2470. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، حَدَّثَنَا أَبُو الْمُتَوَكِّلِ النَّاجِيُّ، قَالَ أَتَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسْجِدَ، فَدَخَلْتُ إِلَيْهِ، وَعَقَلْتُ الْجَمَلَ فِي نَاحِيَةِ الْبَلاَطِ فَقُلْتُ هَذَا جَمَلُكَ. فَخَرَجَ فَجَعَلَ يُطِيفُ بِالْجَمَلِ قَالَ "" الثَّمَنُ وَالْجَمَلُ لَكَ "".
பாடம் : 26 ஒருவர் தமது ஒட்டகத்தைப் பள்ளி வாசலின் முற்றத்தில்17 அல்லது பள்ளிவாசலின் வாயில் அருகே கட்டிவைப்பது
2470. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் நுழைந்தார்கள். நானும் அவர்களைச் சந்திக்கப் பள்ளிவாசலில் நுழைந்தேன். ஒட்டகத்தை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலின் முன்பு, கற்கள் பதிக்கப்பட்டிருந்த நடைபாதையில் கட்டிவைத்தேன். (நபியவர்களிடம் சென்று), ‘‘இதோ, தங்கள் ஒட்டகம்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினார்கள். ‘‘ஒட்டகமும் (அதன்) விலையும் உனக்கே” என்று கூறினார்கள்.18

அத்தியாயம் : 46
2471. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، أَوْ قَالَ لَقَدْ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا.
பாடம் : 27 ஒரு சமுதாயத்தாரின் குப்பை மேட்டிற்கு அருகே நிற்பதும் (அங்கு) சிறுநீர் கழிப்பதும்
2471. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு குலத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து, (அங்கு) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள்.

‘‘அல்லது ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்... சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன்’ என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று அறிவிப் பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 46
2472. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ فَأَخَذَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ "".
பாடம் : 28 பாதையில் மக்களுக்குத் தொல்லை தரும் மரக்கிளை போன்ற பொருள் களை எடுத்து எறிந்துவிடுதல்
2472. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 46
2473. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ خِرِّيتٍ، عَنْ عِكْرِمَةَ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا تَشَاجَرُوا فِي الطَّرِيقِ بِسَبْعَةِ أَذْرُعٍ.
பாடம் : 29 விசாலமான பொதுப்பாதைக்கு எவ்வளவு இடம் வேண்டும் என்பது தொடர்பாகச் சர்ச்சை இருக்கும் போது நிலத்தின் உரிமையாளர்கள் கட்டடம் கட்ட விரும்பினால், பாதைக்காக ஏழு முழம் இடம் ஒதுக்க வேண்டும்.
2473. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பொதுப்பாதை தொடர்பாக மக்களி டையே சர்ச்சை எழுந்தபோது, ஏழு முழங் கள் இடம் (பாதைக்காக) ஒதுக்க வேண்டு மென்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித் தார்கள்.19

அத்தியாயம் : 46
2474. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الأَنْصَارِيّ َ ـ وَهُوَ جَدُّهُ أَبُو أُمِّهِ ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ النُّهْبَى وَالْمُثْلَةِ.
பாடம் : 30 ஒருவரின் உடைமையை அவரது அனுமதியின்றி அபகரித்துக் கொள்வது ‘‘நங்கள் நபி (ஸல்) அவர்களிடம், பிறர் பொருளை அபகரிக்கமாட்டோம் என்று உறுதி மொழியளித்தோம்” என உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
2474. அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கொள்ளையடிப்பதற்கும் சித்திரவதை செய்வதற்கும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.


அத்தியாயம் : 46
2475. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنَا عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهْوَ مُؤْمِنٌ "". وَعَنْ سَعِيدٍ وَأَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ إِلاَّ النُّهْبَةَ.
பாடம் : 30 ஒருவரின் உடைமையை அவரது அனுமதியின்றி அபகரித்துக் கொள்வது ‘‘நங்கள் நபி (ஸல்) அவர்களிடம், பிறர் பொருளை அபகரிக்கமாட்டோம் என்று உறுதி மொழியளித்தோம்” என உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
2475. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு அதைச் செய்யமாட்டான். (மது அருந்து பவன் மது அருந்தும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான்.

(மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொள்ளையடிக்கமாட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு அறிவிப்புகளில் கொள்ளையடிப்பது தொடர்பான குறிப்பு இல்லை.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின் றேன்:

இவற்றைச் செய்யும்போது இறை நம்பிக்கை(யின் ஒளி) அவனிடமிருந்து அகற்றப்படுகிறது.

அத்தியாயம் : 46
2476. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ "".
பாடம் : 31 சிலுவையை உடைப்பதும் பன்றியைக் கொல்வதும்
2476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்யமின் குமாரர் (ஈசா) அவர்கள் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள். அவர்கள் வந்தவுடன் சிலுவையை உடைப்பார்கள்; பன்றியைக் கொல்வார்கள்; யிஜிஸ்யா’ (எனும் காப்பு) வரியை (ஏற்க) மறுப்பார்கள்; எவரும் பெற்றுக்கொள்ள முன்வராத அளவுக்குச் செல்வம் பெருகி வழியும். இவையெல்லாம் நடக்காத வரை உலக முடிவு (மறுமை) நாள் வராது.

அத்தியாயம் : 46
2477. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نِيرَانًا تُوقَدُ يَوْمَ خَيْبَرَ. قَالَ "" عَلَى مَا تُوقَدُ هَذِهِ النِّيرَانُ "". قَالُوا عَلَى الْحُمُرِ الإِنْسِيَّةِ. قَالَ "" اكْسِرُوهَا، وَأَهْرِقُوهَا "". قَالُوا أَلاَ نُهْرِيقُهَا وَنَغْسِلُهَا قَالَ "" اغْسِلُوا "". قَالَ أَبُو عَبْد اللَّهِ كَانَ ابْنُ أَبِي أُوَيْسٍ يَقُولُ الْحُمُرِ الْأَنْسِيَّةِ بِنَصْبِ الْأَلِفِ وَالنُّونِ
பாடம் : 32 மது உள்ள பானைகளை உடைக்கலாமா? (மது உள்ள) தோல் பைகளைக் கிழிக்கலாமா? சிலை, அல்லது சிலுவை, அல்லது தம்பூரா வாத்தியக் கருவி, அல்லது எதன் பலகையால் பயனில்லையோ அதை ஒருவர் உடைத்துவிட்டால்... (நஷ்ட ஈடு தர வேண்டுமா?) (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம் உடைக்கப்பட்ட ஒரு தம்பூரா வாத்தியக் கருவி (குறித்த வழக்கு) கொண்டுவரப் பட்டது. அதில் யிஉடைத்தவர் நஷ்ட ஈடு ஏதும் வழங்க வேண்டும்’ என்று அன்னார் தீர்ப்பளிக்கவில்லை.20
2477. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கைபர் போரின்போது நெருப்பு ஒன்று மூட்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது ‘‘எதற்காக இந்த நெருப்பு மூட்டப்படுகின்றது?” என்று கேட்டார்கள். ‘‘நாட்டுக் கழுதை இறைச்சியைச் சமைப்ப தற்காக” என்று மக்கள் பதிலளித்தார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘பானைகளை உடைத்து அவற்றிலுள்ள (இறைச்சி, உணவு ஆகிய)வற்றைக் கொட்டிவிடுங்கள்” என்று உத்தரவிட் டார்கள். மக்கள், ‘‘இறைச்சிகளைக் கொட்டி விட்டு, பாத்திரங்களைக் கழுவிக்கொள்ள லாமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அவ்வாறே) கழுவிக்கொள் ளுங்கள்” என்று கூறினார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(என் ஆசிரியர்) இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்கள், (யிநாட்டுக் கழுதை’ என்பதைக் குறிக்க ‘அல்ஹுமுருல் இன்சிய்யா’ என்பதற்குப் பதிலாக) ‘அல் ஹுமுருல் அனசிய்யா’ என்று குறிப் பிடுவார்கள். (பொருள் ஒன்றே; யிகாட்டுக் கழுதை’க்கு எதிர்ச்சொல்.)


அத்தியாயம் : 46
2478. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، وَحَوْلَ الْكَعْبَةِ ثَلاَثُمِائَةٍ وَسِتُّونَ نُصُبًا فَجَعَلَ يَطْعَنُهَا بِعُودٍ فِي يَدِهِ وَجَعَلَ يَقُولُ {جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ} الآيَةَ.
பாடம் : 32 மது உள்ள பானைகளை உடைக்கலாமா? (மது உள்ள) தோல் பைகளைக் கிழிக்கலாமா? சிலை, அல்லது சிலுவை, அல்லது தம்பூரா வாத்தியக் கருவி, அல்லது எதன் பலகையால் பயனில்லையோ அதை ஒருவர் உடைத்துவிட்டால்... (நஷ்ட ஈடு தர வேண்டுமா?) (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம் உடைக்கப்பட்ட ஒரு தம்பூரா வாத்தியக் கருவி (குறித்த வழக்கு) கொண்டுவரப் பட்டது. அதில் யிஉடைத்தவர் நஷ்ட ஈடு ஏதும் வழங்க வேண்டும்’ என்று அன்னார் தீர்ப்பளிக்கவில்லை.20
2478. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தமது கையிலிருந்த குச்சியால் அவற்றை குத்தி (அடிக்கத் தொடங்கி)னார்கள். ‘‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது” (குர்ஆன்லி17: 81) எனும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.21


அத்தியாயம் : 46
2479. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتِ اتَّخَذَتْ عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ، فَهَتَكَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَاتَّخَذَتْ مِنْهُ نُمْرُقَتَيْنِ، فَكَانَتَا فِي الْبَيْتِ يَجْلِسُ عَلَيْهِمَا.
பாடம் : 32 மது உள்ள பானைகளை உடைக்கலாமா? (மது உள்ள) தோல் பைகளைக் கிழிக்கலாமா? சிலை, அல்லது சிலுவை, அல்லது தம்பூரா வாத்தியக் கருவி, அல்லது எதன் பலகையால் பயனில்லையோ அதை ஒருவர் உடைத்துவிட்டால்... (நஷ்ட ஈடு தர வேண்டுமா?) (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம் உடைக்கப்பட்ட ஒரு தம்பூரா வாத்தியக் கருவி (குறித்த வழக்கு) கொண்டுவரப் பட்டது. அதில் யிஉடைத்தவர் நஷ்ட ஈடு ஏதும் வழங்க வேண்டும்’ என்று அன்னார் தீர்ப்பளிக்கவில்லை.20
2479. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் எனது அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (உயிரினங்களின்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்கவிட்டிருந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கிழித்து விட்டார்கள். ஆகவே, அதிலிருந்து நான் இரு திண்டுகளைச் செய்துகொண்டேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள்.

அத்தியாயம் : 46
2480. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ ـ هُوَ ابْنُ أَبِي أَيُّوبَ ـ قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ "".
பாடம் : 33 தமது செல்வத்தைக் காப்பதற்காக ஒருவர் போராடுதல்
2480. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் (இறை வழியில்) உயிர்த் தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 46
2481. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ، فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ مَعَ خَادِمٍ بِقَصْعَةٍ فِيهَا طَعَامٌ فَضَرَبَتْ بِيَدِهَا، فَكَسَرَتِ الْقَصْعَةَ، فَضَمَّهَا، وَجَعَلَ فِيهَا الطَّعَامَ وَقَالَ "" كُلُوا "". وَحَبَسَ الرَّسُولَ وَالْقَصْعَةَ حَتَّى فَرَغُوا، فَدَفَعَ الْقَصْعَةَ الصَّحِيحَةَ وَحَبَسَ الْمَكْسُورَةَ. وَقَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 34 அடுத்தவரின் உணவுத் தட்டு உள்ளிட்ட பொருட்களை உடைத்து விட்டால் (நஷ்ட ஈடு தர வேண் டுமா?)
2481. அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) இருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அவர் (ஆயிஷா) அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி தட்டை உடைத்துவிட்டார்.

நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்), ‘‘உண்ணுங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும்வரை தட்டையும் அதைக் கொண்டுவந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்தி வைத்தார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக்கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து (அனுப்பி) விட்டார்கள்.22

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 46
2482. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَانَ رَجُلٌ فِي بَنِي إِسْرَائِيلَ، يُقَالُ لَهُ جُرَيْجٌ، يُصَلِّي، فَجَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ، فَأَبَى أَنْ يُجِيبَهَا، فَقَالَ أُجِيبُهَا أَوْ أُصَلِّي ثُمَّ أَتَتْهُ، فَقَالَتِ اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ الْمُومِسَاتِ. وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ، فَقَالَتِ امْرَأَةٌ لأَفْتِنَنَّ جُرَيْجًا. فَتَعَرَّضَتْ لَهُ فَكَلَّمَتْهُ فَأَبَى، فَأَتَتْ رَاعِيًا، فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلاَمًا، فَقَالَتْ هُوَ مِنْ جُرَيْجٍ. فَأَتَوْهُ، وَكَسَرُوا صَوْمَعَتَهُ فَأَنْزَلُوهُ وَسَبُّوهُ، فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الْغُلاَمَ، فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلاَمُ قَالَ الرَّاعِي. قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ. قَالَ لاَ إِلاَّ مِنْ طِينٍ ".
பாடம் : 35 அடுத்தவரின் சுவரை இடித்து விட்டால் அதைப் போன்று கட்டித் தர வேண்டும்.
2482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த யிஜுரைஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு மனிதர் (தமது ஆசிரமத்தில்) தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்குப் பதிலளிக்க மறுத்துவிட்ட ஜுரைஜ், ‘‘நான் தாய்க்குப் பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?” என்று (மனத்திற்குள்) கூறிக்கொண்டார். பிறகு (மீண்டும்) அவருடைய தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்கவில்லையே என்ற கோபத்தில்), ‘‘இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக் கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரை ஜுக்கு) மரணத்தைத் தராதே” என்று கூறினார்.

(ஒருநாள்) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், ‘‘நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்கு வேன்” என்று சொல்லிக்கொண்டு, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள) அழைத்தாள். அவர் மறுத்துவிட்டார்.

ஆகவே, அவள் ஓர் இடையனிடம் சென்று, அவனுக்குத் தன்னைக் கொடுத் தாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, ‘‘இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்” என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்து, அவரது ஆசிரமத்தை உடைத்து தகர்த்துவிட்டனர்; அவரை (அவரது அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர்.

ஜுரைஜ் அங்கத் தூய்மை செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, ‘‘குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), ‘‘(இன்ன) இடையன்” என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், ‘‘உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித்தருகிறோம்” என்று (ஜுரைஜிடம்) கூறினர். அதற்கு ஜுரைஜ், ‘‘இல்லை; களிமண்ணால் கட்டித்தந்தாலே போதும்” என்று கூறினார்.

அத்தியாயம் : 46

2483. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْثًا قِبَلَ السَّاحِلِ، فَأَمَّرَ عَلَيْهِمْ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَهُمْ ثَلاَثُمِائَةٍ وَأَنَا فِيهِمْ، فَخَرَجْنَا حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ فَنِيَ الزَّادُ، فَأَمَرَ أَبُو عُبَيْدَةَ بِأَزْوَادِ ذَلِكَ الْجَيْشِ فَجُمِعَ ذَلِكَ كُلُّهُ فَكَانَ مِزْوَدَىْ تَمْرٍ، فَكَانَ يُقَوِّتُنَا كُلَّ يَوْمٍ قَلِيلاً قَلِيلاً، حَتَّى فَنِيَ فَلَمْ يَكُنْ يُصِيبُنَا إِلاَّ تَمْرَةٌ تَمْرَةٌ. فَقُلْتُ وَمَا تُغْنِي تَمْرَةٌ فَقَالَ لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَنِيَتْ. قَالَ ثُمَّ انْتَهَيْنَا إِلَى الْبَحْرِ فَإِذَا حُوتٌ مِثْلُ الظَّرِبِ، فَأَكَلَ مِنْهُ ذَلِكَ الْجَيْشُ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَمَرَ أَبُو عُبَيْدَةَ بِضِلَعَيْنِ مِنْ أَضْلاَعِهِ فَنُصِبَا، ثُمَّ أَمَرَ بِرَاحِلَةٍ فَرُحِلَتْ ثُمَّ مَرَّتْ تَحْتَهُمَا فَلَمْ تُصِبْهُمَا.
பாடம் : 1 உணவு, பயணச் செலவு, இதர பொருட்கள் ஆகியவற்றில் கூட்டுச் சேர்வது மற்றும் அளக்கப்படும் பொருட்களை யும் நிறுக்கப்படும் பொருட்களையும் பங்கிடுவது எப்படி? (அளக்காமல், நிறுக்காமல்) குத்துமதிப்பாகப் பங்கிட வேண்டுமா? அல்லது ஒவ்வொரு கையளவு சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமா? ஏனெனில், பயணிகளிடையே (பொதுவாக இருக்கும் கட்டுச்சாதங்களை) ஒருவர் இதை எடுத்து உண்ண, மற்றொருவர் அதை எடுத்து உண்டால் (கூடுதல் குறைவு ஏற்படுவதை) முஸ்லிம்கள் தவறாகக் கருதுவதில்லை. தங்கம் மற்றும் வெள்ளியை நிறுக்காமல் (தங்கத்திற்குப் பகரமாக வெள்ளியை அல்லது வெள்ளிக்குப் பகரமாக தங்கத்தைக்) குத்துமதிப்பாகப் பங்கிடுவதும், (பயணத்தில்) கூட்டாக அமர்ந்து உண்ணும்பொழுது இரண்டு பேரீச்சம்பழங்களை ஒருசேர (எடுத்து) உண்பதும் அவ்வாறுதான் (தவறாகாது).
2483. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரு படையை அனுப்பிவைத்தார்கள்;2 அந்தப் படையினருக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக ஆக்கினார்கள். அவர்கள் (படையினர்) முந்நூறு பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். நாங்கள் புறப்பட்டோம். பாதி வழியிலேயே எங்கள் கையிருப்பில் இருந்த (பயண) உணவு தீர்ந்து போய்விட்டது. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்தப் படையின் (கைவச மிருந்த) கட்டுச்சாதங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டும்படி உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே அவை அனைத்தும் ஒன்றுதிரட்டப்பட்டன. இரு பைகள் (நிறைய) பேரீச்சம்பழங்கள் சேர்ந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அவற்றை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கொடுத்துவந்தார்கள். இறுதியில், அவையும் தீர்ந்துபோய்விட்டன. எங்களுக்கு (ஆளுக்கு) ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் கிடைத்துவந்தது.

லிஇதை ஜாபிர் (ரலி) அவர்கள் சொன்னபோது, இதைக் கேட்டுக்கொண்டிருந்த அறிவிப்பாளர் வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சம் பழம் எப்படிப் போதும்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘அதுவும் தீர்ந்துபோன பின்புதான் அதன் மதிப்பை நாங்கள் உணர்ந்தோம்” என்று பதிலளித்தார்கள்லி

பிறகு நாங்கள் கடல்வரை வந்துசேர்ந்துவிட்டோம். அங்கு தற்செயலாக சிறிய மலை போன்ற (திமிங்கல வகை) மீன் ஒன்று கிடைத்தது. அதிலிருந்து (எங்களுடைய) அந்தப் படை பதினெட்டு நாட்கள் உண்டது. பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளி லிருந்து இரு விலா எலும்புகளை பூமியில் நட்டுவைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை இரண்டும் நடப் பட்டன.

பிறகு, ஒட்டகத்தை அதன் கீழே ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே ஓட்டிச் செல்லப்பட்டது. அது (அந்தத் திமிங்கலத்தின்) விலா எலும்பு களின் கீழே சென்றது. ஆனால், அவற்றை அது தொடவில்லை.


அத்தியாயம் : 47
2484. حَدَّثَنَا بِشْرُ بْنُ مَرْحُومٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ ـ رضى الله عنه ـ قَالَ خَفَّتْ أَزْوَادُ الْقَوْمِ وَأَمْلَقُوا، فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَحْرِ إِبِلِهِمْ فَأَذِنَ لَهُمْ، فَلَقِيَهُمْ عُمَرُ فَأَخْبَرُوهُ فَقَالَ مَا بَقَاؤُكُمْ بَعْدَ إِبِلِكُمْ، فَدَخَلَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا بَقَاؤُهُمْ بَعْدَ إِبِلِهِمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" نَادِ فِي النَّاسِ فَيَأْتُونَ بِفَضْلِ أَزْوَادِهِمْ "". فَبُسِطَ لِذَلِكَ نِطَعٌ، وَجَعَلُوهُ عَلَى النِّطَعِ. فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَا وَبَرَّكَ عَلَيْهِ ثُمَّ دَعَاهُمْ بِأَوْعِيَتِهِمْ فَاحْتَثَى النَّاسُ حَتَّى فَرَغُوا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ "".
பாடம் : 1 உணவு, பயணச் செலவு, இதர பொருட்கள் ஆகியவற்றில் கூட்டுச் சேர்வது மற்றும் அளக்கப்படும் பொருட்களை யும் நிறுக்கப்படும் பொருட்களையும் பங்கிடுவது எப்படி? (அளக்காமல், நிறுக்காமல்) குத்துமதிப்பாகப் பங்கிட வேண்டுமா? அல்லது ஒவ்வொரு கையளவு சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமா? ஏனெனில், பயணிகளிடையே (பொதுவாக இருக்கும் கட்டுச்சாதங்களை) ஒருவர் இதை எடுத்து உண்ண, மற்றொருவர் அதை எடுத்து உண்டால் (கூடுதல் குறைவு ஏற்படுவதை) முஸ்லிம்கள் தவறாகக் கருதுவதில்லை. தங்கம் மற்றும் வெள்ளியை நிறுக்காமல் (தங்கத்திற்குப் பகரமாக வெள்ளியை அல்லது வெள்ளிக்குப் பகரமாக தங்கத்தைக்) குத்துமதிப்பாகப் பங்கிடுவதும், (பயணத்தில்) கூட்டாக அமர்ந்து உண்ணும்பொழுது இரண்டு பேரீச்சம்பழங்களை ஒருசேர (எடுத்து) உண்பதும் அவ்வாறுதான் (தவறாகாது).
2484. சலமா பின் அமர் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்துபோய்ப் பஞ்சத்திற்குள் ளானார்கள். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் (ஊர்தி) ஒட்டகங்களை அறுக்க அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களும் அனுமதியளித் தார்கள். (வழியில்) அவர்களை உமர் (ரலி) அவர்கள் சந்திக்க, மக்கள் அவர்களுக்கு (நடந்த விஷயத்தை)த் தெரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்கள் ஒட்டகங்களை அறுத்து (உண்டு)விட்ட பிறகு நீங்கள் எப்படி உயிர் வாழ்வீர்கள்?” என்று கேட்டார்கள்.3

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களுடைய ஒட்டகத்தை அறுத்து (உண்டு)விட்ட பிறகு அவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் தங்கள் பயண உணவில் எஞ்சியதைக் கொண்டுவரும்படி அவர்களிடையே அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். (அவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டது.) மக்கள் தங்கள் எஞ்சிய உணவைக் கொண்டுவந்து போடுவதற்காக ஒரு தோல் விரிப்பு விரித்துவைக்கப்பட்டது. மக்கள் அதில் தங்கள் எஞ்சிய உணவுகளை (குவியலாக) வைத்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து, அதில் வளம் வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

பிறகு தங்கள் பாத்திரங்களைக் கொண்டுவரும்படி மக்களை அழைத் தார்கள். மக்கள், தங்கள் இரு கைகளையும் குவித்து (உணவில் தங்கள் பங்கைப்) பெற்று (பாத்திரங்களை நிரப்பி)க் கொண் டார்கள்.

அனைவரும் உணவைப் பெற்றுக் கொண்டுவிட்ட பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுகின்றேன்” என்று சொன் னார்கள்.


அத்தியாயம் : 47
2485. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْعَصْرَ فَنَنْحَرُ جَزُورًا، فَتُقْسَمُ عَشْرَ قِسَمٍ، فَنَأْكُلُ لَحْمًا نَضِيجًا قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ.
பாடம் : 1 உணவு, பயணச் செலவு, இதர பொருட்கள் ஆகியவற்றில் கூட்டுச் சேர்வது மற்றும் அளக்கப்படும் பொருட்களை யும் நிறுக்கப்படும் பொருட்களையும் பங்கிடுவது எப்படி? (அளக்காமல், நிறுக்காமல்) குத்துமதிப்பாகப் பங்கிட வேண்டுமா? அல்லது ஒவ்வொரு கையளவு சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமா? ஏனெனில், பயணிகளிடையே (பொதுவாக இருக்கும் கட்டுச்சாதங்களை) ஒருவர் இதை எடுத்து உண்ண, மற்றொருவர் அதை எடுத்து உண்டால் (கூடுதல் குறைவு ஏற்படுவதை) முஸ்லிம்கள் தவறாகக் கருதுவதில்லை. தங்கம் மற்றும் வெள்ளியை நிறுக்காமல் (தங்கத்திற்குப் பகரமாக வெள்ளியை அல்லது வெள்ளிக்குப் பகரமாக தங்கத்தைக்) குத்துமதிப்பாகப் பங்கிடுவதும், (பயணத்தில்) கூட்டாக அமர்ந்து உண்ணும்பொழுது இரண்டு பேரீச்சம்பழங்களை ஒருசேர (எடுத்து) உண்பதும் அவ்வாறுதான் (தவறாகாது).
2485. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுகை தொழுதுவிட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பிரிக்கப்படும். (பிறகு சமைக்கப்படும்.) சூரியன் மறைவதற்குமுன் நாங்கள் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம்.


அத்தியாயம் : 47
2486. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ الأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ، أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ، فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ "".
பாடம் : 1 உணவு, பயணச் செலவு, இதர பொருட்கள் ஆகியவற்றில் கூட்டுச் சேர்வது மற்றும் அளக்கப்படும் பொருட்களை யும் நிறுக்கப்படும் பொருட்களையும் பங்கிடுவது எப்படி? (அளக்காமல், நிறுக்காமல்) குத்துமதிப்பாகப் பங்கிட வேண்டுமா? அல்லது ஒவ்வொரு கையளவு சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமா? ஏனெனில், பயணிகளிடையே (பொதுவாக இருக்கும் கட்டுச்சாதங்களை) ஒருவர் இதை எடுத்து உண்ண, மற்றொருவர் அதை எடுத்து உண்டால் (கூடுதல் குறைவு ஏற்படுவதை) முஸ்லிம்கள் தவறாகக் கருதுவதில்லை. தங்கம் மற்றும் வெள்ளியை நிறுக்காமல் (தங்கத்திற்குப் பகரமாக வெள்ளியை அல்லது வெள்ளிக்குப் பகரமாக தங்கத்தைக்) குத்துமதிப்பாகப் பங்கிடுவதும், (பயணத்தில்) கூட்டாக அமர்ந்து உண்ணும்பொழுது இரண்டு பேரீச்சம்பழங்களை ஒருசேர (எடுத்து) உண்பதும் அவ்வாறுதான் (தவறாகாது).
2486. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறப்போரின்போது அஷ்அரீ குலத்தார் பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால், அல்லது மதீனாவில் தங்கள் மனைவி, மக்களின் உணவு (இருப்பு) குறைந்துபோய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு ஒரே பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக்கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர் களைச் சேர்ந்தவன்.4

இதை அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 47
2487. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ كَتَبَ لَهُ فَرِيضَةَ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَمَا كَانَ مِنْ خَلِيطَيْنِ فَإِنَّهُمَا يَتَرَاجَعَانِ بَيْنَهُمَا بِالسَّوِيَّةِ "".
பாடம் : 2 கூட்டாக உள்ள இருவரில் ஒருவர் மற்றவரின் ஸகாத்தையும் தாமே வழங்கினால், மற்றவரிடம் அந்தப் பங்கைச் சரியாகப் பெற்றுக் கொள்வார்.
2487. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் (ஆணையின் பேரில் அவனுடைய) தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கிய ‘ஸகாத்’ தொடர்பாக எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதிய போது, ‘‘இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர், தம் பொருட்களின் ஸகாத்துடன் மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து, தாமே செலுத்திவிடுவாராயின், அவர் தம் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வார்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.5

அத்தியாயம் : 47
2488. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَكَمِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ جَدِّهِ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذِي الْحُلَيْفَةِ فَأَصَابَ النَّاسَ جُوعٌ فَأَصَابُوا إِبِلاً وَغَنَمًا. قَالَ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أُخْرَيَاتِ الْقَوْمِ فَعَجِلُوا وَذَبَحُوا وَنَصَبُوا الْقُدُورَ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْقُدُورِ فَأُكْفِئَتْ، ثُمَّ قَسَمَ فَعَدَلَ عَشْرَةً مِنَ الْغَنَمِ بِبَعِيرٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ، فَطَلَبُوهُ فَأَعْيَاهُمْ، وَكَانَ فِي الْقَوْمِ خَيْلٌ يَسِيرَةٌ فَأَهْوَى رَجُلٌ مِنْهُمْ بِسَهْمٍ فَحَبَسَهُ اللَّهُ ثُمَّ قَالَ "" إِنَّ لِهَذِهِ الْبَهَائِمِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا "". فَقَالَ جَدِّي إِنَّا نَرْجُو ـ أَوْ نَخَافُ ـ الْعَدُوَّ غَدًا، وَلَيْسَتْ مَعَنَا مُدًى أَفَنَذْبَحُ بِالْقَصَبِ. قَالَ "" مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ، فَكُلُوهُ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ، أَمَّا السِّنُّ فَعَظْمٌ وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ "".
பாடம் : 3 ஆடுகளைப் பங்கிடுதல்
2488. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யிதுல்ஹுலைஃபா’வில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி ஏற்பட்டது. அவர்கள் (போரில் கிடைத்த செல்வங்களாகச்) சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப் பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டனர். நபி (ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்த வுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி ஆணையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்தவை வெளியே கொட்டப்பட்டு)விட்டன.

பிறகு நபி (ஸல்) அவர்கள், ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகள் விகிதம் பங்கிட்டார்கள். அப்போது அவற்றில் ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்தது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தன.

ஒரு மனிதர் (நபித்தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்று இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்” என்று கூறி னார்கள்.

நான், ‘‘(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்களே இல்லாத நிலையில் எதிரிகளை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத் தத்தை ஓடச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக் கப்படும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. அதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல் கிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்” என்று கூறினார்கள்.6

அத்தியாயம் : 47
2489. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَبَلَةُ بْنُ سُحَيْمٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَقْرُنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ جَمِيعًا، حَتَّى يَسْتَأْذِنَ أَصْحَابَهُ.
பாடம் : 4 (கூடியிருக்கும்) நண்பர்கள் அனுமதி யளிக்காமல் ஒருவர் மட்டும் பேரீச் சம்பழங்களை (இரண்டிரண்டாகச்) சேர்த்து உண்ணுதல் (கூடாது).
2489. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் (தோழர்களுடன் உண்ணும் போது) தம் தோழர்கள் அனுமதிக்காத வரை, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒருசேர எடுத்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 47