2327. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ الأَنْصَارِيِّ، سَمِعَ رَافِعَ بْنَ خَدِيجٍ، قَالَ كُنَّا أَكْثَرَ أَهْلِ الْمَدِينَةِ مُزْدَرَعًا، كُنَّا نُكْرِي الأَرْضَ بِالنَّاحِيَةِ مِنْهَا مُسَمًّى لِسَيِّدِ الأَرْضِ، قَالَ فَمِمَّا يُصَابُ ذَلِكَ وَتَسْلَمُ الأَرْضُ، وَمِمَّا يُصَابُ الأَرْضُ وَيَسْلَمُ ذَلِكَ، فَنُهِينَا، وَأَمَّا الذَّهَبُ وَالْوَرِقُ فَلَمْ يَكُنْ يَوْمَئِذٍ.
பாடம் : 7
2327. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகளிலேயே அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக நாங்கள் இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) யிநிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் உரிமையாளருக்குரியது’ என்ற நிபந்தனை யுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில் அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (நோய்களாலும் பூச்சிகளாலும்) பாதிக்கப்பட்டுவிடும். மீதமுள்ள (எங்கள் வருவாய்க்கான) நிலப் பகுதி (அவற்றின் தாக்குதல்களிலிருந்து) தப்பித்துக்கொள்ளும்.

இன்னும் சில வேளைகளில் மீதமுள்ள நிலப்பகுதி பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதி தப்பித்துக்கொள்ளும். ஆகவே, நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) இவ்விதம் குத்தகைக்கு எடுக்க வேண்டா மென்று தடை செய்யப்பட்டோம். அந் நாட்களில் தங்கமும் வெள்ளியும் (குத்தகைத் தொகையாகப் பயன்படுத்தப் படும் வழக்கம்) இருக்கவில்லை.

அத்தியாயம் : 41
2328. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَامَلَ خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ، فَكَانَ يُعْطِي أَزْوَاجَهُ مِائَةَ وَسْقٍ ثَمَانُونَ وَسْقَ تَمْرٍ وَعِشْرُونَ وَسْقَ شَعِيرٍ، فَقَسَمَ عُمَرُ خَيْبَرَ، فَخَيَّرَ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ يُقْطِعَ لَهُنَّ مِنَ الْمَاءِ وَالأَرْضِ، أَوْ يُمْضِيَ لَهُنَّ، فَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الأَرْضَ وَمِنْهُنَّ مَنِ اخْتَارَ الْوَسْقَ، وَكَانَتْ عَائِشَةُ اخْتَارَتِ الأَرْضَ.
பாடம் : 8 விளைச்சலில் ஒரு பாதிக்கு, அல்லது அதைவிடக் கூடுதல் குறைவான பாகத்திற்கு குத்தகை ஒப்பந்தம் செய்வது அபூஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தாயகம் துறந்து வந்த முஹாஜிர்கள் (மக்காவாசிகள்) அனைவருமே விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கையோ நான்கில் ஒரு பங்கையோ நில உரிமையாளரிடமிருந்து (தம் உழைப்புக்கான ஊதியமாகப்) பெற்றுக்கொள்வது என்னும் நிபந்தனையின் பேரில் விவசாயம் செய்துவந்தார்கள். அலீ, சஅத் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோரும் உமர் பின் அப்தில் அஸீஸ், காசிம், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), அபூபக்ரின் குடும்பத்தார், உமரின் குடும்பத்தார், அலீயின் குடும்பத்தார் மற்றும் இப்னு சீரீன் (ரஹ்) ஆகியோரும்கூட (இப்படி யிவிளைச்சலின் ஒரு பங்கு ஊதியமாக வழங்கப்படும்’ என்னும் நிபந்தனையின் பேரில்தான்) குத்தகை முறையிலான விவசாயம் செய்துவந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (என் தந்தையின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் பின் யஸீத் அவர்களு டன் விவசாயத்தில் கூட்டாளியாக இருந்தேன். ‘‘தம் தரப்பிலிருந்து விதைகளைக் கொடுத்தால் விளைச்சலில் பாதியைத் தமக்குக் கொடுத்துவிட வேண்டும்; விவசாயியே விதைகளைக் கொண்டுவந்து விதைத்தால் அந்த விவசாயிக்கு விளைச்சலின் இன்ன பங்கு (பாதிக்கும் மேல்) கிடைக்கும்” என்னும் நிபந்தனையின் பேரில், உமர் (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தார்கள். ‘‘நிலம் ஒருவருக்குச் சொந்தமாய் இருந்து நில உரிமையாளர், குத்தகைக்கு எடுத்தவர் இருவருமே அதற்காகச்  செலவழித்து, கிடைக்கின்ற விளைச்சலில் இருவரும் பங்கு போட்டுக்கொள்வதில் தவறில்லை” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளார்கள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘பருத்தி விளைச்சலின்போது, ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொள்வது என்னும் நிபந்தனையின் பேரில் பருத்தி விவசாயத் திற்காக, குத்தகை ஒப்பந்தம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை” என்று கூறினார்கள். ‘‘நெய்த துணியின் மூன்றில் ஒரு பங்கையோ, நான்கில் ஒரு பங்கையோ அல்லது அது போன்று வேறெந்தப் பங்கையுமோ நெசவுக் கூலியாக நெசவாளிக்குக் கொடுப்பது என்ற அடிப்படையில் துணி நெய்வதற்கான பாவு இழைகளை நெசவாளிக்குக் கொடுப்பதில் தவறில்லை” என்று இப்ராஹீம், இப்னு சீரீன், அதாஉ, ஹகம், ஸுஹ்ரீ, கதாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். ‘‘(சுமை சுமக்கும்) கால்நடைகளை, அவை சுமக்கின்ற (உற்பத்திப்) பொருட்களில் மூன்றில் ஒரு பங்கை அல்லது நான்கில் ஒரு பங்கை அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிடுவது என்னும் நிபந்தனையின் பேரில், ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக் குக் குத்தகைக்கு எடுத்துக்கொள்வதில் தவறில்லை” என்று மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2328. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனை யின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற் காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி யளித்து) ஒப்பந்தம் செய்துகொண் டார்கள்.

இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிலிருந்து, நபி (ஸல்) அவர்கள், தம் துணைவியருக்கு எண்பது யிவஸ்க்’குகள் பேரீச்சம்பழமும் இருபது யிவஸ்க்’குகள் தொலிநீக்கப்படாத கோதுமையும் ஆக, நூறு யிவஸ்க்’குகள் கொடுத்துவந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் (கலீஃபாவாக வந்தபோது) கைபர் நிலங்களைப் பங்கிட்டார் கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக்கொள்வது, அல்லது முன்பு நடைபெற்று வந்த வழக்கத்தின்படியே, நூறு யிவஸ்க்’குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக்கொள்வது என்று இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள். அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றுக் கொண்டனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) யிவஸ்க்’குகளையே தொடர்ந்து பெற்றுக்கொண்டனர். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

அத்தியாயம் : 41
2329. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ عَامَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ.
பாடம் : 9 நிலக் குத்தகை ஒப்பந்தத்தில் (இவ்வளவு காலத்திற்கு என வரையறுத்து) வருடங்களைக் குறிப்பிடவில்லையென்றாலும் (ஒப்பந்தம் செல்லும்.)
2329. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் ‘அவற்றில் விளையும் (பழங்கள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றின்) விளைச்சலில் பாதியை (இஸ்லாமிய அரசுக்குக்) கொடுத்து விட வேண்டும்’ என்னும் நிபந்தனையின் பேரில் கைபர் வாழ் மக்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.7

அத்தியாயம் : 41
2330. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو قُلْتُ لِطَاوُسٍ لَوْ تَرَكْتَ الْمُخَابَرَةَ فَإِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْهُ. قَالَ أَىْ عَمْرُو، إِنِّي أُعْطِيهِمْ وَأُغْنِيهِمْ، وَإِنَّ أَعْلَمَهُمْ أَخْبَرَنِي ـ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَنْهَ عَنْهُ، وَلَكِنْ قَالَ "" أَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهِ خَرْجًا مَعْلُومًا "".
பாடம் : 10
2330. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடவேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்” என்றேன். இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்:

அம்ரே! (எனது நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், ‘‘நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. மாறாக, யிஉங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக்கொள்வதைவிட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி அதைக்) கொடுத்துவிடுவது சிறந்ததாகும்’ என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று மக்களில் பேரறிஞரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 41
2331. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْطَى خَيْبَرَ الْيَهُودَ عَلَى أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا خَرَجَ مِنْهَا.
பாடம் : 11 யூதர்களுடன் நிலக் குத்தகை ஒப்பந்தம் செய்துகொள்ளல்
2331. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, ‘அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (மீதிப் பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்குக் கொடுத்துவிட வேண்டும்)› என்னும் நிபந்தனையின் பேரில் கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 41
2332. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى، سَمِعَ حَنْظَلَةَ الزُّرَقِيَّ، عَنْ رَافِعٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا أَكْثَرَ أَهْلِ الْمَدِينَةِ حَقْلاً، وَكَانَ أَحَدُنَا يُكْرِي أَرْضَهُ، فَيَقُولُ هَذِهِ الْقِطْعَةُ لِي وَهَذِهِ لَكَ، فَرُبَّمَا أَخْرَجَتْ ذِهِ وَلَمْ تُخْرِجْ ذِهِ، فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 12 நிலக் குத்தகையில் விரும்பத் தகாத நிபந்தனைகள்
2332. ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மதீனாவாசிகளிலேயே அதிகமாகப் பண்ணை வயல்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தோம். நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது நிலத்தின் உரிமையாளரிடம், ‘‘(நிலத்தின்) இந்தத் துண்டு(டைய விளைச்சல் குத்தகைப் பங்காக) உஙகளுக்குரியது. இந்தத் துண்டு(டைய விளைச்சல்) எங்களுக்குரியது” என்று சொல்வது வழக்கம்.

சில வேளைகளில், நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் தரும்; இன்னொரு பகுதி விளைச்சல் தராது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நிபந்தனையிட வேண்டாமென்று எங்களைத் தடுத்து விட்டார்கள்.8

அத்தியாயம் : 41
2333. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَمْشُونَ أَخَذَهُمُ الْمَطَرُ، فَأَوَوْا إِلَى غَارٍ فِي جَبَلٍ، فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَانْطَبَقَتْ عَلَيْهِمْ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً عَمِلْتُمُوهَا صَالِحَةً لِلَّهِ فَادْعُوا اللَّهَ بِهَا لَعَلَّهُ يُفَرِّجُهَا عَنْكُمْ. قَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَلِي صِبْيَةٌ صِغَارٌ كُنْتُ أَرْعَى عَلَيْهِمْ، فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ حَلَبْتُ، فَبَدَأْتُ بِوَالِدَىَّ أَسْقِيهِمَا قَبْلَ بَنِيَّ، وَإِنِّي اسْتَأْخَرْتُ ذَاتَ يَوْمٍ فَلَمْ آتِ حَتَّى أَمْسَيْتُ، فَوَجَدْتُهُمَا نَامَا، فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ، فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا، أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا، وَأَكْرَهُ أَنْ أَسْقِيَ الصِّبْيَةَ، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَىَّ، حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُهُ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا فَرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ. فَفَرَجَ اللَّهُ فَرَأَوُا السَّمَاءَ. وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنَّهَا كَانَتْ لِي بِنْتُ عَمٍّ أَحْبَبْتُهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ، فَطَلَبْتُ مِنْهَا فَأَبَتْ حَتَّى أَتَيْتُهَا بِمِائَةِ دِينَارٍ، فَبَغَيْتُ حَتَّى جَمَعْتُهَا، فَلَمَّا وَقَعْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ، فَقُمْتُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُهُ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فَرْجَةً. فَفَرَجَ. وَقَالَ الثَّالِثُ اللَّهُمَّ إِنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ، فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي. فَعَرَضْتُ عَلَيْهِ، فَرَغِبَ عَنْهُ، فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيهَا فَجَاءَنِي فَقَالَ اتَّقِ اللَّهَ. فَقُلْتُ اذْهَبْ إِلَى ذَلِكَ الْبَقَرِ وَرُعَاتِهَا فَخُذْ. فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَسْتَهْزِئْ بِي. فَقُلْتُ إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ فَخُذْ. فَأَخَذَهُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ مَا بَقِيَ، فَفَرَجَ اللَّهُ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ ابْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ فَسَعَيْتُ.
பாடம் : 13 ஒருவர் வேறொருவரின் செல்வத் திலிருந்து அவரது அனுமதியின்றி செலவிட்டு, விவசாயம் செய்து, அதில் அவருக்கு லாபம் கிட்டினால்... (அந்த லாபம் யாருக்குரியது?)
2333. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

மூன்று பேர் நடந்து சென்றுகொண்டி ருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்துக்கொண்டது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர் பாராவிதமாக) பெரும் பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக்கொண்டது. (இதைக் கண்ட) அவர்கள் தமக்குள், ‘‘நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றைக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இந்தப் பாறையை நம்மை விட்டு அகற்றிவிடக்கூடும்” என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) பிரார்த்தித்தார்:

இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்காக நான் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தை களுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய் தந்தையர்க்கு அதைப் புகட்டுவேன். ஒருநாள் நான் தாமதமாகத் திரும்பி வந்தேன். (நான் வீட்டை அடைந்தபோது) (நெடு நேரம் கழிந்து) இரவாகிவிட்டிருந்தது. (என் தாய், தந்தை) இருவரும் உறங்கி விட்டிருக்கக் கண்டேன்.

வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும் (ஆட்டுப்) பாலைக் கறந்து எடுத்துக்கொண்டு வந்தேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிட மனமில்லாமல் அவர்களுடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். என் (தாய்  தந்தையர்க்கு முதலில் புகட்டாமல் என்) குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தை களோ (என்) காலுக்கு அடியில் பாலுக்காக அழுது பரிதவித்துக்கொண்டிருந்தனர். இதே நிலையில் வைகறை நேரம் உதயமாகிவிட்டது. நான் இச்செயலை உன் அன்பை நாடியே செய்திருக்கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையை சற்றே நகர்த்திக் கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக்கொள்வோம்.

அவ்வாறே (அவர்களுக்கு) அல்லாஹ் சிறிதளவு நகர்த்தித்தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

மற்றொருவர் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்:

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரிலி முறைப் பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தால் தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டு லிஅல்லது முயற்சி செய்துலி சேகரித்தேன்.

நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரு கால்களுக்கும் இடையே அமர்ந்தபோது அவள், ‘‘அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ் வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பை) அதற்குரிய (மணபந்த) உரிமையின்றி திறக்காதே” என்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் அன்பைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களை விட்டு (இன்னும்) சற்று நீக்கிவிடுவாயாக!

உடனே பாறை இன்னும் சற்று விலகி யது.

மூன்றாமவர் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்:

இறைவா! நான் ஒரு யிஃபரக்’ அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தமது வேலை முடிந்தவுடன், ‘‘என்னுடைய உரிமையை (கூலியைக்) கொடு” என்று கேட்டார். நான்  (நிர்ணயம் செய்திருந்த) அவரது கூலியை அவர்முன் வைத்தேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். (அவர் சென்றபின்) அதை நான் தொடர்ந்து நிலத்தில் விதைத்து விவசாயம் செய்துவந்தேன். எதுவரையென்றால், அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்துவிட்டேன்.

சில காலங்களுக்குப் பிறகு அந்த மனிதர் (கூலியாள்) என்னிடம் வந்து, ‘‘அல்லாஹ்வுக்கு அஞ்சு” என்று கூறினார். நான் அவரிடம், ‘‘அந்த மாடுகளிடமும் இடையர்களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்” என்றேன். அதற்கு அம்மனிதர், ‘‘அல்லாஹ்வுக்கு அஞ்சு. என்னைப்  பரிகாசம் செய்யாதே” என்று கூறினார். நான், ‘‘உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. நீ இவற்றை எடுத்துக்கொள்” என்று பதிலளித்தேன். அவர் அவற்றை எடுத்துச் சென்றுவிட்டார். நான் இந்த நற்செயலை உன் அன்பைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ கருதினால் மீதமுள்ள அடைப்பையும் நீக்குவாயாக!

(இந்தப் பிரார்த்தனை முடிந்தவுடன்) அல்லாஹ் (அப்பாறையை முழுவதுமாக அகற்றி) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 41
2334. حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ لَوْلاَ آخِرُ الْمُسْلِمِينَ مَا فَتَحْتُ قَرْيَةً إِلاَّ قَسَمْتُهَا بَيْنَ أَهْلِهَا كَمَا قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ.
பாடம் : 14 நபித்தோழர்களின் அறக்கொடை களும் (வக்ஃப்) யிகராஜ்' நிலத்தை அவர்கள் குத்தகைக்கு விட்டதும் மற்றும் அவர்களின் பிற ஒப்பந் தங்களும் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: அதன் (‘ஸம்ஃக்’ எனும் நிலத்தின்) அசலை (அறக்கொடையாக வழங்கி) தர்மம் செய்துவிடுங்கள். அப்போது அவற்றை விற்க முடியாது. ஆனால், அதன் பழங்களை (தர்மத்திற்குச்) செலவழிக்கலாம். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே அந்த மரங்களை (அறக்கொடையாக வழங்கி) தர்மம் செய்துவிட்டார்கள்.
2334. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘முஸ்லிம்களின் வருங்காலத் தலைமுறைகள் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களைப் பங்கிட்டதைப் போன்று நானும், நான் வெற்றி கொண்ட ஊர்களின் நிலங்களையெல்லாம் (அவற்றை வென்றவர்களான) உரியவர் களிடையே பங்கிட்டிருப்பேன்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 41
2335. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لأَحَدٍ فَهْوَ أَحَقُّ "". قَالَ عُرْوَةُ قَضَى بِهِ عُمَرُ ـ رضى الله عنه ـ فِي خِلاَفَتِهِ.
பாடம் : 15 தரிசு நிலத்தை ஒருவர் (பயிரிட்டு) உயிராக்கினால் (அது அவருக்கே சொந்தம்.) அலீ (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்த இத்தகைய (புறம்போக்கு) தரிசு நிலங்கள் குறித்து இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘எவர் ஒரு தரிசு நிலத்தை (பயிரிட்டு) உயிராக்குகிறாரோ அது அவருக்கே சொந்தம்” என்று கூறினார்கள். அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (‘‘எவர் தரிசு நிலத்தை உயிராக்குகிறாரோ அது அவ ருக்கே சொந்தம்” என்று சொன்னதோடு,) ‘‘அந்த நிலம் ஒரு முஸ்லிமுக்கு (அல்லது இஸ்லாமிய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும் முஸ்லிமல்லாதவருக்குச்) சொந்தமானதாக இருக்கக் கூடாது. (அப்போதுதான் அதைப் பயிரிட்டவருக்கு அது சொந்தமாகும்.) மேலும், அநியாயமாக (அடாவடித்தனமாக) அதில் பயிரிட்டுவிட்டு, பிறகு அது எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடிடவும் எவருக்கும் உரிமையில்லை” என்று கூறினார்கள். இதே விஷயம் குறித்து ஜாபிர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செய்தி அறிவித்துள்ளார்கள்.
2335. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘எவர் யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தைப் பயிரிடுகிறாரோ அதைச் சொந்தமாக்கிக்கொள்ள அவரே அதிக உரிமையுடையவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘‘உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளித்தார்கள்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 41
2336. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُرِيَ وَهْوَ فِي مُعَرَّسِهِ مِنْ ذِي الْحُلَيْفَةِ فِي بَطْنِ الْوَادِي، فَقِيلَ لَهُ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ. فَقَالَ مُوسَى وَقَدْ أَنَاخَ بِنَا سَالِمٌ بِالْمُنَاخِ الَّذِي كَانَ عَبْدُ اللَّهِ يُنِيخُ بِهِ، يَتَحَرَّى مُعَرَّسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ أَسْفَلُ مِنَ الْمَسْجِدِ الَّذِي بِبَطْنِ الْوَادِي، بَيْنَهُ وَبَيْنَ الطَّرِيقِ وَسَطٌ مِنْ ذَلِكَ.
பாடம் : 16
2336. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்அகீக்’ பள்ளத்தாக்கின் கீழே (பத்னுல் வாதியில்) யிதுல்ஹுலைஃபா’ எனுமிடத்தில், தமது ஓய்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் இரவைக் கழித்துக் கொண்டிருந்தபோது கனவொன்று கண்டார் கள். அதில் அவர்களுக்கு, ‘‘நீங்கள் அருள்வளம் நிரம்பிய ஒரு பள்ளத்தாக்கில் தங்கியுள்ளீர்கள்” என்று கூறப்பட்டது.

(அறிவிப்பாளர்) மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்தை எங்கே மண்டியிட்டு அமரச்செய்வது வழக்கமோ அதே இடத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓய்வெடுக்கும் இடத்தைத் தேடியவராக, எங்கள் ஒட்டகத்தையும் சாலிம் (ரஹ்) அவர்கள் மண்டியிட்டு அமரச்செய்தார்கள்.

(நபி (ஸல்) அவர்களின்) அந்த ஓய்விடம் ‘அகீக்’ பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்திருந்த பள்ளி வாசலுக்குக் கீழ்ப் பகுதியில் இருந்தது. பள்ளிவாசலிலிருந்து (வரும்) நடுவழி யொன்று அந்த ஓய்விடத்திற்கும் நெடுஞ்சாலைக்கும் இடையே அமைந்திருந்தது.


அத்தியாயம் : 41
2337. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اللَّيْلَةَ أَتَانِي آتٍ مِنْ رَبِّي وَهْوَ بِالْعَقِيقِ أَنْ صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ وَقُلْ عُمْرَةٌ فِي حَجَّةٍ "".
பாடம் : 16
2337. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘அல்அகீக்’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது ‘‘இன்றிரவு (என் கனவில்) என் அதிபதியான இறைவனிடமிருந்து (வானவர்) ஒருவர் (ஜிப்ரீல்) வருகை தந்து, யிஇந்த அருள்வளம் நிரம்பிய பள்ளத்தாக்கில் தொழுவீராக! மேலும், யிஹஜ்ஜுடன் உம்ரா செய்ய நாடுகிறேன்’ என்று சொல்வீராக!› என்று சொன்னார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.9

அத்தியாயம் : 41
2338. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنهما ـ أَجْلَى الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ أَرْضِ الْحِجَازِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا ظَهَرَ عَلَى خَيْبَرَ أَرَادَ إِخْرَاجَ الْيَهُودِ مِنْهَا، وَكَانَتِ الأَرْضُ حِينَ ظَهَرَ عَلَيْهَا لِلَّهِ وَلِرَسُولِهِ صلى الله عليه وسلم وَلِلْمُسْلِمِينَ، وَأَرَادَ إِخْرَاجَ الْيَهُودِ، مِنْهَا فَسَأَلَتِ الْيَهُودُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيُقِرَّهُمْ بِهَا أَنْ يَكْفُوا عَمَلَهَا وَلَهُمْ نِصْفُ الثَّمَرِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" نُقِرُّكُمْ بِهَا عَلَى ذَلِكَ مَا شِئْنَا "". فَقَرُّوا بِهَا حَتَّى أَجْلاَهُمْ عُمَرُ إِلَى تَيْمَاءَ وَأَرِيحَاءَ.
பாடம் : 17 நிலத்தின் உரிமையாளர் (குத்த கைக்கு எடுப்பவரிடம்), ‘‘அல்லாஹ் அனுமதியளிக்கும் காலம்வரை இந்த நிலத்தில் பயிரிட உமக்கு நான் அனுமதியளிக்கிறேன்” என்று கூறி (நிலக் குத்தகைக்கான) குறிப்பிட்ட காலம் எதையும் கூறாவிட்டால், அவ்விருவரும் பரஸ்பரம் இசைந்து போகும் காலம்வரை குத்தகையை நீட்டித்துக்கொள்ளலாம்.
2338. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்தி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபொழுது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரதேசத்தை வெற்றி கொண்டுவிட்டபொழுது அந்தப் பகுதியி லிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகிவிட்டிருந்தது.

(அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் பாதியைப்  பெற்றுக்கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்திவிடுகிறோம்)” என்று கேட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும்வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்” என்று கூறினார்கள்.

ஆகவே, உமர் (ரலி) அவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயி ரிட்டு வரி செலுத்தி) வசித்துவந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 41
2339. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ أَبِي النَّجَاشِيِّ، مَوْلَى رَافِعِ بْنِ خَدِيجٍ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجِ بْنِ رَافِعٍ، عَنْ عَمِّهِ، ظُهَيْرِ بْنِ رَافِعٍ قَالَ ظُهَيْرٌ لَقَدْ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَمْرٍ كَانَ بِنَا رَافِقًا. قُلْتُ مَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَهْوَ حَقٌّ. قَالَ دَعَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا تَصْنَعُونَ بِمَحَاقِلِكُمْ "". قُلْتُ نُؤَاجِرُهَا عَلَى الرُّبُعِ وَعَلَى الأَوْسُقِ مِنَ التَّمْرِ وَالشَّعِيرِ. قَالَ "" لا تَفْعَلُوا ازْرَعُوهَا أَوْ أَزْرِعُوهَا أَوْ أَمْسِكُوهَا "". قَالَ رَافِعٌ قُلْتُ سَمْعًا وَطَاعَةً.
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2339. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘எங்களுக்கு உதவியாக  இருந்த ஒன்றைக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள்” என்று (என் தந்தையின் சகோதரர்) ளுஹைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (உடனே), ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதே சரியானது” என்று நான் கூறினேன்.

(அதற்கு) அவர் சொன்னார்: ஒரு முறை என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து, ‘‘நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நீரோடைகளின் கரைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அல்லது சில யிவஸ்க்’குகள் பேரீச்சம் பழங்களை அல்லது தொலி நீக்கப்படாத கோதுமையை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விட்டுவிடு கின்றோம்” என்று நான் பதிலளித்தேன்.

அதற்கு நபியவர்கள், ‘‘அவ்வாறு செய்யாதீர்கள். நீங்களே அவற்றில் வேளாண்மை செய்யுங்கள்; அல்லது பிறருக்கு இலவசமாக (கைமாறு பெறாமல்) பயிரிடக் கொடுத்துவிடுங்கள்; அல்லது பயிரிடாமல் அப்படியே விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) நான், ‘‘நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறினேன்.


அத்தியாயம் : 41
2340. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانُوا يَزْرَعُونَهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالنِّصْفِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا، فَإِنْ لَمْ يَفْعَلْ فَلْيُمْسِكْ أَرْضَهُ ".
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2340. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்), விளைச்சலில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது பாதியைத் தமக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் தம் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘எவரிடம் நிலம் இருக்கின்றதோ அவர், தாமே அதைப் பயிரிடட்டும். அல்லது அதை (தம் முஸ்லிம் சகோதரர் எவருக்காவது பிரதிபலன் எதிர்பார்க்காமல்) இலவசமாகப் பயிர் செய்யக் கொடுத்துவிடட்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், தமது நிலத்தை அவர் அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 41
2341. وَقَالَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ حَدَّثَنَا مُعَاوِيَةُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ، فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ ".
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2341. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதைத் தாமே பயிரிடட்டும்; அல்லது அதை  தம் முஸ்லிம் சகோதரர் எவருக் காவது (பிரதிபலன் எதிர்பார்க்காமல் இலவசமாகப் பயிர் செய்யக்) கொடுத்து விடட்டும். இவ்வாறு செய்ய அவர் மறுத்தால் தமது நிலத்தை அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும்.



இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 41
2342. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ ذَكَرْتُهُ لِطَاوُسٍ فَقَالَ يُزْرِعُ، قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَنْهَ عَنْهُ وَلَكِنْ قَالَ "" أَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ شَيْئًا مَعْلُومًا "".
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2342. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்த நபிமொழியை, நான் தாஊஸ் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டுப் பயிரிடச் செய்வது அனுமதிக்கப் பட்டதேயாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அதை (நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை)த் தடை செய்யவில்லை. மாறாக, ‘‘ஒருவர் தம் சகோதரருக்குத் தமது நிலத்தை இலவசமாகப் பயிரிட்டு (அதன் விளைச்சல் முழுவதையும் எடுத்து)க்கொள்ளக் கொடுத்துவிடுவதானது, அதற்காக ஒரு குறிப்பிட்ட பங்கை (குத்தகைத் தொகையாகப்) பெற்றுக்கொள்வதைவிடச் சிறந்தது’ என்றுதான் கூறினார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.


அத்தியாயம் : 41
2343. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يُكْرِي مَزَارِعَهُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَصَدْرًا مِنْ إِمَارَةِ مُعَاوِيَةَ.
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2343. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும் முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் தம் நிலங்களை இப்னு உமர் (ரலி) அவர்கள் குத்தகைக்கு விட்டுவந்தார்கள்.


அத்தியாயம் : 41
2344. ثُمَّ حُدِّثَ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ، فَذَهَبَ ابْنُ عُمَرَ إِلَى رَافِعٍ فَذَهَبْتُ مَعَهُ، فَسَأَلَهُ فَقَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ كِرَاءِ الْمَزَارِعِ. فَقَالَ ابْنُ عُمَرَ قَدْ عَلِمْتَ أَنَّا كُنَّا نُكْرِي مَزَارِعَنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا عَلَى الأَرْبِعَاءِ وَبِشَىْءٍ مِنَ التِّبْنِ.
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2344. பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்த, ‘‘நபி (ஸல்) அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடுத்தார்கள்” என்னும் நபிமொழி எடுத்து ரைக்கப்பட்டது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் இதைச் செவியுற்றவுடன் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் சென்றேன். இப்னு உமர் (ரலி) அவர்கள் ராஃபிஉ (ரலி) அவர்களிடம் இது குறித்து விசாரித்தார்கள். ராஃபிஉ (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள்.

இதைச் செவியுற்ற இப்னு உமர் (ரலி) அவர்கள் ராஃபிஉ  (ரலி) அவர்களிடம், ‘‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் கரையோரமாக உள்ள நிலங்களின் விளைச்சலையும் சிறிது வைக்கோலையும் எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்து வந்ததைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்களே” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 41
2345. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ أَعْلَمُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ الأَرْضَ تُكْرَى. ثُمَّ خَشِيَ عَبْدُ اللَّهِ أَنْ يَكُونَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ أَحْدَثَ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يَكُنْ يَعْلَمُهُ، فَتَرَكَ كِرَاءَ الأَرْضِ.
பாடம் : 18 நபித்தோழர்கள் தங்கள் பண்ணை களின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைமாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் உடையவர் களாயிருந்தனர்.
2345. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுவந்ததை நான் அறிந்திருந்தேன்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்டபின்) நிலக் குத்தகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் (அது கூடாது என்று) புதிய சட்டம் எதையேனும் பிறப்பித்து (பழைய விதிகளை மாற்றியமைத்து)விட்டிருக்க, அதை நாம் அறியாதிருந்துவிட் டோமோ என்று அஞ்சி நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்திவிட்டார்கள்.

அத்தியாயம் : 41
2346. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ حَدَّثَنِي عَمَّاىَ، أَنَّهُمْ كَانُوا يُكْرُونَ الأَرْضَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَا يَنْبُتُ عَلَى الأَرْبِعَاءِ أَوْ شَىْءٍ يَسْتَثْنِيهِ صَاحِبُ الأَرْضِ فَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقُلْتُ لِرَافِعٍ فَكَيْفَ هِيَ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ فَقَالَ رَافِعٌ لَيْسَ بِهَا بَأْسٌ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ. وَقَالَ اللَّيْثُ وَكَانَ الَّذِي نُهِيَ عَنْ ذَلِكَ مَا لَوْ نَظَرَ فِيهِ ذَوُو الْفَهْمِ بِالْحَلاَلِ وَالْحَرَامِ لَمْ يُجِيزُوهُ، لِمَا فِيهِ مِنَ الْمُخَاطَرَةِ.
பாடம் : 19 பொன்னுக்கும் வெள்ளிக்கும் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் செய்யக்கூடியவற்றில் மிகவும் மேலானது தரிசு நிலத்தை (பயிர் செய்வதற் காக) ஆண்டு வாடகைக்கு எடுப்பதே யாகும்” என்று கூறினார்கள்.
2346. 2347 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரர்கள் இருவர், ‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்; அல்லது நில உரிமையாளர்(களான நாங்கள்) வரையறுக்கின்ற (ஒரு பகுதி) விளைச்சலை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்கு விட்டு வந்தோம். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவிட்டார்கள்” என்று என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் ஹன்ழலா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம், ‘‘தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைப் பெற்றுக்கொண்டு குத்தகைக்கு விடலாமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அதில் (தங்க, வெள்ளி நாணயங்களைப் பெற்றுக்கொண்டு குத்தகைக்கு விடுவதில்) தவறில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் லைஸ் (ரஹ்) அவர்கள், ‘‘ஹலாலையும் (அனுமதிக்கப்பட்ட தையும்) ஹராமையும் (விலக்கப்பட்டதையும்) வேறுபடுத்தி விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் தடை செய்யப்பட்ட குத்தகை முறைகளை ஆய்வுக்கண் கொண்டு பார்ப்பார்களாயின் அவற்றிலுள்ள ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு அவற்றை அனுமதிக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 41