2911. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سُئِلَ عَنْ جُرْحِ النَّبِيِّ، صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ. فَقَالَ جُرِحَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ وَهُشِمَتِ الْبَيْضَةُ عَلَى رَأْسِهِ، فَكَانَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ تَغْسِلُ الدَّمَ وَعَلِيٌّ يُمْسِكُ، فَلَمَّا رَأَتْ أَنَّ الدَّمَ لاَ يَزِيدُ إِلاَّ كَثْرَةً أَخَذَتْ حَصِيرًا فَأَحْرَقَتْهُ حَتَّى صَارَ رَمَادًا ثُمَّ أَلْزَقَتْهُ، فَاسْتَمْسَكَ الدَّمُ.
பாடம் : 85
தலைக் கவசம் அணிவது
2911. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு உஹுத் போர் நாளில் ஏற்பட்ட காயம் பற்றி என்னி டம் கேட்கப்பட்டது. நான், ‘‘நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப் புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. (அவர்களின்) தலைக் கவசம் அவர்களின் தலைமீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக்கொண்டி ருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் (தண்ணீரை) ஏந்திக்கொண்டிருந்தார்கள்.
இரத்தம் இன்னும் அதிகமாகிக்கொண்டு தான் போகிறது (நிற்கக் காணோம்) என்பதை ஃபாத்திமா (ரலி) அவர்கள் பார்த்தபோது, ஒரு பாயை எடுத்து, அது சாம்பலாகும்வரை அதை எரித்தார்கள். பிறகு அதைக் காயத்தில் வைத்து அழுத்தி னார்கள். உடனே இரத்தம் (வெளியேறுவது) நின்றுவிட்டது” என்று கூறினேன்.62
அத்தியாயம் : 56

2912. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ سِلاَحَهُ وَبَغْلَةً بَيْضَاءَ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً.
பாடம் : 86
(தலைவர்களின்) மரணத்தின்போது ஆயுதங்களை உடைக்கலாகாது என்ற கருத்து63
2912. அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறக்கும்போது தமது ஆயுதத்தையும், வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், கைபரில் அவர்களுக்கிருந்த ஒரு நிலத்தையும் தவிர. வேறெதையும் அவர்கள் விட்டுச்செல்லவில்லை; அந்த நிலத்தையும் அவர்கள் தர்மமாக ஆக்கிவிட்டிருந்தார்கள்.64

2913. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سِنَانُ بْنُ أَبِي سِنَانٍ، وَأَبُو سَلَمَةَ أَنَّ جَابِرًا، أَخْبَرَهُ. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سِنَانِ بْنِ أَبِي سِنَانٍ الدُّؤَلِيِّ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ، فَتَفَرَّقَ النَّاسُ فِي الْعِضَاهِ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم تَحْتَ شَجَرَةٍ فَعَلَّقَ بِهَا سَيْفَهُ ثُمَّ نَامَ، فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ رَجُلٌ وَهْوَ لاَ يَشْعُرُ بِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ هَذَا اخْتَرَطَ سَيْفِي "". فَقَالَ مَنْ يَمْنَعُكَ قُلْتُ "" اللَّهُ "". فَشَامَ السَّيْفَ، فَهَا هُوَ ذَا جَالِسٌ، ثُمَّ لَمْ يُعَاقِبْهُ.
பாடம் : 87
மதிய ஓய்வின்போது தலைவரைப் பிரிந்து மரத்தின் நிழலில் மக்கள் தங்குவது
2913. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். (திரும்பி வரும் வேளையில்) முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள் ளும் நேரம் வந்தது. மக்கள் அங்கிருந்த மரங்களிடையே பிரிந்து சென்று அவற்றின் நிழல்களில் (ஓய்வுக்காக) ஒதுங்கலானார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே தங்கினார்கள். அதில் தமது வாளைத் தொங்கவிட்டார்கள்; பிறகு தூங்கிவிட்டார் கள். பிறகு கண்விழித்தபோது நபியவர் களுக்கே தெரியாமல் அங்கே ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். (அவரைப் பற்றி) நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதர் என் வாளை உருவிக்கொண்டு, யிஉன்னை (என்னிடமிருந்து) காப்பவர் யார்?› என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். உடனே வாளை உறையில் போட்டுக்கொண்டார். அவர் இதோ அமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்கவில்லை.65
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2914. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهْوَ غَيْرُ مُحْرِمٍ، فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ، فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا، فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا، فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ، فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَأَبَى بَعْضٌ، فَلَمَّا أَدْرَكُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَأَلُوهُ عَنْ ذَلِكَ قَالَ "" إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ "". وَعَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي قَتَادَةَ فِي الْحِمَارِ الْوَحْشِيِّ مِثْلُ حَدِيثِ أَبِي النَّضْرِ قَالَ "" هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَىْءٌ "".
பாடம் : 88
ஈட்டிகள் தொடர்பாகக் கூறப்பட் டுள்ளவை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது (போர்ச்) செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. என் கட்ட ளைக்கு யார் மாறுசெய்கிறாரோ, அவர்மீது இழிவும் (காப்புவரி கட்டவேண்டிய) சிறுமையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2914. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹுதைபியா ஆண்டில்) இருந்தேன். நான் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்தபோது இஹ்ராம் கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கிவிட்டேன். அப்போது நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்க வில்லை. அப்போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன்.
குதிரைமீதேறி அமர்ந்துகொண்டு என் சகாக்களிடம் எனது சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் எடுத்துத் தர மறுத்துவிட்டார்கள். எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி அவர்களிடம் கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
பிறகு நானே அதை எடுத்துக்கொண்டு கழுதையின் மீது பாய்ச்சி அதைக் கொன்றுவிட்டேன். நபித்தோழர்களில் சிலர் அந்தக் கழுதையின் (சமைக்கப்பட்ட) இறைச்சியை உண்டார்கள். வேறுசிலர் உண்ண மறுத்துவிட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்தபொழுது அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவுதான்” என்று பதிலளித் தார்கள்.66
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில், ‘‘அதன் இறைச்சி யில் மீதி ஏதும் உங்களிடம் உண்டா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என்று காணப்படுகிறது.

2915. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ فِي قُبَّةٍ "" اللَّهُمَّ إِنِّي أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ، اللَّهُمَّ إِنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ الْيَوْمِ "". فَأَخَذَ أَبُو بَكْرٍ بِيَدِهِ فَقَالَ حَسْبُكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَدْ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ، وَهْوَ فِي الدِّرْعِ، فَخَرَجَ وَهْوَ يَقُولُ {سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ * بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ }. وَقَالَ وُهَيْبٌ حَدَّثَنَا خَالِدٌ يَوْمَ بَدْرٍ.
பாடம் : 89
நபி (ஸல்) அவர்களின் கவச உடை மற்றும் போரில் அவர்கள் அணிந்த மேலங்கி தொடர்பாகக் கூறப்பட்டவை
‘‘காலித், தம் கவச உடைகளை இறை வழியில் அர்ப்பணித்து விட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.67
2915. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பத்ர் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, ‘‘இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகின்றேன். இறைவா! உனது நாட்டம் (முஸ்லிம்களாகிய நாங்கள் தோற்றுப்போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வழிபடுவது நின்றுபோய்விடும். (மக்கள் பொய்த் தெய்வங்களையே வழிபட்டுக்கொண்டிருப்பார்கள்)” என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி மன்றாடிப்) பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘போதும், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு ‘‘இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்க ளிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்” (54:45,46) எனும் குர்ஆன் வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டாவது தொடரில் பத்ர் போரின்போது என்னும் வாசகம் (அதிகப்படியாக) இடம் பெற்றுள்ளது.

2916. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ. وَقَالَ يَعْلَى حَدَّثَنَا الأَعْمَشُ دِرْعٌ مِنْ حَدِيدٍ. وَقَالَ مُعَلًّى حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الأَعْمَشُ وَقَالَ رَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ.
பாடம் : 89
நபி (ஸல்) அவர்களின் கவச உடை மற்றும் போரில் அவர்கள் அணிந்த மேலங்கி தொடர்பாகக் கூறப்பட்டவை
‘‘காலித், தம் கவச உடைகளை இறை வழியில் அர்ப்பணித்து விட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.67
2916. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தமது போர்க் கவசம் முப்பது ‘ஸாஉ’கள் தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகர மாக ஒரு யூதரிடம் அடகுவைக்கப்பட்டி ருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், யிஇரும்புக் கவசம்’ என்றும் மற்றொன்றில், ‘‘இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகுவைத்தார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது.

2917. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَثَلُ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ مَثَلُ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطَرَّتْ أَيْدِيَهُمَا إِلَى تَرَاقِيهِمَا، فَكُلَّمَا هَمَّ الْمُتَصَدِّقُ بِصَدَقَتِهِ اتَّسَعَتْ عَلَيْهِ حَتَّى تُعَفِّيَ أَثَرَهُ، وَكُلَّمَا هَمَّ الْبَخِيلُ بِالصَّدَقَةِ انْقَبَضَتْ كُلُّ حَلْقَةٍ إِلَى صَاحِبَتِهَا وَتَقَلَّصَتْ عَلَيْهِ وَانْضَمَّتْ يَدَاهُ إِلَى تَرَاقِيهِ "". فَسَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" فَيَجْتَهِدُ أَنْ يُوَسِّعَهَا فَلاَ تَتَّسِعُ "".
பாடம் : 89
நபி (ஸல்) அவர்களின் கவச உடை மற்றும் போரில் அவர்கள் அணிந்த மேலங்கி தொடர்பாகக் கூறப்பட்டவை
‘‘காலித், தம் கவச உடைகளை இறை வழியில் அர்ப்பணித்து விட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.67
2917. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
(தர்மம் செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவருக்கும் உவமை, இரும்பு நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்கள் ஆவர். அவர்களின் கைகள் அவர்களின் கழுத்தெலும்புகளோடு பிணைந்துள்ளன. (அந்த அளவுக்கு அவை இறுக்க மானவை.) தர்மம் செய்பவர் தர்மம் செய்ய நாடும்போது (அவர் அணிந்திருக்கும் அந்த) அங்கி அவருக்கு விரிந்துகொடுத்து, அவரது பாதச் சுவட்டைக்கூட அழித்து விடுகிறது.
கஞ்சன் தர்மம் செய்ய நாடும் போதெல்லாம் (அவனது இரும்பு அங்கி யின்) ஒவ்வொரு வளையமும் அடுத்த வளையத்தை நெருக்குகிறது; அவனைப் பிடித்து அழுத்துகிறது. அவனுடைய கைகள் கழுத்தெலும்புகளுடன் ஒட்டிக் கொள்கின்றன.68
(இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை அறிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், ‘‘கஞ்சன் அந்த அங்கியை விரிவுபடுத்த முயல்வான். ஆனால், அது விரியாது” என்று (பலமுறை) சொன்னார்கள்.

2918. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، مُسْلِمٍ ـ هُوَ ابْنُ صُبَيْحٍ ـ عَنْ مَسْرُوقٍ، قَالَ حَدَّثَنِي الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ، قَالَ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِحَاجَتِهِ ثُمَّ أَقْبَلَ، فَلَقِيتُهُ بِمَاءٍ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ، فَذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْهِ فَكَانَا ضَيِّقَيْنِ، فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتُ، فَغَسَلَهُمَا وَمَسَحَ بِرَأْسِهِ وَعَلَى خُفَّيْهِ.
பாடம் : 90
பயணத்திலும் போரிலும் நீளங்கி அணிதல்
2918. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் போரின்போது) தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொள்ளச் சென்றார் கள். பிறகு திரும்பி வந்தபோது, நான் தண்ணீருடன் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டு நீளங்கியொன்றை அணிந்திருந் தார்கள். அவர்கள் (நான் கொண்டுசென்ற தண்ணீரில்) வாய் கொப்புளித்து, மூக்கில் நீர் செலுத்தி (மூக்கைச் சிந்தி)னார்கள்; முகத்தைக் கழுவிக்கொண்டார்கள்.
நீளங்கியின் கைப் பகுதிகள் வழியாக தம் கைகளை வெளியே எடுக்கலானார்கள். அவை மிகவும் இறுக்கமாக இருந்தன. ஆகவே, கீழ்ப் பகுதி வழியாக இரு கைகளையும் வெளியே எடுத்து, அவற் றைக் கழுவினார்கள்; தலைமீது (ஈரக் கையால்) தடவினார்கள்; காலுறைகளின் மீதும் தடவிக்கொண்டார்கள்.69

2919. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ فِي قَمِيصٍ مِنْ حَرِيرٍ، مِنْ حِكَّةٍ كَانَتْ بِهِمَا.
பாடம் : 91
போரில் பட்டாடை அணிவது
2919. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்குச் சொறி சிரங்கு இருந்த காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்துகொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

2920. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ عَبْدَ، الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَالزُّبَيْرَ شَكَوَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ يَعْنِي الْقَمْلَ ـ فَأَرْخَصَ لَهُمَا فِي الْحَرِيرِ، فَرَأَيْتُهُ عَلَيْهِمَا فِي غَزَاةٍ.
பாடம் : 91
போரில் பட்டாடை அணிவது
2920. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஸுபைர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம், (தம் உடலில் சிரங்கை உண்டாக்கும்) ஒட்டுண்ணிகளைக் குறித்து முறையிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் பட்டாடை அணியச் சலுகை கொடுத்தார் கள். எனவே, ஓர் அறப்போரில் அவ்விரு வரும் பட்டாடை அணிந்திருப்பதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2921. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، أَخْبَرَنِي قَتَادَةُ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ فِي حَرِيرٍ.
பாடம் : 91
போரில் பட்டாடை அணிவது
2921. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் ஸுபைர் பின் அல் அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் பட்டாடை அணிய நபி (ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்.

2922. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رَخَّصَ أَوْ رُخِّصَ لِحِكَّةٍ بِهِمَا.
பாடம் : 91
போரில் பட்டாடை அணிவது
2922. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அவ்விருவருக்கும் இருந்த சொறி சிரங்கின் காரணமாக, அவர்களுக்கு (பட்டாடை அணிய) நபி (ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்; அல்லது சலுகை கொடுக்கப்பட்டது.

2923. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْكُلُ مِنْ كَتِفٍ يَحْتَزُّ مِنْهَا، ثُمَّ دُعِيَ إِلَى الصَّلاَةِ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ وَزَادَ فَأَلْقَى السِّكِّينَ.
பாடம் : 92
கத்தி(யின் பயன்பாடு) தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை
2923. அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (ஆட்டின்) ஒரு தொடை இறைச்சியை (கத்தியால்) துண்டு போட்டு உண்பதை நான் பார்த்தேன். பிறகு தொழுகைக்கு அழைக்கப்பட்டவுடன் அவர்கள் தொழுதார்கள். (ஆனால், புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில், ‘‘தொழுகைக்கு அழைக்கப் பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் கத்தி யைக் கீழே போட்டுவிட்டார்கள்” என்று கூடுதலாக வந்துள்ளது.70

2924. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، أَنَّ عُمَيْرَ بْنَ الأَسْوَدِ الْعَنْسِيَّ، حَدَّثَهُ أَنَّهُ، أَتَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ وَهْوَ نَازِلٌ فِي سَاحِلِ حِمْصَ، وَهْوَ فِي بِنَاءٍ لَهُ وَمَعَهُ أُمُّ حَرَامٍ، قَالَ عُمَيْرٌ فَحَدَّثَتْنَا أُمُّ حَرَامٍ أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ الْبَحْرَ قَدْ أَوْجَبُوا "". قَالَتْ أُمُّ حَرَامٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَا فِيهِمْ. قَالَ "" أَنْتِ فِيهِمْ "". ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ مَدِينَةَ قَيْصَرَ مَغْفُورٌ لَهُمْ "". فَقُلْتُ أَنَا فِيهِمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" لاَ "".
பாடம் : 93
(கிழக்கு) ரோமானியருடன் போரி டுவது தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை71
2924. உமைர் பின் அஸ்வத் அல் அன்ஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் (சிரியாவில் உள்ள) யிஹிம்ஸ்’ கடற்கரையில் தமது கட்டடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம் (ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் எம்மிடம் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் முதலில் கடலில் (சென்று) அறப்போர் புரியும் படையினர் (சொர்க்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள்” என்று கூறி னார்கள்.72
இதைச் செவியுற்ற நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அவர்களில் ஒருத் தியா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவர் தான்” என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘என் சமுதாயத்தாரில் கைஸர் (சீசர்) உடைய நகரம் (கான்ஸ்டான்டி நோபிள்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.73
‘‘அவர்களில் நானும் ஒருத்தியா? அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள்.

2925. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" تُقَاتِلُونَ الْيَهُودَ حَتَّى يَخْتَبِيَ أَحَدُهُمْ وَرَاءَ الْحَجَرِ فَيَقُولُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ "".
பாடம் : 94
யூதர்களுடன் போரிடுதல்
2925. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்துகொள்ள, அந்தக் கல், ‘‘அல்லாஹ் வின் அடியாரே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்றுவிடு” என்று கூறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2926. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ "".
பாடம் : 94
யூதர்களுடன் போரிடுதல்
2926. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் யூதர்களுடன் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் வராது. எந்த அளவுக்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்துகொண்டு) இருப் பான். அந்தக் கல், ‘‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்துகொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்றுவிடு” என்று கூறும்.74
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2927. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا يَنْتَعِلُونَ نِعَالَ الشَّعَرِ، وَإِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا عِرَاضَ الْوُجُوهِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ "".
பாடம் : 95
துருக்கியர்களுடன் போர் புரிதல்
2927. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
முடியாலான காலணிகளை அணிகின்ற ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போரிடுவது, யுகமுடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரிவது இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.75
இதை அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2928. حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ الأَعْرَجِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ صِغَارَ الأَعْيُنِ، حُمْرَ الْوُجُوهِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ "".
பாடம் : 95
துருக்கியர்களுடன் போர் புரிதல்
2928. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிறிய கண்களும் சிவந்த முகங்களும் சப்பையான மூக்குகளும் உள்ள துருக்கியர் களுடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங் களைப் போன்று இருக்கும். முடியாலான காலணிகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
2928. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிறிய கண்களும் சிவந்த முகங்களும் சப்பையான மூக்குகளும் உள்ள துருக்கியர் களுடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங் களைப் போன்று இருக்கும். முடியாலான காலணிகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
2929. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطَرَّقَةُ "". قَالَ سُفْيَانُ وَزَادَ فِيهِ أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً "" صِغَارَ الأَعْيُنِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ "".
பாடம் : 96
முடியாலான காலணி அணிபவர் களுடன் போர் புரிவது
2929. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
முடியாலான காலணிகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(யிதோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தாருடன்’ என்பதற்கு முன்னால்)லி யிசிறிய கண்களும் சப்பை மூக்குகளும் உள்ளன என்னும் சொற்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.