன்) பாவமும் உம்மைச் சேரும்” என்று கூறி யிருந்தார்கள்.82

அத்தியாயம் : 56
2937. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه قَدِمَ طُفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ وَأَصْحَابُهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّ دَوْسًا عَصَتْ وَأَبَتْ، فَادْعُ اللَّهَ عَلَيْهَا. فَقِيلَ هَلَكَتْ دَوْسٌ. قَالَ "" اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَائْتِ بِهِمْ "".
பாடம் : 100 இணைவைப்பாளர்களிடம் இணக்கம் தெரிவதால் அவர்கள் நல்வழிபெறப் பிரார்த்தித்தல்
2937. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

துûஃபல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) யிதவ்ஸ்’ குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து)விட்டார்கள். அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண் டனர்.

அப்போது, ‘‘தவ்ஸ் குலத்தார் அழியட் டும்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! தவ்ஸ் குலத்தாரை நல்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டுவருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 56