2437. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ كُنْتُ مَعَ سَلْمَانَ بْنِ رَبِيعَةَ، وَزَيْدِ بْنِ صُوحَانَ فِي غَزَاةٍ، فَوَجَدْتُ سَوْطًا. فَقَالَ لِي أَلْقِهِ. قُلْتُ لاَ، وَلَكِنْ إِنْ وَجَدْتُ صَاحِبَهُ، وَإِلاَّ اسْتَمْتَعْتُ بِهِ. فَلَمَّا رَجَعْنَا حَجَجْنَا فَمَرَرْتُ بِالْمَدِينَةِ، فَسَأَلْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ ـ رضى الله عنه ـ فَقَالَ وَجَدْتُ صُرَّةً عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهَا مِائَةُ دِينَارٍ، فَأَتَيْتُ بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" عَرِّفْهَا حَوْلاً "". فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُ، فَقَالَ "" عَرِّفْهَا حَوْلاً "". فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ "" عَرِّفْهَا حَوْلاً "". فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُهُ الرَّابِعَةَ فَقَالَ "" اعْرِفْ عِدَّتَهَا وَوِكَاءَهَا وَوِعَاءَهَا، فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلاَّ اسْتَمْتِعْ بِهَا "". حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، بِهَذَا قَالَ فَلَقِيتُهُ بَعْدُ بِمَكَّةَ، فَقَالَ لاَ أَدْرِي أَثَلاَثَةَ أَحْوَالٍ أَوْ حَوْلاً وَاحِدًا.
பாடம் : 10 உரிமையில்லாதவர் கையில் சிக்கிவிடாமலும் வீணாகிவிடாமலும் இருப்பதற்காக, கீழேகிடக்கும் பொருளை எடுக்கலாமா?
2437. சுவைத் பின் கஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சல்மான் பின் ரபீஆ அல்பாஹிலீ (ரலி) அவர்களுடனும் ஸைத் பின் ஸூஹான் (ரஹ்) அவர்களுடனும் ஒரு போரில் கலந்துகொண்டபோது சாட்டை ஒன்றைக் கண்(டு எடுத்துக்கொண்)டேன். (என் தோழர்கள்) இருவரும், ‘‘அதைப் போட்டு விடு” என்று கூறினார்கள். நான், ‘‘இல்லை. இதன் உரிமையாளரைக் கண்டால் (இதைக் கொடுத்துவிடுவேன்.) இல்லையென்றால் இதைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்று கூறினேன். நான் போரிலிருந்து திரும்பியபோது ஹஜ் செய்தேன். அப்போது மதீனா வழியாக நான் சென்றேன். அங்கு உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன்.

அவர்கள் கூறினார்கள்: நான், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நூறு பொற்காசுகள் இருந்த ஒரு பையைக் கண்டேன். அதை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். ஒரு வருட காலம் அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்தேன்.

பிறகு திரும்பவும் அவர்களிடம் வந்தேன். அப்போதும் அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். அவ்வாறே, நானும் ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். நான்காவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், ‘‘அதன் (பையிலுள்ள பணத்தின்) எண்ணிக்கையையும், முடிச்சையும், பையையும் அடையாளம் அறிந்துகொள். அதன் உரிமையாளர் வந்தால் அதை அவரிடம் கொடுத்துவிடு. இல்லையென்றால் அதை நீ பயன்படுத்திக்கொள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உஸ்மான் பின் ஜபலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) காணப் படுகிறது:

அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், ‘‘(இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைப் பின்னர் மக்காவில் சந்தித்தேன். அவர், யிமூன்றாண்டுகள் அறிவிக்க வேண்டுமா; ஓராண்டா’ எதை சுவைத் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்” என்றார்கள்.

அத்தியாயம் : 45
2438. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ رَبِيعَةَ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ ـ رضى الله عنه ـ أَنَّ أَعْرَابِيًّا، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ قَالَ "" عَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ أَحَدٌ يُخْبِرُكَ بِعِفَاصِهَا وَوِكَائِهَا، وَإِلاَّ فَاسْتَنْفِقْ بِهَا "". وَسَأَلَهُ عَنْ ضَالَّةِ الإِبِلِ فَتَمَعَّرَ وَجْهُهُ، قَالَ "" مَا لَكَ وَلَهَا مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ، دَعْهَا حَتَّى يَجِدَهَا رَبُّهَا "". وَسَأَلَهُ عَنْ ضَالَّةِ الْغَنَمِ. فَقَالَ "" هِيَ لَكَ أَوْ لأَخِيكَ، أَوْ لِلذِّئْبِ "".
பாடம் : 11 கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்துவிட்டு ஆட்சியாளரிடம் அதை ஒப்படைக் காமல் இருத்தல்
2438. ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய். அதன் பை(உறை)யையும் முடிச்சையும் பற்றி (அடையாளம்) தெரிவிக்கக் கூடியவர் எவரேனும் வந்தால் (அதை அவரிடம் ஒப்படைத்துவிடு). இல்லையென் றால் அதைச் செலவழித்துக்கொள்” என்று கூறினார்கள்.

பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். இதைக் கேட்டு நபியவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் அதன் குளம் பும் உள்ளது. அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கே தாகம் தணித்துக்கொள்கிறது.) மரத்திலிருந்து (இலை தழைகளைத்) தின்கிறது. அதை அதன் உரிமையாளர் அடைந்துகொள்ளும்வரை அதை விட்டுவிடு” என்று கூறினார்கள்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஆட்டைப் பற்றிக் கேட்டார். அதற்கு, ‘‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.9

அத்தியாயம் : 45
2439. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ أَخْبَرَنِي الْبَرَاءُ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ انْطَلَقْتُ، فَإِذَا أَنَا بِرَاعِي غَنَمٍ يَسُوقُ غَنَمَهُ فَقُلْتُ لِمَنْ أَنْتَ قَالَ لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ. فَسَمَّاهُ فَعَرَفْتُهُ. فَقُلْتُ هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ فَقَالَ نَعَمْ. فَقُلْتُ هَلْ أَنْتَ حَالِبٌ لِي قَالَ نَعَمْ. فَأَمَرْتُهُ فَاعْتَقَلَ شَاةً مِنْ غَنَمِهِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ ضَرْعَهَا مِنَ الْغُبَارِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ كَفَّيْهِ، فَقَالَ هَكَذَا ـ ضَرَبَ إِحْدَى كَفَّيْهِ بِالأُخْرَى ـ فَحَلَبَ كُثْبَةً مِنْ لَبَنٍ وَقَدْ جَعَلْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِدَاوَةً عَلَى فَمِهَا خِرْقَةٌ، فَصَبَبْتُ عَلَى اللَّبَنِ، حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، فَانْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ اشْرَبْ يَا رَسُولَ اللَّهِ. فَشَرِبَ حَتَّى رَضِيتُ.
பாடம் : 12
2439. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என் முன்னே ஆடு மேய்ப்பவன் ஒருவனைக் கண்டேன். அவன் தன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நான், ‘‘நீ யாருடைய பணியாள்?” என்று கேட்டேன். அவன், ‘‘குறைஷியரில் இன்ன மனிதருடைய பணியாள்” என்று சொல்லி அவரது பெயரைக் கூறினான். நான் அந்த மனிதரை அடையாளம் புரிந்து கொண்டேன். அவனிடம் நான், ‘‘உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா?” என்று கேட்டேன். அவன், ”ஆம்; (இருக்கிறது)” என்று பதிலளித்தான். எனக்காக நீ பால் கறந்து கொடுப்பாயா? என்று கேட்டேன். அவன் சரி என்றான். நான் (பால் கறந்து கொடுக்கும்படி) அவனுக்கு உத்தரவிட்டேன்.

அவன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து அதன் தொடைகளுக்கிடையே காலை வைத்து அழுத்திக்கொண்டான். (பால் கறக்கத் தயாரானான்.) பிறகு நான், ஆட்டின் மடியை (அதில் படிந்திருக்கும்) புழுதி போக உதறும்படி கட்டளையிட்டேன். பிறகு அவன் தன் இரு கைகளையும் (தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக) உதறும்படிக் கட்டளையிட்டேன். ...றறஇப்படி உதறும்படி” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு கையை மற்றொரு கைமீது அடித்துக் காட்டினார்கள்... (அவ்வாறே, அவனும் கைகளைத் தூய்மைப்படுத்திக்கொண் டான்.) பிறகு சிறிதளவு பால் கறந்தான்.

நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு தோல் பாத்திரத்தை எடுத்து, அதில் பாலை ஊற்றி அதன் வாயை ஒரு துண்டுத் துணியால் மூடினேன். பிறகு அதன் (பால் பாத்திரத்தின்) அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை அதன் மீது தண்ணீர் ஊற்றினேன்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அருந்துங்கள்” என்று கூறினேன். நான் திருப்தியடையும்வரை (அதை) அவர்கள் அருந்தி னார்கள்.10

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.



அத்தியாயம் : 45

2440. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنَ النَّارِ حُبِسُوا بِقَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، فَيَتَقَاصُّونَ مَظَالِمَ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا، حَتَّى إِذَا نُقُّوا وَهُذِّبُوا أُذِنَ لَهُمْ بِدُخُولِ الْجَنَّةِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم بِيَدِهِ لأَحَدُهُمْ بِمَسْكَنِهِ فِي الْجَنَّةِ أَدَلُّ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا "". وَقَالَ يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ قَتَادَةَ حَدَّثَنَا أَبُو الْمُتَوَكِّلِ.
பாடம் : 1 அநீதிகளுக்காக (மறுமையில்) பழிவாங்கல் மேற்கண்ட வசனத்தில் (14:43), யிவிரைந் தோடியவர்களாக’ என்பதைக் குறிக்க யிமுஹ்திஈ” எனும் சொல் ஆளப்பட்டுள் ளது. இதற்கு யிபார்வையைத் தொடர்ந்து செலுத்தியவர்களாக’ என முஜாஹித் (ரஹ்) அவர்கள் பொருள் கூறியுள்ளார்கள். மற்றவர்கள், யிவிரைந்தவர்களாக’ என்று பொருள் செய்கின்றனர். அதே வசனத்தில், ‘‘(நிலைகுத்திய) அவர்களின் பார்வைகள் (பழைய நிலைக்கு) அவர்களிடம் திரும்பாது; அவர் களின் இதயங்களும் வெறுமையாகிவிடும்” என அல்லாஹ் தெரிவிக்கின்றான். அதாவது அறிவு இல்லாத காலிப் பைகளாக ஆகிவிடும். தொடர்ந்து அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) மனிதர்களுக்கு வேதனை வருகின்ற ஒரு நாளைப் பற்றி அவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வீராக. அநீதியிழைத்தோர் அப்போது, ‘‘எங்கள் இறைவா! எங்களுக்குச் சிறிது கால அவகாசம் அளிப்பாயாக! அவ்வாறாயின், உனது அழைப்பை நாங்கள் ஏற்போம்; இறைத்தூதர்களைப் பின்பற்றுவோம்” என்று கூறுவர். (அப்போது அவர்களிடம்,) எங்களுக்கு அழிவே இல்லை என்று முன்னர் நீங்கள் சத்தியம் செய்துகொண்டி ருக்கவில்லையா? (என்று பதிலுக்கு அல்லாஹ் கேட்பான்.) தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்டோர் வசித்திருந்த இடங்களில்தான் நீங்களும் வசித்தீர்கள். அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தே இருந்தது. உங்களுக்கு உதாரணங்களும் கூறி (தெளிவுபடுத்தி) இருந்தோம் (என்றும் அல்லாஹ் கூறுவான்). அவர்கள் தம்முடைய சதித் திட்டங்களைத் தீட்டினர். அவர்களின் சதித்திட்டம் மலைகளையே பெயர்க்கக்கூடியதாக இருந்தாலும், அது (எவ்வாறு செயலிழக்கும் என்ற சூட்சுமம்) அல்லாஹ்விடமே உள்ளது. (நபியே!) அல்லாஹ் தன் தூதர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறுகின்றவன் என ஒருபோதும் நீர் எண்ணிவிடாதீர். நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கோனும் தண்டனை அளிப்போனும் ஆவான். (14:44லி47)
2440. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தி லிருந்து தப்பி வரும்போது, சொர்க்கத் திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்தபோது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாக்கப் பட்டுவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன்மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தமது வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள் வார்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 46
2441. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ أَخْبَرَنِي قَتَادَةُ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ، قَالَ بَيْنَمَا أَنَا أَمْشِي، مَعَ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ آخِذٌ بِيَدِهِ إِذْ عَرَضَ رَجُلٌ، فَقَالَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّجْوَى فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ، وَيَسْتُرُهُ فَيَقُولُ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا فَيَقُولُ نَعَمْ أَىْ رَبِّ. حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ. فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ، وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُونَ فَيَقُولُ الأَشْهَادُ هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ، أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ "".
பாடம் : 2 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இதோ! அநீதியாளர்கள்மீது இறைவனின் சாபம் உண்டாகும். (11:18)
2441. ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, ‘‘(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார் களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற் றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இறைநம்பிக்கை யாளரை தன் பக்கம் நெருங்கச்செய்து, அவர்மீது தன் திரையைப் போட்டு அவரை மறைத்துவிடுவான். பிறகு அவரை நோக்கி, ‘‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்பான். அதற்கு அவர், யிஆம், என் இறைவா!› என்று கூறுவார். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) அவர் (தாம் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர் யிநாம் இத்தோடு ஒழிந்தோம்’ என்று தம்மைப் பற்றிக் கருதிக்கொண்டிருக்கும்போது இறைவன், யிஇவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்’ என்று கூறுவான். அப்போது அவரது நற்செயல்களின் பதிவேடு அவரிடம் கொடுக்கப்படும்.

இறைமறுப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், ‘‘இவர்கள்தான், தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். இதோ! இத்தகைய அக்கிரமக்காரர்கள்மீது இறைவனின் சாபம் உண்டாகும்” என்று கூறுவார்கள்.

அத்தியாயம் : 46
2442. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَالِمًا، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 3 ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லி முக்கு அநீதியிழைக்கவும்மாட்டார்; அவரைக் கைவிடவும்மாட்டார்.
2442. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவருக்கு அநீதி யிழைக்கவும்மாட்டார்; அவரை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும்மாட்டார். எவர் தம் சகோதரரின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டி ருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கி றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங் களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கி றாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 46
2443. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، وَحُمَيْدٌ الطَّوِيلُ، سَمِعَا أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا "".
பாடம் : 4 ‘‘உன் சகோதரன் அநீதியிழைத்த வனாக இருந்தாலும் அநீதியிழைக் கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய்”.
2443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உன் சகோதரன் அநீதியிழைத்தவனாக உள்ள நிலையிலும் அநீதியிழைக்கப் பட்டவனாக உள்ள நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 46
2444. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا، فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا قَالَ "" تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ "".
பாடம் : 4 ‘‘உன் சகோதரன் அநீதியிழைத்த வனாக இருந்தாலும் அநீதியிழைக் கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய்”.
2444. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன் சகோதரன் அநீதி யிழைத்தவனாக உள்ள நிலையிலும் அநீதியிழைக்கப்பட்டவனாக உள்ள நிலையிலும் அவனுக்கு உதவி செய்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! அநீதியிழைக்கப்பட்டவனுக்கு நாங்கள் உதவி செய்வோம் (அது சரிதான்). அநீதியிழைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?” என்று கேட்டனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அவனுடைய கைகளைப் பிடித்து (அநீதியிழைக்க விடாமல் தடுத்து)க்கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 46
2445. حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدٍ، سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ. فَذَكَرَ عِيَادَةَ الْمَرِيضِ، وَاتِّبَاعَ الْجَنَائِزِ، وَتَشْمِيتَ الْعَاطِسِ، وَرَدَّ السَّلاَمِ، وَنَصْرَ الْمَظْلُومِ، وَإِجَابَةَ الدَّاعِي، وَإِبْرَارَ الْمُقْسِمِ.
பாடம் : 5 அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுதல்
2445. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளை யிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். (கட்டளையிடப்பட்ட) அவையாவன:

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’) என்று சொன்னால், யியர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பதிலளிப்பது. 4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது. 6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்வது. 7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.2


அத்தியாயம் : 46
2446. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا "". وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ.
பாடம் : 5 அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுதல்
2446. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளருக்கு (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர் ஆவார். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது.

(இப்படிக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் தம் கைவிரல்களை ஒன்றோ டொன்று கோத்துக்காட்டினார்கள்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 46
2447. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الْمَاجِشُونُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 6 அநீதியாளனைப் பழிவாங்குதல் புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: அநீதி இழைக்கப்பட்டவரைத் தவிர வேறு யாரும் தீய சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(4:148) அவர்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) தங்கள்மீது அநீதியிழைக்கப்படும்போது அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். (42:39) ‘‘அதாவது அவர்கள் இழிவுபடுத்தப்படுவதை வெறுப்பவர்களாக இருந்தனர். ஆனால், அவர்கள் பழிவாங்கும் சக்தியுடையவர்களாக மாறும்போது மன்னித்து விடுவார்கள்” என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் (இந்த வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள். பாடம் : 7 அநீதியிழைக்கப்பட்டவர்கள் (அநீதி யிழைத்தவரை) மன்னித்தல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படை யாகச் செய்தாலும், அல்லது அதை மறைத் துச் செய்தாலும், அல்லது (உங்களுக்கு இழைக்கப்பட்ட) ஒரு குற்றத்தை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு நன்மையே. ஏனெனில்,) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் ஆற்றல் மிக்கவ னாகவும் இருக்கின்றான். (4:149) தீமையின் பலன் அதே போன்ற தீமையே ஆகும். (ஆயினும்,) எவர் மன்னித்து, சீர்திருத்தம் செய்கிறாரோ அவருக்குரிய நற்பலன் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. நிச்சயமாக, அல்லாஹ் அநீதியாளர்களை நேசிப்ப தில்லை. எவர் தமக்கு அநீதி இழைக்கப் பட்டபின் பழிவாங்குகிறார்களோ அவர்கள் மீது (ஆட்சேபணை கூற) எந்த வழியும் இல்லை. ஆட்சேபணைக்குரியவர்கள் யாரெனில், இதர மக்கள்மீது அநீதி இழைப்பவர்களும் நியாயமின்றி பூமியில் எல்லை மீறிய செயல் புரிபவர்களும்தான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. ஆயினும், யார் பொறுமையை மேற்கொண்டு, மன்னித்துவிடவும் செய்கிறார்களோ அவர்களின் இந்தச் செயல் நிச்சயமாக உறுதிமிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும். ஒருவரை அல்லாஹ் வழிகேட்டில் ஆழ்த்திவிட்டால் அவரைப் பாதுகாப்பவன் அல்லாஹ்வுக்குப் பிறகு வேறு யாரும் இல்லை. இந்த அநீதியாளர்கள் வேதனையைப் பார்க்கும்போது, ‘‘இனி, (உலக வாழ்விற்குத்) திரும்பிச் செல்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?” என்று கேட்பதை நீர் காண்பீர். (42:40லி44) பாடம் : 8 அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும்.
2447. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

அநீதி, மறுமை நாளில் பல இருள் களாகக் காட்சி தரும்.3

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 46
2448. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ الْمَكِّيُّ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ، فَقَالَ "" اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ "".
பாடம் : 9 அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத் திலிருந்து தவிர்ந்துகொள்வதும் அது குறித்து அஞ்சுவதும்
2448. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது ‘‘அநீதி யிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங் கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ் வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 46
2449. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ أَوْ شَىْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ إِنَّمَا سُمِّيَ الْمَقْبُرِيَّ لأَنَّهُ كَانَ نَزَلَ نَاحِيَةَ الْمَقَابِرِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَسَعِيدٌ الْمَقْبُرِيُّ هُوَ مَوْلَى بَنِي لَيْثٍ، وَهُوَ سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، وَاسْمُ أَبِي سَعِيدٍ كَيْسَانُ.
பாடம் : 10 தமக்கு அநீதியிழைத்த ஒரு மனிதரின் அநீதியை (மன்னித்து) விமோசனம் அளிப்பவர், அது இன்ன அநீதி என்று விவரிக்க வேண்டுமா?
2449. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தம் சகோதரனுக்கு, அவனது மானம் தொடர்பாகவோ வேறு பொருள் தொடர்பாகவோ இழைத்த அநீதிக்கு இன்றே லிபொற்காசோ வெள்ளிக்காசோ இல்லாத நாள் வருவதற்கு முன்பேலி (மன்னிப்புப் பெற்று) விமோசனம் காணட்டும்!4

(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவர் இழைத்த அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு (அநீதியிழைக்கப்பட்டவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு)விடும். அநீதி யிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்களுக்கு ‘அல்மக்புரீ’ (கப்றைச் சார்ந்தவர்) எனப் பெயர் வரக் காரணம், அவர் கப்றுகளுக்கு (அடக்கத் தலங்களுக்கு) அருகிலேயே தங்குவார். அவர் யிபனூ லைஸ்’ குலத்தாரின் முன்னாள் அடிமை ஆவார். இவருடைய தந்தை அபூசயீதின் இயற்பெயர் யிகைசான்’ என்பதாகும்.

அத்தியாயம் : 46
2450. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها – {وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} قَالَتِ الرَّجُلُ تَكُونُ عِنْدَهُ الْمَرْأَةُ، لَيْسَ بِمُسْتَكْثِرٍ مِنْهَا، يُرِيدُ أَنْ يُفَارِقَهَا، فَتَقُولُ أَجْعَلُكَ مِنْ شَأْنِي فِي حِلٍّ. فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي ذَلِكَ.
பாடம் : 11 ஒருவர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை மன்னித்துவிட்ட பிறகு மன்னிப்பைத் திரும்பப் பெறல் கிடையாது.
2450. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு பெண் தன் கணவனிடமிருந்து ஏற்படும் பிணக்கை, அல்லது புறக்கணிப் பைப் பற்றி அஞ்சினால், அவ்விருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதும் இல்லை” (4:128) என்ற குர்ஆனின் வசனத்தைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் மனைவியிடம் அதிக நாட்டம் கொள்ளாமல் அவளைவிட்டுப் பிரிந்துவிட விரும்புகிறார். இந்நிலையில் மனைவி, ‘‘என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் (நான் விட்டுக்கொடுத்து) நடந்துகொள்கிறேன் (என்னை மணவிலக் குச் செய்துவிட வேண்டாம்)” என்று கேட்டுக்கொள்கிறாள். இது தொடர்பாகவே இந்த இறைவசனம் அருளப்பட்டது.

அத்தியாயம் : 46
2451. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ، فَشَرِبَ مِنْهُ وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ، فَقَالَ لِلْغُلاَمِ "" أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ "". فَقَالَ الْغُلاَمُ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا. قَالَ فَتَلَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَدِهِ.
பாடம் : 12 ஒருவர் தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை மன்னித்து அனுமதி யளித்தபோது, அந்த உரிமை எவ்வளவு என்று குறிப்பிடவில்லை என்றால்... (செல்லுமா?)
2451. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப் பக்கம் ஒரு சிறுவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘(இந்தப் பானத்தை) இவர்களிடம் (வயது முதிர்ந்த வர்களிடம்) கொடுக்க நீ எனக்கு அனுமதி தருவாயா?” என்று கேட்டார்கள்.

அந்தச் சிறுவர், ‘‘மாட்டேன், இறைவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை எவருக்கும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்று கூறினார். எனவே, அல்லாஹ்வின் தூதர் அச்சிறுவரின் கரத்தில் அந்தப் பானத்தை வைத்தார்கள்.5

அத்தியாயம் : 46
2452. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَمْرِو بْنِ سَهْلٍ، أَخْبَرَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ "".
பாடம் : 13 (பிறரது) நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாக எடுத்துக்கொண்ட வனின் பாவம்
2452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாகக் கைப்பற்றுகிறாரோ, அவரது கழுத்தில் (மறுமை நாளில்) அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்.

இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 46
2453. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ أَبَا سَلَمَةَ، حَدَّثَهُ أَنَّهُ، كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ، فَذَكَرَ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ "".
பாடம் : 13 (பிறரது) நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாக எடுத்துக்கொண்ட வனின் பாவம்
2453. அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே (ஒரு நிலம் சம்பந்தமாகத்) தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அப்போது என்னிடம் அவர்கள் சொன்னார்கள்:

அபூசலமாவே! (பிறரது) நிலத்தை (எடுத்துக்கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஓர்அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக் கொள்கிறாரோ (மறுமையில்) அவர் கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 46
2454. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَخَذَ مِنَ الأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا الْحَدِيثُ لَيْسَ بِخُرَاسَانَ فِي كِتَابِ ابْنِ الْمُبَارَكِ، أَمْلاَهُ عَلَيْهِمْ بِالْبَصْرَةِ.
பாடம் : 13 (பிறரது) நிலத்தில் ஒரு பகுதியை அநியாயமாக எடுத்துக்கொண்ட வனின் பாவம்
2454. நபி  (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

யார் (அடுத்தவரின்) ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தமக்கு உரிமையின்றி எடுத்துக்கொண்டாரோ அவர் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அமிழ்த் தப்படுவார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் குராசானில் தொகுத்த நூலில் இந்த ஹதீஸ் இடம்பெறவில்லை. மாறாக, (இராக்கிலுள்ள) யிபஸ்ரா’வில்தான் இந்த ஹதீஸை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.6

அத்தியாயம் : 46
2455. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، كُنَّا بِالْمَدِينَةِ فِي بَعْضِ أَهْلِ الْعِرَاقِ، فَأَصَابَنَا سَنَةٌ، فَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ، فَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَمُرُّ بِنَا فَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الإِقْرَانِ، إِلاَّ أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ.
பாடம் : 14 ஒருவர் மற்றவருக்கு ஒரு விஷயத்தில் அனுமதி கொடுத்தால் அது செல்லும்.
2455. ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஆகவே, இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம்பழங்களைக் கொடுத்துவந்தார் கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது) இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள்.

அப்போது, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரே தடவையில் எடுத்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தம் சகோதரரிடம் அனுமதி கேட்டுக்கொண்டால் தவிர” என்று கூறுவார்கள்.


அத்தியாயம் : 46
2456. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو شُعَيْبٍ كَانَ لَهُ غُلاَمٌ لَحَّامٌ فَقَالَ لَهُ أَبُو شُعَيْبٍ اصْنَعْ لِي طَعَامَ خَمْسَةٍ لَعَلِّي أَدْعُو النَّبِيَّ صلى الله عليه وسلم خَامِسَ خَمْسَةٍ. وَأَبْصَرَ فِي وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم الْجُوعَ ـ فَدَعَاهُ، فَتَبِعَهُمْ رَجُلٌ لَمْ يُدْعَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ هَذَا قَدِ اتَّبَعَنَا أَتَأْذَنُ لَهُ "". قَالَ نَعَمْ.
பாடம் : 14 ஒருவர் மற்றவருக்கு ஒரு விஷயத்தில் அனுமதி கொடுத்தால் அது செல்லும்.
2456. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அபூஷுஐப்’ எனப்படும் அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சி விற்கும் ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூஷுஐப் (ரலி) அவர்கள், ‘‘எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய். நான் ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்” என்று கூறினார். அவர் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் பசியைக் கண்டார்.

ஆகவே, அவர்களை விருந்துக்கு அழைத்தார்; நபி (ஸல்) அவர்களுடன் வந்தவர்களோடு விருந்துக்கு அழைக்கப் படாத ஒரு மனிதரும் சேர்ந்துகொண்டார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அபூஷுஐப் (ரலி) அவர்களிடம்), ‘‘இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு நீங்கள் அனுமதியளிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம் (அனுமதியளிக்கிறேன்)” என்று பதில் கூறினார்.

அத்தியாயம் : 46