2745. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ. فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَخَذَهُ سَعْدٌ فَقَالَ ابْنُ أَخِي، قَدْ كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ أَخِي، وَابْنُ أَمَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي، كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي. وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ ابْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ "". ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ "" احْتَجِبِي مِنْهُ "". لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ.
பாடம் : 4
இறுதி விருப்பம் தெரிவிப்பவர் தம் பொறுப்பாளரிடம், ‘‘என் மகனைக் கவனித்துக்கொள்” என்று சொல்வதும், (அவ்வாறு) இறுதி விருப்பம் தெரிவிக்கப்பட்டவர் (தமது உரிமைக்காக) வாதாட அனுமதிக்கப்பட் டிருப்பதும்
2745. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனை நீ பிடித்து வைத்துக்கொள்” என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டில் சஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துக்கொண் டார்கள். அப்போது அவர்கள், ‘‘(இவன் என்) சகோதரரின் மகன். என் சகோதரர் இவனை அழைத்துக் கொண்டுவரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று கூறினார்.
ஸம்ஆவின் மகன் அப்து (ரலி) எழுந்து, ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன். அவரது படுக்கையில் (அவரது அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று கூறினார். இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென் றனர்.
சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன் மகன். அவர் இவனை அழைத்துக் கொண்டுவரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று கூற, அப்து பின் ஸம்ஆ (ரலி), ‘‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்” என்று கூறினார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்து பின் ஸம்ஆவே! அவன் உனக்கேயுரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்புதான்” என்று கூறினார்கள்.
பிறகு (தம் மனைவியும்) ஸம்ஆவின் மகளுமான சவ்தா (ரலி) அவர்களிடம், ‘‘இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க்கொள்” என்று கூறினார்கள். அவன், தோற்றத்தில் உத்பாவைப் போலவே இருந்ததைக் கண்டதால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள். (அதன் பிறகு) அந்த மனிதர் மரணிக்கும்வரை) அன்னை சவ்தா (ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.6
அத்தியாயம் : 55

2746. حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُوِدِيًّا، رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ، أَفُلاَنٌ أَوْ فُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ، فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِهِ، فَلَمْ يَزَلْ حَتَّى اعْتَرَفَ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرُضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ.
பாடம் : 5
நோயாளி தமது தலையால் தெளி வான சைகை செய்தால் அது செல்லும்.
2746. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர் ஒருவர் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கி விட்டார். அச்சிறுமியிடம், ‘‘உன்னை இப்படிச் செய்தது யார்? இன்னாரா? இன்னாரா?” என்று ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கேட்கப்பட்டது. இறுதியில், அந்த யூதருடைய பெயர் சொல்லப்பட்ட வுடன் (‘அவர்தான் இப்படிச் செய்தார்’ என்று) அச்சிறுமி தன் தலையால் சைகை செய்தாள்.
உடனே அந்த யூதர் கொண்டுவரப் பட்டார். அவர் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை தொடர்ந்து விசாரிக்கப் பட்டார். அவர் ஒப்புக்கொண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் அவரது தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது தலை நசுக்கப் பட்டது.

2747. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ وَرْقَاءَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْمَالُ لِلْوَلَدِ، وَكَانَتِ الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ، فَنَسَخَ اللَّهُ مِنْ ذَلِكَ مَا أَحَبَّ، فَجَعَلَ لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ، وَجَعَلَ لِلأَبَوَيْنِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسَ، وَجَعَلَ لِلْمَرْأَةِ الثُّمُنَ وَالرُّبْعَ، وَلِلزَّوْجِ الشَّطْرَ وَالرُّبُعَ.
பாடம் : 6
வாரிசுக்கு இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்கக் கூடாது.
2747. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தொடக்க காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும் இறுதி விருப்பம் தெரிவித்தல் தாய்தந்தைக்குரியதாகவும் இருந்தது. அதில், தான் விரும்பியதை அல்லாஹ், மாற்றிவிட்டான்; இரு பெண்களின் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனது பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். (குழந்தை இருந்தால்) மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், (குழந்தை இல்லாவிட்டால்) நான்கில் ஒரு பங்கையும் (அவ்வாறே) கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.7

2748. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ، أَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ "" أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ حَرِيصٌ. تَأْمُلُ الْغِنَى، وَتَخْشَى الْفَقْرَ، وَلاَ تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ "".
பாடம் : 7
மரணத் தறுவாயில் தர்மம் செய்வது
2748. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தர்மத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார்.
‘‘நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும், செல்வந் தராக விரும்பிய நிலையில் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உமது உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, யிஇன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்’ என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப் போடாதீர். (உமது மரணம் நெருங்கிவிடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உம்முடைய வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகிவிட்டிருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

2749. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ، إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ "".
பாடம் : 8
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(இந்தச் சொத்துப் பங்கீடெல்லாம்) அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான். (4:12)
நீதிபதி ஷுரைஹ், உமர் பின் அப்தில் அஸீஸ், தாவூஸ், அதாஉ, இப்னு உதைனா (ரஹ்) ஆகியோர், ‘‘நோயாளி, தான் பட்ட கடனை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிப்பது செல்லும்” என்று தெரிவித்துள் ளார்கள் எனக் கூறப்படுகிறது.
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘ஒரு மனிதன் செய்யும் தர்மங்களில் தகுதி மிக்கது, அவன் உலக வாழ்வின் கடைசி நாளிலும் மறுமை வாழ்வின் முதல் நாளி லும் செய்யும் (இறுதி விருப்ப) தர்மமே யாகும்” என்று கூறினார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்), ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) ஆகியோர்கூறினார்கள்:
(மரணப் படுக்கையில் உள்ள நோயாளி) ஒருவர், தம் வாரிசைக் கடனிலிருந்து விடுவித்துவிட்டால் அவர் கடன் சுமையிலிருந்து விடுபட்டுவிடுவார்.
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், ஃபஸாரிய்யா குலத்தைச் சேர்ந்த தம் மனைவி, தமது வீட்டில் பூட்டிவைத்திருக்கும் செல்வத்தைத் திறந்துகாட்(டி பிறருக் குப் பங்கு கொடுத்தி)ட வேண்டியதில்லை என்று இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தார்கள்.8
‘‘ஒருவர் தமது மரண வேளையில் தம் அடிமையைப் பார்த்து ‘உன்னை நான் விடுதலை செய்துவிட்டிருந்தேன்’ என்று கூறினால், அது செல்லும்” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.
‘‘ஒரு பெண் தனது மரண வேளையில் ‘என் கணவர் எனக்குத் தர வேண்டியதைத் தந்து (கடனை) அடைத்துவிட்டார். நான் அதை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு விட்டேன்’ என்று கூறினால், அது செல்லும்” என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘‘மரணப் படுக்கையில் உள்ள ஒருவர் தம் வாரிசுகளில் சிலருக்கு (தாம் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டியுள்ளது என்று) வாக்குமூலம் அளித்தால், அது செல்லாது. (அச்சிலருக்கு மட்டும் சலுகை செய்வதற் காக அவ்வாறு அவர் சொல்லியிருக்கக்கூடும் என்ற) சந்தேகமே (கெட்ட எண்ணமே) இதற்குக் காரணம்” என்று சிலர் கூறுகின்றனர்.
(இவ்வாறு கூறும்) இவர்களே பிறகு இறங்கிவந்து, ‘‘(வாரிசுகளில் ஒருவரது) அடைக்கலப் பொருள், அல்லது ஏதேனும் ஒரு பொருள், அல்லது கூட்டு வியாபாரத்தின் பங்கு தம்மிடம் இருப்பதாக (நோயாளி) வாக்குமூலம் அளித்தால், அது செல்லும்” என்கின்றனர்.
ஆனால், (இவ்வாறு கெட்ட எண்ணம் கொள்வது சரியன்று. ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆதாரமின்றி) சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்; சந்தேகம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானது” என்று கூறியுள்ளார்கள்.
மேலும், முஸ்லிம்களின் செல்வத்தை (அநியாயமாக) உண்பது கூடாது.9 ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘நயவஞ் சகனின் அடையாளம் யாதெனில், அவனி டம் அடைக்கலப் பொருள் (அல்லது பொறுப்பு) ஏதும் நம்பி ஒப்படைக்கப்பட் டால் அதில் அவன் மோசடி செய்வான்” என்று கூறியுள்ளார்கள்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருட்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். (4:58)
இங்கு யிஉரியவர்கள்’ என்பது வாரிசுகள், வாரிசு அல்லாதோர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் குறிக்கும்.
நயவஞ்சகனின் அடையாளம் குறித்த இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிட மிருந்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2749. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2750. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ لِي "" يَا حَكِيمُ، إِنَّ هَذَا الْمَالَ خَضِرٌ حُلْوٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى "". قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا. فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا لِيُعْطِيَهُ الْعَطَاءَ فَيَأْبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، ثُمَّ إِنَّ عُمَرَ دَعَاهُ لِيُعْطِيَهُ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ فَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، إِنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ الَّذِي قَسَمَ اللَّهُ لَهُ مِنْ هَذَا الْفَىْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ. فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى تُوُفِّيَ رَحِمَهُ اللَّهُ.
பாடம் : 9
‘‘அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான்” (4:12) எனும் வசனத் தொடரின் விளக்கம்
நபி (ஸல்) அவர்கள், ‘‘இறுதி விருப்பத்தை (வஸிய்யத்) நிறைவேற்றுவதற்கு முன்பே கடனை அடைக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்ததாகக் கூறப்படுகிறது.
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருட்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். (4:58)
ஆகவே, அடைக்கலப் பொருளை ஒப்படைப்பது, (கட்டாயக் கடமையாக இருப்பதால் அது) கூடுதல் நற்செயலான யிவஸிய்யத்’தை நிறைவேற்றுவதைவிட முன்னுரிமை வாய்ந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது.
மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘தேவைக்கு மிஞ்சியதைக் கொடுப்பதே தர்மமாகும்” என்று கூறினார்கள்.10
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அடிமை, தன் காப்பாளரின் அனுமதியின்றி இறுதி விருப்பம் தெரிவிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமை தன் உரிமையாளரின் செல்வத்தைப் பாதுகாப்ப வன் ஆவான்” என்று கூறினார்கள்.11
2750. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘‘ஹகீமே! இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எவர் இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. எவர் இதைப் பேராசை யுடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் அருள் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். மேல் கை தான், கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.12
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! தங்களுக்குப்பின் எவரிட மும் எதையும் நான் (இந்த) உலகை விட்டுப் பிரியும்வரை கேட்கமாட்டேன்” என்று கூறினேன்.
அறிவிப்பாளர் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிட மிருந்து எதையும் ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றை)க் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
ஆகவே, உமர் (ரலி) அவர்கள் (மக்களிடையே), ‘‘முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரது உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்” என்று அறிவித்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள், தாம் மரணிக்கும்வரை (எதுவும்) கேட்கவில்லை. அவர்மீது அல்லாஹ் கருணை புரிவானாக!13
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2751. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ السَّخْتِيَانِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "". قَالَ وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ "" وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ "".
பாடம் : 9
‘‘அவர் தெரிவித்திருந்த இறுதி விருப்பம் மற்றும் (அவரது) கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகுதான்” (4:12) எனும் வசனத் தொடரின் விளக்கம்
நபி (ஸல்) அவர்கள், ‘‘இறுதி விருப்பத்தை (வஸிய்யத்) நிறைவேற்றுவதற்கு முன்பே கடனை அடைக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்ததாகக் கூறப்படுகிறது.
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட (அமானிதப்) பொருட்களை அவற்றுக்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். (4:58)
ஆகவே, அடைக்கலப் பொருளை ஒப்படைப்பது, (கட்டாயக் கடமையாக இருப்பதால் அது) கூடுதல் நற்செயலான யிவஸிய்யத்’தை நிறைவேற்றுவதைவிட முன்னுரிமை வாய்ந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது.
மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘தேவைக்கு மிஞ்சியதைக் கொடுப்பதே தர்மமாகும்” என்று கூறினார்கள்.10
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அடிமை, தன் காப்பாளரின் அனுமதியின்றி இறுதி விருப்பம் தெரிவிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அடிமை தன் உரிமையாளரின் செல்வத்தைப் பாதுகாப்ப வன் ஆவான்” என்று கூறினார்கள்.11
2751. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப் பாளரே. அவரவர் தத்தமது பொறுப் பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக் கப்படுவார். ஆண், தன் வீட்டார் விஷயத் தில் பொறுப்பாளியாவான். அவன் தன் பொறுப்பிலுள்ள வீட்டாரைக் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தன் பொறுப்பிலுள்ள (வீட்டு) விவகாரங்கள் குறித்து விசாரிக் கப்படுவாள். பணியாள் தன் உரிமை யாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்பிலுள்ள செல்வம் குறித்து விசாரிக்கப்படுவான்.
மேலும், ‘‘ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளி யாவான்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே நான் எண்ணுகிறேன்.
இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.14

2752. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي طَلْحَةَ "" أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ "". قَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَادِي "" يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ "". لِبُطُونِ قُرَيْشٍ. وَقَالَ أَبُو هُرَيْرَةَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا مَعْشَرَ قُرَيْشٍ "".
பாடம் : 10
ஒருவர் தம் உறவினர்களுக்கு அறக்கொடை (வக்ஃப்) வழங்குவது, அல்லது இறுதி விருப்பம் தெரிவிப்பது, உறவினர் என்போர் யார், யார்? என்பது
நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘அதை (உன் தோட்டத்தை) உம்முடைய ஏழை உறவினர்களுக்குக் கொடுத்துவிடுவீராக” என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதை ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கும் உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்துவிட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியிருப் பதாவது:
‘‘உம்முடைய ஏழை உறவினர்களுக்கு அதைக் கொடுத்துவிடுவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். ஆகவே, அவர் அதை ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கும், உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்துவிட்டார். அவர்களிருவரும் அபூதல்ஹாவுக்கு என்னைவிட நெருக்க மான உறவினர்களாக இருந்தனர்.
அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் ஹஸ்ஸான் (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கும் இடையிலான உறவுமுறை வருமாறு:
அபூதல்ஹா (ரலி) அவர்களின் இயற்பெயர் ஸைத் என்பதாகும். ஸைத், சஹ்லின் மகனாவார். சஹ்ல், அஸ்வத் என்பவரின் மகனும் அஸ்வத், ஹராம் என்பவரின் மகனும் ஹராம், அம்ர் என்பவரின் மகனும் அம்ர், ஸைத் மனாத் என்பவரின் மகனும் ஸைத் மனாத், அதீ என்பவரின் மகனும் அதீ, அம்ர் என்பவரின் மகனும் அம்ர், மாலிக் என்பவரின் மகனும் மாலிக், நஜ்ஜார் என்பவரின் மகனும் ஆவார்கள்.
ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் ஸாபித் என்பவரின் மகனும் ஸாபித், முன்திர் என்பவரின் மகனும் முன்திர், ஹராம் என்பவரின் மகனும் ஆவார்கள். ஆக, (முப்பாட்டனாரான) மூன்றாவது தந்தை ஹராம் என்பவருடன் இருவரின் குடும்ப உறவும் ஒன்றுசேர்கிறது. அந்த (முப்பாட்டனாரான) ஹராம், அம்ருடைய மகனும் அம்ர், ஸைத் மனாத்துடைய மகனும், ஸைத் மனாத், அதீயின் மகனும் அதீ, அம்ருடைய மகனும் அம்ர், மாலிக் உடைய மகனும் மாலிக், நஜ்ஜாருடைய மகனும் ஆவார்கள்.
இந்த அம்ர்தான் லி நஜ்ஜாரின் மகனான மாலிக்கின் மகன் அம்ர்தான் லிஹஸ்ஸான் (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகிய மூவரையும் ஒன்று சேர்க்கும் தந்தையாவார். இவர் உபை பின் கஅப் (ரலி) அவர்களின் (தந்தை, பாட்டனார் ஆகிய மேல் நோக்கிய உறவு முறை வரிசையில்) ஆறாவது தந்தையாக (முப்பாட்டனுக்கு முப்பாட்டனாக) வருகிறார்.
உபை (ரலி) அவர்கள், கஅப் அவர் களின் மகனும் கஅப், கைஸ் உடைய மகனும் கைஸ், உபைத் உடைய மகனும் உபைத், ஸைத் உடைய மகனும் ஸைத், முஆவியாவின் மகனும் முஆவியா, அம்ருடைய மகனும் அம்ர், மாலிக்கின் மகனும் மாலிக், நஜ்ஜார் உடைய மகனும் ஆவார்கள். ஆக, அம்ர் பின் மாலிக் அவர்கள்தான் ஹஸ்ஸான் (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகிய மூவரையும் (உறவுமுறையில்) ஒன்றிணைப்பவர் ஆவார்.
‘‘ஒருவர், தம் உறவினர்களுக்கு மரண சாசனம் செய்ய வேண்டுமென்றால் (அவரையும் அவர்களையும் இணைக்கின்ற) முஸ்லிமான முன்னோர் இருக்க வேண்டும்” என்று சிலர் கூறுகின்றனர்.
2752. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அதை (உமது தோட்டத்தை) உம்முடைய உறவினர்களிடையே பங்கிட்டுக் கொடுத்துவிடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா(ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, தம் (நெருங்கிய) உறவினர்களிடையேயும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களிடையேயும் பங்கிட்டுவிட்டார்கள்.
‘‘ ‘(நபியே!) நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!› (26:214) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், யிபனூ ஃபிஹ்ர் குடும்பத்தாரே! பனூ அதீ குடும்பத்தாரே!› என்று குறைஷிக் குலத்தாரின் பெரும் பெரும் கிளைக் குடும்பத்தாரை அழைக்க லானார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
‘‘இந்த இறைவசனம் (26:214) அருளப் பட்டபோது நபி (ஸல்) அவர்கள், யிகுறைஷிக் குலத்தாரே!› என்று அழைத்து, (இஸ்லாமியச் செய்தியை எடுத்துரைத்து) எச்சரித்தார்கள்” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

2753. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ } قَالَ "" يَا مَعْشَرَ قُرَيْشٍ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ اشْتَرُوا أَنْفُسَكُمْ، لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ مَنَافٍ لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لاَ أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا "". تَابَعَهُ أَصْبَغُ عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ.
பாடம் : 11
யிஉறவினர்கள்' என்பதில் பெண் களும் குழந்தைகளும் அடங்கு வார்களா?
2753. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, யிகுறைஷிக் குலத்தாரே!› என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘‘(ஓரிறையை ஏற்று) உங்களை (நரக நெருப்பிலிருந்து) விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து உங்களை நான் சிறிதளவும் காப்பாற்ற முடியாது.
அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்(வின் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) உன்னை அல்லாஹ்வி(ன் தண்டனை’)லிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது” என்று கூறினார்கள்.15
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2754. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ لَهُ "" ارْكَبْهَا "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ "" ارْكَبْهَا، وَيْلَكَ، أَوْ وَيْحَكَ "".
பாடம் : 12
அறக்கொடை (வக்ஃப்) அளித்தவர் தமது அறக்கொடையால் பயனடை யலாமா?
உமர் (ரலி) அவர்கள் (கைபரில் தமக் குக் கிடைத்த நிலத்தை வக்ஃப் செய்த போது), ‘‘அதை நிர்வகிப்பவர் அதிலிருந்து உண்பதில் தவறில்லை” என்று நிபந்தனை யிட்டார்கள்.16
மேலும், வக்ஃப் செய்தவரேகூட அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம்; அவரல்லாத பிறரும் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம்.
இவ்வாறே யாரெல்லாம் ஓர் ஒட்டகத்தையோ வேறெந்தப் பொருளையோ அல்லாஹ்வுக்காக வழங்கிவிடுகிறாரோ அதிலிருந்து மற்றவர்கள் பயனடைவதைப் போன்றே, அவரும் பயனடையலாம்; அவ்விதம் (தாம் பயனடைவேன் என்று) அவர் நிபந்தனையிடாவிட்டாலும் சரியே.
2754. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஒட்ட கத்தை ஓட்டிக்கொண்டு வந்த ஒரு மனிதரைக் கண்டு, ‘‘அதில் நீர் ஏறிக் கொள்வீராக” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது குர்பானி ஒட்டகம்” என்று கூறினார். (இவ்விதம் திரும்பத் திரும்பக் கூறியும் அவர் அதில் ஏறவில்லை.) மூன்றாவது, அல்லது நான்காவது முறையில், ‘‘உனக்குக் கேடுதான் லிஅல்லது உனக்கு நாசம்தான்லி அதில் நீர் ஏறிக்கொள்வீராக” என்று கூறினார்கள்.

2755. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ "" ارْكَبْهَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا، وَيْلَكَ "". فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ.
பாடம் : 12
அறக்கொடை (வக்ஃப்) அளித்தவர் தமது அறக்கொடையால் பயனடை யலாமா?
உமர் (ரலி) அவர்கள் (கைபரில் தமக் குக் கிடைத்த நிலத்தை வக்ஃப் செய்த போது), ‘‘அதை நிர்வகிப்பவர் அதிலிருந்து உண்பதில் தவறில்லை” என்று நிபந்தனை யிட்டார்கள்.16
மேலும், வக்ஃப் செய்தவரேகூட அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம்; அவரல்லாத பிறரும் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம்.
இவ்வாறே யாரெல்லாம் ஓர் ஒட்டகத்தையோ வேறெந்தப் பொருளையோ அல்லாஹ்வுக்காக வழங்கிவிடுகிறாரோ அதிலிருந்து மற்றவர்கள் பயனடைவதைப் போன்றே, அவரும் பயனடையலாம்; அவ்விதம் (தாம் பயனடைவேன் என்று) அவர் நிபந்தனையிடாவிட்டாலும் சரியே.
2755. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் குர்பானி ஒட்டகம் ஒன்றை ஓட்டிக்கொண்டு வருவதைக் கண்டார்கள். அப்போது அவரிடம், ‘‘அதில் நீர் ஏறிக் கொள்வீராக” என்று கூறினார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது குர்பானி ஒட்டகம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையிலோ மூன்றாவது முறையிலோ (கூறும்போது), ‘‘உமக்குக் கேடுதான்; அதில் ஏறிக்கொள்வீராக!” என்று கூறினார்கள்.17

2756. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ ـ رضى الله عنه ـ تُوُفِّيَتْ أُمُّهُ وَهْوَ غَائِبٌ عَنْهَا، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، أَيَنْفَعُهَا شَىْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا قَالَ "" نَعَمْ "". قَالَ فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِي الْمِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا.
பாடம் : 13
ஒருவர் ஒன்றை அறக்கொடை (வக்ஃப்) வழங்கினால், அடுத்தவரிடம் அதை ஒப்படைக்கும் முன்பே செல்லும்.
உமர் (ரலி) அவர்கள் வக்ஃப் செய்தபோது, ‘‘அதற்கு (நிர்வாகப்) பொறுப்பேற்பவர் அதிலிருந்து சிறிது உண்பதால் அவர்மீது குற்றமில்லை” என்று கூறினார்கள். ‘அதற்கு நான் பொறுப்பேற்றால்’ என்றோ யிபிறர் பொறுப்பேற்றால்’ என்றோ அப்போது அவர்கள் குறிப்பிட்டுக் கூற வில்லை.
நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘நீர் அதை (உமது தோட்டத்தை) உம்முடைய நெருங்கிய உறவினர்களிடையே பங்கிட்டுவிடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன்” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, அதைத் தம் உறவினர்களிடையேயும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களிடை யேயும் பங்கிட்டுவிட்டார்கள்.
பாடம் : 14
ஒருவர், ‘‘என் வீடு அல்லாஹ்வுக் காகத் தர்மமாகும்” என்று கூறி, அது ஏழைகளுக்குச் சேர வேண்டிய தர்மமா; அல்லது மற்றவர்களுக்குச் சேர வேண்டிய தர்மமா என்று விளக்காமல் விட்டுவிட்டாலும் அது செல்லும். அதை அவர் உறவினர்களுக்கோ அல்லது தாம் விரும்பிய இனத்திற்கோ வழங்கலாம்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது யிபைருஹா’ (என்னும் தோட்டம்)தான்; அதை நான் அல்லாஹ்வுக்காகத் தர்மம் செய்துவிடுகின்றேன்” என்று கூறியபோது, (யிஇன்னாருக்குத் தர்மம் செய்கிறேன்’ என்று அவர் விளக்கிக் கூறாத நிலையிலும்) நபி (ஸல்) அவர்கள் அதை அனுமதித்தார்கள்.
‘‘அந்தத் தர்மம் யாருக்குச் சேர வேண்டும் என்று விளக்காத வரை அது செல்லாது” என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், முந்திய கருத்தே மிகச் சரியான தாகும்.
பாடம் : 15
‘‘என் நிலம் அல்லது தோட்டம் அல்லாஹ்வுக்காக என் தாயார் சார்பாகத் தர்மமாகும் என்று ஒருவர் சொன்னால் அது செல்லும்; அந்தத் தர்மம் யாருக்குச் சேர வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தா விட்டாலும் சரி.
2756. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அவருடைய தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் ஊரில் இல்லாத போது இறந்துவிட்டார். நான் அவர் சார்பாகத் தர்மம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?” என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பயனளிக் கும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், ‘‘நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாகத் தர்மம் செய்துவிட்டேன். அதற்குத் தங்களை சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

2757. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه. قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ صلى الله عليه وسلم. قَالَ "" أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ "". قُلْتُ فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَرَ.
பாடம் : 16
ஒருவர் தமது செல்வத்தில் ஒரு பகுதியை, அல்லது தம் அடிமைகள் சிலரை, அல்லது கால்நடைகள் சிலவற்றைத் தர்மம் செய்தாலோ அறக்கொடையாக வழங்கினாலோ அது செல்லும்.
2757. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நான் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின் வாங்கியதற்குப்) பாவமீட்பு பெறும் ஓர் அம்சமாக, என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து நான் விலகிக்கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் தர்மமாக வழங்க விரும்பு கிறேன்” என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது செல்வத்தில் ஒரு பகுதியை உமக்காக வைத்துக்கொள்வீராக! அது உமக்கு நல்லது” என்று கூறினார்கள். நான், ‘‘கைபரில் கிடைத்த எனது பங்கை (எனக் காக) வைத்துக்கொள்கிறேன்” என்று கூறினேன்.

2758. وَقَالَ إِسْمَاعِيلُ أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ،، لاَ أَعْلَمُهُ إِلاَّ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} جَاءَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي كِتَابِهِ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَىَّ بِيرُحَاءَ ـ قَالَ وَكَانَتْ حَدِيقَةً كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَسْتَظِلُّ بِهَا وَيَشْرَبُ مِنْ مَائِهَا ـ فَهِيَ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِلَى رَسُولِهِ صلى الله عليه وسلم أَرْجُو بِرَّهُ وَذُخْرَهُ، فَضَعْهَا أَىْ رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَخْ يَا أَبَا طَلْحَةَ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، قَبِلْنَاهُ مِنْكَ وَرَدَدْنَاهُ عَلَيْكَ، فَاجْعَلْهُ فِي الأَقْرَبِينَ "". فَتَصَدَّقَ بِهِ أَبُو طَلْحَةَ عَلَى ذَوِي رَحِمِهِ، قَالَ وَكَانَ مِنْهُمْ أُبَىٌّ وَحَسَّانُ، قَالَ وَبَاعَ حَسَّانُ حِصَّتَهُ مِنْهُ مِنْ مُعَاوِيَةَ، فَقِيلَ لَهُ تَبِيعُ صَدَقَةَ أَبِي طَلْحَةَ فَقَالَ أَلاَ أَبِيعُ صَاعًا مِنْ تَمْرٍ بِصَاعٍ مِنْ دَرَاهِمَ قَالَ وَكَانَتْ تِلْكَ الْحَدِيقَةُ فِي مَوْضِعِ قَصْرِ بَنِي حُدَيْلَةَ الَّذِي بَنَاهُ مُعَاوِيَةُ.
பாடம் : 17
ஒருவர் தம் முகவரிடம் தர்மப் பொருளை (தர்மம் செய்துவிடும் படி) கொடுக்க, முகவர் அதை அவரிடமே திருப்பிக்கொடுத்து விடுவது
2758. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்) திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் வேதத்தில், ‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்’ என்று கூறுகின்றான்.
என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது யிபைருஹா’ (எனும் தோட்டம்)தான். லிஅந்தத் தோட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணீரை அருந்துவது வழக்கம்லி ஆகவே, அதை நான் அல்லாஹ்வுக்காக வும் அவனுடைய தூதருக்காகவும் (அறக்கொடையாகத்) தந்துவிடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ள இனத் தில் அதைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே! அது (மறுமையில் உங்களுக்கு) இலாபம் தரும் செல்வமாகும். அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகின்றோம். உங்கள் நெருங் கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதைத் தம் இரத்த சொந்தமுள்ள உறவினர் களுக்குத் தர்மம் செய்துவிட்டார்கள். அவர்களிடையே உபை பின் கஅப் (ரலி) அவர்களும், ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களும்கூட இருந்தனர்.
அதில் தமக்குக் கிடைத்த பங்கை ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு விற்றுவிட்டார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அபூதல்ஹாவின் தர்மத்தையா விற்கின்றீர்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்தை ஒரு ஸாஉ திர்ஹத்துக்காக நான் விற்கமாட்டேனா? (அது போலத்தான் இதுவும்)” என்று பதில் சொன்னார்கள்.18
அந்த (பைருஹா) தோட்டம் முஆவியா (ரலி) அவர்கள் கட்டிய பனூ ஹுதைலா கோட்டை இருந்த இடத்தில் அமைந் திருந்தது.19

2759. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ هَذِهِ الآيَةَ نُسِخَتْ، وَلاَ وَاللَّهِ مَا نُسِخَتْ، وَلَكِنَّهَا مِمَّا تَهَاوَنَ النَّاسُ، هُمَا وَالِيَانِ وَالٍ يَرِثُ، وَذَاكَ الَّذِي يَرْزُقُ، وَوَالٍ لاَ يَرِثُ، فَذَاكَ الَّذِي يَقُولُ بِالْمَعْرُوفِ، يَقُولُ لاَ أَمْلِكُ لَكَ أَنْ أُعْطِيَكَ.
பாடம் : 18
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(சொத்தைப்) பங்கிடும்போது (வாரிசு அல்லாத) உறவினர்களோ அநாதைகளோ ஏழைகளோ வந்துவிட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (சிறிது) வழங்குங்கள். (4:8)
2759. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் சிலர், ‘‘இந்த (4:8) இறை வசனம் (கூறும் சட்டம்) மாற்றப்பட்டு விட்டது” என்று கருதுகிறார்கள். இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இது மாற்றப்படவில்லை. மாறாக, மக்கள் இதில் கவனக்குறைவாக உள்ளனர்.
(இறந்தவரது செல்வத்தின்) பொறுப் பாளர்கள் இரு வகைப்படுவர். ஒரு வகை ‘னர் (இறந்தவரின் சொத்துக்கு) வாரி சாகும் பொறுப்பாளர். இவர்தான், (தூரத்து உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும்) கொடுப்பார்.
மற்றொரு வகையினர், வாரிசல்லாத பொறுப்பாளர். (அநாதையின் காப்பாளரான) இவர்தான், (அங்கு வரும் ஏழைகளிடம்) கனிவான வார்த்தையைக் கூறி, உமக்கு எதையும் என்னால் தர இயலாது (இது அநாதையின் சொத்து) என்று சொல்வார்.

2760. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسَهَا، وَأُرَاهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ "" نَعَمْ، تَصَدَّقْ عَنْهَا "".
பாடம் : 19
திடீரென இறந்துபோனவர் சார்பாகத் தர்மம் செய்வதும், இறந்தவர் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதும் விரும்பத் தக்கதாகும்.
2760. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்பு) பேச முடிந்திருந்தால் தர்மம் செய்(யச் சொல்லி யிருந்)திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம், அவர் சார்பாகத் தர்மம் செய்வீராக!” என்று கூறினார்கள்.

2761. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ ـ رضى الله عنه ـ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ. فَقَالَ "" اقْضِهِ عَنْهَا "".
பாடம் : 19
திடீரென இறந்துபோனவர் சார்பாகத் தர்மம் செய்வதும், இறந்தவர் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதும் விரும்பத் தக்கதாகும்.
2761. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘என் தாயார்மீது ஒரு நேர்த்திக்கடன் கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்துபோய்விட்டார் (என்ன செய்வது?)” என்று விளக்கம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று” என்று கூறினார்கள்.

2762. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ يَقُولُ أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ ـ رضى الله عنهم ـ أَخَا بَنِي سَاعِدَةَ تُوُفِّيَتْ أُمُّهُ وَهْوَ غَائِبٌ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، فَهَلْ يَنْفَعُهَا شَىْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا قَالَ "" نَعَمْ "". قَالَ فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِي الْمِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا.
பாடம் : 20
அறக்கொடை மற்றும் தர்மம் செய்யும்போது சாட்சி நிர்ணயிப் பது
2762. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அவர்களின் தாயார் இறந்து விட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஊரில் இல்லாதபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பலனளிக்கும்)” என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவருக் காகத் தர்மம் செய்துவிடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்கு கிறேன்” என்று கூறினார்கள்.

2763. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ كَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يُحَدِّثُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها – {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ} قَالَتْ هِيَ الْيَتِيمَةُ فِي حَجْرِ وَلِيِّهَا، فَيَرْغَبُ فِي جَمَالِهَا وَمَالِهَا، وَيُرِيدُ أَنْ يَتَزَوَّجَهَا بِأَدْنَى مِنْ سُنَّةِ نِسَائِهَا، فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ، إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهُنَّ فِي إِكْمَالِ الصَّدَاقِ، وَأُمِرُوا بِنِكَاحِ مَنْ سِوَاهُنَّ مِنَ النِّسَاءِ قَالَتْ عَائِشَةُ ثُمَّ اسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ} قَالَتْ فَبَيَّنَ اللَّهُ فِي هَذِهِ أَنَّ الْيَتِيمَةَ إِذَا كَانَتْ ذَاتَ جَمَالٍ وَمَالٍ رَغِبُوا فِي نِكَاحِهَا، وَلَمْ يُلْحِقُوهَا بِسُنَّتِهَا بِإِكْمَالِ الصَّدَاقِ، فَإِذَا كَانَتْ مَرْغُوبَةً عَنْهَا فِي قِلَّةِ الْمَالِ وَالْجَمَالِ تَرَكُوهَا وَالْتَمَسُوا غَيْرَهَا مِنَ النِّسَاءِ، قَالَ فَكَمَا يَتْرُكُونَهَا حِينَ يَرْغَبُونَ عَنْهَا فَلَيْسَ لَهُمْ أَنْ يَنْكِحُوهَا إِذَا رَغِبُوا فِيهَا إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهَا الأَوْفَى مِنَ الصَّدَاقِ وَيُعْطُوهَا حَقَّهَا.
பாடம் : 21
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அநாதைகளின் செல்வங்களை அவர்களிடமே கொடுத்துவிடுங்கள். (அவற்றிலுள்ள) நல்லதற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி (வைத்து)விடாதீர்கள். அவர்களின் செல்வங்களை உங்களுடைய செல்வங்களுடன் (சேர்த்து) உண்ணாதீர்கள். இது ஒரு பெரும் குற்றமாகும். அநாதை(ப் பெண்)களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை... மணந்துகொள்ளுங்கள். (4:2,3)
2763. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அநாதை(ப் பெண்)களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை... மணந்துகொள்ளுங்கள்” (4:3) எனும் வசனம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
இந்த வசனத்தில் கூறப்படும் பெண், தன் காப்பாளரின் மடியில் வளரும் அநாதைப் பெண் ஆவாள். அந்தக் காப்பாளர் அவளது அழகுக்கும் சொத்துக் கும் ஆசைப்பட்டு, அவள் போன்ற பெண்களுக்கான மணக்கொடையைவிடக் குறைவானதை அவளுக்குக் கொடுத்து அவணை மணக்க விரும்புகிறார். இத்தகைய காப்பாளர்கள் அப்பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை முழுமை யாகக் கொடுத்து நீதியுடன் நடந்து கொண்டால் தவிர, அவர்களை மணம் புரிந்துகொள்ளக் கூடாது என்று தடை செய்யப்பட்டார்கள்; அவர்களைத் தவிர வுள்ள பிற பெண்களை மணம் புரிந்து கொள்ளும்படி கட்டளையிடப்பட் டார்கள்.
பிறகும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது தொடர்பாகத் தீர்ப்பு கேட்டு வரவே, அல்லாஹ், ‘‘(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் தீர்ப்புக் கேட்கின்றனர். அவர்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான் என்று நீர் கூறுவீராக!” (4:127) எனும் வசனத்தை அருளினான்.
அநாதைப் பெண் அழகும் செல்வமும் உடையவளாக இருந்தால் அவளுடைய காப்பாளர்கள் அவளை மணம் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவளையொத்த ஒரு பெண்ணுக்குத் தரப்படுவது போன்ற மணக்கொடையை முழுமையாக அவளுக்குத் தருவதில்லை. அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருப்பதால் அவளை மணமுடிக்க விருப்பமில்லாதபோது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களை (மணமுடிக்க) நாடிச் செல்கிறார்கள்.
ஆகவே ‘அவளை விரும்பாதபோது அவளை அவர்கள் விட்டுவிடுவதைப் போலவே, அவளை விரும்பும்போது, அவளுக்கு உரிய மணக்கொடையை நிறைவாக அவளுக்குத் தந்து, நீதியுடன் நடந்து, அவளது உரிமையை அவளுக்குக் கொடுத்தால் தவிர அவளை அவர்கள் மணமுடிக்கக் கூடாது’ என்று இந்த வசனத்தில் (4:127) அல்லாஹ் விளக்கிக் கூறினான்.20

2764. حَدَّثَنَا هَارُونُ، حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، مَوْلَى بَنِي هَاشِمٍ حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ، تَصَدَّقَ بِمَالٍ لَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ يُقَالُ لَهُ ثَمْغٌ، وَكَانَ نَخْلاً، فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي اسْتَفَدْتُ مَالاً وَهُوَ عِنْدِي نَفِيسٌ فَأَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَصَدَّقْ بِأَصْلِهِ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ "". فَتَصَدَّقَ بِهِ عُمَرُ، فَصَدَقَتُهُ ذَلِكَ فِي سَبِيلِ اللَّهِ وَفِي الرِّقَابِ وَالْمَسَاكِينِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ وَلِذِي الْقُرْبَى، وَلاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ مِنْهُ بِالْمَعْرُوفِ، أَوْ يُوكِلَ صَدِيقَهُ غَيْرَ مُتَمَوِّلٍ بِهِ.
பாடம் : 22
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அநாதைகளைச் சோதி(த்து அறி)யுங்கள். அவர்கள் திருமணத்(திற்கான வய)தை அடைந்த பிறகு, அவர்களிடம் நீங்கள் பக்குவத்தைக் கண்டால் அவர் களின் செல்வங்களை அவர்களிடமே ஒப்படைத்துவிடுங்கள். (அளவு கடந்து) விரயமாகவும் அவர்கள் பெரியவர்களாகி விடுவார்களோ என்ற அச்சத்தில் வேகமாக வும் அவற்றை உண்டுவிடாதீர்கள்.
(அநாதைகளைப் பராமரிப்பவர்களில்) செல்வராக இருப்பவர், (அவர்களின் செல்வத்தைச் தொடாமல்) நாணயமாக நடந்துகொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும். நீங்கள் அவர்களின் செல்வங்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்கள் (வசம் ஒப்படைத்ததன்) மீது சாட்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கணக்குக் கேட்க அல்லாஹ்வே போதுமானவன்.
தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அ(ந்தச் சொத்)து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சரியே. இது (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பங்காகும். (4:6,7)
பாடம்
(அநாதையின்) பொறுப்பாளர் (தமது பொறுப்பிலுள்ள) அநாதையின் செல்வத்தைக் கையாள உரிமையுண்டு என்பதும், அதிலிருந்து அவரது உழைப்பிற் கேற்ப உண்ணலாம் என்பதும்
2764. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள், ‘ஸம்ஃக்’ எனப் படும் தமது சொத்து ஒன்றை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் தர்மம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள் ளேன். அது என்னிடம் (இருப்பவற்றி லேயே) உயர்தரமானதாகும். அதைத் தர்மம் செய்துவிட விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் நிலத்தை, (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப் பாகவும் தரக் கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதைத் தர்மம் செய்துவிடுவீராக!” என்று கூறினார்கள்.
ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதைத் தர்மம் (வக்ஃப்) செய்துவிட்டார்கள். அவர்களின் இந்தத் தர்மம் (வக்ஃப்) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப் போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. யிநிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக்கொடுப்பதில் குற்றமில்லை’ என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.21