2605. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ أَشْيَاخٌ، فَقَالَ لِلْغُلاَمِ "" أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ "". فَقَالَ الْغُلاَمُ لاَ، وَاللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا. فَتَلَّهُ فِي يَدِهِ.
பாடம் : 23 கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2605. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது; அப்போது அவர்களின் வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் அவர்களின் இடப் பக்கத்தில் முதியவர்கள் சிலரும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சிறுவரை நோக்கி, ‘‘இவர்களுக்கு (இந்தப் பாலைக்) கொடுப்பதற்கு எனக்கு அனுமதி தரு கிறாயா?” என்று கேட்டார்கள்.

அச்சிறுவர், ‘‘மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக்கூடிய (நற்)பேற்றை வேறெ வருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்தப் பானத்தைச் சிறுவரின் கையிலேயே வைத்தார்கள்.


அத்தியாயம் : 50
2606. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ جَبَلَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم دَيْنٌ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ "" دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً. وَقَالَ اشْتَرُوا لَهُ سِنًّا فَأَعْطُوهَا إِيَّاهُ "". فَقَالُوا إِنَّا لاَ نَجِدُ سِنًّا إِلاَّ سِنًّا هِيَ أَفْضَلُ مِنْ سِنِّهِ. قَالَ "" فَاشْتَرُوهَا فَأَعْطُوهَا إِيَّاهُ، فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً "".
பாடம் : 23 கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2606. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (அவர் நபி (ஸல்) அவர்களிடம் கடுமையாகப் பேசியதால்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்த மனிதரைத் தண்டிக்க முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு” என்று கூறிவிட்டு, ‘‘அவருக்கு (நான் தரவேண்டிய ஒட்டகத்தின்) சம வயதுடைய ஒட்டகத்தை வாங்கி, அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், ‘‘தாங்கள் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் யார் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2607. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ لَهُمْ "" مَعِي مَنْ تَرَوْنَ، وَأَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا السَّبْىَ وَإِمَّا الْمَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ "". وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم انْتَظَرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلاَّ إِحْدَى الطَّائِفَتَيْنِ قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا. فَقَامَ فِي الْمُسْلِمِينَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلاَءِ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ "". فَقَالَ النَّاسُ طَيَّبْنَا يَا رَسُولَ اللَّهِ لَهُمْ. فَقَالَ لَهُمْ "" إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِيهِ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ "". فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّهُمْ طَيَّبُوا وَأَذِنُوا. وَهَذَا الَّذِي بَلَغَنَا مِنْ سَبْىِ هَوَازِنَ هَذَا آخِرُ قَوْلِ الزُّهْرِيِّ، يَعْنِي فَهَذَا الَّذِي بَلَغَنَا.
பாடம் : 24 பலர் பலருக்கு அன்பளிப்புச் செய்தல்
2607. மர்வான் பின் அல் ஹகம், மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகி யோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் யிஹவாஸின்’ தூதுக்குழுவினர் முஸ்லிம்களாக வந்த போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் செல்வங்களையும் போர்க்கைதி களையும் தங்களிடம் திருப்பித் தந்துவிடும் படி கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமான தாகும். (உங்கள்) போர்க் கைதிகள், அல்லது (உங்கள்) செல்வம் ஆகிய இரண் டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத் துக்கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர் பார்த்துக் காத்திருந்தேன்” என்று கூறி னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தி லிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட இரவுகள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்கள், அல்லது போர்க் கைதிகள் ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக் குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் எங்கள் போர்க்கைதிகளையே திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களி டையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள்.

பிறகு, ‘‘இறைவாழ்த்துக்குப்பின்! (முஸ்லிம்களே!) உங்களுடைய இந்தச் சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய போர்க் கைதிகளைத் திரும்பக் கொடுத்துவிடலாமென நான் கருதுகிறேன். உங்களில் எவர் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். (போர்க் கைதிகளை விடுதலை செய்யட்டும்.) எவர் நமக்கு (இனி) அல்லாஹ் முதன் முதலாக வழங்கவிருக்கும் செல்வத் திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்ற வரை தமது பங்கைத் தாமே வைத்துக் கொள்ள விரும்புகின்றாரோ, அவர் அவ்வாறே செய்யட்டும்; (அதுவரை தம்மிடமே வைத்துக்கொள்ளட்டும்)” என்று கூறினார்கள்.

மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மனப்பூர்வமாக அவர்களிடம் (அவர்களுடைய உறவினர்களான போர்க் கைதிகளைத் திருப்பித்) தந்துவிடுகிறோம்” என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவர் சம்மதிக்கிறார்; எவர் சம்மதிக்கவில்லை என்பது எமக்குத் தெரியாது. ஆகையால், நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் தலைவர்கள் வந்து (உங்கள் முடிவை) நம்மிடம் தெரிவிக்கட் டும்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (தலைவர்கள்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, போர்க் கைதிகளைத் திருப்பித் தர மனப்பூர்வமாகச் சம்மதிப்ப தாகத் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 50
2609. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ أَخَذَ سِنًّا فَجَاءَ صَاحِبُهُ يَتَقَاضَاهُ فَقَالَ "" إِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً "". ثُمَّ قَضَاهُ أَفْضَلَ مِنْ سِنِّهِ وَقَالَ "" أَفْضَلُكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً "".
பாடம் : 25 சகாக்களுடன் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டால் அவரே அதைப் பெறுவ தற்கு அதிக உரிமையுடையவர் ஆவார். ‘‘சகாக்களும் அதில் அவருடன் கூட்டாளிகளாவர்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல.
2609. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒருவரிடமிருந்து (கடனாகப்) பெற்றார்கள். கடன் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களிடம் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டு வந்தார். (அப்போது அவர் நபியவர்களிடம் சற்று கடுமையாகப் பேசினார். ஆகவே, தோழர் கள் அவரைத் தண்டிக்க விரும்பி னார்கள்.)

நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களைத் தடுத்து), ‘‘கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமை உண்டு” என்று கூறினார்கள். பிறகு, அவரது இளம் வயது ஒட்டகத்தைவிடச் சிறந்ததைக் கொடுத்து அவரது கடனை அடைத் தார்கள். மேலும், ‘‘உங்களில் எவர் அழகிய முறையில் கடனை அடைக்கி றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 50
2610. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَكَانَ عَلَى بَكْرٍ لِعُمَرَ صَعْبٍ، فَكَانَ يَتَقَدَّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيَقُولُ أَبُوهُ يَا عَبْدَ اللَّهِ لاَ يَتَقَدَّمِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَحَدٌ. فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بِعْنِيهِ "". فَقَالَ عُمَرُ هُوَ لَكَ. فَاشْتَرَاهُ ثُمَّ قَالَ "" هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ، فَاصْنَعْ بِهِ مَا شِئْتَ "".
பாடம் : 25 சகாக்களுடன் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டால் அவரே அதைப் பெறுவ தற்கு அதிக உரிமையுடையவர் ஆவார். ‘‘சகாக்களும் அதில் அவருடன் கூட்டாளிகளாவர்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல.
2610. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகம் ஒன்றின் மீது நான் பயணம் செய்துகொண்டிருந்தேன். அது நபி (ஸல்) அவர்களை முந்திக்கொண்டு சென்றது. அப்போது என் தந்தை உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்துல்லாஹ்வே! நபி (ஸல்) அவர்களை யாரும் முந்தக் கூடாது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், ‘‘அதை எனக்கு விற்று விடுங்கள்” என்று கேட்டார்கள்.

என் தந்தை, ‘‘அது உங்களுக்குத்தான்” என்று கூறினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். பிறகு (என்னிடம்) ‘‘அப்துல்லாஹ்வே! இது உமக்குரியது. நீர் விரும்பியபடி இதைப் பயன்படுத்திக்கொள்க!” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 50
2611. وَقَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، وَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْبٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعُمَرَ "" بِعْنِيهِ "". فَابْتَاعَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ "".
பாடம் : 26 ஒருவர், தமது ஒட்டகத்தில் பயணித்துக்கொண்டிருப்பவருக்கே அதை அன்பளிப்பாக வழங்கினால் அது செல்லும்.
2611. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நான் (என் தந்தைக்குச் சொந்தமான) ஒரு முரட்டு ஒட்டகத்தின் மீது பயணம் செய்து கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம், ‘‘இதை எனக்கு விற்றுவிடுங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி (கையகப்படுத்தாம லேயே), ‘‘அப்துல்லாஹ்வே! இது உமக் குரியது” என்று என்னிடம் கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2612. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَى عُمَرُ بْنُ الْخَطَّابِ حُلَّةً سِيَرَاءَ عِنْدَ باب الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَهَا فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ قَالَ "" إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ "". ثُمَّ جَاءَتْ حُلَلٌ فَأَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عُمَرَ مِنْهَا حُلَّةً، وَقَالَ أَكَسَوْتَنِيهَا وَقُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ. فَقَالَ "" إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا "". فَكَسَا عُمَرُ أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا.
பாடம் : 27 அணியக் கூடாத துணியை அன்பளிப்பாக வழங்குவது
2612. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், பள்ளிவாசலின் நுழைவாயில் அருகே (விற்கப்பட்ட) பட்டு அங்கியைக் கண்டார் கள். எனவே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் வாங்கி, வெள்ளிக்கிழமை யிலும் தூதுக் குழுக்கள் உங்களைச் சந்திக்க வரும்போதும் அணிந்துகொண் டால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்” என்று கூறினார்கள்.

பிறகு சில பட்டு அங்கிகள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) வந்தன. அவற்றில் ஓர் அங்கியை அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘எனக்கு இதை அணிந்துகொள்ளக் கொடுக்கிறீர்களா? யிஉ(த்)தாரிக்’ அங்கி தொடர்பாக நீங்கள் முன்பு ஒரு விதமாகச் சொன்னீர்களே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக நான் உங்களுக்குத் தரவில்லை” என்று பதிலளித்தார்கள்.23

ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் (பால்குடி) சகோதரர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்கள்.


அத்தியாயம் : 50
2613. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَبُو جَعْفَرٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَدْخُلْ عَلَيْهَا، وَجَاءَ عَلِيٌّ فَذَكَرَتْ لَهُ ذَلِكَ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنِّي رَأَيْتُ عَلَى بَابِهَا سِتْرًا مَوْشِيًّا "". فَقَالَ "" مَا لِي وَلِلدُّنْيَا "". فَأَتَاهَا عَلِيٌّ فَذَكَرَ ذَلِكَ لَهَا فَقَالَتْ لِيَأْمُرْنِي فِيهِ بِمَا شَاءَ. قَالَ تُرْسِلُ بِهِ إِلَى فُلاَنٍ. أَهْلِ بَيْتٍ بِهِمْ حَاجَةٌ.
பாடம் : 27 அணியக் கூடாத துணியை அன்பளிப்பாக வழங்குவது
2613. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு (ஒருமுறை) வந்தார்கள். ஆனால், வீட்டுக்குள் செல்லவில்லை. (திரும்பிப் போய்விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, ‘‘நான் ஃபாத்திமா வின் வீட்டு வாசலில் பல வண்ணக் கோடுகள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், ‘‘அந்தத் திரைச் சீலையை என்ன செய்ய வேண்டும் என்று தாம் விரும்புவதை எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்துகொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பிவிடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 50

2614. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَهْدَى إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم حُلَّةً سِيَرَاءَ فَلَبِسْتُهَا، فَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، فَشَقَقْتُهَا بَيْنَ نِسَائِي.
பாடம் : 27 அணியக் கூடாத துணியை அன்பளிப்பாக வழங்குவது
2614. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்கி னார்கள். அதை நான் அணிந்துகொண் டேன். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர் களின் முகத்தில் கோபத்தைக் கண்டேன். ஆகவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.24

அத்தியாயம் : 51
2615. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ أُهْدِيَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم جُبَّةُ سُنْدُسٍ، وَكَانَ يَنْهَى عَنِ الْحَرِيرِ، فَعَجِبَ النَّاسُ مِنْهَا فَقَالَ " وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا "
பாடம் : 28 இணைவைப்போரின் அன்ப ளிப்பை ஏற்றுக்கொள்வது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் புலம்பெயர்ந்து சென்றார்கள். அப்போது அரசன் ஒருவன் அல்லது சர்வாதிகாரி ஒருவன் இருந்த ஓர் ஊருக்கு அவர்கள் சென்றார்கள். அவன், ‘‘சாராவுக்கு ஆஜரை (அன்பளிப்பாக)க் கொடுங்கள்” என்று கட்டளையிட்டான். நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று (யூதர்களால்) அன்பளிப்பாகத் தரப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அய்லா’வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், (காப்புவரி கட்டுவதாக அரசர் எழுதியிருந்த கடிதத்திற்கு) அக்கடற்கரைவாசிகளைக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (பதில்) எழுதினார்கள்.25
2615. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்துவந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்திய மாக! சொர்க்கத்தில் (தோழர்) சஅத் பின் முஆதுக்கு கிடைக்கவிருக்கும் கைக் குட்டைகள் இதைவிட அழகானவையாக இருக்கும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 51
2616. . وَقَالَ سَعِيدٌ عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، إِنَّ أُكَيْدِرَ دُومَةَ أَهْدَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 28 இணைவைப்போரின் அன்ப ளிப்பை ஏற்றுக்கொள்வது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் புலம்பெயர்ந்து சென்றார்கள். அப்போது அரசன் ஒருவன் அல்லது சர்வாதிகாரி ஒருவன் இருந்த ஓர் ஊருக்கு அவர்கள் சென்றார்கள். அவன், ‘‘சாராவுக்கு ஆஜரை (அன்பளிப்பாக)க் கொடுங்கள்” என்று கட்டளையிட்டான். நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று (யூதர்களால்) அன்பளிப்பாகத் தரப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அய்லா’வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், (காப்புவரி கட்டுவதாக அரசர் எழுதியிருந்த கடிதத்திற்கு) அக்கடற்கரைவாசிகளைக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (பதில்) எழுதினார்கள்.25
2616. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிதூமத்துல் ஜந்தலி’ன் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார்.26


அத்தியாயம் : 51
2617. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُودِيَّةً، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا فَجِيءَ بِهَا فَقِيلَ أَلاَ نَقْتُلُهَا. قَالَ "" لاَ "". فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 28 இணைவைப்போரின் அன்ப ளிப்பை ஏற்றுக்கொள்வது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் புலம்பெயர்ந்து சென்றார்கள். அப்போது அரசன் ஒருவன் அல்லது சர்வாதிகாரி ஒருவன் இருந்த ஓர் ஊருக்கு அவர்கள் சென்றார்கள். அவன், ‘‘சாராவுக்கு ஆஜரை (அன்பளிப்பாக)க் கொடுங்கள்” என்று கட்டளையிட்டான். நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று (யூதர்களால்) அன்பளிப்பாகத் தரப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அய்லா’வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், (காப்புவரி கட்டுவதாக அரசர் எழுதியிருந்த கடிதத்திற்கு) அக்கடற்கரைவாசிகளைக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (பதில்) எழுதினார்கள்.25
2617. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘‘அவளைக் கொன்றுவிடுவோமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.


அத்தியாயம் : 51
2618. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَمِائَةً فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ "". فَإِذَا مَعَ رَجُلٍ صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُهُ، فَعُجِنَ ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بَيْعًا أَمْ عَطِيَّةً ـ أَوْ قَالَ ـ أَمْ هِبَةً "". قَالَ لاَ، بَلْ بَيْعٌ. فَاشْتَرَى مِنْهُ شَاةً، فَصُنِعَتْ وَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَوَادِ الْبَطْنِ أَنْ يُشْوَى، وَايْمُ اللَّهِ مَا فِي الثَّلاَثِينَ وَالْمِائَةِ إِلاَّ قَدْ حَزَّ النَّبِيُّ صلى الله عليه وسلم لَهُ حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا، إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهَا إِيَّاهُ، وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَ لَهُ، فَجَعَلَ مِنْهَا قَصْعَتَيْنِ، فَأَكَلُوا أَجْمَعُونَ، وَشَبِعْنَا، فَفَضَلَتِ الْقَصْعَتَانِ، فَحَمَلْنَاهُ عَلَى الْبَعِيرِ. أَوْ كَمَا قَالَ.
பாடம் : 28 இணைவைப்போரின் அன்ப ளிப்பை ஏற்றுக்கொள்வது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் புலம்பெயர்ந்து சென்றார்கள். அப்போது அரசன் ஒருவன் அல்லது சர்வாதிகாரி ஒருவன் இருந்த ஓர் ஊருக்கு அவர்கள் சென்றார்கள். அவன், ‘‘சாராவுக்கு ஆஜரை (அன்பளிப்பாக)க் கொடுங்கள்” என்று கட்டளையிட்டான். நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று (யூதர்களால்) அன்பளிப்பாகத் தரப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அய்லா’வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், (காப்புவரி கட்டுவதாக அரசர் எழுதியிருந்த கடிதத்திற்கு) அக்கடற்கரைவாசிகளைக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (பதில்) எழுதினார்கள்.25
2618. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நூற்று முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், ‘‘உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாஉ அளவு உணவுதான் இருந்தது. அது தண்ணீர் ஊற்றி குழைக்கப்பட்டது.

பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணை வைப்பாளரான மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘‘(இவை) விற்பனைக்கா? அன்பளிக்கவா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை. விற்பதற்காகத்தான் (கொண்டுவந்துள்ளேன்)” என்று பதிலளித் தார்.

அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்று முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி (ஸல்) அவர்கள் வெட்டித் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு (அப்போதே) அதைக் கொடுத்தார்கள்; அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள்.

இரு (அகன்ற) தட்டுகளில் அந்த இறைச்சிகளை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரு தட்டுகளும் அப்படியே மீதமாகிவிட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தில் ஏற்றிச் சென்றோம்.

அத்தியாயம் : 51
2619. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَى عُمَرُ حُلَّةً عَلَى رَجُلٍ تُبَاعُ فَقَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم ابْتَعْ هَذِهِ الْحُلَّةَ تَلْبَسْهَا يَوْمَ الْجُمُعَةِ وَإِذَا جَاءَكَ الْوَفْدُ. فَقَالَ "" إِنَّمَا يَلْبَسُ هَذَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ "". فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا بِحُلَلٍ فَأَرْسَلَ إِلَى عُمَرَ مِنْهَا بِحُلَّةٍ. فَقَالَ عُمَرُ كَيْفَ أَلْبَسُهَا وَقَدْ قُلْتَ فِيهَا مَا قُلْتَ قَالَ "" إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا، تَبِيعُهَا أَوْ تَكْسُوهَا "". فَأَرْسَلَ بِهَا عُمَرُ إِلَى أَخٍ لَهُ مِنْ أَهْلِ مَكَّةَ قَبْلَ أَنْ يُسْلِمَ.
பாடம் : 29 இணைவைப்பாளர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருப்ப வர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களிடம் நீங்கள் நீதியோடு நடந்து கொள்வதையும் உங்களுக்கு அல்லாஹ் தடை செய்யவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிக்கின்றான். (60:8)
2619. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதரின் (தோள்)மீது, விற்கப்படுகின்ற பட்டு அங்கியைக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இந்த அங்கியை வாங்கிக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை யன்றும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் அணிந்துகொள்வீர்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்” என்று கூறினார்கள்.

பிறகு (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அதே போன்ற) பட்டு அங்கிகள் கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து ஓர் அங்கியை உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘இது குறித்துத் தாங்கள் வேறுவிதமாகக் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவேன்?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக நான் தரவில்லை. இதை நீங்கள் விற்றுவிடுங்கள்; அல்லது வேறு எவருக்காவது அணிவித்து விடுங்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவாசிகளில் ஒருவரான தம் (பால்குடி) சகோதரருக்கு, அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு அனுப்பிவைத்துவிட்டார்கள்.


அத்தியாயம் : 51
2620. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ قَدِمَتْ عَلَىَّ أُمِّي وَهْىَ مُشْرِكَةٌ، فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ {إِنَّ أُمِّي قَدِمَتْ} وَهْىَ رَاغِبَةٌ، أَفَأَصِلُ أُمِّي قَالَ "" نَعَمْ صِلِي أُمَّكِ "".
பாடம் : 29 இணைவைப்பாளர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருப்ப வர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களிடம் நீங்கள் நீதியோடு நடந்து கொள்வதையும் உங்களுக்கு அல்லாஹ் தடை செய்யவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிக்கின்றான். (60:8)
2620. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் இணைவைப்பாளராக இருந்த என் தாயார் என்னிடம் வந்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘என் தாயார் (என்னைக் பார்க்க) என்னிடம் ஆசையோடு வந்துள் ளார். என் தாயுடன் உறவைப் பேணி நான் நடந்துகொள்ளலாமா?” என்று தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். நீ உன் தாயுடன் உறவைப் பேணி நடந்து கொள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 51
2621. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، وَشُعْبَةُ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ "".
பாடம் : 30 கொடுத்த அன்பளிப்பையும் தர்மத் தையும் திரும்பப் பெறுவது யாருக் கும் அனுமதிக்கப்பட்டதன்று.
2621. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.27

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 51
2622. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الَّذِي يَعُودُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِهِ "".
பாடம் : 30 கொடுத்த அன்பளிப்பையும் தர்மத் தையும் திரும்பப் பெறுவது யாருக் கும் அனுமதிக்கப்பட்டதன்று.
2622. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) கெட்ட உதாரணம் நமக்கு உரியதன்று.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 51
2623. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ مِنْهُ، وَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ عَنْ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تَشْتَرِهِ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ وَاحِدٍ، فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ "".
பாடம் : 30 கொடுத்த அன்பளிப்பையும் தர்மத் தையும் திரும்பப் பெறுவது யாருக் கும் அனுமதிக்கப்பட்டதன்று.
2623. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் அல்லாஹ்வின் பாதையில் (பயணம் செய்வதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) ஆனால், அதை வைத்திருந்த வர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். ஆகவே, அந்தக் குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும் பினேன். அவர் அதை மலிவான விலைக்குகூட விற்றுவிடுவார் என்று எண்ணினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.

அவர்கள், ‘‘நீங்கள் அதை விலைக்கு வாங்காதீர்கள்; அவர் உங்களுக்கு அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 51
2624. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ بَنِي صُهَيْبٍ، مَوْلَى ابْنِ جُدْعَانَ ادَّعَوْا بَيْتَيْنِ وَحُجْرَةً، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَى ذَلِكَ صُهَيْبًا، فَقَالَ مَرْوَانُ مَنْ يَشْهَدُ لَكُمَا عَلَى ذَلِكَ قَالُوا ابْنُ عُمَرَ. فَدَعَاهُ فَشَهِدَ لأَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صُهَيْبًا بَيْتَيْنِ وَحُجْرَةً. فَقَضَى مَرْوَانُ بِشَهَادَتِهِ لَهُمْ.
பாடம் : 31
2624. அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அப்துல்லாஹ்) இப்னு ஜுத்ஆன் என்பவரால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான சுஹைப் (ரலி) அவர்களு டைய மக்கள், தங்கள் தந்தையான சுஹைப் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆயுட்காலத்தில்) இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் (அன்பளிப்பாகக்) கொடுத்ததாகக் கூறினர்.

அப்போது (மதீனாவின் ஆட்சியரான) மர்வான் பின் அல்ஹகம் ‘‘(உங்கள் கூற்று உண்மையானது என்பதற்கு) உங்கள் இருவருக்கும் யார் சாட்சியம் சொல்வார்?” என்று கேட்டார். அவர்கள், ‘‘இப்னு உமர் அவர்கள் (எங்களுக்காகச் சாட்சியம் சொல்வார்கள்)” என்று கூறினர். உடனே மர்வான், இப்னு உமர் (ரலி) அவர்களைக் கூப்பிட்டனுப்பினார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைப் (ரலி) அவர்களுக்கு இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் கொடுத்தது உண்மைதான்” என்று சாட்சியம் அளித்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் சாட்சியத்தைக் கொண்டு சுஹைப் (ரலி) அவர்களின் மக்களுக்குச் சாதகமாக மர்வான் தீர்ப்பளித்தார்.

அத்தியாயம் : 51