2811. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا عَبَايَةُ بْنُ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو عَبْسٍ، هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَبْرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ فِي سَبِيلِ اللَّهِ فَتَمَسَّهُ النَّارُ "".
பாடம் : 16
இறைவழியில் புழுதி படிந்த பாதங் கள்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியிருக்கும் நாட்டுப்புற அரபியருக்கும் அல்லாஹ்வின் தூதரைவிட்டுப் பின்வாங்குவதும் அவரது உயிரைவிடத் தம் உயிர்கள்மேல் ஆசை கொள்வதும் தகாது. இதற்குக் காரணம், இறைவழியில் அவர்களுக்குத் தாகமோ களைப்போ பசியோ (எது) ஏற்பட்டாலும், இறைமறுப்பாளர்களுக்குக் கோபமூட்டும் வகையில் ஓர் இடத்தில் அவர்கள் கால்வைத்தாலும், பகைவனிடமிருந்து அவர்கள் எதையேனும் சந்தித்தாலும் அதற்குப் பிரதியாக அவர்களுக்கு ஒரு நல்லறம் எழுதப்படாமல் இராது என்பதே ஆகும். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் பிரதிபலனை வீணாக்கமாட்டான். (9:120)
2811. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரின் பாதங்கள் இரண்டிலும் இறைவழியில் புழுதி படிந்திருக்க, அவற்றை நரக நெருப்புத் தீண்டு வதில்லை.
இதை அபூஅப்ஸ் அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.16
அத்தியாயம் : 56

2812. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ لَهُ وَلِعَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ ائْتِيَا أَبَا سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ. فَأَتَيْنَاهُ وَهُوَ وَأَخُوهُ فِي حَائِطٍ لَهُمَا يَسْقِيَانِهِ، فَلَمَّا رَآنَا جَاءَ فَاحْتَبَى وَجَلَسَ فَقَالَ كُنَّا نَنْقُلُ لَبِنَ الْمَسْجِدِ لَبِنَةً لَبِنَةً، وَكَانَ عَمَّارٌ يَنْقُلُ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَمَرَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَسَحَ عَنْ رَأْسِهِ الْغُبَارَ وَقَالَ "" وَيْحَ عَمَّارٍ، تَقْتُلُهُ الْفِئَةُ الْبَاغِيَةُ، عَمَّارٌ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ وَيَدْعُونَهُ إِلَى النَّارِ "".
பாடம் : 17
இறைவழியில் (போராடும்போது) தலையில் படிந்த புழுதியைத் துடைப்பது
2812. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடமும் தம் புதல்வர் அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடமும், ‘‘அபூசயீத் (ரலி) அவர்களிடம் சென்று அவர் கூறும் ஹதீஸைச் செவியுறுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அபூசயீத் (ரலி) அவர்களும் அவர்களுடைய (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூசயீத் (ரலி) அவர்கள் எங்களைப் பார்த்தவுடன் வந்து, முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டார்கள்.
பிறகு கூறலானார்கள்: நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) எடுத்துச் சென்றுகொண்டிருந்தோம். அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) எடுத்துச் சென்றுகொண்டி ருந்தார். அப்போது அவரை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரது தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, ‘‘பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தார் கொன்றுவிடுவார்கள். அவர்களை அம்மார், அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தார் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.17

2813. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا رَجَعَ يَوْمَ الْخَنْدَقِ وَوَضَعَ السِّلاَحَ وَاغْتَسَلَ، فَأَتَاهُ جِبْرِيلُ وَقَدْ عَصَبَ رَأْسَهُ الْغُبَارُ فَقَالَ وَضَعْتَ السِّلاَحَ، فَوَاللَّهِ مَا وَضَعْتُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَأَيْنَ "". قَالَ هَا هُنَا. وَأَوْمَأَ إِلَى بَنِي قُرَيْظَةَ. قَالَتْ فَخَرَجَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 18
போருக்குப்பின் குளிப்பதும் (வானவர் ஜிப்ரீல்) புழுதி படிந்தவராக வருவதும்
2813. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போர் முடிந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலை யைப் புழுதி மூடியிருக்க வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் ஆயுதத்தைக் கீழே வைத்துவிட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதைக் கீழே வைக்கவில்லை” என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள்?” என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இதோ, இங்கே!” என்று பனூ குறைழா (எனும் யூதக்) குலத்தாரை நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.

2814. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ بِئْرِ مَعُونَةَ ثَلاَثِينَ غَدَاةً، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ أَنَسٌ أُنْزِلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ قُرْآنٌ قَرَأْنَاهُ ثُمَّ نُسِخَ بَعْدُ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ.
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ்வின் (பின்வரும்) சொல்லி(ல் குறிப்பிடப் படுவோரி)ன் சிறப்பு
(அல்லாஹ் கூறுகின்றான்:)
(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்.
அல்லாஹ் தனது அருளைத் தங்களுக்கு வழங்கிய(தை எண்ணி அ)தற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். தம்முடன் (இதுவரை) வந்துசேராமல், தமக்குப் பின்னர் (உயிர்த் தியாகம் செய்து வர) இருப்போருக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவுமாட்டார்கள் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள் மற்றும் மேன்மை குறித்தும், இறைநம்பிக்கையாளர்களின் பிரதிபலனை அல்லாஹ் வீணாக்கமாட்டான் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி அடைகின் றனர். (3:169லி171)
2814. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யிபிஃரு மஊனா’ (எனுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் காலை (நேரத் தொழுகை)களில் பிரார்த்தித்தார்கள். ரிஅல், தக்வான், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்த உஸய்யா ஆகிய கூட்டத்தாரே அவர்கள்.
பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதிவந்தோம்; பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; நாங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனம்.18

2815. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ اصْطَبَحَ نَاسٌ الْخَمْرَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ قُتِلُوا شُهَدَاءَ. فَقِيلَ لِسُفْيَانَ مِنْ آخِرِ ذَلِكَ الْيَوْمِ قَالَ لَيْسَ هَذَا فِيهِ.
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ்வின் (பின்வரும்) சொல்லி(ல் குறிப்பிடப் படுவோரி)ன் சிறப்பு
(அல்லாஹ் கூறுகின்றான்:)
(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்.
அல்லாஹ் தனது அருளைத் தங்களுக்கு வழங்கிய(தை எண்ணி அ)தற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். தம்முடன் (இதுவரை) வந்துசேராமல், தமக்குப் பின்னர் (உயிர்த் தியாகம் செய்து வர) இருப்போருக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவுமாட்டார்கள் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள் மற்றும் மேன்மை குறித்தும், இறைநம்பிக்கையாளர்களின் பிரதிபலனை அல்லாஹ் வீணாக்கமாட்டான் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி அடைகின் றனர். (3:169லி171)
2815. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்.19
அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘அந்த நாளின் இறுதியில் (அவர்கள் உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்) என்றா (அறிவிக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘(‘அந்த நாளின் இறுதியில்’ என்ற) இந்த வாசகம் அறிவிப் பில் இல்லை” என்று பதிலளித்தார்.

2816. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ جِيءَ بِأَبِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ مُثِّلَ بِهِ وَوُضِعَ بَيْنَ يَدَيْهِ، فَذَهَبْتُ أَكْشِفُ عَنْ وَجْهِهِ، فَنَهَانِي قَوْمِي، فَسَمِعَ صَوْتَ صَائِحَةٍ فَقِيلَ ابْنَةُ عَمْرٍو، أَوْ أُخْتُ عَمْرٍو. فَقَالَ "" لِمَ تَبْكِي أَوْ لاَ تَبْكِي، مَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا "". قُلْتُ لِصَدَقَةَ أَفِيهِ حَتَّى رُفِعَ قَالَ رُبَّمَا قَالَهُ.
பாடம் : 20
உயிர்த் தியாகிக்கு வானவர்கள் நிழல் தருவது
2816. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(உஹுத் போரின்போது) என் தந்தை (அப்துல்லாஹ்), உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். நான் என் தந்தையின் முகத்திலிருந்து (துணியை) விலக்கச் சென்றேன். என் சமூகத்தார் என்னைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரிவைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், அம்ர் (ரலி) அவர்களின் மகள் என்றோ அவர்களுடைய சகோதரி என்றோ (அதாவது ஜாபிரின் அத்தை என்றோ, தந்தையின் அத்தை என்றோ) கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், யிஏன் அழுகிறாய்?› அல்லது ‘நீ அழாதே!› வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
(புகாரீ ஆகிய) நான் அறிவிப்பாளர் ஸதகா பின் ஃபள்ல் (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர் (உடல்) தூக்கப்படும்வரை (நிழல் கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள்) என்று அறிவிப்பில் உள்ளதா?” என்று கேட்க, அவர்கள், ‘‘ஜாபிர் (ரலி) அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியிருக்கலாம் (என்று எனக்கு இதை அறிவித்த சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் உறுதியின்றிக் கூறினார்கள்)” எனப் பதிலளித் தார்கள்.20

2817. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا أَحَدٌ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا وَلَهُ مَا عَلَى الأَرْضِ مِنْ شَىْءٍ، إِلاَّ الشَّهِيدُ، يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ عَشْرَ مَرَّاتٍ، لِمَا يَرَى مِنَ الْكَرَامَةِ "".
பாடம் : 21
அறப்போர் புரிந்(து உயிர்த் தியாகம் செய்)தவர் உலகத்திற்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுவது
2817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டார்; உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தமக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணி யத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறை வழியில்) பத்துமுறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

2818. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ وَكَانَ كَاتِبَهُ قَالَ كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ "". تَابَعَهُ الأُوَيْسِيُّ عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ.
பாடம் : 22
மின்னும் வாட்களுக்குக் கீழ் சொர்க்கம் உள்ளது.
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நம் நபி (ஸல்) அவர்கள், நம் இறை வனின் செய்தி குறித்து அறிவிக்கும்போது, ‘‘நம்மில் யார் இறைவழியில் கொல்லப் படுகின்றாரோ அவர் சொர்க்கத்திற்குச் செல்வார்” என்று குறிப்பிட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(இறைவழியில்) கொல்லப்பட்ட நம்மவர்கள் சொர்க்கத்திற்கும், (எதிரிகளில்) கொல்லப்பட்ட (இறைமறுப்பாளர்களான) அவர்கள் நரகத்திற்கும்தானே செல்வார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று கூறினார்கள்.
2818. உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையும் எழுத்தருமான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு, ‘‘சொர்க்கம், வாட் களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என (கடிதம்) எழுதினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2819. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى مِائَةِ امْرَأَةٍ ـ أَوْ تِسْعٍ وَتِسْعِينَ ـ كُلُّهُنَّ يَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ لَهُ صَاحِبُهُ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَقُلْ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَحْمِلْ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ وَاحِدَةٌ، جَاءَتْ بِشِقِّ رَجُلٍ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ، لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ فُرْسَانًا أَجْمَعُونَ "".
பாடம் : 23
இறைவழியில் போர் புரிவதற்காகக் குழந்தை வேண்டுமென்று கோரல்
2819. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நபி) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள் (ஒருமுறை), ‘‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு லிஅல்லது தொண்ணூற்றொன்பதுலி துணைவியரிடமும் சென்று (உடலுறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ் வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்” என்று கூறினார்கள்.
அவர்களுடைய தோழர் ஒருவர், (அவர்கள் மறந்திருக்கலாம் என்று கருதி) ‘அல்லாஹ் நாடினால்’ (இன்ஷா அல்லாஹ்) என்று சொல்லுங்கள் என்றார். சுலைமான் (அலை) அவர்கள் யிஇன்ஷா அல்லாஹ்’ என்று (தம் வாயால்) கூறாமலிருந்துவிட்டார்கள்.
ஆகவே, (அவர்களின் துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அவரும் ஒரு புஜமுடைய பாதி மனிதரைத்தான் பெற்றெடுத்தார். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! அவர், ‘அல்லாஹ் நாடினால்’ என்று (தம் வாயாலும்) கூறியிருந்தால், (அந்த நூறு மனைவியரும் கர்ப்பமுற்றுப் பிள்ளைகள் பெற, அப்பிள்ளைகள்) அனைவருமே இறைவழியில் அறப் போர் புரிகின்ற வீரர்களாய் ஆகியிருப் பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2820. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ وَاقِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ، فَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَبَقَهُمْ عَلَى فَرَسٍ، وَقَالَ "" وَجَدْنَاهُ بَحْرًا "".
பாடம் : 24
போரில் வீரமும் கோழைத் தனமும்
2820. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந் தார்கள். ‘‘(ஒருமுறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள்.
அப்போது அவர்களை நபி (ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ள)ப் புறப்பட்டார்கள்; மேலும், ‘‘இந்தக் குதிரை யைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகக் கண்டேன்” என்று கூறினார்கள்.

2821. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جُبَيْرٍ، قَالَ أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، أَنَّهُ بَيْنَمَا هُوَ يَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ النَّاسُ، مَقْفَلَهُ مِنْ حُنَيْنٍ، فَعَلِقَهُ النَّاسُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ فَخَطِفَتْ رِدَاءَهُ، فَوَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَعْطُونِي رِدَائِي، لَوْ كَانَ لِي عَدَدُ هَذِهِ الْعِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ، ثُمَّ لاَ تَجِدُونِي بَخِيلاً وَلاَ كَذُوبًا وَلاَ جَبَانًا "".
பாடம் : 24
போரில் வீரமும் கோழைத் தனமும்
2821. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்றுகொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்துகொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; கருவேல முள்மரம்வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் மேல் துண்டு முள்மரத்தில் சிக்கிக்கொண்டது.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, ‘‘என் மேல்துண்டை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள் மரங்களின் எண்ணிக்கையில் கால்நடைகள் இருந்தாலும்கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய்ய னாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

2822. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ الأَوْدِيَّ، قَالَ كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلاَءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُعَلِّمُ الْغِلْمَانَ الْكِتَابَةَ، وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلاَةِ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ "". فَحَدَّثْتُ بِهِ مُصْعَبًا فَصَدَّقَهُ.
பாடம் : 25
கோழைத்தனத்திலிருந்து பாதுகாப் புக் கோரல்
2822. அம்ர் பின் மைமூன் அல் அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆசிரியர் சிறுவர்களுக்கு எழுத்தைக் கற்பிப்பதைப் போன்று, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக்கொடுத்துவந்தார்கள்; மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின்னால் இவற்றைச் சொல்லி பாதுகாப்புக் கோரிவந்தார்கள் என்றும் கூறுவார்கள்:
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் —ýப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி.
(பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; தள்ளாத வயதில் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனை’லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். இது உண்மையானதுதான் என அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

2823. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ "".
பாடம் : 25
கோழைத்தனத்திலிருந்து பாதுகாப் புக் கோரல்
2823. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி வல்—ýப்னி வல்ஹரம்; வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்; வ அஊது பிக்க மின் அதாபில் கப்ர்” என்று ஓதுவார்கள்.
(பொருள்: இறைவா! நான் இயலாமை ‘லிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந் தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனை’லிருந்தும் இறப்பின் சோதனை’லிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனை’லிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

2824. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ صَحِبْتُ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَسَعْدًا وَالْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ ـ رضى الله عنهم ـ فَمَا سَمِعْتُ أَحَدًا، مِنْهُمْ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، إِلاَّ أَنِّي سَمِعْتُ طَلْحَةَ يُحَدِّثُ عَنْ يَوْمِ أُحُدٍ.
பாடம் : 26
அறப்போரில் தாம் சந்தித்தவை பற்றி ஒருவர் எடுத்துரைப்பது
இது குறித்து சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2824. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோரு டன் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவித்ததை நான் கேட்ட தில்லை. ஆனால், தல்ஹா (ரலி) அவர்கள் உஹுத் போர் நாள் குறித்து அறிவித்ததை நான் கேட்டிருக்கிறேன்.

2825. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ الْفَتْحِ "" لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا "".
பாடம் : 27
போருக்குச் செல்வது கடமையாகும் என்பதும், அறப்போரில் கடமை யான அளவு எது என்பதும், அதற் காக நாட்டம் கொள்வதும்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
எளிதானாலும் சுமையானாலும் நீங்கள் (அறப்போருக்குப்) புறப்படுங்கள். உங்கள் உயிர்களாலும் உங்கள் உடைமைகளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரியுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு நன்மை ஆகும்.
(நபியே!) அ(வர்களை நீர் அழைத்த)து, உடனடியாக (கைமேல்) கிடைக்கும் பலனாகவும் குறைந்த தூரப் பயணமாகவும் இருந்திருக்குமானால், நிச்சயமாக அவர்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்பார்கள். ஆயினும், அவர்களுக்குப் பயண தூரம் நீண்டுவிட்டது. (எனவே, அவர்கள் பின்வாங்கிவிட்டனர்.) பின்னர் அவர்கள் (உங்களைச் சந்திக்கும்போது), ‘‘எங்களால் முடிந்திருந்தால் நாங்களும் உங்களுடன் புறப்பட்டுவந்திருப்போம்” என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்வர். அவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்பதை அல்லாஹ் அறிந்தே இருக்கின்றான்.22 (9:41,42)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? ‘‘அல்லாஹ் வின் வழியில் புறப்படுங்கள்” என்று உங்களிடம் சொல்லப்பட்டால், நீங்கள் இவ்வுலக (சுக)த்தின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே! மறுமையை விடுத்து இம்மை வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்துவிட்டீர்களா? மறுமைக்கு முன்னால் இம்மை வாழ்க்கை யின் சுகம் (மிகவும்) சொற்பமானதே அன்றி வேறில்லை.
நீங்கள் (அல்லாஹ்வின் வழியில்) புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்கு வதைக்கும் வேதனையை வழங்குவான்; உங்களுக்குப் பதிலாக வேறொரு சமுதாயத்தாரைக் கொண்டுவருவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் இழைக்க முடியாது. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள்மீதும் ஆற்றலுள்ளவன் ஆவான். (9:38,39)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அணியணியாகப் புறப்படுங்கள்” (4:71) (ஸுபாத்’) என்பதற்கு, ‘(தனித் தனியாகிப்) பிரிந்து செல்லும் பல படையணிகளாகப் புறப்படுங்கள்’ என்பது பொருள்” எனக் கூறினார்கள். ‘ஸுபாத்’ என்பது ‘ஸுபத்’ என்பதன் பன்மையாகும்.
2825. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், ‘‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்பு (மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது; ஆனால், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போருக்காகப் புறப்படும்படி சொல்லப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.23

2826. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَضْحَكُ اللَّهُ إِلَى رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الآخَرَ يَدْخُلاَنِ الْجَنَّةَ، يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلُ، ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى الْقَاتِلِ فَيُسْتَشْهَدُ "".
பாடம் : 28
இறைமறுப்பாளர் முஸ்லிமைக் கொன்றபின் இஸ்லாத்தில் இணைந்து சீராக நடந்து, பிறகு (இறைவழியில்) கொல்லப்படல்
2826. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவ மன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகி ஆகிவிடுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
2826. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவ மன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகி ஆகிவிடுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
2827. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي عَنْبَسَةُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ بِخَيْبَرَ بَعْدَ مَا افْتَتَحُوهَا، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَسْهِمْ لِي. فَقَالَ بَعْضُ بَنِي سَعِيدِ بْنِ الْعَاصِ لاَ تُسْهِمْ لَهُ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ أَبُو هُرَيْرَةَ هَذَا قَاتِلُ ابْنِ قَوْقَلٍ. فَقَالَ ابْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ وَاعَجَبًا لِوَبْرٍ تَدَلَّى عَلَيْنَا مِنْ قَدُومِ ضَأْنٍ، يَنْعَى عَلَىَّ قَتْلَ رَجُلٍ مُسْلِمٍ أَكْرَمَهُ اللَّهُ عَلَى يَدَىَّ وَلَمْ يُهِنِّي عَلَى يَدَيْهِ. قَالَ فَلاَ أَدْرِي أَسْهَمَ لَهُ أَمْ لَمْ يُسْهِمْ لَهُ. قَالَ سُفْيَانُ وَحَدَّثَنِيهِ السَّعِيدِيُّ عَنْ جَدِّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ السَّعِيدِيُّ عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ.
பாடம் : 28
இறைமறுப்பாளர் முஸ்லிமைக் கொன்றபின் இஸ்லாத்தில் இணைந்து சீராக நடந்து, பிறகு (இறைவழியில்) கொல்லப்படல்
2827. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். ‘‘அல்லாஹ் வின் தூதரே! எனக்கு (போரில் கிடைத்த செல்வத்தில்) ஒரு பங்கு கொடுங்கள்” என்று நான் கேட்டேன். அப்போது சயீத் பின் அல்ஆஸ் உடைய மகன்களில் ஒருவர் (அபான் என்பவர்), ‘‘இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.
உடனே நான், ‘‘இவர் (நுஅமான்) இப்னு கவ்கல் அவர்களை (உஹுத் போரில்) கொன்றவர்” என்று கூறினேன். அதற்கு சயீத் பின் அல்ஆஸ் அவர்களின் மகன் (என்னைப் பற்றி), ‘‘என்ன ஆச்சரி யம்! (தன் யிதவ்ஸ்’ குலத்தார் வசிக்கின்ற) ‘ளஃன்’ என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் ஒரு முஸ்லிமைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறைசொல்கிறதே! அந்த முஸ்லிமை அல்லாஹ் என் கைகளால் கண்ணியப்படுத்தியுள்ளான். அவர் கைகளால் என்னை அவன் கேவலப்படுத்தி விடவில்லை” என்று கூறினார்.24
அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவுக்குப் பங்கு கொடுத்தார்களா, பங்கு கொடுக்கவில்லையா என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறுகிறார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இரண்டாவது தொடரில் உள்ள சயீதீ (ரஹ்) அவர்களின் (முழுப்) பெயர்: அம்ர் பின் யஹ்யா பின் சயீத் பின் அம்ர் பின் சயீத் பின் அல்ஆஸ்.

2828. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ أَبُو طَلْحَةَ لاَ يَصُومُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَجْلِ الْغَزْوِ، فَلَمَّا قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَمْ أَرَهُ مُفْطِرًا، إِلاَّ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى.
பாடம் : 29
நோன்பைவிட அறப்போருக்கு முதலிடம் கொடுப்பது
2828. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் கலந்துகொண்ட காரணத்தால் நோன்பு நோற்காதவராக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் (இஸ்லாம் பலம் பெற்றுவிட்ட நிலையில்), நான் அபூதல்ஹா (ரலி) அவர்களை நோன்புப் பெருநாளிலும் ஹஜ் பெருநாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காத வராகக் கண்டதில்லை.

2829. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ، وَالْمَبْطُونُ، وَالْغَرِقُ وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 30
இறைவழியில் கொல்லப்படுவது மட்டுமன்றி ஏழு வகையான உயிர்த் தியாகங்கள் உண்டு.25
2829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்த் தியாகிகள் ஐந்து பேர் ஆவர்:
1) கொள்ளை நோயால் இறந்தவர் 2) வயிற்று(ப் போக்கு போன்ற) நோய்களால் இறந்தவர் 3) தண்ணீரில் மூழ்கி இறந்தவர் 4) (வீடு, கட்டடம் ஆகியவை இடிந்து விழும்போது) இடிபாடுகளில் சிக்கி இறந்தவர் 5) இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.26
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
2829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்த் தியாகிகள் ஐந்து பேர் ஆவர்:
1) கொள்ளை நோயால் இறந்தவர் 2) வயிற்று(ப் போக்கு போன்ற) நோய்களால் இறந்தவர் 3) தண்ணீரில் மூழ்கி இறந்தவர் 4) (வீடு, கட்டடம் ஆகியவை இடிந்து விழும்போது) இடிபாடுகளில் சிக்கி இறந்தவர் 5) இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.26
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
2830. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ "".
பாடம் : 30
இறைவழியில் கொல்லப்படுவது மட்டுமன்றி ஏழு வகையான உயிர்த் தியாகங்கள் உண்டு.25
2830. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
கொள்ளை நோயால் இறக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அது வீர மரணமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.