2588. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ لَمَّا ثَقُلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاشْتَدَّ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ، تَخُطُّ رِجْلاَهُ الأَرْضَ، وَكَانَ بَيْنَ الْعَبَّاسِ، وَبَيْنَ رَجُلٍ آخَرَ. فَقَالَ عُبَيْدُ اللَّهِ فَذَكَرْتُ لاِبْنِ عَبَّاسٍ مَا قَالَتْ عَائِشَةُ، فَقَالَ لِي وَهَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ قُلْتُ لاَ. قَالَ هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ.
பாடம் : 14
கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அன்பளிப்பு வழங்குவது
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், ‘‘கணவனும் மனைவியும் ஒருவருக் கொருவர் அன்பளிப்பு வழங்குவது செல்லும்” என்று கூறினார்கள்.
‘‘கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ அன்பளிப்பு வழங்கினால், தமது அன்பளிப்பை அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடாது” என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது, ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்கி, சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பி, தம் மற்ற துணைவியரிடம் நபியவர்கள் அனுமதி கேட்டார்கள். (மற்ற துணைவியர் தம் நாட்களை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்புச் செய் தார்கள்.)
மேலும், ‘‘தான் கொடுத்த அன்பளிப் பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன், தான் கக்கிய வாந்தியைத் தானே தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருவர் தம் மனைவியிடம், ‘‘உனது மணக்கொடையில் (மஹ்ரில்) சிறிதளவை அல்லது உன் மணக்கொடை முழுவதையும் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடு” என்று கேட்டார். (அவளும் கொடுத்துவிட்டாள்.) சிறிது காலம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அவளை அவர் விவாகரத்துச் செய்துவிட்டார். எனவே, அவள் மஹ்ரைத் திருப்பிக் கேட்டாள். அவர் அவளை ஏமாற்றி (மோசடியாக மஹ்ரைப் பெற்று) இருந்தால், அவர் அவளிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அப்பெண் அவருக்கு அதை மனப்பூர்வமாகக் கொடுத்திருந்து, அதை அவளிடமிருந்து மோசடி எதுவும் செய்யாமல் அவளுடைய முழுச் சம்மதத்துடன் பெற்றிருந்தால் அவர் அதைத் திருப்பித் தராமல் தாமே வைத்துக்கொள்ளலாம்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை மனமுவந்து வழங்குங்கள். அதில் எதையேனும் அவர்கள் மனமு வந்து உங்களுக்கு விட்டுக்கொடுத்தால் அதை மனநிறைவுடனும் மகிழ்வுடனும் நீங்கள் உண்ணலாம். (4:4)
2588. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, என் வீட்டில் (தங்கி) சிகிச்சை பெறுவதற்குத் தம்முடைய (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள்; அவர்களும் அனுமதி அளித்துவிட்டனர். பின்னர் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், தம் இரு கால்களும் தரையில் இழுபட, இரு மனிதர்களுக்கிடையே தொங்கிய வண்ணம் புறப்பட்டார்கள். அப்போது, அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே (தொங்கிய படி) வந்தார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், ‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட அந்த (மற்றொரு) மனிதர் யாரென்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘தெரியாது” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘‘அவர்தான் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 50

2589. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ "".
பாடம் : 14
கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அன்பளிப்பு வழங்குவது
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், ‘‘கணவனும் மனைவியும் ஒருவருக் கொருவர் அன்பளிப்பு வழங்குவது செல்லும்” என்று கூறினார்கள்.
‘‘கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ அன்பளிப்பு வழங்கினால், தமது அன்பளிப்பை அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடாது” என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது, ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்கி, சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பி, தம் மற்ற துணைவியரிடம் நபியவர்கள் அனுமதி கேட்டார்கள். (மற்ற துணைவியர் தம் நாட்களை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்புச் செய் தார்கள்.)
மேலும், ‘‘தான் கொடுத்த அன்பளிப் பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன், தான் கக்கிய வாந்தியைத் தானே தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருவர் தம் மனைவியிடம், ‘‘உனது மணக்கொடையில் (மஹ்ரில்) சிறிதளவை அல்லது உன் மணக்கொடை முழுவதையும் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடு” என்று கேட்டார். (அவளும் கொடுத்துவிட்டாள்.) சிறிது காலம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அவளை அவர் விவாகரத்துச் செய்துவிட்டார். எனவே, அவள் மஹ்ரைத் திருப்பிக் கேட்டாள். அவர் அவளை ஏமாற்றி (மோசடியாக மஹ்ரைப் பெற்று) இருந்தால், அவர் அவளிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அப்பெண் அவருக்கு அதை மனப்பூர்வமாகக் கொடுத்திருந்து, அதை அவளிடமிருந்து மோசடி எதுவும் செய்யாமல் அவளுடைய முழுச் சம்மதத்துடன் பெற்றிருந்தால் அவர் அதைத் திருப்பித் தராமல் தாமே வைத்துக்கொள்ளலாம்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை மனமுவந்து வழங்குங்கள். அதில் எதையேனும் அவர்கள் மனமு வந்து உங்களுக்கு விட்டுக்கொடுத்தால் அதை மனநிறைவுடனும் மகிழ்வுடனும் நீங்கள் உண்ணலாம். (4:4)
2589. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், வாந்தியெடுத்த பிறகு அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.15
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2590. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَسْمَاءَ ـ رضى الله عنها ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لِي مَالٌ إِلاَّ مَا أَدْخَلَ عَلَىَّ الزُّبَيْرُ فَأَتَصَدَّقُ. قَالَ "" تَصَدَّقِي، وَلاَ تُوعِي فَيُوعَى عَلَيْكِ "".
பாடம் : 15
கணவன் இருக்கும்போது ஒரு பெண் கணவன் அல்லாதவருக்கு அன்பளிப்பு வழங்குவதும் தன் அடிமையை அவள் விடுதலை செய்வதும் செல்லும்; அவள் பேதையாக இல்லாமலிருந்தால். அவள் பேதை யாக இருந்தால் செல்லாது.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அல்லாஹ் உங்களு(டைய வாழ்க்கை)க்கு ஆதாரமாக அமைத்துள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர் களிடம் கொடுக்காதீர்கள். (4.:5)
2590. அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்ய லாமா?” என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘தர்மம் செய். (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உனக்கு (இறைவனின் கொடை வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்” என்று கூறினார்கள்.16

2591. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَنْفِقِي وَلاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ، وَلاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ "".
பாடம் : 15
கணவன் இருக்கும்போது ஒரு பெண் கணவன் அல்லாதவருக்கு அன்பளிப்பு வழங்குவதும் தன் அடிமையை அவள் விடுதலை செய்வதும் செல்லும்; அவள் பேதையாக இல்லாமலிருந்தால். அவள் பேதை யாக இருந்தால் செல்லாது.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அல்லாஹ் உங்களு(டைய வாழ்க்கை)க்கு ஆதாரமாக அமைத்துள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர் களிடம் கொடுக்காதீர்கள். (4.:5)
2591. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(தாராளமாக நல்வழியில்) செலவழிப்பாயாக; எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க் கொண்டிராதே. அல்லாஹ்வும் உனக்கு எண்ணி எண்ணியே தருவான். (பையில்) முடிந்துவைத்துக்கொள்ளாதே! அல்லாஹ் வும் உன் விஷயத்தில் (தன் அருளை) முடிந்து வைத்துக்கொள்வான்” என்று (என்னிடம்) கூறினார்கள்.

2592. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، عَنِ اللَّيْثِ، عَنْ يَزِيدَ، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ مَيْمُونَةَ بِنْتَ الْحَارِثِ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّهَا، أَعْتَقَتْ وَلِيدَةً وَلَمْ تَسْتَأْذِنِ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَلَمَّا كَانَ يَوْمُهَا الَّذِي يَدُورُ عَلَيْهَا فِيهِ قَالَتْ أَشَعَرْتَ يَا رَسُولَ اللَّهِ أَنِّي أَعْتَقْتُ وَلِيدَتِي قَالَ "" أَوَفَعَلْتِ "". قَالَتْ نَعَمْ. قَالَ "" أَمَا إِنَّكِ لَوْ أَعْطَيْتِيهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ "".
وَقَالَ بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَمْرٍو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ إِنَّ مَيْمُونَةَ أَعْتَقَتْ.
பாடம் : 15
கணவன் இருக்கும்போது ஒரு பெண் கணவன் அல்லாதவருக்கு அன்பளிப்பு வழங்குவதும் தன் அடிமையை அவள் விடுதலை செய்வதும் செல்லும்; அவள் பேதையாக இல்லாமலிருந்தால். அவள் பேதை யாக இருந்தால் செல்லாது.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அல்லாஹ் உங்களு(டைய வாழ்க்கை)க்கு ஆதாரமாக அமைத்துள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர் களிடம் கொடுக்காதீர்கள். (4.:5)
2592. அன்னை மைமூனா பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்க வில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, ‘‘அல்லாஹ் வின் தூதரே! என் அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர் களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ (விடுதலை) செய்து விட்டாயா?” என்று கேட்க, நான் ‘‘ஆம், (விடுதலை செய்துவிட்டேன்)” என்று கூறினேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்திருந் தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத் திருக்குமே” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2593. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، وَكَانَ يَقْسِمُ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ يَوْمَهَا وَلَيْلَتَهَا، غَيْرَ أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا، لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم تَبْتَغِي بِذَلِكَ رِضَا رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 15
கணவன் இருக்கும்போது ஒரு பெண் கணவன் அல்லாதவருக்கு அன்பளிப்பு வழங்குவதும் தன் அடிமையை அவள் விடுதலை செய்வதும் செல்லும்; அவள் பேதையாக இல்லாமலிருந்தால். அவள் பேதை யாக இருந்தால் செல்லாது.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அல்லாஹ் உங்களு(டைய வாழ்க்கை)க்கு ஆதாரமாக அமைத்துள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாதவர் களிடம் கொடுக்காதீர்கள். (4.:5)
2593. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால், தம் துணைவியரிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். யாரது பெயர் (குலுக்கலில்) வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு புறப்படுவார்கள்.
தம் துணைவியரில் ஒவ்வொருவருக்கும் அவரது பகலையும் இரவையும் பங்கிட்டு வந்தார்கள். ஆனால், சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தமது பகலையும் இரவையும் நபி (ஸல்) அவர்களின் (பிரியத்திற்குரிய) மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பைப் பெறுவதே அவரது நோக்கம்.

2594. وَقَالَ بَكْرٌ عَنْ عَمْرٍو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ إِنَّ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَعْتَقَتْ وَلِيدَةً لَهَا فَقَالَ لَهَا "" وَلَوْ وَصَلْتِ بَعْضَ أَخْوَالِكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ "".
பாடம் : 16
யாருக்கு முதலில் அன்பளிப்பு வழங்குவது?
2594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களின் முன்னாள் அடிமையான குரைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான மைமூனா (ரலி) அவர்கள் தம் அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம், ‘‘(இந்த அடிமைப் பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து,) உன் தாய்மாமன்கள் சிலரது உறவைப் பேணியிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்” என்று கூறினார்கள்.

2595. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ ـ رَجُلٍ مِنْ بَنِي تَيْمِ بْنِ مُرَّةَ ـ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي قَالَ "" إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا "".
பாடம் : 16
யாருக்கு முதலில் அன்பளிப்பு வழங்குவது?
2595. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?” என்று கேட்டேன். ‘‘அவ்விருவரில் எவரது வாசல் உன் வீட்டு வாசலுக்கு அருகிலுள்ளதோ அவருக்கு அன்பளிப்பு வழங்கு” என்று கூறி னார்கள்.

2596. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ اللَّيْثِيَّ،، وَكَانَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُخْبِرُ أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِمَارَ وَحْشٍ وَهْوَ بِالأَبْوَاءِ ـ أَوْ بِوَدَّانَ ـ وَهْوَ مُحْرِمٌ فَرَدَّهُ، قَالَ صَعْبٌ فَلَمَّا عَرَفَ فِي وَجْهِي رَدَّهُ هَدِيَّتِي قَالَ "" لَيْسَ بِنَا رَدٌّ عَلَيْكَ، وَلَكِنَّا حُرُمٌ "".
பாடம் : 17
தகுந்த காரணத்துக்காக அன்ப ளிப்பை ஏற்காமலிருப்பது
‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் அன்பளிப்பு அன்பளிப் பாக இருந்தது; இன்று அது இலஞ்சமாக மாறிவிட்டது” என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
2596. நபித்தோழர் ஸஅப் பின் ஜஸ் ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அப்வா’ என்னும் இடத்தில் அல்லது யிவத்தான்’ என்னும் இடத்தில் இருந்தபோது, ஒரு காட்டுக் கழுதையை அவர்களுக்கு நான் அன்பளிப்பாக வழங்கினேன். (அது நான் வேட்டையாடியதாகும்.) அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள். அதனால், அதை ஏற்க மறுத்துவிட் டார்கள்.
அவர்கள் என் அன்பளிப்பை ஏற்க மறுத்துவிட்டதால் என் முகத்தில் தோன் றிய கவலையைக் கண்டபோது, ‘‘நாமாக உமது அன்பளிப்பை மறுக்கவில்லை; மாறாக, நாம் யிஇஹ்ராம்’ கட்டியுள்ளோம்” என்று கூறினார்கள்.

2597. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً مِنَ الأَزْدِ يُقَالُ لَهُ ابْنُ اللُّتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ، وَهَذَا أُهْدِيَ لِي. قَالَ "" فَهَلاَّ جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ، فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لاَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلاَّ جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ، إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ـ ثُمَّ رَفَعَ بِيَدِهِ، حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ ـ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلاَثًا "".
பாடம் : 17
தகுந்த காரணத்துக்காக அன்ப ளிப்பை ஏற்காமலிருப்பது
‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் அன்பளிப்பு அன்பளிப் பாக இருந்தது; இன்று அது இலஞ்சமாக மாறிவிட்டது” என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
2597. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை ஸகாத் வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் யிஇப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப் பட்டுவந்தார். அவர் (ஸகாத் வசூலித் துக்கொண்டு) வந்தபோது, ‘‘இது உங்களுக் குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா, இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் (அதில்) ஒன்றை (முறைகேடாக)ப் பெற்றிருந்தால், அதை அவர் தமது பிடரியில் சுமந்துகொண்டு மறுமை நாளன்று வருவார்.
அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்” என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் அக் குள்களின் வெண்மையை நாங்கள் பார்க் கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, ‘‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.

2598. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَعْطَيْتُكَ هَكَذَا ثَلاَثًا "". فَلَمْ يَقْدَمْ حَتَّى تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَأَمَرَ أَبُو بَكْرٍ مُنَادِيًا فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا. فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَعَدَنِي. فَحَثَى لِي ثَلاَثًا.
பாடம் : 18
ஒருவர் அன்பளிப்பு வழங்கினார்; அல்லது ஒரு வாக்கு அளித்தார்; உரியவருக்கு அது வந்து சேர்வதற்குமுன்பே (இருவரில் ஒருவர்) இறந்துவிட்டால்...
அபீதா பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(வாக்களித்தவர், வாக்களிக்கப்பட்டவர்) இருவருமே இறந்துவிட்டால், அன்பளிப்புப் பெறுபவர் உயிரோடு இருந்தபோதே அன்பளிப்புப் பொருள் தனியாக எடுத்துவைக்கப்பட்டிருந்தால், அது அன்பளிப்புப் பெறுபவருடைய வாரிசுகளுக்குரியதாகும். அன்பளிப்புப் பெறுபவர் உயிரோடு இருந்தபோது அன்பளிப்புப் பொருள் (அவருக்கென்று) தனியாக எடுத்துவைக்கப்படவில்லை யென்றால் அது அன்பளிப்புச் செய்தவரின் வாரிசுகளுக்குரியதாகும்.
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘இருவரில் யார் முதலில் இறந்தாலும் அன்பளிப்புப் பெறுபவரின் தூதர் அன்பளிப்பைக் கைப்பற்றியிருந்தால், அது அன்பளிப்புப் பெற்றவரின் வாரிசு களுக்கே உரியதாகும்.
2598. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘பஹ்ரைனின் நிதி வந்துவிட்டால் உனக்கு இவ்வளவு (இவ்வளவு) தருவேன்” என்று மூன்று முறை கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அந்த நிதி வந்து சேரவில்லை.
பிறகு (ஆட்சித் தலைவரான) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாக்களித்திருந்தால், அல்லது எவருக்காவது அவர்கள் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்” என்று (பொது) அறிவிப்புச் செய்யும்படி பொதுஅறிவிப்பாளருக்குக் கட்டளையிட, அவர் அவ்வாறே அறிவித்தார்.
ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘எனக்கு (பஹ்ரைனின் நிதியிலிருந்து) தருவதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். இதைக் கேட்ட அவர்கள், எனக்கு (நிதியை) மூன்று முறை கைகளால் அள்ளிக் கொடுத்தார்கள்.

2599. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ـ رضى الله عنهما ـ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَقْبِيَةً، وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ مِنْهَا شَيْئًا، فَقَالَ مَخْرَمَةُ يَا بُنَىَّ انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَانْطَلَقْتُ مَعَهُ، فَقَالَ ادْخُلْ فَادْعُهُ لِي. قَالَ فَدَعَوْتُهُ لَهُ فَخَرَجَ إِلَيْهِ، وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا، فَقَالَ "" خَبَأْنَا هَذَا لَكَ "". قَالَ فَنَظَرَ إِلَيْهِ، فَقَالَ رَضِيَ مَخْرَمَةُ.
பாடம் : 19
(அன்பளிப்பு) அடிமையையும் பொருளையும் கைப்பற்றல் எப்படி?17
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்:
நான் ஒரு முரட்டு இளம் ஒட்டகத்தின் மீது (பயணித்துக்கொண்டு) இருந்தேன்; அதை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள்.
பின்னர், ‘‘அப்துல்லாஹ்வே! இது உனக்கு (அன்பளிப்பு)” என்று நபியவர்கள் கூறினார்கள்.18
2599. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள்; ஆனால், என் தந்தை (மக்ரமாவு)க்கு ஒன்றும் கொடுக்கவில்லை. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், ‘‘என் அன்பு மகனே! என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வா!” என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சென்றேன். என் தந்தை, ‘‘நீ போய், எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு” என்று கூற, நான் நபி (ஸல்) அவர்களை என் தந்தைக்காக அழைத்தேன்; நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்.
அவர்கள்மீது அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அவர்கள், ‘‘நாம் உமக்காக இதை (யாருக்கும் தராமல்) எடுத்து வைத்திருந்தோம்” என்று கூறினார்கள். என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, ‘யிமக்ரமா திருப்தியடைந் தான்” என்று கூறினார்கள்.

2600. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكْتُ. فَقَالَ "" وَمَا ذَاكَ "". قَالَ وَقَعْتُ بِأَهْلِي فِي رَمَضَانَ. قَالَ "" تَجِدُ رَقَبَةً "". قَالَ لاَ. قَالَ "" فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ "". قَالَ لاَ. قَالَ "" فَتَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا "". قَالَ لاَ. قَالَ فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ بِعَرَقٍ ـ وَالْعَرَقُ الْمِكْتَلُ ـ فِيهِ تَمْرٌ فَقَالَ "" اذْهَبْ بِهَذَا فَتَصَدَّقْ بِهِ "". قَالَ عَلَى أَحْوَجَ مِنَّا يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا. قَالَ "" اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ "".
பாடம் : 20
ஒருவர் அன்பளிப்பு வழங்க, மற்றவர் அதைப் பெற்றுக்கொண்டார்; ஆனால், (அன்பளிப்பை) ஏற்றேன் என்று அவர் கூறாவிட்டால்...
2600. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘நான் அழிந்து விட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர் ‘‘நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டேன்” என்றார்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம் (விடுதலை செய்ய) அடிமை எவரும் உண்டா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘இல்லை” என்று கூறினார். ‘‘இரு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க உன்னால் முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவர், ‘‘முடியாது” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவர், ‘‘முடியாது” என்று பதிலளித்தார்.
அப்போது அன்சாரி ஒருவர், ‘அரக்’ ஒன்றைக் கொண்டுவந்தார். ‘அரக்’ என்பது பேரீச்சம்பழக் கூடையாகும். நபி (ஸல்) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், ‘‘இதை எடுத்துச் சென்று தர்மம் செய்துவிடு” என்று கூறினார்கள்.
அதற்கு அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களைவிட அதிகத் தேவை உடையவர்களுக்கா நான் இதைத் தர்மம் செய்ய வேண்டும்! உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்த (இறை)வனின் மீதாணையாக! மதீனாவின் இரு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுடைய வீட்டார் யாரு மில்லை” என்று கூறினார்; அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘போ! (போய்) உன் வீட்டாருக்கே இதை உண்ணக் கொடு” என்று கூறினார்கள்.

2601. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَلَّمْتُهُ، فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا ثَمَرَ حَائِطِي، وَيُحَلِّلُوا أَبِي، فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَائِطِي، وَلَمْ يَكْسِرْهُ لَهُمْ، وَلَكِنْ قَالَ "" سَأَغْدُو عَلَيْكَ "". فَغَدَا عَلَيْنَا حَتَّى أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ، وَدَعَا فِي ثَمَرِهِ بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا، فَقَضَيْتُهُمْ حُقُوقَهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ ثَمَرِهَا بَقِيَّةٌ، ثُمَّ جِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ جَالِسٌ، فَأَخْبَرْتُهُ بِذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِعُمَرَ "" اسْمَعْ ـ وَهْوَ جَالِسٌ ـ يَا عُمَرُ "". فَقَالَ أَلاَّ يَكُونُ قَدْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ، وَاللَّهِ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ.
பாடம் : 21
ஒருவர் தர வேண்டிய கடனை அன்பளிப்பாக வழங்குவது
யிஇதற்கு அனுமதியுண்டு’ என ஹகம் பின் (உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் தமக்கு ஒரு மனிதர் தர வேண்டிய கடனை அன்பளிப்புச் செய்தார்கள்.
‘‘யார்மீது ஒரு கடன் இருக்கிறதோ, அதை அவர் கொடுத்துவிடட்டும்! அல்லது உரியவரிடம் (மன்னிப்புக் கேட்டு) விமோசனம் பெறட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை தம்மீது கடன் உள்ள நிலையில் கொல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக்கொள்ளும்படியும் (மீதியிருந்த கடனைத் தள்ளுபடி செய்து) என் தந்தைக்கு (மன்னிப்பு வழங்கி) விமோசனம் அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.
2601. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை உஹுத் போரின்போது தியாகியாகக் கொல்லப்பட்டார்கள். கடன் காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமையாக நடந்துகொண்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது பற்றிப்) பேசினேன். என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொண்டு, (மீதியுள்ள கடனை மன்னித்து) விமோசனம் அளிக்கும்படி நபியவர் கள் கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால், அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோட்டத்தை அவர்களிடம் கொடுக்கவுமில்லை; கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, ‘‘நான் உன்னிடம் நாளை வருவேன்” என்று கூறினார்கள். அவ்வாறே, (அடுத்த நாள்) காலையில் எங்களிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களுக்கிடையே சுற்றி வந்து, அதன் கனிகளில் வளம் உண்டாகப் பிரார்த்தித்தார்கள்.
நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர் களின் உரிமைகளை நிறைவேற்றினேன். அதன் பழங்களில் சிறிதளவு எங்களுக்கு எஞ்சியது.
பிறகு, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபொழுது அவர்களிடம் வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு அமர்ந்திருந்த உமர் (ரலி) அவர்களிடம், ‘‘உமரே! கேளுங்கள்” என்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறினார்கள்.

2602. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ فَقَالَ لِلْغُلاَمِ "" إِنْ أَذِنْتَ لِي أَعْطَيْتُ هَؤُلاَءِ "". فَقَالَ مَا كُنْتُ لأُوثِرَ بِنَصِيبِي مِنْكَ يَا رَسُولَ اللَّهِ أَحَدًا. فَتَلَّهُ فِي يَدِهِ.
பாடம் : 22
ஒருவர் பலருக்குச் செய்யும் அன்பளிப்பு
அஸ்மா (ரலி) அவர்கள், காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களையும்19 அப்துல்லாஹ் பின் அபீஅத்தீக் (ரஹ்)20 அவர்களையும் பார்த்து, ‘‘நான் என் சகோதரி ஆயிஷாவிடமிருந்து யிஃகாபா’வி லிருந்த21 ஒரு சொத்தை வாரிசாகப் பெற்றேன். அதற்குப் பகரமாக முஆவியா (ரலி) அவர்கள் எனக்கு ஒரு லட்சம் கொடுத்திருந்தார்கள். அதை உங்கள் இருவருக்கும் என் அன்பளிப்பாகக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறி னார்கள்.
2602. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் இடப் பக்கத்தில் முதியவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (இந்த முதியவர்களுக்கு) இதைக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறினார்கள்.
அந்தச் சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக்கூடிய) என் பங்கை வேறெவருக்காகவும் விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி) பானத்தை வைத்தார்கள்.

2603. حَدَّثَنَا ثَابِتٌ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ مُحَارِبٍ عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَقَضَانِي وَزَادَنِي
பாடம் : 23
கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும்
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2603. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலில் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந் தார்கள்.

2604. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ بِعْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَعِيرًا فِي سَفَرٍ، فَلَمَّا أَتَيْنَا الْمَدِينَةَ قَالَ "" ائْتِ الْمَسْجِدَ فَصَلِّ رَكْعَتَيْنِ "". فَوَزَنَ ـ قَالَ شُعْبَةُ أُرَاهُ فَوَزَنَ لِي فَأَرْجَحَ، فَمَا زَالَ مِنْهَا شَىْءٌ حَتَّى أَصَابَهَا أَهْلُ الشَّأْمِ يَوْمَ الْحَرَّةِ.
பாடம் : 23
கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும்
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2604. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிர யாணத்தில் ஒட்டகம் ஒன்றை நான் விற்றேன். மதீனாவிற்கு நான் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழு” என்று கூறினார்கள். பிறகு நிறுத்(துத் தந்)தார்கள்; சிறிது அதிகமாகவும் தந்தார்கள். ஷாம் (சிரியா)வாசிகள் ‘அல்ஹர்ரா’ நாளில் அதை எடுத்துக்கொள்ளும்வரை அதிலி ருந்து சிறிதளவு எப்போதும் என்னிடம் இருந்துவந்தது.22

2605. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ أَشْيَاخٌ، فَقَالَ لِلْغُلاَمِ "" أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ "". فَقَالَ الْغُلاَمُ لاَ، وَاللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا. فَتَلَّهُ فِي يَدِهِ.
பாடம் : 23
கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும்
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2605. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது; அப்போது அவர்களின் வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் அவர்களின் இடப் பக்கத்தில் முதியவர்கள் சிலரும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சிறுவரை நோக்கி, ‘‘இவர்களுக்கு (இந்தப் பாலைக்) கொடுப்பதற்கு எனக்கு அனுமதி தரு கிறாயா?” என்று கேட்டார்கள்.
அச்சிறுவர், ‘‘மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக்கூடிய (நற்)பேற்றை வேறெ வருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்தப் பானத்தைச் சிறுவரின் கையிலேயே வைத்தார்கள்.

2606. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ جَبَلَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم دَيْنٌ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ "" دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً. وَقَالَ اشْتَرُوا لَهُ سِنًّا فَأَعْطُوهَا إِيَّاهُ "". فَقَالُوا إِنَّا لاَ نَجِدُ سِنًّا إِلاَّ سِنًّا هِيَ أَفْضَلُ مِنْ سِنِّهِ. قَالَ "" فَاشْتَرُوهَا فَأَعْطُوهَا إِيَّاهُ، فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً "".
பாடம் : 23
கைவசம் பெற்றுக்கொள்ளப்பட்ட அன்பளிப்பும், பெற்றுக்கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும்
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் யிஹவாஸின்’ குலத்தாருக்கு, அவர்களிடமிருந்து போர்ச் செல்வங்களாக தாங்கள் பெற்றவற்றை அவை பங்கிடப் படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்துவிட்டார்கள்.
2606. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (அவர் நபி (ஸல்) அவர்களிடம் கடுமையாகப் பேசியதால்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்த மனிதரைத் தண்டிக்க முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு” என்று கூறிவிட்டு, ‘‘அவருக்கு (நான் தரவேண்டிய ஒட்டகத்தின்) சம வயதுடைய ஒட்டகத்தை வாங்கி, அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், ‘‘தாங்கள் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் யார் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள்.

2607. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ لَهُمْ "" مَعِي مَنْ تَرَوْنَ، وَأَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا السَّبْىَ وَإِمَّا الْمَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ "". وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم انْتَظَرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلاَّ إِحْدَى الطَّائِفَتَيْنِ قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا. فَقَامَ فِي الْمُسْلِمِينَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلاَءِ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ "". فَقَالَ النَّاسُ طَيَّبْنَا يَا رَسُولَ اللَّهِ لَهُمْ. فَقَالَ لَهُمْ "" إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِيهِ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعَ إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ "". فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّهُمْ طَيَّبُوا وَأَذِنُوا. وَهَذَا الَّذِي بَلَغَنَا مِنْ سَبْىِ هَوَازِنَ هَذَا آخِرُ قَوْلِ الزُّهْرِيِّ، يَعْنِي فَهَذَا الَّذِي بَلَغَنَا.
பாடம் : 24
பலர் பலருக்கு அன்பளிப்புச் செய்தல்
2607. மர்வான் பின் அல் ஹகம், மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகி யோர் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் யிஹவாஸின்’ தூதுக்குழுவினர் முஸ்லிம்களாக வந்த போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் செல்வங்களையும் போர்க்கைதி களையும் தங்களிடம் திருப்பித் தந்துவிடும் படி கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமான தாகும். (உங்கள்) போர்க் கைதிகள், அல்லது (உங்கள்) செல்வம் ஆகிய இரண் டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத் துக்கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர் பார்த்துக் காத்திருந்தேன்” என்று கூறி னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தி லிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட இரவுகள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்கள், அல்லது போர்க் கைதிகள் ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக் குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் எங்கள் போர்க்கைதிகளையே திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களி டையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள்.
பிறகு, ‘‘இறைவாழ்த்துக்குப்பின்! (முஸ்லிம்களே!) உங்களுடைய இந்தச் சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய போர்க் கைதிகளைத் திரும்பக் கொடுத்துவிடலாமென நான் கருதுகிறேன். உங்களில் எவர் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். (போர்க் கைதிகளை விடுதலை செய்யட்டும்.) எவர் நமக்கு (இனி) அல்லாஹ் முதன் முதலாக வழங்கவிருக்கும் செல்வத் திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்ற வரை தமது பங்கைத் தாமே வைத்துக் கொள்ள விரும்புகின்றாரோ, அவர் அவ்வாறே செய்யட்டும்; (அதுவரை தம்மிடமே வைத்துக்கொள்ளட்டும்)” என்று கூறினார்கள்.
மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மனப்பூர்வமாக அவர்களிடம் (அவர்களுடைய உறவினர்களான போர்க் கைதிகளைத் திருப்பித்) தந்துவிடுகிறோம்” என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவர் சம்மதிக்கிறார்; எவர் சம்மதிக்கவில்லை என்பது எமக்குத் தெரியாது. ஆகையால், நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் தலைவர்கள் வந்து (உங்கள் முடிவை) நம்மிடம் தெரிவிக்கட் டும்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (தலைவர்கள்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, போர்க் கைதிகளைத் திருப்பித் தர மனப்பூர்வமாகச் சம்மதிப்ப தாகத் தெரிவித்தார்கள்.