1853. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ أَنَّ امْرَأَةً، ح.
பாடம் : 23 வாகனத்தில் அமர முடியாத வருக்காக மற்றவர் ஹஜ் செய்தல்
1853. 1854 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘கஸ்அம்’ எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்) விடைபெறும் ஹஜ்ஜின்போது வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள்மீது விதியாக்கியுள்ள ஹஜ் கடமை முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவர் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறை வேறுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.

அத்தியாயம் : 28
1855. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمٍ، فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَتَنْظُرُ إِلَيْهِ فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ، فَقَالَتْ إِنَّ فَرِيضَةَ اللَّهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ قَالَ "" نَعَمْ "". وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ.
பாடம் : 24 ஆணுக்காகப் பெண் ஹஜ் செய்தல்
1855. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்திற்குப் பின்னால் ஃபள்ல் (ரலி) அவர்கள் அமர்ந்திருத்தார்கள். அப்போது ‘கஸ்அம்’ எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்தார். ஃபள்ல் (ரலி) அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கலானார்கள். அப்பெண்ணும் அவர்களைப் பார்த்தார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பினார்கள்.

அப்போது அப்பெண்மணி, “அல்லாஹ் விதித்த (ஹஜ்) கடமை என் தந்தைக்கு ஏற்பட்டுவிட்டது; அவர் வாகனத்தில் அமர முடியாத முதியவராக இருக்கிறார்; அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார் கள். இது விடைபெறும் ஹஜ்ஜின்போது நடந்ததாகும்.11

அத்தியாயம் : 28
1856. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَعَثَنِي ـ أَوْ قَدَّمَنِي ـ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الثَّقَلِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1856. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா)விலிருந்து (மினாவுக்கு) பயணச் சுமைகளுடன் என்னை இரவி லேயே அனுப்பிவைத்தார்கள்.


அத்தியாயம் : 28
1857. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَقْبَلْتُ وَقَدْ نَاهَزْتُ الْحُلُمَ، أَسِيرُ عَلَى أَتَانٍ لِي، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي بِمِنًى، حَتَّى سِرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ الأَوَّلِ، ثُمَّ نَزَلْتُ عَنْهَا فَرَتَعَتْ، فَصَفَفْتُ مَعَ النَّاسِ وَرَاءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ بِمِنًى فِي حَجَّةِ الْوَدَاعِ.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1857. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பெட்டைக் கழுதையின் மேல் ஏறி (ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டேன். -அப்போது நான் பருவ வயதை நெருங் கிக்கொண்டிருந்தேன்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். முதல் வரிசைக்கு முன்னால் வாகனத்தை ஓட்டிச் சென்று இறங்கினேன். அது மேயத் துவங்கியது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மக்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டேன்.

இது விடைபெறும் ஹஜ்ஜின்போது மினாவில் நடந்ததாகும் என மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.


அத்தியாயம் : 28
1858. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يُونُسَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ حُجَّ بِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1858. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.


அத்தியாயம் : 28
1859. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنِ الْجُعَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، يَقُولُ لِلسَّائِبِ بْنِ يَزِيدَ، وَكَانَ قَدْ حُجَّ بِهِ فِي ثَقَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1859. ஜுஅய்த் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் குறித்து, அன்னார் நபி (ஸல்) அவர் களுடைய (ஹஜ்ஜின்போது, அவர்களின்) பயணச் சுமைகளுடன் ஹஜ்ஜுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்” என்று உமர் பின் அப்தில் அஸீல் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

அத்தியாயம் : 28
1860. وَقَالَ لِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَذِنَ عُمَرُ ـ رضى الله عنه ـ لأَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا، فَبَعَثَ مَعَهُنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ.
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1860. இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், தாம் செய்த இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு (ஹஜ் செய்ய) அனுமதி வழங்கினார்கள். அவர்களுடன் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களையும் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களையும் அனுப்பிவைத்தார்கள்.


அத்தியாயம் : 28
1861. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ، قَالَ حَدَّثَتْنَا عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَغْزُوا وَنُجَاهِدُ مَعَكُمْ فَقَالَ "" لَكُنَّ أَحْسَنُ الْجِهَادِ وَأَجْمَلُهُ الْحَجُّ، حَجٌّ مَبْرُورٌ "". فَقَالَتْ عَائِشَةُ فَلاَ أَدَعُ الْحَجَّ بَعْدَ إِذْ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1861. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! (பெண் களாகிய) நாங்கள் யுத்தத்திலும் அறப் போரிலும் உங்களுடன் சேர்ந்துகொள்ளக் கூடாதா?” என்று கேட்டேன்; அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பெண்களுக்கு) சிறந்த, அழகிய அறப் போர் (ஜிஹாத்), (பாவச்செயல் எதுவும் கலவாத) ஏற்றுக்கொள்ளப்படும் ஹஜ் ஆகும்” என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.


அத்தியாயம் : 28
1862. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُسَافِرِ الْمَرْأَةُ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ، وَلاَ يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلاَّ وَمَعَهَا مَحْرَمٌ "". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي تُرِيدُ الْحَجَّ. فَقَالَ "" اخْرُجْ مَعَهَا "".
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1862. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மணமுடிக்கத் தகாத ஆண் (மஹ்ரம்) துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போதுதான் (மற்ற) ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ் வின் தூதரே! நான் இன்னின்ன இராணுவப் பிரிவுடன் புறப்பட எண்ணி யிருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக!” என்றார்கள்.


அத்தியாயம் : 28
1863. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حَجَّتِهِ قَالَ لأُمِّ سِنَانٍ الأَنْصَارِيَّةِ "" مَا مَنَعَكِ مِنَ الْحَجِّ "". قَالَتْ أَبُو فُلاَنٍ ـ تَعْنِي زَوْجَهَا ـ كَانَ لَهُ نَاضِحَانِ، حَجَّ عَلَى أَحَدِهِمَا، وَالآخَرُ يَسْقِي أَرْضًا لَنَا. قَالَ "" فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً مَعِي "". رَوَاهُ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1863. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்மு சினான் அல்அன்சாரியா என்ற பெண்மணியிடம், “நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “என் கணவரே காரணம்; அவருக்குத் தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் உள்ளன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக் குச் சென்றுவிட்டார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் இறைத்துக்கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)’ என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னுடன் ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஜாபிர் (ரலி) அவர்களும் இவ்வாறே அறிவித்துள் ளார்கள்.


அத்தியாயம் : 28
1864. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ ـ وَقَدْ غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ ـ غَزْوَةً ـ قَالَ أَرْبَعٌ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ قَالَ يُحَدِّثُهُنَّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي "" أَنْ لاَ تُسَافِرَ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمَيْنِ لَيْسَ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي، وَمَسْجِدِ الأَقْصَى "".
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1864. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் பிடித்தவை; விருப்பமானவை. (அவை:) “கணவனோ மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினரோ (மஹ்ரம்) இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது.

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது. அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும்வரை, சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும்வரை எந்தத் தொழுகையும் தொழக் கூடாது. மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா), எனது பள்ளிவாசல் (மஸ்ஜிதந் நபவீ), (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி) (புனித)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது!”

அபூசயீத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று (அறிவிப் பாளர்களில் ஒருவரான) கஸஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 28
1865. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، قَالَ حَدَّثَنِي ثَابِتٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ قَالَ "" مَا بَالُ هَذَا "". قَالُوا نَذَرَ أَنْ يَمْشِيَ. قَالَ "" إِنَّ اللَّهَ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ لَغَنِيٌّ "". وَأَمَرَهُ أَنْ يَرْكَبَ.
பாடம் : 27 கஅபாவரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தல்
1865. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக் கிடையே தொங்கியபடி (கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்” என்று மக்கள் கூறி னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.


அத்தியாயம் : 28
1866. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ، إِلَى بَيْتِ اللَّهِ، وَأَمَرَتْنِي أَنْ أَسْتَفْتِيَ لَهَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَفْتَيْتُهُ، فَقَالَ عَلَيْهِ السَّلاَمُ "" لِتَمْشِ وَلْتَرْكَبْ "". قَالَ وَكَانَ أَبُو الْخَيْرِ لاَ يُفَارِقُ عُقْبَةَ. قَالَ أَبُو عَبْد اللَّهِ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ عَنْ يَزِيدَ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ عُقْبَةَ فَذَكَرَ الْحَدِيثَ
பாடம் : 27 கஅபாவரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தல்
1866. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் சகோதரி கஅபாவரை (காலணி அணியாமல்) நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு எனக்கு உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக்கொள்ளட்டும்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அபுல்கைர் (ரஹ்) அவர்கள், அன்னாரைவிட்டு இணைபிரியாதவராக (நேரடியாக நபிமொழிகளைக் கேட்பவராக) இருந்தார்.

அத்தியாயம் : 28

1867. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ أَبُو عَبْدِ الرَّحْمَنِ الأَحْوَلُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمَدِينَةُ حَرَمٌ، مِنْ كَذَا إِلَى كَذَا، لاَ يُقْطَعُ شَجَرُهَا، وَلاَ يُحْدَثُ فِيهَا حَدَثٌ، مَنْ أَحْدَثَ حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ "".
பாடம் : 1 மதீனாவின் புனிதம்
1867. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனா நகரம் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்!2 இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத் தில் இல்லாத) புதிய செயல் எதுவும் உருவாக்கப்படக் கூடாது. யார் (மார்க்கத் தில் இல்லாத) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை உருவாக்குகிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 29
1868. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ فَأَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ "" يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي "". فَقَالُوا لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ. فَأَمَرَ بِقُبُورِ الْمُشْرِكِينَ، فَنُبِشَتْ، ثُمَّ بِالْخِرَبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ.
பாடம் : 1 மதீனாவின் புனிதம்
1868. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளை யிட்டார்கள்; “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! (உங்கள் தோட்டத்தை) எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்” என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தார் “இதற்கான விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

(அவ்விடத்திலிருந்த) இணைவைப் பாளர்களின் சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ் வாறே அவை தோண்டப்பட்டன. அவர் களின் கட்டளைப்படியே இடிபாடுகள் (அகற்றப்பட்டு) சமப்படுத்தப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; பள்ளிவாசலின் கிப்லா திசையில், (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித் தோழர்கள்) நட்டனர்.


அத்தியாயம் : 29
1869. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" حُرِّمَ مَا بَيْنَ لاَبَتَىِ الْمَدِينَةِ عَلَى لِسَانِي "". قَالَ وَأَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَنِي حَارِثَةَ فَقَالَ "" أَرَاكُمْ يَا بَنِي حَارِثَةَ قَدْ خَرَجْتُمْ مِنَ الْحَرَمِ "". ثُمَّ الْتَفَتَ، فَقَالَ "" بَلْ أَنْتُمْ فِيهِ "".
பாடம் : 1 மதீனாவின் புனிதம்
1869. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மதீனாவின் இரு கருங்கல் மலை களுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவால் (என் வாயிலாக) புனிதமாக்கப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மதீனாவின் மேட்டுப் பகுதியில் வசித்த) பனூ ஹாரிஸா குலத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று, “பனூ ஹாரிஸா குலத்தாரே! நீங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு வெளியே இருப்பதாகவே கருதுகிறேன்” என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு, “இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்” என்றார்கள்.


அத்தியாயம் : 29
1870. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ مَا عِنْدَنَا شَىْءٌ إِلاَّ كِتَابُ اللَّهِ، وَهَذِهِ الصَّحِيفَةُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" الْمَدِينَةُ حَرَمٌ، مَا بَيْنَ عَائِرٍ إِلَى كَذَا، مَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا، أَوْ آوَى مُحْدِثًا، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ "". وَقَالَ "" ذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ، وَمَنْ تَوَلَّى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ "".
பாடம் : 1 மதீனாவின் புனிதம்
1870. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் வேதத்தையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (நாம் படிக்கின்ற நூல்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை. (இந்த ஏட்டில் உள்ளதாவது): “ஆயிர் (அய்ர்) என்ற மலையிலிருந்து இன்ன இடம் (‘ஸவ்ர்’ அல்லது ‘உஹுத்’)வரை மதீனா புனித மானதாகும்;3 இதில் யாரேனும் (மார்க்கத் தில் இல்லாத) ஒன்றைப் புதிதாக ஏற்படுத் தினால், அல்லது அவ்வாறு ஏற்படுத்துப வருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் அவன்மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வழிபாடோ, கூடுதலான வழிபாடோ அவனிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது.

முஸ்லிம்களில் யார் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானது) ஆகும். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்! அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ ஏற்றுக்கொள்ளப்படாது.

விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன், தன்(னை விடுதலை செய்த) உரிமையாளர்களின் அனுமதியின்றி, வேறொருவரைத் தன் உரிமையாளர் என்று கூறினால், அவன்மீதும் அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்! அவன் செய்த கடமையான வழிபாடோ, கூடுதலான வழிபாடோ ஏற்றுக்கொள்ளப்படாது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (கூடுதலான வழிபாடு என்பதைக் குறிக்கும்) ‘அத்ல்’ எனும் சொல்லுக்கு, இங்கு ‘பரிகாரம்’ என்பது பொருளாகும்.

அத்தியாயம் : 29
1871. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْحُبَابِ، سَعِيدَ بْنَ يَسَارٍ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. "" أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ. وَهْىَ الْمَدِينَةُ، تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ "".
பாடம் : 2 மதீனாவின் சிறப்பும் (தீய) மனிதர்களை அது வெளி யேற்றிவிடும் என்பதும்
1871. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எல்லா ஊர்களையும் தூக்கிச் சாப்பிடக் கூடியதும் ‘யஸ்ரிப்’ என்று மக்கள் அழைக் கக்கூடியதுமான ஓர் ஊருக்கு (புலம் பெயர்ந்து செல்லுமாறு) நான் கட்டளை யிடப்பட்டேன். அதுதான் மதீனா. இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 29
1872. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي حُمَيْدٍ ـ رضى الله عنه ـ أَقْبَلْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ تَبُوكَ حَتَّى أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ فَقَالَ "" هَذِهِ طَابَةُ "".
பாடம் : 3 மதீனாவுக்கு ‘தாபா’ (தூய நகரம்) என்ற பெயரும் உண்டு.4
1872. அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (அறப்போர் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் “இது ‘தாபா!’ (தூயது!)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 29