2305. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ "" أَعْطُوهُ "". فَطَلَبُوا سِنَّهُ فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا. فَقَالَ "" أَعْطُوهُ "". فَقَالَ أَوْفَيْتَنِي أَوْفَى اللَّهُ بِكَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً "".
பாடம் : 5 ஊரில் இருப்பவருக்கும், வெளியில் இருப்பவருக்கும் செயலுரிமை வழங்குவது செல்லும். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், வெளியூரிலிருந்த தம் காசாளருக்குக் கடிதம் எழுதி, தமது குடும்பத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் சார்பாக நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கத்துல் ஃபித்ர்) கொடுக்கச் சொன்னார்கள்.
2305. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, (தாம் கடனாக வாங்கியிருந்த) குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘‘அவருக்கு அதைக் கொடுத்துவிடுங்கள்” என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடியபோது, அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள். ‘‘அதை அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர், ‘‘எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்துவிட்டீர்கள்; அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத் தருவான்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள்.5

அத்தியாயம் : 40
2306. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ، فَأَغْلَظَ، فَهَمَّ بِهِ أَصْحَابُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً "". ثُمَّ قَالَ "" أَعْطُوهُ سِنًّا مِثْلَ سِنِّهِ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ لاَ نَجِدُ إِلاَّ أَمْثَلَ مِنْ سِنِّهِ. فَقَالَ "" أَعْطُوهُ فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً "".
பாடம் : 6 கடனை நிறைவேற்ற செயலுரிமை வழங்கல்
2306. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நபித் தோழர்கள் அவரை(ப் பிடித்து)க் கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டு விடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு, அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டக மொன்றைக் கொடுங்கள் என்றார்கள்.

நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே கொடுங்கள்; அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள்.

அத்தியாயம் : 40
2307. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ وَزَعَمَ عُرْوَةُ أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ مُسْلِمِينَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ. فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا السَّبْىَ، وَإِمَّا الْمَالَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ بِهِمْ ". وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم انْتَظَرَهُمْ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً، حِينَ قَفَلَ مِنَ الطَّائِفِ، فَلَمَّا تَبَيَّنَ لَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ رَادٍّ إِلَيْهِمْ إِلاَّ إِحْدَى الطَّائِفَتَيْنِ قَالُوا فَإِنَّا نَخْتَارُ سَبْيَنَا. فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمُسْلِمِينَ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ فَإِنَّ إِخْوَانَكُمْ هَؤُلاَءِ قَدْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي قَدْ رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ بِذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا فَلْيَفْعَلْ ". فَقَالَ النَّاسُ قَدْ طَيَّبْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّا لاَ نَدْرِي مَنْ أَذِنَ مِنْكُمْ فِي ذَلِكَ مِمَّنْ لَمْ يَأْذَنْ، فَارْجِعُوا حَتَّى يَرْفَعُوا إِلَيْنَا عُرَفَاؤُكُمْ أَمْرَكُمْ ". فَرَجَعَ النَّاسُ فَكَلَّمَهُمْ عُرَفَاؤُهُمْ، ثُمَّ رَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ أَنَّهُمْ قَدْ طَيَّبُوا وَأَذِنُوا.
பாடம் : 7 ஒரு சமுதாயத்தாரின் பிரதிநிதிக்காக, அல்லது அவர்களுக்காகப் பரிந் துரைப்பவருக்காக அன்பளிப்பு வழங்கினால் செல்லும். ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம், (தங்கள்மீது நடந்த) போரில் கிடைத்த செல்வங்களை(த் தங்களுக்கே திருப்பித்தருமாறு) கேட்டபோது, ‘‘எனக்குக் கிடைத்த பங்கு உங்களுக்குரியது” என நபியவர்கள் கூறினார்கள்.
2307. 2308 மர்வான் பின் ஹகம், மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

(ஹுனைன் போருக்குப்பின் அரபுக் குலத்தாரான) ‘ஹவாஸின்’ குலத்தாரின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி தம்மிடம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உண்மை பேசுவதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது. கைதிகள், அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்! நான் உங்களை எதிர்பார்த்துக்கொண்டுதான் (கைதிகளைப் பங்கிடாமல்) இருந்தேன்” எனக் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல் பத்து நாட்களாக ‘ஹவாஸின்’ குலத்தாரை எதிர்பார்த்(துக் காத்)திருந்தார்கள் லிஇரண்டில் ஒன்றைத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குத் திருப்பித் தருவார்கள் என்பது ‘ஹவாஸின்’ குலத்தாருக்குத் தெளிவானபோது, ‘‘நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம்” எனக் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து, ‘‘இறைவாழ்த்துக்குப்பின், உங்களுடைய இந்தச் சகோதரர் கள் மனம் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களில் போர்க் கைதிகளாகப் பிடிபட்டவர்களை அவர்களிடமே ஒப்படைத்துவிடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் யார் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கிறாரோ அவர் இதைச் செய்யட்டும்! தமது பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புவர், (இனிவரும் நாட்களில்) முதலாவதாக அல்லாஹ் நமக்குக் கொடுக்கவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும்வரை, அவ்வாறே செய்யட்டும்! (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்!)” என்றார்கள்.

அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதருக்காக, மனப்பூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம்” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் இதற்குச் சம்மதித்தவர் யார், சம்மதிக்காதவர் யார் என்பது நமக்குத் தெரியாது. எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! உங்களின் தலைவர்கள் (இது பற்றி உங்களிடம் தனியாகக் கலந்து பேசிவிட்டு,) நம்மிடம் உங்கள் முடிவைக் கூறட்டும்!” என்றார்கள்.

அவ்வாறே மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களின் தலைவர்கள் அவர் களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, (கைதிகளைத் திருப்பி கொடுப்பதற்கு) தாங்கள் மனப்பூர்வமாகச் சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 40
2309. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، وَغَيْرِهِ،، يَزِيدُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، وَلَمْ يُبَلِّغْهُ كُلُّهُمْ رَجُلٌ وَاحِدٌ مِنْهُمْ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَكُنْتُ عَلَى جَمَلٍ ثَفَالٍ، إِنَّمَا هُوَ فِي آخِرِ الْقَوْمِ، فَمَرَّ بِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَنْ هَذَا "". قُلْتُ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ. قَالَ "" مَا لَكَ "". قُلْتُ إِنِّي عَلَى جَمَلٍ ثَفَالٍ. قَالَ "" أَمَعَكَ قَضِيبٌ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" أَعْطِنِيهِ "". فَأَعْطَيْتُهُ فَضَرَبَهُ فَزَجَرَهُ، فَكَانَ مِنْ ذَلِكَ الْمَكَانِ مِنْ أَوَّلِ الْقَوْمِ قَالَ "" بِعْنِيهِ "". فَقُلْتُ بَلْ هُوَ لَكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" بِعْنِيهِ قَدْ أَخَذْتُهُ بِأَرْبَعَةِ دَنَانِيرَ، وَلَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ "". فَلَمَّا دَنَوْنَا مِنَ الْمَدِينَةِ أَخَذْتُ أَرْتَحِلُ. قَالَ "" أَيْنَ تُرِيدُ "". قُلْتُ تَزَوَّجْتُ امْرَأَةً قَدْ خَلاَ مِنْهَا. قَالَ "" فَهَلاَّ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ "". قُلْتُ إِنَّ أَبِي تُوُفِّيَ وَتَرَكَ بَنَاتٍ، فَأَرَدْتُ أَنْ أَنْكِحَ امْرَأَةً قَدْ جَرَّبَتْ خَلاَ مِنْهَا. قَالَ "" فَذَلِكَ "". فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ قَالَ "" يَا بِلاَلُ اقْضِهِ وَزِدْهُ "". فَأَعْطَاهُ أَرْبَعَةَ دَنَانِيرَ، وَزَادَهُ قِيرَاطًا. قَالَ جَابِرٌ لاَ تُفَارِقُنِي زِيَادَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَلَمْ يَكُنِ الْقِيرَاطُ يُفَارِقُ جِرَابَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ.
பாடம் : 8 ஒருவர் மற்றொருவருக்குச் செயலுரிமை வழங்கி, இவ்வளவு வழங்க வேண்டும் என்று குறிப்பிடாமல் ஒன்றை வழங்குமாறு சொல்ல, அவர் மக்களின் வழக்கப்படி வழங்கினால் (அது செல்லும்).
2309. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நான், மெதுவாகச் செல்லும் ஓர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தேன்; அந்த ஒட்டகம் அனைவருக்கும் கடைசியாக வந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது, ‘‘யார் அவர்?” என்று கேட்டார்கள். ‘ஜாபிர் பின் அப்தில்லாஹ்’ என்றேன். ‘‘உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். ‘‘நான் மெதுவாகச் செல்லும் ஒட்டகத்தில் பயணம் செய்கிறேன்” என்று கூறினேன். ‘‘உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ‘‘அதை என்னிடம் கொடுப்பீராக” என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன்.

(அந்தக் கம்பால்) ஒட்டகத்தை (அடித்து) விரட்டினார்கள் அந்த இடத்திலிருந்து எனது ஒட்டகம் அனைவரையும் முந்திச்செல்ல ஆரம்பித்தது. ‘‘இதை எனக்கு விலைக்குத் தருவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது” என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை எனக்கு விலைக்குத் தருவீராக! நான்கு பொற்காசுகளுக்கு இதை நான் விலைக்கு வாங்கிவிட்டேன்; மதீனாவரை நீர் இதில் பயணம் செய்யலாம்” என்று கூறினார்கள். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் (நான் வீட்டை நோக்கிப் புறப்படலானேன்). ‘‘எங்கே போகிறீர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘‘சற்று வயதான ஒரு பெண்ணை மணந்திருக்கிறேன்” என்று சொன்னேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் ஒரு கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடன் விளையாடி(க் களித்தி)ட அவள் உம்முடன் விளையாடி(க் களித்தி)டலாமே!” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், ‘‘என் தந்தை; பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்; எனவே, குடும்ப அனுபவமுள்ள, சற்று வயதான பெண்ணை மணக்க நாடினேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அது சரிதான்” என்றார்கள்.

நாங்கள் மதீனாவுக்குச் சென்றதும் பிலால் (ரலி) அவர்களிடம், ‘‘இவருக்குக் கொடுப்பீராக! கொஞ்சம் அதிகமாகவும் கொடுப்பீராக!” என்று நபியவர்கள் கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் எனக்கு நான்கு பொற்காசுகளையும் அதிகமாக ஒரு ‘கீராத்’தையும் கொடுத்தார்கள்.

‘‘நபி (ஸல்) அவர்கள் அதிகமாக வழங்கிய(கீராத்தான)து என்னைவிட்டு (ஒரு போதும்) பிரியாது” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த ஒரு ‘கீராத்’, ஜாபிர் (ரலி) அவர்களின் பணப்பையைவிட்டுப் பிரிந்ததேயில்லை” என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்.6

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) உள்ளிட்டோர் அறிவித்தனர். ஆனால், சிலர் வேறு சிலரைவிடக் கூடுதலாக அறிவித்தனர். அவர்களில் யாரும் முழு ஹதீஸை மொத்தமாக அறிவிக்கவில்லை.

அத்தியாயம் : 40
2310. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ وَهَبْتُ لَكَ مِنْ نَفْسِي. فَقَالَ رَجُلٌ زَوِّجْنِيهَا. قَالَ "" قَدْ زَوَّجْنَاكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம் : 9 ஒரு பெண் தனக்குத் திருமணம் செய்துவைக்கும் உரிமையைத் தலைவருக்கு வழங்குதல்
2310. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன் (மணக்கொடை இல்லாமல் என்னை மணந்துகொள்ளுங்கள்)” என்றார். அங்கிருந்த ஒரு மனிதர் ‘‘இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்!” என்று கேட்டார். ‘‘உம்மிடமிருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு இவரை நாம் மணமுடித்துவைத்தோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 40
2311. وَقَالَ عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ أَبُو عَمْرٍو حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ، فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ، وَقُلْتُ وَاللَّهِ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ إِنِّي مُحْتَاجٌ، وَعَلَىَّ عِيَالٌ، وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ. قَالَ فَخَلَّيْتُ عَنْهُ فَأَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ "". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالاً فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ "" أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ "". فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّهُ سَيَعُودُ. فَرَصَدْتُهُ فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ، وَعَلَىَّ عِيَالٌ لاَ أَعُودُ، فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا أَبَا هُرَيْرَةَ، مَا فَعَلَ أَسِيرُكَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالاً، فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ "" أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ "". فَرَصَدْتُهُ الثَّالِثَةَ فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَهَذَا آخِرُ ثَلاَثِ مَرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ لاَ تَعُودُ ثُمَّ تَعُودُ. قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا. قُلْتُ مَا هُوَ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ {اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ} حَتَّى تَخْتِمَ الآيَةَ، فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ وَلاَ يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ. فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ، يَنْفَعُنِي اللَّهُ بِهَا، فَخَلَّيْتُ سَبِيلَهُ. قَالَ "" مَا هِيَ "". قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ {اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ} وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ وَلاَ يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ، وَكَانُوا أَحْرَصَ شَىْءٍ عَلَى الْخَيْرِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ، تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلاَثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ "". قَالَ لاَ. قَالَ "" ذَاكَ شَيْطَانٌ "".
பாடம் : 10 ஒருவர் மற்றொருவருக்குச் செயலுரிமை வழங்க, அந்த முகவர் ஒன்றைத் தவற விட்டுவிட்டால், செயலுரிமை வழங்கியவர் அதை அனுமதிக்கும்போது அது செல்லும்; குறிப்பிட்ட தவணைக்குக் கடனாக ஒன்றை முகவர் கொடுத்தாலும் (உரிமையாளர் சம்மதிக்கும்போது) செல்லும்.
2311. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் தர்மப் பொருட்களை (ஸதகத்துல் ஃபித்ர்) பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தார்கள். அப்போது ஒருவன் (இரவில்) வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவன், ‘‘நான் ஓர் ஏழை; எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, அவன்மீது இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; மீண்டும் அவன் வருவான்” என்றார்கள்.

‘மீண்டும் வருவான்’ என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காகக் காத்திருந்தேன். அவ்வாறே அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். ‘‘உன்னை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவன், ‘‘என்னை விட்டுவிடு! நான் ஓர் ஏழை; எனக்குக் குடும்பம் இருக்கிறது; இனி நான் வர மாட்டேன்” என்றான். அவன்மேல் இரக்கப் பட்டு அவனை விட்டுவிட்டேன்.

விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்ட வன் என்ன செய்தான்?” என்று கேட்டார் கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன். ‘‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்” என்றார்கள்.

மூன்றாம் தடவை அவனுக்காக நான் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, ‘‘உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்; (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன் என்று நீ சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக இப்போது மீண்டும் வந்திருக்கிறாய்” என்று கூறினேன்.

அதற்கு அவன், ‘‘என்னை விட்டுவிடும்! உமக்கு அல்லாஹ் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தருகிறேன்” என்றான். அதற்கு நான், ‘‘அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். ‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்’ என்று தொடங்கும் ‘ஆயத்துல் குர்சி’யை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; உம்மை ஷைத்தான் நெருங்கமாட்டான்” என்றான். அவனை நான் விட்டுவிட்டேன்.

விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கும் சில வார்த்தைகளைக் கற்றுத்தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்” என்றேன். ‘‘அந்த வார்த்தைகள் என்ன?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘ஆயத்துல் குர்சி’யை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு ஓதினால், விடியும்வரை அல்லாஹ்விவிடருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் அவன் கூறினான் எனத் தெரிவித்தேன்.

லிநபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக்கொண்டு செயல்படுத்துவ)தில் பேராவல் கொண்டவர்களாக இருந்தனர்லி அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும், உம்மிடம் அவன் உண்மையே சொல்லியிருக்கிறான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசிவருகிறீர் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ‘‘தெரியாது” என்றேன். ‘‘அவன்தான் ஷைத்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 40
2312. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ ـ هُوَ ابْنُ سَلاَّمٍ ـ عَنْ يَحْيَى، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ بِلاَلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِتَمْرٍ بَرْنِيٍّ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مِنْ أَيْنَ هَذَا "". قَالَ بِلاَلٌ كَانَ عِنْدَنَا تَمْرٌ رَدِيٌّ، فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعٍ، لِنُطْعِمَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ ذَلِكَ "" أَوَّهْ أَوَّهْ عَيْنُ الرِّبَا عَيْنُ الرِّبَا، لاَ تَفْعَلْ، وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعِ التَّمْرَ بِبَيْعٍ آخَرَ ثُمَّ اشْتَرِهِ "".
பாடம் : 11 முகவர் தவறான முறையில் ஒன்றை விற்றால், அந்த விற்பனை செல்லாது.
2312. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் ‘பர்னீ’ எனும் உயர்ரக பேரீச்சம்பழத்தைக் கொண்டுவந்தார்கள். அவர்களிடம் ‘‘இது எங்கிருந்து கிடைத் தது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார் கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், ‘‘எம்மிடம் மட்டமான பேரீச்சம் பழம் இருந்தது; அதில் இரு ‘ஸாஉ’களைக் கொடுத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக ஒரு ஸாஉ வாங்கினேன்” என்றார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! இனி இவ்வாறு செய்யாதீர்! நீர் (உயர்ரக பேரீச்சம்பழத்தை) வாங்க விரும்பினால், (உம்மிடம் இருக்கும்) பேரீச்சம்பழத்தைத் தனியாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக” என்றார்கள்.

அத்தியாயம் : 40
2313. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ فِي صَدَقَةِ عُمَرَ ـ رضى الله عنه ـ لَيْسَ عَلَى الْوَلِيِّ جُنَاحٌ أَنْ يَأْكُلَ وَيُؤْكِلَ صَدِيقًا {لَهُ} غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً، فَكَانَ ابْنُ عُمَرَ هُوَ يَلِي صَدَقَةَ عُمَرَ يُهْدِي لِلنَّاسِ مِنْ أَهْلِ مَكَّةَ، كَانَ يَنْزِلُ عَلَيْهِمْ.
பாடம் : 12 அறக்கொடை (வக்ஃப்) நிர்வாகத் திற்குச் செயலுரிமை வழங்குவதும் நிர்வாகி அதைச் செலவிடுவதும் அவர் முறையோடு தாமும் உண்டுதம் நண்பருக்கும் உணவளிப் பதும்
2313. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் செய்த அறக்கொடை தொடர்பாக அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறும்போது, ‘‘இதன் பொறுப்பாளர், செல்வத்தைக் கையாடல் செய்யாமல் தாம் உண்பதும் தம் தோழருக்கு உண்ணக்கொடுப்பதும் தவறில்லை” என்று (குறிப்பிடப்பட்டிருந்ததாகத்) தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் செய்த அறக் கொடைக்கு (அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ்) இப்னு உமர் (ரலி) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். மக்காவில் அவர்கள் வழக்கமாக யாரிடம் தங்குவார்களோ அவர்களுக்கு அதிலிருந்து அன்பளிப்பு வழங்குவார்கள்.

அத்தியாயம் : 40
2314. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، وَأَبِي، هُرَيْرَةَ رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " وَاغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ".
பாடம் : 13 குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்ற செயலுரிமை அளித்தல்
2314. 2315 ஸைத் பின் காலித் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உனைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றுவீராக” என்று கூறினார்கள்.7


அத்தியாயம் : 40
2316. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ جِيءَ بِالنُّعَيْمَانِ أَوِ ابْنِ النُّعَيْمَانِ شَارِبًا، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ فِي الْبَيْتِ أَنْ يَضْرِبُوا قَالَ فَكُنْتُ أَنَا فِيمَنْ ضَرَبَهُ، فَضَرَبْنَاهُ بِالنِّعَالِ وَالْجَرِيدِ.
பாடம் : 13 குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்ற செயலுரிமை அளித்தல்
2316. உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

போதையில் இருந்த ‘நுஐமான்’ அல்லது ‘அவருடைய மகன்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன். நாங்கள் காலணிகளாலும் பேரீச்ச மட்டையாலும் அவரை அடித்தோம்.

அத்தியாயம் : 40
2317. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ قَالَتْ، عَائِشَةُ ـ رضى الله عنها ـ أَنَا فَتَلْتُ، قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي، فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَىْءٌ أَحَلَّهُ اللَّهُ لَهُ حَتَّى نُحِرَ الْهَدْىُ.
பாடம் : 14 குர்பானி ஒட்டகங்களைக் கவனித் துக்கொள்ள செயலுரிமை வழங்குதல்
2317. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி (பலி) கொடுப்பதற்காக அனுப்பிவைத்த ஒட்டகங்களின் அடையாள மாலைகளை என் கைகளா லேயே நான் திரித்(துத் தயாரித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் கைகளால் அவற்றை (ஒட்டகங்களின் கழுத்தில்) தொங்கவிட்டார்கள். பிறகு அவற்றை என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்) உடன் (பலியிடுவதற்காக) அனுப்பினார்கள். (மக்காவில்) பலிப்பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்த எதுவும் அவர்கள்மீது விலக்கப்படவில்லை.

அத்தியாயம் : 40
2318. حَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالاً، وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بِيْرُ حَاءَ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدَ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ فَلَمَّا نَزَلَتْ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَىَّ بِيْرُ حَاءَ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ شِئْتَ، فَقَالَ "" بَخٍ، ذَلِكَ مَالٌ رَائِحٌ، ذَلِكَ مَالٌ رَائِحٌ. قَدْ سَمِعْتُ مَا قُلْتَ فِيهَا، وَأَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ "". قَالَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. تَابَعَهُ إِسْمَاعِيلُ عَنْ مَالِكٍ. وَقَالَ رَوْحٌ عَنْ مَالِكٍ رَابِحٌ.
பாடம் : 15 ஒருவர் தம் பகராளியிடம், உமக்கு அல்லாஹ் காட்டியபடி இ(ச் செல்வத்)தை வைத்து(ச் செலவிட்டு)க்கொள் என்று கூற, பகராளியும் நீங்கள் சொல்வதைச் செவியுற்றேன் என்று கூறி (அதன்படி செய லாற்றி)னால் (அது செல்லும்).
2318. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா அன்சாரிகளிலேயே செல்வராக இருந்தார்கள். அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு சென்று, அங்குள்ள சுவைநீரை அருந்துவது வழக்கம்.

இந்நிலையில், ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! உயர்ந்தோன் அல்லாஹ் தனது வேதத்தில், ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒரு போதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” என்று கூறுகின்றான்.

என் சொத்துக்களில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ எனும் இந்தத் தோட்டமேயாகும். (இனிமேல்,) இது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பிய விதத்தில் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நல்லது! அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! அது தொடர்பாக நீர் கூறியதை நான் செவியுற்றேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாக) கருதுகிறேன்” என்றார்கள்.

அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன்” எனக் கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (நன்மை கிடைத்துவிட்ட லிறராயிஹ்’ என்பதற்குப் பதிலாக) ‘இலாபம் தரும்’ (ராபிஹ்) என இடம்பெற்றுள்ளது.8

அத்தியாயம் : 40
2319. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَازِنُ الأَمِينُ الَّذِي يُنْفِقُ ـ وَرُبَّمَا قَالَ الَّذِي يُعْطِي ـ مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا، طَيِّبٌ نَفْسُهُ، إِلَى الَّذِي أُمِرَ بِهِ، أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ "".
பாடம் : 16 கருவூலம் போன்றவற்றில் நம்பிக்கையாளருக்குச் செயலுரிமை வழங்கல்
2319. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்குச் செலவிடக்கூடிய லிஅல்லது அதற்காக வழங்கக்கூடியலி நேர்மையான காசாளர், அதை முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் செலவிடும்போது தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவராவார்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9

அத்தியாயம் : 40

2320. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ "". وَقَالَ لَنَا مُسْلِمٌ حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 1 பயிரிடல், மரம் நடல் ஆகியவற்றின் சிறப்பு; அவற்றிலிருந்து உயிரினங் கள் உண்பதால். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்த துண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டி ருப்போம். (56:63லி65)
2320. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 41
2321. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الأَلْهَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ،، قَالَ ـ وَرَأَى سِكَّةً وَشَيْئًا مِنْ آلَةِ الْحَرْثِ، فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَدْخُلُ هَذَا بَيْتَ قَوْمٍ إِلاَّ أُدْخِلَهُ الذُّلُّ "". قَالَ أَبُو عَبْد اللَّهِ وَاسْمُ أَبِي أُمَامَةَ صُدَيُّ بْنُ عَجْلَانَ
பாடம் : 2 வேளாண் கருவிகளை (தவறாக)ப் பயன்படுத்துவது, (தொழில்களுக்கு) விதிக்கப்பட்டுள்ள எல்லையை மீறுவது ஆகியவற்றால் விளையும் தீமைகளைத் தவிர்த்தல்
2321. முஹம்மத் பின் ஸியாத் அல் அல்ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள், ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், ‘ யிஇந்தக் கருவி ஒரு சமுதாயத்தாரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச்செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.2

அபூஉமாமா (ரலி) அவர்களின் இயற் பெயர் ஸுதை பின் அஜ்லான் என்ப தாகும்.

அத்தியாயம் : 41
2322. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ، إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ "". قَالَ ابْنُ سِيرِينَ وَأَبُو صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" إِلاَّ كَلْبَ غَنَمٍ أَوْ حَرْثٍ أَوْ صَيْدٍ "". وَقَالَ أَبُو حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ "".
பாடம் : 3 விவசாயப் பண்ணையைப் பாதுகாத்திட நாய் வைத்திருப்பது (அனுமதிக்கப்பட்டதாகும்.)
2322. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவுக்கு (அவற்றின் நன்மை) குறைந்துபோய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய்விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.3

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது:

‘‘கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடு வதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:

‘‘கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக, அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 41
2323. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ ـ رَجُلاً مِنْ أَزْدِ شَنُوءَةَ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ اقْتَنَى كَلْبًا لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ "". قُلْتُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِي وَرَبِّ هَذَا الْمَسْجِدِ.
பாடம் : 3 விவசாயப் பண்ணையைப் பாதுகாத்திட நாய் வைத்திருப்பது (அனுமதிக்கப்பட்டதாகும்.)
2323. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அஸ்த் ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘ யிவிவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ பாதுகாக்கும் தேவை எதுவும் இன்றி எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவுக்கு (நன்மை) குறைந்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்” என்று சொன்னார்கள்.

நான், ‘‘இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?” என்று வினவினேன். சுஃப்யான் பின் அபீ ஸுஹைர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 41
2324. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا رَجُلٌ رَاكِبٌ عَلَى بَقَرَةٍ الْتَفَتَتْ إِلَيْهِ. فَقَالَتْ لَمْ أُخْلَقْ لِهَذَا، خُلِقْتُ لِلْحِرَاثَةِ، قَالَ آمَنْتُ بِهِ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَأَخَذَ الذِّئْبُ شَاةً فَتَبِعَهَا الرَّاعِي، فَقَالَ الذِّئْبُ مَنْ لَهَا يَوْمَ السَّبُعِ، يَوْمَ لاَ رَاعِيَ لَهَا غَيْرِي. قَالَ آمَنْتُ بِهِ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ "". قَالَ أَبُو سَلَمَةَ مَا هُمَا يَوْمَئِذٍ فِي الْقَوْمِ.
பாடம் : 4 மாடுகளை உழுவதற்காகப் பயன் படுத்துதல்
2324. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு மனிதர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்துகொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, யிநான் இதற்காக (சுமை சுமந்துசெல்வதற்காக) படைக்கப்படவில்லை; நிலத்தை உழுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறியது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம். மேலும், (ஒருமுறை) ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடலாயிற்று. அந்த ஆட்டை மேய்த்துக்கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, யிகொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக்கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்கமாட்டாú” என்று கூறியது. நானும், அபூபக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்” என்று கூறினார்கள்.

பிறகு, (இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த) அபூசலமா (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறிய அந்நாளில் அபூ பக்ரும் உமரும் அங்கு இருக்கவில்லை” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 41