2662. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَامٍ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ قَالَ أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ مِرَارًا ثُمَّ قَالَ مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا أَخَاهُ لَا مَحَالَةَ فَلْيَقُلْ أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيبُهُ وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ مِنْهُ
பாடம் : 16
ஒருவரைப் பற்றி நல்லவர் என்று ஒருவர் கூறினாலே போதும்.
அபூஜமீலா சுனைன் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் கேட்பாரற்ற குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தேன். என்னை உமர் (ரலி) அவர்கள் பார்த்தபோது, (அது கண்டெடுக்கப்பட்ட குழந்தை என்பதை நம்பாமல், நான் என் குழந்தையைத்தான் அதன் தகப்பன் என்கிற பொறுப்பை ஏற்க மறுத்துப் பொது நிதியிலிருந்து பணம் பெறுவதற்காக இப்படிக் கூறுகிறேன் என்று கருதி), ‘‘(தஞ்சம் அளிக்கும்) குகையே ஆபத்தாகிவிடப்போகிறது” என்ற பழமொழியைச் சொல்லி, குற்றம்சாட்டுவதைப் போன்று கூறினார்கள்.
எங்கள் (வட்டார அரசு) அதிகாரி ஒருவர், ‘‘அவர் நல்ல மனிதர்” என்று கூறியதும், ‘‘அப்படியா? (சரி) போ! அக்குழந்தையின் பராமரிப்புச் செலவு எமது (அரசின்) பொறுப்பாகும்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
2662. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்குக் கேடுதான்; உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள்.
பிறகு, ‘‘உங்களில் எவர் தம் சகோதர ரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருக் கிறாரோ அவர், ‘‘இன்ன மனிதரை நான் (இவ்வாறு) எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரை விசாரணை செய்பவன். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52

2663. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يُثْنِي عَلَى رَجُلٍ، وَيُطْرِيهِ فِي مَدْحِهِ فَقَالَ "" أَهْلَكْتُمْ ـ أَوْ قَطَعْتُمْ ـ ظَهْرَ الرَّجُلِ "".
பாடம் : 17
மிகைப் புகழ்ச்சி வெறுக்கப்பட்டது; அறிந்ததை மட்டுமே கூறுக!
2663. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்துகொண்டி ருப்பதையும் அவரை அளவுக்கதிமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே ‘‘நீங்கள் அந்த மனிதரின் முதுகை அழித்து விட்டீர்கள்லிஅல்லதுலிமுறித்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.

2664. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، قَالَ حَدَّثَنِي ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَرَضَهُ يَوْمَ أُحُدٍ وَهْوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، فَلَمْ يُجِزْنِي، ثُمَّ عَرَضَنِي يَوْمَ الْخَنْدَقِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ فَأَجَازَنِي. قَالَ نَافِعٌ فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَهْوَ خَلِيفَةٌ، فَحَدَّثْتُهُ هَذَا الْحَدِيثَ، فَقَالَ إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ. وَكَتَبَ إِلَى عُمَّالِهِ أَنْ يَفْرِضُوا لِمَنْ بَلَغَ خَمْسَ عَشْرَةَ.
பாடம் : 18
குழந்தைகள் பருவமடைவதும் அவர்களின் சாட்சியமும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
உங்கள் சிறுவர்கள் பருவம் அடைந்து விட்டால் (வயதில்) அவர்களுக்கு முந்தியவர்கள் அனுமதி கேட்பதைப் போன்று, அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். (24:59)
‘‘நான் பன்னிரண்டு வயதுடையவனாக இருந்தபோதே பருவமடைந்துவிட்டேன்” என்று (சட்ட நிபுணர்) முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் பருவம் அடைவதென்பது, மாதவிலக்கு (வரத்) தொடங்கும் போதா கும்.24
ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் பெண்களில் எவர் இனி மாதவிலக்கு வரப்போவதில்லை என்று நம்பிக்கையிழந்துவிட்டிருக்கிறார்களோ அவர்களைக் குறித்துச் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களின் காத்திருப்பு (யிஇத்தா’) காலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு ஏற்படவில்லையோ (அவர்களுக்குரிய சட்டமும் இதுதான்.) கர்ப்பிணிகளுக்கான காத்திருப்புக் காலம், அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிவடைகிறது. (65:4)
ஹசன் பின் ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
எங்கள் அண்டை வீட்டுக்காரப் பெண்ணொருத்தி இருபத்தொன்று வயதிலெல்லாம் பாட்டியாகிவிட்டதை நான் கண்டேன்.25
2664. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுத் போர் நடந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதி யளிக்கவில்லை. அகழ்ப் போரின்போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத் தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர் (ரலி) அவர்களுடைய) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், ‘‘(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக்காட்டும்) எல்லைக் கோடாகும்” என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (இராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்

2665. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ "".
பாடம் : 18
குழந்தைகள் பருவமடைவதும் அவர்களின் சாட்சியமும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
உங்கள் சிறுவர்கள் பருவம் அடைந்து விட்டால் (வயதில்) அவர்களுக்கு முந்தியவர்கள் அனுமதி கேட்பதைப் போன்று, அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். (24:59)
‘‘நான் பன்னிரண்டு வயதுடையவனாக இருந்தபோதே பருவமடைந்துவிட்டேன்” என்று (சட்ட நிபுணர்) முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் பருவம் அடைவதென்பது, மாதவிலக்கு (வரத்) தொடங்கும் போதா கும்.24
ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் பெண்களில் எவர் இனி மாதவிலக்கு வரப்போவதில்லை என்று நம்பிக்கையிழந்துவிட்டிருக்கிறார்களோ அவர்களைக் குறித்துச் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களின் காத்திருப்பு (யிஇத்தா’) காலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு ஏற்படவில்லையோ (அவர்களுக்குரிய சட்டமும் இதுதான்.) கர்ப்பிணிகளுக்கான காத்திருப்புக் காலம், அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிவடைகிறது. (65:4)
ஹசன் பின் ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
எங்கள் அண்டை வீட்டுக்காரப் பெண்ணொருத்தி இருபத்தொன்று வயதிலெல்லாம் பாட்டியாகிவிட்டதை நான் கண்டேன்.25
2665. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது பருவ வயதை அடைந்துவிட்ட ஒவ்வொரு வர்மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2666. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهْوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". قَالَ فَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلَكَ بَيِّنَةٌ "". قَالَ قُلْتُ لاَ. قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ "" احْلِفْ "". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي. قَالَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَةِ.
பாடம் : 19
நீதிபதி (பிரதிவாதியிடம்) சத்தியப் பிரமாணம் செய்யும்படி கேட்பதற்கு முன்பாக வாதியிடம்,’ஞீஉனக்கு ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்பது26
2666. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித் துக்கொள்வதற்காக, ஒரு பிரமாணத்தின் போது திட்டமிட்டுப் பொய் சொல்லி சத்தியம் செய்கின்றவர், (மறுமையில்) தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பார்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:
அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (வந்து), ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இது நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (தொடர்பான தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் அவரை நபி (ஸல்) அவர்களின் முன்னால் (கொண்டுபோய்) நிறுத்தினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு ஆதாரம் ஏதும் உண்டா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், ‘‘இல்லை” என்று பதிலளித்தேன். அந்த யூதரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘(நிலம் உன்னுடையது என்று) சத்தியம் செய்” என்று கூறினார்கள்.
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அப்படி யென்றால், அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்து என் செல்வத்தைக் கொண்டுபோய்விடுவாரே!” என்று கூறினேன். அப்போதுதான், ‘‘எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்” எனும் (3:77) வசனத்தை அல்லாஹ் அருளினான்” என்று கூறினார்கள்.

2668. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَتَبَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالْيَمِينِ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ.
பாடம் : 20
பொருளாதார மற்றும் குற்றவியல் (சிவில், கிரிமினல்) வழக்குகளில் பிரதி வாதி, (தான் குற்றமற்றவன்) என்று சத்தியம் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘(வாதியான) உன்னுடைய இரு சாட்சிகள்; அல்லது (பிரதி வாதியான) அவரது சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படும்)” என்று சொன்னார்கள்.
(யிகூஃபா’ நகர நீதிபதி) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
என்னிடம் (மதீனா நீதிபதி) அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள், ஒரேயொருவரின் சாட்சியமும் வாதியின் சத்தியமும் (தீர்ப்பளிக்க போதும் என்பது) குறித்துக் கருத்துக் கேட்டபோது நான் இந்த இறை வசனத்தை எடுத்துரைத்தேன்:
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
உங்கள் ஆண்களில் இருவரைச் சாட்சிகளாக்குங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், நீங்கள் திருப்தி அடையும் ஓர் ஆணும் இரு பெண்களும் சாட்சிகளாக இருக்கட்டும்! அவ்விரு பெண்களில் ஒருவர் மறந்துவிட்டால் மற்றொருவர் நினைவூட்டுவார். (2:282)
‘‘ஒரு சாட்சியும் வாதியின் சத்தியமும் இருந்தால் போதும் என்றிருக்குமாயின், ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவூட்டத் தேவையில்லையே. மற்றொருத்தி நினைவூட்டுவதால் என்ன பயன்?” என்று நான் கேட்டேன்.
2668. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பிரதிவாதிதான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு (கடிதம்) எழுதி னார்கள்.

2669. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالاً لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ، ثُمَّ أَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ} إِلَى {عَذَابٌ أَلِيمٌ}. ثُمَّ إِنَّ الأَشْعَثَ بْنَ قَيْسٍ خَرَجَ إِلَيْنَا فَقَالَ مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فَحَدَّثْنَاهُ بِمَا، قَالَ، فَقَالَ صَدَقَ لَفِيَّ أُنْزِلَتْ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ خُصُومَةٌ فِي شَىْءٍ، فَاخْتَصَمْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" شَاهِدَاكَ أَوْ يَمِينُهُ "". فَقُلْتُ لَهُ إِنَّهُ إِذًا يَحْلِفُ وَلاَ يُبَالِي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالاً وَهْوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ، ثُمَّ اقْتَرَأَ هَذِهِ الآيَةَ.
பாடம் : 20
பொருளாதார மற்றும் குற்றவியல் (சிவில், கிரிமினல்) வழக்குகளில் பிரதி வாதி, (தான் குற்றமற்றவன்) என்று சத்தியம் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘(வாதியான) உன்னுடைய இரு சாட்சிகள்; அல்லது (பிரதி வாதியான) அவரது சத்தியம் (இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படும்)” என்று சொன்னார்கள்.
(யிகூஃபா’ நகர நீதிபதி) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
என்னிடம் (மதீனா நீதிபதி) அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள், ஒரேயொருவரின் சாட்சியமும் வாதியின் சத்தியமும் (தீர்ப்பளிக்க போதும் என்பது) குறித்துக் கருத்துக் கேட்டபோது நான் இந்த இறை வசனத்தை எடுத்துரைத்தேன்:
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
உங்கள் ஆண்களில் இருவரைச் சாட்சிகளாக்குங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், நீங்கள் திருப்தி அடையும் ஓர் ஆணும் இரு பெண்களும் சாட்சிகளாக இருக்கட்டும்! அவ்விரு பெண்களில் ஒருவர் மறந்துவிட்டால் மற்றொருவர் நினைவூட்டுவார். (2:282)
‘‘ஒரு சாட்சியும் வாதியின் சத்தியமும் இருந்தால் போதும் என்றிருக்குமாயின், ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவூட்டத் தேவையில்லையே. மற்றொருத்தி நினைவூட்டுவதால் என்ன பயன்?” என்று நான் கேட்டேன்.
2669. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘ஒரு செல்வத்தை (அநியாயமாக) அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய்ச் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு அதை உறுதிப்படுத்தும் விதத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்” (3:77) எனும் வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
பிறகு அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, ‘‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் லி ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?” என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்:
அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அந்த வசனம் இறங்கியது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் வழக்கு இருந்துவந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றோம். அவர்கள், ‘‘உம்முடைய இரு சாட்சிகள். அல்லது அவருடைய சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன)” என்று கூறினார்கள்.
நான், ‘‘அப்படியென்றால், அவர் (அந்த யூதர் தயங்காமல்) பொய்ச் சத்தியம் செய்வாரே; (பொய்ச் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்படமாட்டாரே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஒரு பிரமாணத்தின்போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்துகொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர், தம்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொற்களை உறுதிப்படுத்தி (குர்ஆனில் ஒரு வசனத்தை) அல்லாஹ் அருளினான்” என்று கூறிவிட்டு, இந்த இறைவசனத்தை (3:77) ஓதிக்காட்டினார்கள்.

2671. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ، قَذَفَ امْرَأَتَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِشَرِيكِ بْنِ سَحْمَاءَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْبَيِّنَةُ أَوْ حَدٌّ فِي ظَهْرِكَ "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذَا رَأَى أَحَدُنَا عَلَى امْرَأَتِهِ رَجُلاً يَنْطَلِقُ يَلْتَمِسُ الْبَيِّنَةَ فَجَعَلَ يَقُولُ "" الْبَيِّنَةَ وَإِلاَّ حَدٌّ فِي ظَهْرِكَ "". فَذَكَرَ حَدِيثَ اللِّعَانِ.
பாடம் : 21
ஒன்றை வாதிடக்கூடியவர், அல்லது குற்றம் சுமத்துகின்றவர் தமது கூற் றுக்கு ஆதாரத்தைத் தேடிச் செல்ல லாம்.
2671. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் (அவதூறு கூறிய தற்குத் தண்டனையாக) உன் முதுகில் சாட்டையடி தரப்படும்” என்று கூறினார்கள்.
அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர், தம் மனைவியின்மேல் ஒரு மனிதரை (தவறான உறவு கொள்ள)ப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் உன் முதுகில் சாட்டையடி தரப்படும்” என்று மீண்டும் கூறினார்கள்.
இதையடுத்து சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) தொடர்பான ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.27

2672. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِطَرِيقٍ يَمْنَعُ مِنْهُ ابْنَ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ رَجُلاً لاَ يُبَايِعُهُ إِلاَّ لِلدُّنْيَا، فَإِنْ أَعْطَاهُ مَا يُرِيدُ وَفَى لَهُ، وَإِلاَّ لَمْ يَفِ لَهُ، وَرَجُلٌ سَاوَمَ رَجُلاً بِسِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهِ كَذَا وَكَذَا، فَأَخَذَهَا "".
பாடம் : 22
அஸ்ர் தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்வது
2672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும்.
ஒருவர், (மக்களின் போக்குவரத்துப்) பாதையில் எஞ்சிய தண்ணீரை வழிப் போக்கர்களுக்கு (தராமல்) தடுக்கும் மனிதர் ஆவார். மற்றொருவர், உலக ஆதாயத்திற் காகவே ஆட்சியாளரிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர் ஆவார். தாம் விரும்புவதை தமக்குக் கொடுத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) ஆட்சி யாளரிடம் விசுவாசமாக நடந்துகொள்வார். இல்லையெனில் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார்.
இன்னொருவர் ஒரு மனிதரிடம் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைத் தாம் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக்கொள்ளும்படி செய்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2673. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ لِيَقْتَطِعَ بِهَا مَالاً لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "".
பாடம் : 23
பிரதிவாதி எங்கு சத்தியம் செய்ய வேண்டிய கட்டாயம் நேர்கிறதோ அங்கு சத்தியம் செய்தால் போதும்; ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு அவன் கொண்டுசெல்லப்படலாகாது.
(ஒரு வழக்கில்) பிரதிவாதியாக இருந்த ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு சத்தியம் செய்ய வேண்டும் என்று (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் தீர்ப்பளித்தார். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘நான் என்னிடத் தில் இருந்தபடியே சத்தியம் செய்வேன்” என்று கூறி, மிம்பரின் மீதிருந்து சத்தியம் செய்ய மறுத்துவிட்டார்கள். மர்வான் அவரைக் கண்டு வியப்படைந்தார்.
(ஆனால்) நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடைய இரு சாட்சிகள், அல்லது அவரது சத்தியம்” என்றுதான் கூறினார்கள். எந்த இடத்தையும் குறிப்பிட்டு (யிஇன்ன இடத்தில் செய்யும் சத்தியம்’ என்று) குறிப்பிடவில்லை.
2673. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
(பிரமாண வாக்குமூலத்தின்போது) ஒரு செல்வத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், தம்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் (மறுமையில்) அவனைச் சந்திப்பார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2674. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَرَضَ عَلَى قَوْمٍ الْيَمِينَ فَأَسْرَعُوا، فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي الْيَمِينِ أَيُّهُمْ يَحْلِفُ.
பாடம் : 24
ஒரு சமூகத்தார் அனைவரும் சத்தியம் செய்ய (வேண்டிய பிரச் சினையில் எல்லாரும்) முந்தினால் (யார் ஆரம்பிப்பது)?
2674. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கூட்டத்தார் (ஒரு பொருள் தொடர்பாக ஆதாரமேயின்றி ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடியபோது) சத்தியம் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக்கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் (முதலில்) சத்தியம் செய்வதென்பதை அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள்.

2675. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْعَوَّامُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ أَبُو إِسْمَاعِيلَ السَّكْسَكِيُّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ أَقَامَ رَجُلٌ سِلْعَتَهُ فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهَا مَا لَمْ يُعْطَهَا فَنَزَلَتْ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} وَقَالَ ابْنُ أَبِي أَوْفَى النَّاجِشُ آكِلُ رِبًا خَائِنٌ.
பாடம் : 25
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத் தவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (3:77)
2675. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் (கடைத்தெருவில்) தமது சரக்கை (மக்கள்முன்) வைத்து, அல்லாஹ் வின் பெயரால் சத்தியமிட்டு, தாம் அதற் குத் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அது தொடர்பாகத்தான் மேற்கண்ட இறைவசனம் (3:77) அருளப் பட்டது.
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பொய் சொல்லி விலையை ஏற்றுபவர், லிவட்டி வாங்குபவரைப் போன்றுலி மோசடிக்காரர் ஆவார்.

2676. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبًا لِيَقْتَطِعَ مَالَ رَجُلٍ ـ أَوْ قَالَ أَخِيهِ ـ لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ "". وَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ فِي الْقُرْآنِ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} الآيَةَ. فَلَقِيَنِي الأَشْعَثُ فَقَالَ مَا حَدَّثَكُمْ عَبْدُ اللَّهِ الْيَوْمَ، قُلْتُ كَذَا وَكَذَا. قَالَ فِيَّ أُنْزِلَتْ.
பாடம் : 25
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத் தவும்மாட்டான். மாறாக, அவர்களுக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (3:77)
2676. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘ஒரு மனிதரின் லிஅல்லது சகோதரரின்லி செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காக, ஒரு பிரமாண(வாக்கு மூலத்)தின்போது பொய்யாகச் சத்தியம் செய்பவர், தம்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இதை உறுதிப்படுத்தி, மேற்கண்ட குர்ஆன் வசனத்தை (3:77) அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அப்போது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?” என்று கேட்க, நான். ‘‘இன்னின்ன விஷயங்களைப் பேசினார்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘அந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது” என்று கூறினார்கள்.

2678. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ يَسْأَلُهُ عَنِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ "". فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ "" لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ "". فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَصِيَامُ رَمَضَانَ "". قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ قَالَ "" لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ "". قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ. قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ "" لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ "". فَأَدْبَرَ الرَّجُلُ وَهْوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَفْلَحَ إِنْ صَدَقَ "".
பாடம் : 26
சத்தியம் செய்வது எப்படி?28
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்கள் அல்லாஹ்வின் பேரில் சத்தியம் செய்கின்றனர். (9:62,74)
பின்னர் அவர்கள், ‘‘நாங்கள் நன்மையையும் நல்லிணக்கத்தையும் தவிர வேறெதையும் கருதவில்லை” என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவாறு (நபியே!) உம்மிடம் வருவார்கள். (4:62)
சத்தியம் செய்யும்போது, யிபில்லாஹி, தல்லாஹி, வல்லாஹி’ இவற்றில் ஒன்று சொல்லப்படும். (அல்லாஹ்வின் மீதாணையாக என்பதே பொருளாகும்.)
நபி (ஸல்) அவர்கள், ‘‘அஸ்ர் தொழு கைக்குப் பிறகு அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்த ஒரு மனிதன்” என்று (ஒரு ஹதீஸில்) கூறினார்கள்.
அல்லாஹ் அல்லாதோர் மீது சத்தியம் செய்யக் கூடாது.
2678. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பகலிலும் இரவி லும் ஐந்து தொழுகைகள் (இஸ்லாத்தில் கட்டாயக் கடமையாகும்)” என்று பதில் கூறினார்கள். அவர், ‘‘இதைத் தவிர (வேறு தொழுகை) ஏதும் என்மீது (கடமையாக் கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, ‘‘இல்லை; நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மேலும், ‘‘ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள். அவர், ‘‘இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, ‘‘இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் ‘‘இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். ‘‘இல்லை; நீயாக விரும்பிச் செலுத்தும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்குமேல் நான் அதிகமாகச் செய்யவும்மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும்மாட்டேன்” என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்” என்று சொன்னார்கள்.

2679. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، قَالَ ذَكَرَ نَافِعٌ عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ "".
பாடம் : 26
சத்தியம் செய்வது எப்படி?28
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்கள் அல்லாஹ்வின் பேரில் சத்தியம் செய்கின்றனர். (9:62,74)
பின்னர் அவர்கள், ‘‘நாங்கள் நன்மையையும் நல்லிணக்கத்தையும் தவிர வேறெதையும் கருதவில்லை” என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவாறு (நபியே!) உம்மிடம் வருவார்கள். (4:62)
சத்தியம் செய்யும்போது, யிபில்லாஹி, தல்லாஹி, வல்லாஹி’ இவற்றில் ஒன்று சொல்லப்படும். (அல்லாஹ்வின் மீதாணையாக என்பதே பொருளாகும்.)
நபி (ஸல்) அவர்கள், ‘‘அஸ்ர் தொழு கைக்குப் பிறகு அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்த ஒரு மனிதன்” என்று (ஒரு ஹதீஸில்) கூறினார்கள்.
அல்லாஹ் அல்லாதோர் மீது சத்தியம் செய்யக் கூடாது.
2679. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
யார் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது அமைதியாக இருக்கட்டும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2680. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَىَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ أَخِيهِ شَيْئًا بِقَوْلِهِ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ فَلاَ يَأْخُذْهَا "".
பாடம் : 27
பிரதிவாதி சத்தியம் செய்தபிறகு வாதி ஆதாரம் கொண்டுவந்தால் (ஏற்கப்படுமா?)
நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் சிலர் மற்றச் சிலரைவிட தம் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் வாக்கு சாதுரியம் அதிக முள்ளவராக இருக்கலாம்” என்று கூறி னார்கள்.
‘‘நேர்மையான ஆதாரம், பொய்யான சத்தியத்தைக் காட்டிலும் (ஏற்றுக்கொள்ள) முன்னுரிமை பெற்றதாகும்” என்று தாவூஸ் (ரஹ்), இப்ராஹீம் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள்.29
2680. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிட வாக்கு சாதுரியம் மிக்கவராக இருக்கக்கூடும். ஆகவே, எவரது (சாதுரியமான) சொல்லை வைத்து அவருடைய சகோதரனின் உரிமையில் ஒன்றை (அவருக்குரியது) என்று நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் ஒதுக்கித்தருகிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

2681. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، أَنَّ هِرَقْلَ، قَالَ لَهُ سَأَلْتُكَ مَاذَا يَأْمُرُكُمْ فَزَعَمْتَ أَنَّهُ أَمَرَكُمْ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالْوَفَاءِ بِالْعَهْدِ وَأَدَاءِ الأَمَانَةِ. قَالَ وَهَذِهِ صِفَةُ نَبِيٍّ.
பாடம் : 28
வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளை யிட்டிருக்கிறார்கள்.
(உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:)
(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! நிச்சயமாக, அவர் வாக்குறுதியை முழுமை யாக நிறைவேற்றுபவராக இருந்தார். (19:54)
(கூஃபா நகர நீதிபதி) சயீத் பின் அம்ர் பின் அல்அஷ்வஃ (ரஹ்) அவர்கள், ‘‘வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்” என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து கூறினார்.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ என்பாரை) நினைவுகூர்ந்து, ”அவர் எனக்கு வாக்குறுதியளித்து, அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்று கூறினார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:
நான் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹீ (ரஹ்) அவர்கள், இப்னுல் அஷ்வஉ (ரஹ்) அவர்களுடைய இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.
2681. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
(கிழக்கு ரோமானிய மன்னர்) ஹிரக் ளீயஸ் என்னிடம், ‘‘அவர் (முஹம்மத்லிஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?› என்று உம்மிடம் நான் கேட்டேன். ‘‘அவர் தொழுகை, வாய்மை, சுயக்கட்டுப்பாடு, வாக்குறுதியை நிறைவேற்றல், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்ப ஒப்படைத்தல்30 ஆகியவற்றைக் கடைப் பிடிக்குமாறு கட்டளையிடுகிறார் என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்” என்று கூறினார்.