224. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ.
பாடம் : 60 நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் சிறுநீர் கழித்தல்32
224. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து (அங்கு) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள்.

அத்தியாயம் : 4
225. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ رَأَيْتُنِي أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم نَتَمَاشَى، فَأَتَى سُبَاطَةَ قَوْمٍ خَلْفَ حَائِطٍ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ، فَانْتَبَذْتُ مِنْهُ، فَأَشَارَ إِلَىَّ فَجِئْتُهُ، فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ.
பாடம் : 61 மற்றவர் அருகில் சிறுநீர் கழிப்ப தும் சுவரால் மறைத்துக்கொள் வதும்
225. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னா லிருந்த ஒரு கூட்டத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து. (சாதாரணமாக) உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று நின்று சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களை விட்டு சற்று ஒதுங்கிச் சென்றேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை(த் தம்மிடம் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் வந்து அவர்கள் தமது தேவையை நிறைவேற்றும் வரை அவர்களுக்குப் பின்பக்கம் (ஒரு மறைப்பாக) நின்றுகொண்டிருந்தேன்.

அத்தியாயம் : 4
226. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ كَانَ أَبُو مُوسَى الأَشْعَرِيُّ يُشَدِّدُ فِي الْبَوْلِ وَيَقُولُ إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ ثَوْبَ أَحَدِهِمْ قَرَضَهُ. فَقَالَ حُذَيْفَةُ لَيْتَهُ أَمْسَكَ، أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا.
பாடம் : 62 ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழியில் சிறுநீர் கழித்தல்
226. அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பவர்களாய் இருந்தார்கள். “பனூ இஸ்ராயீல் மக்களில் ஒருவரது ஆடையில் சிறுநீர் பட்டுவிட்டால், அவர் அந்தப் பாகத்தைக் கத்தரித்துவிடுவார்” எனக் கூறுவார்கள்.

இதைக் கேள்விப்பட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அவர் இந்தப் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்கு வந்து நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 4
227. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَتْنِي فَاطِمَةُ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ جَاءَتِ امْرَأَةٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ أَرَأَيْتَ إِحْدَانَا تَحِيضُ فِي الثَّوْبِ كَيْفَ تَصْنَعُ قَالَ "" تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، وَتَنْضَحُهُ وَتُصَلِّي فِيهِ "".
பாடம் : 63 இரத்த(ம் பட்ட இட)த்தைக் கழுவுதல்
227. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களில் ஒரு பெண்ணின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால், அவள் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இரத்தம் பட்டுக் காய்ந்துவிட்ட) அந்த இடத்தை அவள் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீர் விட்டுக் கசக்கிக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் அவள் தொழுதுகொள்ளலாம்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 4
228. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ ابْنَةُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي "". قَالَ وَقَالَ أَبِي "" ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الْوَقْتُ "".
பாடம் : 63 இரத்த(ம் பட்ட இட)த்தைக் கழுவுதல்
228. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் ஒரு பெண் ஆவேன்; (தொடர்ந்து உதிரம் கசிவதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை; (தொழுகையை விட்டுவிடாதே!) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; (கர்ப்பப் பையிலிருந்து வரும்) மாதவிடாய் இரத்தமன்று. எனவே, உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; அது நின்றுவிட்டால் இரத்தத்தைக் கழுவி (குளித்து)விட்டுத் தொழுதுகொள்” என்று கூறினார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் (அப் பெண்மணியிடம்), “பின்னர் அடுத்த மாதவிடாய் காலம் வரும்வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்” என்றும் சொன்னார்கள்.

அத்தியாயம் : 4
229. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ الْجَزَرِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْسِلُ الْجَنَابَةَ مِنْ ثَوْبِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَإِنَّ بُقَعَ الْمَاءِ فِي ثَوْبِهِ.
பாடம் : 64 இந்திரிய(ம் பட்ட இட)த்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டி விடுவதும், பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும்
229. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் ஆடை யில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவு வேன். (அந்த ஆடையோடு) நபி (ஸல்) அவர்கள் தொழச் செல்வார்கள். அவர் களின் ஆடையில் ஈரம் அப்படியே இருக்கும்.


அத்தியாயம் : 4
230. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْمَنِيِّ، يُصِيبُ الثَّوْبَ فَقَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَأَثَرُ الْغَسْلِ فِي ثَوْبِهِ بُقَعُ الْمَاءِ.
பாடம் : 64 இந்திரிய(ம் பட்ட இட)த்தைக் கழுவுவதும், அதைச் சுரண்டி விடுவதும், பெண்ணிடமிருந்து படுவதைக் கழுவுவதும்
230. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தை நான் கழுவுவேன். (அந்த ஆடையோடு) அவர்கள் தொழுகைக்காகச் செல்வார்கள். கழுவிய அடையாளம் -ஈரம்- அவர்களின் ஆடையில் காணப்படும் என்று கூறினார்கள்

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 4
231. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ، قَالَ سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ فِي الثَّوْبِ تُصِيبُهُ الْجَنَابَةُ قَالَ قَالَتْ عَائِشَةُ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَأَثَرُ الْغَسْلِ فِيهِ بُقَعُ الْمَاءِ.
பாடம் : 65 இந்திரியம் முத-யவை பட்ட இடத்தைக் கழுவிய பின்னரும் அதன் அடையாளம் அழிய வில்லையென்றால் (என்ன செய்ய வேண்டும்)?
231. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் இந்திரியம் பட்டுவிட்ட ஆடையைப் பற்றி (அதைச் சுத்தம் செய்வது குறித்து)க் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்கள், ‘நான் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். பின்னர் (அந்த ஆடையோடு) அவர்கள் தொழுகைக்காகச் செல்வார்கள். கழுவிய அடையாளம் -ஈரம்- அவர்களது ஆடையில் அப்படியே இருக்கும்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.


அத்தியாயம் : 4
232. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ النَّبِيِّ صلى الله عليه وسلم، ثُمَّ أَرَاهُ فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا.
பாடம் : 65 இந்திரியம் முத-யவை பட்ட இடத்தைக் கழுவிய பின்னரும் அதன் அடையாளம் அழிய வில்லையென்றால் (என்ன செய்ய வேண்டும்)?
232. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவியதாகவும் பிறகு அதே ஆடையில் ஓரிரு இடங்களில் அதன் ஈரத்(தின் அடையாளத்)தைப் பார்த்ததாகவும் கூறினார்கள்.

அத்தியாயம் : 4
233. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوُا الْمَدِينَةَ، فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلِقَاحٍ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَاسْتَاقُوا النَّعَمَ، فَجَاءَ الْخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ، فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ، فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسُمِرَتْ أَعْيُنُهُمْ، وَأُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلاَ يُسْقَوْنَ. قَالَ أَبُو قِلاَبَةَ فَهَؤُلاَءِ سَرَقُوا وَقَتَلُوا وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ.
பாடம் : 66 ஒட்டகம், ஆடு மற்றும் பிற கால்நடைகளின் சிறுநீரும் ஆட்டுத் தொழுவமும் அபூமூசா (ரலி) அவர்கள் (கூஃபாவில் உள்ள) ‘தாருல் பரீத்’ எனும் இடத்தில் தொழுதார்கள். சாணமும் காலியான இடமும் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தன. தொழுது முடித்த பிறகு (சாணமிருந்த இடத்தையும் காலியான இடத்தையும் சுட்டிக்காட்டி) இந்த இடமும் அந்த இடமும் சமம்தான் (இரண்டும் சுத்தமான இடங்களே)” என்றார்கள்.
233. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘உக்ல்’ அல்லது ‘உரைனா’ குலத் தாரில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, (அவர் களின் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகிக்கொள்ளு மாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறியதும் நபி (ஸல்) அவர்களின் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டனர்; ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர்.

முற்பகல் வேளையில் இந்தச் செய்தி (நபி (ஸல்) அவர்களிடம்) வரவே, அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பிடித்துவர ஒரு) படைப் பிரிவை அனுப்பிவைத்தார்கள். நண்பகல் நேரத்தில் அவர்கள் (பிடித்துக்) கொண்டுவரப் பட்டார்கள். அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டிக்கச் செய்தார்கள். அவர்களின் கண்களில் சூடிடப்பட்டது. பிறகு (மதீனா புறநகரான பாறைகள் மிகுந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் அவர்கள் போடப்பட்டனர். அவர்கள் (நா வறண்டு) தண்ணீர் கேட்டும் அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.

அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இவர்கள் (பொதுமக்களுக்குரிய ஒட்டகங்களைத்) திருடினார்கள்; (ஒட்டக மேய்ப்பரைக்) கொலை செய்தார்கள்; இறைநம்பிக்கை கொண்ட பின்னர் இறை மறுப்பாளர்களாய் மாறினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள். (இத்தகைய கொடுஞ்செயல் புரிந்ததால்தான் அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை அளிக்க நேர்ந்தது.)


அத்தியாயம் : 4
234. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنَا أَبُو التَّيَّاحِ، يَزِيدُ بْنُ حُمَيْدٍ عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ أَنْ يُبْنَى الْمَسْجِدُ فِي مَرَابِضِ الْغَنَمِ.
பாடம் : 66 ஒட்டகம், ஆடு மற்றும் பிற கால்நடைகளின் சிறுநீரும் ஆட்டுத் தொழுவமும் அபூமூசா (ரலி) அவர்கள் (கூஃபாவில் உள்ள) ‘தாருல் பரீத்’ எனும் இடத்தில் தொழுதார்கள். சாணமும் காலியான இடமும் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தன. தொழுது முடித்த பிறகு (சாணமிருந்த இடத்தையும் காலியான இடத்தையும் சுட்டிக்காட்டி) இந்த இடமும் அந்த இடமும் சமம்தான் (இரண்டும் சுத்தமான இடங்களே)” என்றார்கள்.
234. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) பள்ளிவாசல் கட்டப்படு வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழு வார்கள்.33

அத்தியாயம் : 4
235. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ فَقَالَ "" أَلْقُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ. وَكُلُوا سَمْنَكُمْ "".
பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்துவிட்டால்... (என்ன சட்டம்?) முஹம்மத் பின் முஸ்-ம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(ஒரு அசுத்த மான பொருளின்) சுவையோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றிவிடாம-ருக்கும்வரை தண்ணீரில் குறையில்லை” என்று கூறியுள்ளார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) குறையில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.) இறந்துவிட்ட யானை போன்ற மிருகங்களின் எலும்புகள் விஷயத்தில் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் அவற்றின் எலும்பு களால் தலைவாரிக்கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக்கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதைக் குற்றமென அவர்கள் கருதவில்லை” என்று தெரிவிக்கிறார்கள். முஹம்மத் பின் சீரீன், இப்ராஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், “யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்ற மாகாது” எனக் கூறியுள்ளனர்.
235. மைமூனா (பின்த் ஹாரிஸ்-ர-) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்துவிட்ட எ- குறித்து வினவப்பட்டது. அதற்கு “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (உடனே) எடுத்து எறிந்து விடுங்கள்; உங்கள் நெய்யைச் சாப்பிடுங் கள்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 4
236. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ فَقَالَ "" خُذُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ "". قَالَ مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ مَا لاَ أُحْصِيهِ يَقُولُ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ.
பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்துவிட்டால்... (என்ன சட்டம்?) முஹம்மத் பின் முஸ்-ம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(ஒரு அசுத்த மான பொருளின்) சுவையோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றிவிடாம-ருக்கும்வரை தண்ணீரில் குறையில்லை” என்று கூறியுள்ளார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) குறையில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.) இறந்துவிட்ட யானை போன்ற மிருகங்களின் எலும்புகள் விஷயத்தில் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் அவற்றின் எலும்பு களால் தலைவாரிக்கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக்கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதைக் குற்றமென அவர்கள் கருதவில்லை” என்று தெரிவிக்கிறார்கள். முஹம்மத் பின் சீரீன், இப்ராஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், “யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்ற மாகாது” எனக் கூறியுள்ளனர்.
236. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்டது. அதற்கு அவர்கள், “அந்த எ-யையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து (உடனே) எறிந்துவிடுங்கள் (மீதி நெய்யைச் சாப்பிடுங்கள்)” என்று பதிலளித் தார்கள்.

மஅன் (பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை மா-க் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து எண்ணற்ற முறை எமக்கு அறிவித்துள்ளார்கள்.


அத்தியாயம் : 4
237. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّ كَلْمٍ يُكْلَمُهُ الْمُسْلِمُ فِي سَبِيلِ اللَّهِ يَكُونُ يَوْمَ الْقِيَامَةِ كَهَيْئَتِهَا إِذْ طُعِنَتْ، تَفَجَّرُ دَمًا، اللَّوْنُ لَوْنُ الدَّمِ، وَالْعَرْفُ عَرْفُ الْمِسْكِ "".
பாடம் : 67 நெய்யிலோ தண்ணீரிலோ அசுத்தமான பொருட்கள் விழுந்துவிட்டால்... (என்ன சட்டம்?) முஹம்மத் பின் முஸ்-ம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “(ஒரு அசுத்த மான பொருளின்) சுவையோ வாடையோ நிறமோ தண்ணீரை மாற்றிவிடாம-ருக்கும்வரை தண்ணீரில் குறையில்லை” என்று கூறியுள்ளார்கள். ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்துபோன பறவைகளின் இறகுகள் (தண்ணீரில் விழுவதால்) குறையில்லை; (அதனால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது.) இறந்துவிட்ட யானை போன்ற மிருகங்களின் எலும்புகள் விஷயத்தில் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “நான் மூத்த அறிஞர்கள் பலரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் அவற்றின் எலும்பு களால் தலைவாரிக்கொள்வார்கள்; எண்ணெய் வைத்துக்கொள்வார்கள். அதைப் பயன்படுத்துவதைக் குற்றமென அவர்கள் கருதவில்லை” என்று தெரிவிக்கிறார்கள். முஹம்மத் பின் சீரீன், இப்ராஹீம் அந்நநகஈ (ரஹ்) ஆகியோர், “யானைத் தந்தத்தை வியாபாரம் செய்வது குற்ற மாகாது” எனக் கூறியுள்ளனர்.
237. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்-முக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயமும், தாக்கப்பட்டபோது இருந்த அதே கோலத்தைப் போன்றே மறுமை நாளில் இரத்தம் பீறிட்ட நிலையில் இருக்கும். அந்த நிறம் இரத்தத்தின் நிறத்தில் இருக்கும்; அதன் வாடையோ கஸ்தூரி வாடையாக இருக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 4
238. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ "".
பாடம் : 68 தேங்கியிருக்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்
238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (மறுமையில் தகுதியால்) முந்தியவர் களாகவும் உள்ளோம்.


அத்தியாயம் : 4
239. وَبِإِسْنَادِهِ قَالَ "" لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ "".
பாடம் : 68 தேங்கியிருக்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்
239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் யாரும் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம்; பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம்.

மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அத்தியாயம் : 4
240. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدٌ ح قَالَ وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ قَالَ حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ مَيْمُونٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي عِنْدَ الْبَيْتِ، وَأَبُو جَهْلٍ وَأَصْحَابٌ لَهُ جُلُوسٌ، إِذْ قَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ أَيُّكُمْ يَجِيءُ بِسَلَى جَزُورِ بَنِي فُلاَنٍ فَيَضَعُهُ عَلَى ظَهْرِ مُحَمَّدٍ إِذَا سَجَدَ فَانْبَعَثَ أَشْقَى الْقَوْمِ فَجَاءَ بِهِ، فَنَظَرَ حَتَّى إِذَا سَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَضَعَهُ عَلَى ظَهْرِهِ بَيْنَ كَتِفَيْهِ وَأَنَا أَنْظُرُ، لاَ أُغَيِّرُ شَيْئًا، لَوْ كَانَ لِي مَنْعَةٌ. قَالَ فَجَعَلُوا يَضْحَكُونَ وَيُحِيلُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدٌ لاَ يَرْفَعُ رَأْسَهُ، حَتَّى جَاءَتْهُ فَاطِمَةُ، فَطَرَحَتْ عَنْ ظَهْرِهِ، فَرَفَعَ رَأْسَهُ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ "". ثَلاَثَ مَرَّاتٍ، فَشَقَّ عَلَيْهِمْ إِذْ دَعَا عَلَيْهِمْ ـ قَالَ وَكَانُوا يُرَوْنَ أَنَّ الدَّعْوَةَ فِي ذَلِكَ الْبَلَدِ مُسْتَجَابَةٌ ـ ثُمَّ سَمَّى "" اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ، وَعَلَيْكَ بِعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ "". وَعَدَّ السَّابِعَ فَلَمْ يَحْفَظْهُ قَالَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ رَأَيْتُ الَّذِينَ عَدَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَرْعَى فِي الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ.
பாடம் : 69 தொழுதுகொண்டிருப்பவரின் முதுகில் அசுத்தமான பொருளோ செத்த பிராணிகளோ போடப்படுமானால் அதனால் அவரது தொழுகை வீணாகிவிடாது. இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது தமது ஆடையில் இரத்தம் இருப்பதைக் கண்டுவிட்டால், (தொழுகையில் இருந்தவாறே) அதைக் கழற்றி வைத்துவிட்டுத் தமது தொழுகை யைத் தொடர்வார்கள். “தமது ஆடையில் இரத்தமோ இந்திரியமோ இருக்க (அது தெரியாமல்) ஒருவர் தொழுதார். அல்லது ‘கிப்லா’ திசை அல்லாத வேறு திசையில் தொழுதார் (என்று பிறகு தெரியவந்தது). அல்லது ‘தயம்மும்’ செய்து தொழுது முடித்தார். பிறகு அதே நேரத்திற்குள் அவருக்குத் தண்ணீர் கிடைத்துவிட்டது. இந்நிலை களில் அவர் தொழுகையைத் திரும்பத் தொழ வேண்டியதில்லை” என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), ஷஅபீ (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர்.
240. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் (கஅபா) அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அவனுடைய சகாக்களும் (அங்கே) அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரிடம், “இறைச்சிக்காக அறுக்கப் பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள சவ்வைக் கொண்டு வந்து முஹம்மத் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது அவரது முதுகின் மீது வைப்பவர் யார்?” என்று கேட்டனர்.

அக்கூட்டத்திலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் புறப்பட்டுச் சென்று, அதைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் நேரம் பார்த்து அவர்களின் இரு தோள்களுக்கிடையில் முதுகின் மீது போட்டான். இதையெல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது எனக்கு (மட்டும்) உதவக் கூடியவர்கள் இருந்திருந்தால் (அதை நான் தடுத்திருப்பேன்.)

இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டி ருந்த (அபூஜஹ்லும் சகாக்களும்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தாமல் சஜ்தாவிலேயே இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்களின் புதல்வி, சிறுமி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அவர்களின் முதுகி-ருந்து அவற்றைத் தூக்கி வீசும் வரையில் (அப்படியே இருந்தார்கள்).

பிறகு தமது தலையை உயர்த்தி, “இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்” என்று மூன்று முறை பிராத்தித் தார்கள். தங்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிராத்தனை புரிந்தது குறைஷி யருக்கு மனவேதனை அளித்தது. (காரணம்,) அந்த (மக்கா) நகரில் செய்யப் படும் பிராத்தனை ஏற்கப்படும் என்று அவர்களும் நம்பிக்கை வைத்திருந்தனர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந் தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, “இறைவா! அபூஜஹ்லை நீ கவனித்துக் கொள்வாயாக! உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் ஆகியோரைக் கவனித்துக்கொள்வாயாக!” என்று (அறுவரின் பெயர் குறிப்பிட்டு) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார்:

ஏழாவது நபரின் பெயரையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நாங்கள் மறந்துவிட்டோம்.

தொடர்ந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் (பத்ர் போரில்) கொல்லப்பட்டு ‘கலீபு பத்ர்’ எனும் அந்தப் பாழும் கிணற்றில் கிடந்ததை நான் பார்த்தேன்.

அத்தியாயம் : 4
241. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ بَزَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ثَوْبِهِ. طَوَّلَهُ ابْنُ أَبِي مَرْيَمَ قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي حُمَيْدٌ قَالَ سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 70 ஆடையில் எச்சில், மூக்குச் சளி போன்றவை படுதல் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “ஹுதைபியா உடன்படிக்கை நடை பெற்ற காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள்” என்று கூறிவிட்டு, பின்வரும் செய்தியை மிஸ்வர் (ரலி), மர்வான் பின் ஹகம் ஆகியோர் கூறினர்: நபி (ஸல்) அவர்கள் உமிழ்ந்தால் அதை (கீழே விழ விடாமல்) அவருடைய தோழர்களில் ஒருவர் தமது கையில் ஏந்திக்கொண்டார். அதை அவர் தம் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக் கொண்டார்.34
241. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையில் உமிழ்ந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் பின் அபீமர்யம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்த ஹதீஸ் நீளமாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 4
242. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ "".
பாடம் : 71 பழச்சாறு, போதையூட்டும் பானம் ஆகியவற்றால் அங்கத் தூய்மை செய்வது கூடாது. இவற்றால் அங்கத் தூய்மை செய்வதை ஹசன் அல்பஸ்ரீ, அபுல்ஆ-யா (ரஹ்) ஆகியோர் வெறுக்கத் தக்க செயலாகக் கருதினர். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், “(தண்ணீர் கிடைக்காதபோது) பழச்சாறு, பால் ஆகியவற்றால் அங்கத் தூய்மை செய்வதைவிட, ‘தயம்மும்’ செய்வதே எனக்கு மிகவும் விருப்ப மானதாகும்” என்று கூறினார்கள்.
242. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போதை தரும் (தன்மை உள்ள) எல்லாப் பானங்களும் தடை செய்யப் பட்டவை ஆகும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 4
243. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ،، وَسَأَلَهُ النَّاسُ، وَمَا بَيْنِي وَبَيْنَهُ أَحَدٌ بِأَىِّ شَىْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَ عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ فَحُشِيَ بِهِ جُرْحُهُ.
பாடம் : 72 ஒரு பெண் தன் தந்தையின் முகத்திருந்து இரத்தத்தைக் கழுவுதல் அபுல்ஆ-யா (அர்ரியாஹீ-ரஹ்) அவர்கள், “எனது (ஒரு) கால்மீது (ஈரக் கையால்) தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து)விடுங்கள். ஏனெனில், அதில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.
243. அபூஹாஸிம் (சலமா பின் தீனார்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம், “(உஹுதுப் போரில்) நபி (ஸல்) அவர்களின் காயத்திற்கு எது மருந்தாக இடப்பட்டது?” என்று மக்கள் கேட்டார்கள்.

அப்போது எனக்கும் (அறிவிப்பாளர் அபுல்ஆலியா) சஹ்ல் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறு யாரும் இருக்கவில்லை (அந்த அளவுக்கு நெருக்கமாக நாங்கள் இருவரும் இருந்தோம்.)- அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “இதைப் பற்றி என்னைவிட அறிந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவர, ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்தி-ருந்து இரத்தத்தைக் கழுவிக்கெண்டிருந்தார்கள். (கட்டுக் கடங்காமல் இரத்தம் வழியவே ஒரு ஈச்சம்) பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. (பிறகு கரிக்கப்பட்ட) பாயி(ன் சாம்ப-)னை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 4