2702. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، قَالَ انْطَلَقَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ إِلَى خَيْبَرَ، وَهْىَ يَوْمَئِذٍ صُلْحٌ.
பாடம் : 7 இணைவைப்பாளர்களுடன் சமாதானம் செய்துகொள்வது இது குறித்து அபூசுஃப்யான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட் டுள்ளது.4 நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: பிறகு உங்களுக்கும் மஞ்சள் நிறத் தாருக்கும் (கிழக்கு ரோமர்களுக்கும்) இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படும். இது குறித்து சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர், ‘‘அபூஜந்தல் (நிகழ்ச்சி நடைபெற்ற) நாளில் எங்களை நான்... கண்டேன்” என்று கூறியுள்ளார்.5 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் வழியாகவும், மிஸ்வர் (ரலி) அவர்கள் வழியாகவும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (இது பற்றி) அறிவிக்கப்பட்டுள்ளது.
2702. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் கைபரை நோக்கிச் சென்றார்கள். கைபர் அப்போது முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.7

அத்தியாயம் : 53
2703. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ أَنَّ الرُّبَيِّعَ ـ وَهْىَ ابْنَةُ النَّضْرِ ـ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا الأَرْشَ وَطَلَبُوا الْعَفْوَ، فَأَبَوْا فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهُمْ بِالْقِصَاصِ. فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ يَا رَسُولَ اللَّهِ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا فَقَالَ "" يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ "". فَرَضِيَ الْقَوْمُ وَعَفَوْا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ "". زَادَ الْفَزَارِيُّ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ فَرَضِيَ الْقَوْمُ وَقَبِلُوا الأَرْشَ.
பாடம் : 8 இழப்பீட்டுத் தொகையில் சமாதானம் செய்துகொள்வது
2703. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரிலிருபய்யிஉ பின்த் நள்ர்,லிஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப் பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், ‘‘இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்துவிடும்படி சொல்லுங்கள்” என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக்கொள்ள) மறுத்துவிட் டார்கள். ஆகவே, எங்கள் குலத்தார் நபி (ஸல்) அவர்களிடம் (விவரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழிவாங்கும்படி அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்தவனின் மீது சத்தியமாக! அவளது முன்பல் உடைக்கப்படாது” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (ஆகவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)” என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகின்றான்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் மர்வான் பின் முஆவியா அல்ஃபஸாரீ (ரஹ்) அவர்களது அறிவிப் பில், ‘‘(அந்த இளம்பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல் விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றுக்கொண்டார்கள்” என்று வந்துள்ளது.

அத்தியாயம் : 53
2704. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي مُوسَى، قَالَ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ اسْتَقْبَلَ وَاللَّهِ الْحَسَنُ بْنُ عَلِيٍّ مُعَاوِيَةَ بِكَتَائِبَ أَمْثَالِ الْجِبَالِ فَقَالَ عَمْرُو بْنُ الْعَاصِ إِنِّي لأَرَى كَتَائِبَ لاَ تُوَلِّي حَتَّى تَقْتُلَ أَقْرَانَهَا. فَقَالَ لَهُ مُعَاوِيَةُ ـ وَكَانَ وَاللَّهِ خَيْرَ الرَّجُلَيْنِ ـ أَىْ عَمْرُو إِنْ قَتَلَ هَؤُلاَءِ هَؤُلاَءِ وَهَؤُلاَءِ هَؤُلاَءِ مَنْ لِي بِأُمُورِ النَّاسِ مَنْ لِي بِنِسَائِهِمْ، مَنْ لِي بِضَيْعَتِهِمْ فَبَعَثَ إِلَيْهِ رَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ وَعَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ كُرَيْزٍ، فَقَالَ اذْهَبَا إِلَى هَذَا الرَّجُلِ فَاعْرِضَا عَلَيْهِ، وَقُولاَ لَهُ، وَاطْلُبَا إِلَيْهِ. فَأَتَيَاهُ، فَدَخَلاَ عَلَيْهِ فَتَكَلَّمَا، وَقَالاَ لَهُ، فَطَلَبَا إِلَيْهِ، فَقَالَ لَهُمَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ إِنَّا بَنُو عَبْدِ الْمُطَّلِبِ، قَدْ أَصَبْنَا مِنْ هَذَا الْمَالِ، وَإِنَّ هَذِهِ الأُمَّةَ قَدْ عَاثَتْ فِي دِمَائِهَا. قَالاَ فَإِنَّهُ يَعْرِضُ عَلَيْكَ كَذَا وَكَذَا وَيَطْلُبُ إِلَيْكَ وَيَسْأَلُكَ. قَالَ فَمَنْ لِي بِهَذَا قَالاَ نَحْنُ لَكَ بِهِ. فَمَا سَأَلَهُمَا شَيْئًا إِلاَّ قَالاَ نَحْنُ لَكَ بِهِ. فَصَالَحَهُ، فَقَالَ الْحَسَنُ وَلَقَدْ سَمِعْتُ أَبَا بَكْرَةَ يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ إِلَى جَنْبِهِ، وَهْوَ يُقْبِلُ عَلَى النَّاسِ مَرَّةً وَعَلَيْهِ أُخْرَى وَيَقُولُ "" إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ "". قَالَ لِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ إِنَّمَا ثَبَتَ لَنَا سَمَاعُ الْحَسَنِ مِنْ أَبِي بَكْرَةَ بِهَذَا الْحَدِيثِ.
பாடம் : 9 நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர் களைக் குறித்து, ‘‘இவர் என் (புதல்வியின்) புதல்வர்; தலைவர். இவரைக் கொண்டு இரு பெரும் குழுவினருக்கிடையே அல்லாஹ் சமாதானம் செய்துவைக்கவிருக் கிறான்” என்று கூறியது. புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் போரிட்டுக்கொண்டால் அவர் களிடையே சமாதானம் செய்துவையுங்கள். (49:9)
2704. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களின் மகனான ஹசன் (ரலி) அவர்கள்,8 மலைகள் போன்ற (பிரமாண்டமான) படைகளுடன் முஆவியா (ரலி) அவர்களை எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா (ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், ‘‘நான் பெரும் படைகளைக் காண்கிறேன். அவை தமக்கொத்த படையை வீழ்த்தாமல் திரும்பாது” என்று (போர் புரிவதைத் தூண்டும் வகையில்) கூறினார்கள்.

அவருக்கு முஆவியா (ரலி) அவர்கள் லிஅல்லாஹ்வின் மீதாணையாக! (அம்ர், முஆவியா ஆகிய) அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்லி ‘‘அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்றுவிடுவார் களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி)மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார்தான் இருப்பார்கள்?” என்று கேட்டார்கள்.

எனவே, ஹசன் (ரலி) அவர்களிடம் குறைஷியரில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் குரைஸ் (ரலி) அவர்களையும் அனுப்பி, ‘‘நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் (ஹசனிடம்) சென்று விவரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்” என்று கூறினார்கள்.

அவ்விருவரும் (அவ்வாறே) ஹசன் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹசன் (ரலி) அவர்களிடம் (முஆவியா (ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வரும்படி) கோரினார்கள்.

அதற்கு அவ்விருவரிடமும் ஹசன் (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்தச் செல்வத்தை (எங்கள் தலைமையின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர் களிடையே செலவு செய்துவருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தைச் சிந்துவதில் தீவிரமாகிவிட்டது (பொருளின்றி அதைத் தடுக்க முடியாது)” என்று கூறினார்கள்.

இதற்கு அவ்விருவரும், ‘‘முஆவியா (ரலி) அவர்கள் உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; (சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்” என்று கூறினர். அதற்கு ஹசன் (ரலி) அவர்கள், ‘‘இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?” என்று கேட்க, அவ்விருவரும் ‘‘இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு” என்று கூறினர்.

ஹசன் (ரலி) அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், ‘‘நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப் பேற்கிறோம்” என்றே அவ்விருவரும் கூறினார்கள். இறுதியாக, ஹசன் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண் டார்கள்.

அபூபக்ரா (ரலி) அவர்கள் பின்வருமாறு சொல்ல நான் கேட்டேன்:

மேலும், (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத் தில் ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹசன் (ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), ‘‘இந்த என் (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு பெரும் கூட்டத்தாரிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்துவைக்கவிருக் கிறான்” என்று கூறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

அபூபக்ரா (ரலி) அவர்களிடம் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் (நேரடியாகக்) கேட்ட செய்தி இந்த ஹதீஸின் மூலம்தான் நமக்கு உறுதியானது என அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அத்தியாயம் : 53
2705. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي الرِّجَالِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أُمَّهُ، عَمْرَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَوْتَ خُصُومٍ بِالْبَابِ عَالِيَةٍ أَصْوَاتُهُمَا، وَإِذَا أَحَدُهُمَا يَسْتَوْضِعُ الآخَرَ، وَيَسْتَرْفِقُهُ فِي شَىْءٍ وَهْوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَفْعَلُ. فَخَرَجَ عَلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَيْنَ الْمُتَأَلِّي عَلَى اللَّهِ لاَ يَفْعَلُ الْمَعْرُوفَ "". فَقَالَ أَنَا يَا رَسُولَ اللَّهِ، وَلَهُ أَىُّ ذَلِكَ أَحَبَّ.
பாடம் : 10 சமாதானம் செய்துகொள்ளும்படி ஆட்சித் தலைவர் குறிப்பால் உணர்த்தலாமா?
2705. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக்கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக்கொண்டிருந்த வர்களின் குரல்கள் உயர்ந்தன. அவ்விரு வரில் ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்துகொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்.

அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, ‘‘நன்மை(யான செயலைச்) செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், ‘‘நான்தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்;) அவர் எதை விரும்புகிறாரோ அது அவருக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.


அத்தியாயம் : 53
2706. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّهُ كَانَ لَهُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَدْرَدٍ الأَسْلَمِيِّ مَالٌ، فَلَقِيَهُ فَلَزِمَهُ حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا، فَمَرَّ بِهِمَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَا كَعْبُ "". فَأَشَارَ بِيَدِهِ كَأَنَّهُ يَقُولُ النِّصْفَ. فَأَخَذَ نِصْفَ مَا عَلَيْهِ وَتَرَكَ نِصْفًا.
பாடம் : 10 சமாதானம் செய்துகொள்ளும்படி ஆட்சித் தலைவர் குறிப்பால் உணர்த்தலாமா?
2706. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் சிறிது பணம் தர வேண்டியிருந்தது. ஆகவே, அவரை நான் சந்தித்து (கடனை அடைக்கச் சொல்லி) நச்சரித்தேன். (எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் குரல்கள் உயர்ந்தன. நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, யிகஅபே!› என்று கூறி யிபாதி’ (யிபாதி கடனைத் தள்ளுபடி செய்துவிடு’) என்பது போல் தமது கரத்தால் சைகை செய்தார்கள். அவ்வாறே பாதியைப் பெற்றுக்கொண்டு, பாதியைத் தள்ளுபடி செய்துவிட்டேன்.

அத்தியாயம் : 53
2707. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ النَّاسِ صَدَقَةٌ "".
பாடம் : 11 மக்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்து அவர்களிடையே நீதி செலுத்துவதன் சிறப்பு
2707. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள், சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 53
2708. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ الزُّبَيْرَ، كَانَ يُحَدِّثُ أَنَّهُ خَاصَمَ رَجُلاً مِنَ الأَنْصَارِ قَدْ شَهِدَ بَدْرًا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي شِرَاجٍ مِنَ الْحَرَّةِ كَانَا يَسْقِيَانِ بِهِ كِلاَهُمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلزُّبَيْرِ "" اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ أَرْسِلْ إِلَى جَارِكَ "". فَغَضِبَ الأَنْصَارِيُّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ آنْ كَانَ ابْنَ عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" اسْقِ ثُمَّ احْبِسْ حَتَّى يَبْلُغَ الْجَدْرَ "". فَاسْتَوْعَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَئِذٍ حَقَّهُ لِلزُّبَيْرِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ ذَلِكَ أَشَارَ عَلَى الزُّبَيْرِ بِرَأْىٍ سَعَةٍ لَهُ وَلِلأَنْصَارِيِّ، فَلَمَّا أَحْفَظَ الأَنْصَارِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَوْعَى لِلزُّبَيْرِ حَقَّهُ فِي صَرِيحِ الْحُكْمِ. قَالَ عُرْوَةُ قَالَ الزُّبَيْرُ وَاللَّهِ مَا أَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ إِلاَّ فِي ذَلِكَ {فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ} الآيَةَ.
பாடம் : 12 தலைவர் சமாதானத்திற்கு வழி சொல்லியும் அதை ஏற்காதபோது தெளிவான ஆணையை அவர் பிறப்பிக்க வேண்டியதுதான்.
2708. ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ர் போரில் கலந்துகொண்ட அன்சாரி ஒருவருடன் எனக்கு (மதீனாவின்) ‘அல்ஹர்ரா’ எனும் (கருங்கல் பூமியிலுள்ள) ஒரு கால்வாய் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அந்தக் கால்வாயிலிருந்தே எங்கள் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சிவந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு உங்கள் அண்டையிலிருப்பவருக்கு அதை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி கோப மடைந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள் அத்தையின் மகன் என்பதாலா (இப்படித் தீர்ப்புக் கூறினீர்கள்)?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத் தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு வரப்புகளை எட்டும்வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இவ்வாறு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு, அன்னாருடைய முழு உரிமையையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குமுன் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் அந்த அன்சாரிக்கும் தாராளமாகப் பயன் தரும் விதத்தில் ஸுபைர் (ரலி) அவர்களிடம் யோசனை தெரிவித்திருந்தார்கள். ஆனால், அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கோபமூட்டியபோது ஸுபைர் (ரலி) அவர்களுக்கு, அவர்களின் உரிமையை தெளிவான ஆணையின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள்.

‘‘ ‘(நபியே!) உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் தமக்குள் ஏற்பட்ட வழக்கில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பால் தம் உள்ளங்களில் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் (அதற்கு) முழுமையாகக் கட்டுப்படாத வரை இறைநம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள் (4:65) எனும் வசனம் இது தொடர்பாகவே இறங்கியதாக நான் நினைக்கிறேன்” என்று ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 53
2709. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ تُوُفِّيَ أَبِي وَعَلَيْهِ دَيْنٌ، فَعَرَضْتُ عَلَى غُرَمَائِهِ أَنْ يَأْخُذُوا التَّمْرَ بِمَا عَلَيْهِ، فَأَبَوْا وَلَمْ يَرَوْا أَنَّ فِيهِ وَفَاءً، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ "" إِذَا جَدَدْتَهُ فَوَضَعْتَهُ فِي الْمِرْبَدِ آذَنْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم "". فَجَاءَ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَجَلَسَ عَلَيْهِ، وَدَعَا بِالْبَرَكَةِ ثُمَّ قَالَ "" ادْعُ غُرَمَاءَكَ، فَأَوْفِهِمْ "". فَمَا تَرَكْتُ أَحَدًا لَهُ عَلَى أَبِي دَيْنٌ إِلاَّ قَضَيْتُهُ، وَفَضَلَ ثَلاَثَةَ عَشَرَ وَسْقًا سَبْعَةٌ عَجْوَةٌ، وَسِتَّةٌ لَوْنٌ أَوْ سِتَّةٌ عَجْوَةٌ وَسَبْعَةٌ لَوْنٌ، فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْمَغْرِبَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَضَحِكَ فَقَالَ "" ائْتِ أَبَا بَكْرٍ وَعُمَرَ فَأَخْبِرْهُمَا "". فَقَالاَ لَقَدْ عَلِمْنَا إِذْ صَنَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا صَنَعَ أَنْ سَيَكُونُ ذَلِكَ. وَقَالَ هِشَامٌ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ صَلاَةَ الْعَصْرِ. وَلَمْ يَذْكُرْ أَبَا بَكْرٍ وَلاَ ضَحِكَ، وَقَالَ وَتَرَكَ أَبِي عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا دَيْنًا. وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ صَلاَةَ الظُّهْرِ.
பாடம் : 13 கடன் கொடுத்தவர்களுக்கும் (கடனாளியின்) வாரிசுகளுக்கும் இடையே சமாதானம் செய்து வைப்பதும் (கடனை அடைப்பதில்) தோராயமாகக் கணக்கிடுவதும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: இரண்டு பங்காளிகளில் ஒவ்வொரு வரும் (தத்தமது பங்கைப் பெற்றுக்கொண்டு அடுத்தவரின் பங்கிலிருந்து) விலகிக் கொள்வதில் தவறில்லை. ஒருவர் இருப்பை எடுத்துக்கொண்டார்; மற்றொருவர் வரவேண்டிய கடனை எடுத்துக்கொண்டார். (சம்மதத்தின்பேரில் இது நடந்தபின்) இருவரில் ஒருவருக்கு இழப்பு நேர்ந்தால், மற்றவரிடம் சென்று கேட்கலாகாது.9
2709. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை தம்மீது கடன் (சுமை) இருந்த நிலையில் இறந்துவிட்டார். ஆகவே, நான் அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் என் தந்தை மீதிருந்த கடனுக்குப் பதிலாகப் பேரீச்சங்கனிகளை எடுத்துக்கொள்ளும்படி சொன்னேன். அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படி எடுத்துக்கொள்வதால் (தமது) உரிமை முழுமையாக நிறைவேறாது என்று அவர்கள் கருதினார்கள்.

ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைக் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ அதைப் பறித்துக் களத்தில் (காய) வைக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்னிடம்) தெரிவிப்பீராக!” என்று கூறினார்கள்.

(பிறகு நான் அவ்வாறே தெரிவிக்க) நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் உமர் (ரலி) அவர்களுடனும் வருகை தந்தார்கள். அந்தப் பழத்தின் அருகே அமர்ந்து வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, ‘‘உன் (தந்தைக்குக்) கடன் கொடுத்தவர்களை அழைத்து அவர்களுக்கு நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். என் தந்தை யாருக்கெல்லாம் கடனைத் திருப்பித் தரவேண்டியிருந்ததோ அவர்களில் ஒருவரையும் விடாமல் கடனை அடைத்து விட்டேன்.

(அவ்வாறிருந்தும்) பதின்மூன்று யிவஸ்க்’ பேரீச்சங்கனிகள் எஞ்சிவிட்டன. யிஏழு வஸ்க்குகள் ‘அஜ்வா’ (எனும் மதீனாவின் உயர் ரகப்) பேரீச்சம் பழமும், ஆறு யிவஸ்க்’குகள் யிலவ்ன்’ எனும் மற்ற வகைப் பேரீச்சம் பழங்களும்’, அல்லது யிஏழு யிவஸ்க்’குகள் லவ்னும் ஆறு வஸ்க்குகள் அஜ்வாவும் மீதமாகிவிட்டன. (அன்று) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, இந்த விஷயத்தை அவர்களிடம் கூறினேன்.

அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, ‘‘அபூபக்ரிடமும் உமரிடமும் சென்று தெரிவி” என்று கூறினார்கள். (நானும் அவ்வாறே தெரிவித்தேன்.) அதற்கு அவர்கள் இருவரும், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வளம் வேண்டி பிரார்த்தனை செய்த நேரத்திலேயே இதுதான் நடக்கும் என்று நாங்கள் அறிந்துகொண்டோம்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அஸ்ர்’ தொழுகை என இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் (ரலி) அவர்கள் பற்றியோ நபியவர்கள் சிரித்தது பற்றியோ அதில் குறிப்பு இல்லை. மேலும், என் தந்தை முப்பது யிவஸ்க்’குகள் கடனை விட்டுச்சென்றார் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், யிலுஹ்ர்’ தொழுகை என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 53
2710. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتٍ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ، فَنَادَى كَعْبَ بْنَ مَالِكٍ فَقَالَ "" يَا كَعْبُ "". فَقَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ. فَقَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُمْ فَاقْضِهِ "".
பாடம் : 14 வரவேண்டிய கடன் மற்றும் இருப்பை எடுத்துக்கொண்டு (பங்காளிகள்) சமாதானம் செய்து கொள்வது
2710. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் எனக்கு இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி, ‘கஅபே!’ என்றழைத் தார்கள். நான், ‘‘இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு’ என்று தம் கரத்தால் சைகை காட்டினார்கள். ‘‘அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூற, இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் எழுந்து சென்று அவரது கடனை அடையுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.10

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 53

2711. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ مَرْوَانَ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، رضى الله عنهما يُخْبِرَانِ عَنْ أَصْحَابِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَمَّا كَاتَبَ سُهَيْلُ بْنُ عَمْرٍو يَوْمَئِذٍ كَانَ فِيمَا اشْتَرَطَ سُهَيْلُ بْنُ عَمْرٍو عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ لاَ يَأْتِيكَ مِنَّا أَحَدٌ وَإِنْ كَانَ عَلَى دِينِكَ إِلاَّ رَدَدْتَهُ إِلَيْنَا، وَخَلَّيْتَ بَيْنَنَا وَبَيْنَهُ. فَكَرِهَ الْمُؤْمِنُونَ ذَلِكَ، وَامْتَعَضُوا مِنْهُ، وَأَبَى سُهَيْلٌ إِلاَّ ذَلِكَ، فَكَاتَبَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى ذَلِكَ، فَرَدَّ يَوْمَئِذٍ أَبَا جَنْدَلٍ عَلَى أَبِيهِ سُهَيْلِ بْنِ عَمْرٍو، وَلَمْ يَأْتِهِ أَحَدٌ مِنَ الرِّجَالِ إِلاَّ رَدَّهُ فِي تِلْكَ الْمُدَّةِ، وَإِنْ كَانَ مُسْلِمًا، وَجَاءَ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ، وَكَانَتْ أُمُّ كُلْثُومٍ بِنْتُ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ مِمَّنْ خَرَجَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ وَهْىَ عَاتِقٌ، فَجَاءَ أَهْلُهَا يَسْأَلُونَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنْ يَرْجِعَهَا إِلَيْهِمْ، فَلَمْ يَرْجِعْهَا إِلَيْهِمْ لِمَا أَنْزَلَ اللَّهُ فِيهِنَّ {إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ} إِلَى قَوْلِهِ {وَلاَ هُمْ يَحِلُّونَ لَهُنَّ}.
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந் தங்கள் உள்ளிட்ட முடிவுகளிலும் விதிக்கப் படுகின்ற செல்லுபடியாகும் நிபந்தனைகள்
2711. மர்வான் பின் அல்ஹகம் அவர்களும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது:

சுஹைல் பின் அம்ர் அவர்கள்2 அந்த (ஹுதைபியா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால்லிஅவர் உமது மார்க்கத்திலிருப்ப வராயினும் சரி லி அவரைத் திருப்பியனுப்பி விட வேண்டும்; எங்களுக்கும் அவருக்கு மிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் (முழுமையாக) அவரை ஒப்படைத்துவிட வேண்டும்” என்பதும் ஒன்றாக இருந்தது.

இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு கோபமடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்து விட்டார். நபி (ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். ஆகவே, அன்றே அபூஜந்தல் (ரலி) அவர்களை அவருடைய தந்தை சுஹைல் பின் அம்ரிடம் திருப்பி யனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) காலகட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) வந்த ஆண்கள் எவரையும் திருப்பி யனுப்பாமல் நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பிவிடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் புலம்பெயர்ந்து (மதீனா) வந்தார்கள்.

அன்று (இணைவைப்பாளர்களின் தலைவன்) உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் இளம் பெண்ணாக இருந்தார்கள். ஆகவே, அவரது வீட்டார் நபி (ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பி யனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை.

அவர்கள் விஷயத்தில் அல்லாஹ், ‘‘இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் புலம்பெயர்ந்து உங்களிடம் வந்தால் (அவர்கள் இறைநம்பிக்கையாளர்களா என்பதைச்) சோதித்துப்பாருங்கள். அவர் களது இறைநம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான். அவர்கள் இறைநம்பிக்கையுடையவர்கள் தான் என்று நீங்கள் கருதினால் அவர் களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி யனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (இறைமறுப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த ஆண்களும் அப்பெண் களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்” (60:10) எனும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.


அத்தியாயம் : 54
2713. قَالَ عُرْوَةُ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُهُنَّ بِهَذِهِ الآيَةِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ } إِلَى {غَفُورٌ رَحِيمٌ}. قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنْهُنَّ قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَدْ بَايَعْتُكِ "". كَلاَمًا يُكَلِّمُهَا بِهِ، وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ، وَمَا بَايَعَهُنَّ إِلاَّ بِقَوْلِهِ.
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந் தங்கள் உள்ளிட்ட முடிவுகளிலும் விதிக்கப் படுகின்ற செல்லுபடியாகும் நிபந்தனைகள்
2713. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த) அப்பெண்களை இறைவசனத்தின் (60:10லி12) கட்டளைப்படி சோதனை செய்து வந்தார்கள்.

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்த னையை அப்பெண்களில் எவர் ஏற்றுக் கொள்கிறாரோ அவரிடம், ‘‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். இப்படி, அப்பெண்ணிடம் பேசத்தான் செய்வார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் கரம் விசுவாசப் பிரமாணம் பெறும்போது எந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை. பெண்களிடம் அவர்கள் வாய்மொழியாகவே விசுவாசப் பிரமாணம் வாங்கினார்கள்.


அத்தியாயம் : 54
2714. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ سَمِعْتُ جَرِيرًا ـ رضى الله عنه ـ يَقُولُ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَاشْتَرَطَ عَلَىَّ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந் தங்கள் உள்ளிட்ட முடிவுகளிலும் விதிக்கப் படுகின்ற செல்லுபடியாகும் நிபந்தனைகள்
2714. ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அப்போது அவர்கள், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் (முஸ்லிமான) ஒவ்வொருவருக்கும் நான் நலம் நாட வேண்டுமென்றும் எனக்கு நிபந்தனை விதித்தார்கள்.


அத்தியாயம் : 54
2715. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந் தங்கள் உள்ளிட்ட முடிவுகளிலும் விதிக்கப் படுகின்ற செல்லுபடியாகும் நிபந்தனைகள்
2715. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ‘ஸகாத்’ கொடுக்க வேண்டும்; எல்லா முஸ்லிம்களுக்கும் நலம் நாட வேண்டும்” என்ற நிபந்தனைகளை ஏற்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் விசுவாசப் பிரமாணம் செய்தேன்.

அத்தியாயம் : 54
2716. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ بَاعَ نَخْلاً قَدْ أُبِّرَتْ فَثَمَرَتُهَا لِلْبَائِعِ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ "".
பாடம் : 2 மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்சந்தோப்பை ஒருவர் விற்றால்...
2716. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட ஒரு பேரீச்ச மரத்தை விற்கிறாரோ அவருக்கே அதன் கனிகள் உரியவை யாகும்; வாங்கியவர் (கனிகள் தமக்கே சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டி ருந்தால் தவிர.3

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 54
2717. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةََ،ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ عَائِشَةَ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا، قَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ، فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ. فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ، وَيَكُونَ لَنَا وَلاَؤُكِ. فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا "" ابْتَاعِي فَأَعْتِقِي، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 3 வியாபாரங்களில் விதிக்கப்படும் நிபந்தனைகள்
2717. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப் பெண்ணான) பரீரா, தனது விடுதலைப் பத்திரம் தொடர்பாக (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக) உதவி கேட்டு என்னிடம் வந்தார். அதுவரை தன் விடுதலைப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த தொகையில் எதையும் அவர் செலுத்தியிருக்கவில்லை. எனவே நான் அவரிடம், ‘‘நீ உன் உரிமையாளர் களிடம் திரும்பிச் சென்று, உனது விடுதலைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை உன் சார்பாக நான் செலுத்தி விடுவதாகவும் உன் வாரிசுரிமை எனக்கே உரியதாய் இருக்க வேண்டுமென்றும் அவர்கள் விரும்பினால் நான் அவ்வாறே செய்கிறேன் என்றும் சொல்” எனக் கூறினேன்.

பரீராவும் இதை அவர்களிடம் சொல்ல அவர்கள் அதை (ஏற்க) மறுத்துவிட்டனர். மேலும், ‘‘ஆயிஷா உன்னை விடுதலை செய்வதன் வாயிலாக (அல்லாஹ்விடம்) நன்மையை நாடியிருந்தால் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டனர். அதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்ல அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘நீ (பரீராவை) வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.4

அத்தியாயம் : 54
2718. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ سَمِعْتُ عَامِرًا، يَقُولُ حَدَّثَنِي جَابِرٌ ـ رضى الله عنه أَنَّهُ كَانَ يَسِيرُ عَلَى جَمَلٍ لَهُ قَدْ أَعْيَا، فَمَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَضَرَبَهُ، فَدَعَا لَهُ، فَسَارَ بِسَيْرٍ لَيْسَ يَسِيرُ مِثْلَهُ ثُمَّ قَالَ "" بِعْنِيهِ بِوَقِيَّةٍ "". قُلْتُ لاَ. ثُمَّ قَالَ "" بِعْنِيهِ بِوَقِيَّةٍ "". فَبِعْتُهُ فَاسْتَثْنَيْتُ حُمْلاَنَهُ إِلَى أَهْلِي، فَلَمَّا قَدِمْنَا أَتَيْتُهُ بِالْجَمَلِ، وَنَقَدَنِي ثَمَنَهُ، ثُمَّ انْصَرَفْتُ، فَأَرْسَلَ عَلَى إِثْرِي، قَالَ "" مَا كُنْتُ لآخُذَ جَمَلَكَ، فَخُذْ جَمَلَكَ ذَلِكَ فَهْوَ مَالُكَ "". قَالَ شُعْبَةُ عَنْ مُغِيرَةَ عَنْ عَامِرٍ عَنْ جَابِرٍ أَفْقَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ظَهْرَهُ إِلَىَ الْمَدِينَةِ. وَقَالَ إِسْحَاقُ عَنْ جَرِيرٍ عَنْ مُغِيرَةَ فَبِعْتُهُ عَلَى أَنَّ لِي فَقَارَ ظَهْرِهِ حَتَّى أَبْلُغَ الْمَدِينَةَ. وَقَالَ عَطَاءٌ وَغَيْرُهُ لَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ، وَقَالَ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ شَرَطَ ظَهْرَهُ إِلَى الْمَدِينَةِ. وَقَالَ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ جَابِرٍ وَلَكَ ظَهْرُهُ حَتَّى تَرْجِعَ. وَقَالَ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَفْقَرْنَاكَ ظَهْرَهُ إِلَى الْمَدِينَةِ. وَقَالَ الأَعْمَشُ عَنْ سَالِمٍ عَنْ جَابِرٍ تَبَلَّغْ عَلَيْهِ إِلَى أَهْلِكَ. وَقَالَ عُبَيْدُ اللَّهِ وَابْنُ إِسْحَاقَ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ اشْتَرَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِوَقِيَّةٍ. وَتَابَعَهُ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ جَابِرٍ. وَقَالَ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ وَغَيْرِهِ عَنْ جَابِرٍ أَخَذْتُهُ بِأَرْبَعَةِ دَنَانِيرَ. وَهَذَا يَكُونُ وَقِيَّةً عَلَى حِسَابِ الدِّينَارِ بِعَشَرَةِ دَرَاهِمَ. وَلَمْ يُبَيِّنِ الثَّمَنَ مُغِيرَةُ عَنِ الشَّعْبِيِّ عَنْ جَابِرٍ، وَابْنُ الْمُنْكَدِرِ وَأَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ. وَقَالَ الأَعْمَشُ عَنْ سَالِمٍ عَنْ جَابِرٍ وَقِيَّةُ ذَهَبٍ. وَقَالَ أَبُو إِسْحَاقَ عَنْ سَالِمٍ عَنْ جَابِرٍ بِمِائَتَىْ دِرْهَمٍ. وَقَالَ دَاوُدُ بْنُ قَيْسٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ عَنْ جَابِرٍ اشْتَرَاهُ بِطَرِيقِ تَبُوكَ، أَحْسِبُهُ قَالَ بِأَرْبَعِ أَوَاقٍ. وَقَالَ أَبُو نَضْرَةَ عَنْ جَابِرٍ اشْتَرَاهُ بِعِشْرِينَ دِينَارًا. وَقَوْلُ الشَّعْبِيِّ بِوَقِيَّةٍ أَكْثَرُ. الاِشْتِرَاطُ أَكْثَرُ وَأَصَحُّ عِنْدِي. قَالَهُ أَبُو عَبْدِ اللَّهِ.
பாடம் : 4 வாகனத்தை விற்பவர் அதில் குறிப்பிட்ட தூரம்வரை பயணம் செய்து கொள்வேன் என நிபந்தனையிட்டால் அது செல்லும்.
2718. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு போரிலிருந்து திரும்புகையில்) நான் களைப்படைந்துவிட்ட எனது ஒட்டகம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சென்று அதை அடித்தார்கள். மேலும், அதற்காக துஆ செய்தார்கள். உடனே அது இதற்குமுன் இதுபோல் எப்போதும் ஓடியதில்லை என்னும் அளவுக்கு வேகமாக ஓடத் தொடங்கியது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை எனக்கு ஒரு யிஊக்கியா’வுக்கு நீங்கள் விற்றுவிடுங்கள்” என்று கேட்டார்கள்.

அவ்வாறே, என் வீட்டாரிடம் போய்ச் சேரும்வரை அதில் நான் பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இட்டுவிட்டு அதை அவர்களுக்கு நான் விற்றுவிட்டேன். (அவர்களும் என் நிபந்தனையை ஒப்புக் கொண்டார்கள்.)

நாங்கள் (மதீனாவுக்கு) வந்து சேர்ந்த போது அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்களிடம் (ஒப்படைக்க) கொண்டு சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் செல்ல, எனக்குப் பின்னாலேயே நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பி (என்னை மீண்டும் வரவழைத்து), ‘‘உன் ஒட்டகத்தை நான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. உனது அந்த ஒட்டகத்தை நீயே எடுத்துக் கொள். அது உனது செல்வம்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மொத்தம் பதிமூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவரை அந்த ஒட்டகத்தில் என்னை ஏற்றியனுப்பினார்கள்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘நான் மதீனாவை அடையும்வரை அதன் முதுகில் பயணம் செய்துகொள்வேன் என்ற நிபந்தனையின் பேரில் நபி (ஸல்) அவர்களுக்கு அதை நான் விற்றேன்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

வேறுசில அறிவிப்புகளில் நபி (ஸல்) அவர்களே அந்த அனுமதியை ஜாபிர் (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள் என்று காணப்படுகிறது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகின்றேன்:

இவ்வாறு ஜாபிர் (ரலி) அவர்கள் நிபந்தனையிட்டார்கள் என்ற அறிவிப்பே அதிகமாக வந்துள்ளது; அதுதான் என்னிடம் சரியான அறிவிப்பும் ஆகும்.

சில அறிவிப்புகளில், ஓர் யிஊக்கியா’ வுக்கு நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கினார்கள் என வந்துள்ளது.

நான்கு பொற்காசுகளுக்கு அதை நான் வாங்கிக்கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சில அறிவிப்புகளில் காணப்படுகிறது. இது, ஒரு பொற்காசு பத்து வெள்ளிக்காசுகளுக்கு ஈடாகும் என்ற கணக்குப்படி ஓர் யிஊக்கியா’ ஆகும். சிலர் விலையைக் குறிப்பிடவில்லை.

வேறுசில அறிவிப்புகளில், தங்கத்தில் ஓர் யிஊக்கியா’ என்று சொல்லப்பட்டுள்ளது. இருநூறு வெள்ளிக்காசுகள் என்று சிலர் அறிவித்துள்ளனர்.

தபூக் சாலையில் அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார் கள்; நான்கு யிஊக்கியா’க்களுக்கு வாங்கிய தாகவே நான் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர்கள் சிலர் அறிவித்துள்ளனர். யிஇருபது பொற்காசுகளுக்கு’ என்றும், ஓர் யிஊக்கியா’வைவிட அதிகமான தொகைக்கு என்றும் அறிவிக்கப்படுகிறது.

அத்தியாயம் : 54
2719. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَتِ الأَنْصَارُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ. قَالَ "" لاَ "". فَقَالَ تَكْفُونَا الْمَئُونَةَ وَنُشْرِكُكُمْ فِي الثَّمَرَةِ. قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا.
பாடம் : 5 கொடுக்கல் வாங்கலில் விதிக்கப் படும் நிபந்தனைகள்
2719. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(எங்கள்) பேரீச்ச மரங்களை எங்களுக்கும் எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்கு மிடையே பங்கிட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் யிவேண்டாம்’ என்று கூறவே, அன்சாரிகள், ‘‘நீங்கள் எங்களுக்குப் பதிலாக (எங்கள் நிலத்தில்) உழையுங்கள்; நாங்கள் விளைச்சலை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறோம்” என்று (முஹாஜிர்களிடம்) கூறினார்கள். முஹாஜிர்கள், ‘‘செவியேற் றோம்; கட்டுப்பட்டோம் (உங்கள் நிபந் தனையை ஏற்றுக்கொண்டோம்)” என்று சொன்னார்கள்.5


அத்தியாயம் : 54
2720. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ أَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ الْيَهُودَ أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا.
பாடம் : 5 கொடுக்கல் வாங்கலில் விதிக்கப் படும் நிபந்தனைகள்
2720. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிகைபர்’ நிலங்களை (அங்கிருந்த) யூதர் களுக்கு, ‘அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும்’ என்றும், ‘அவற்றிலிருந்து வரும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது’ என்றும் நிபந்தனையிட்டுக் கொடுத்தார்கள்.6

அத்தியாயம் : 54
2721. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَحَقُّ الشُّرُوطِ أَنْ تُوفُوا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ "".
பாடம் : 6 திருமண ஒப்பந்தத்தின்போது மணக்கொடையை (மஹ்ர்) நிர்ணயிப்ப தில் விதிக்கப்படும் நிபந்தனைகள் ‘‘நிபந்தனைகள் விதிக்கப்படும்போது உரிமைகள் துண்டிக்கப்படுகின்றன. நீ எதை நிபந்தனையிட்டாயோ அது உனக்குண்டு” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.7 மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் மருமகன் ஒருவரை (அபுல்ஆஸ் (ரலி) அவர்களை) நினைவுகூர்ந்து, (அவரது மாமனாரான) தம்(முடன் அவர் வைத்திருந்த) உறவு முறையில் நல்ல விதமாக நடந்துகொண்ட தாக மிகவும் புகழ்ந்துரைத்தார்கள். ‘‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே பேசினார். எனக்கு வாக்களித்தபோது, அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்று கூறினார்கள்.8
2721. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந் தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.

இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 54