1713. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ يُونُسَ، عَنِ زِيَادِ بْنِ جُبَيْرٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَتَى عَلَى رَجُلٍ، قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا، قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً، سُنَّةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. وَقَالَ شُعْبَةُ عَنْ يُونُسَ أَخْبَرَنِي زِيَادٌ.
பாடம் : 118 ஒட்டகத்தைக் கட்டிப்போட்டு அறுத்தல்
1713. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அறுப்பதற்காகத் தமது ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த ஒருவரிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்து, “அதை எழுப்பி நிற்கவைத்து (இடது காலை மட்டும்) கட்டிப்போட்டு அறுப்பீராக! அதுவே முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகும்” என்று கூறியதை நான் பார்த்தேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது

அத்தியாயம் : 25
1714. حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، فَبَاتَ بِهَا، فَلَمَّا أَصْبَحَ رَكِبَ رَاحِلَتَهُ، فَجَعَلَ يُهَلِّلُ وَيُسَبِّحُ، فَلَمَّا عَلاَ عَلَى الْبَيْدَاءِ لَبَّى بِهِمَا جَمِيعًا، فَلَمَّا دَخَلَ مَكَّةَ أَمَرَهُمْ أَنْ يَحِلُّوا. وَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا، وَضَحَّى بِالْمَدِينَةِ كَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ.
பாடம் : 119 ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்தல் இப்னு உமர் (ரலி) அவர்கள், “அதுவே (ஒட்டகத்தை நிற்கவைத்து அறுப்பதே) முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை” என்று கூறுகிறார்கள். “(குர்ஆனில் 22:36ஆவது வசனத்திலுள்ள) ‘ஸவாஃப்ப’ எனும் வார்த்தைக்கு ‘நிற்கவைக்கப்பட்ட நிலையில்’ என்றுதான் பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1714. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தைத் தொடங்கியபோது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழு(வித்)தார்கள். ‘துல்ஹுலைஃபா’வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதுவிட்டு அங்கேயே இரவில் தங்கினார்கள். காலை விடிந்ததும் தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறிக்கொண்டு ‘லா இலாஹ இல்லல்லாஹ்’வும் ‘சுப்ஹானல்லாஹ்’ வும் கூறிக்கொண்டே சென்றார்கள். ‘அல்பைதாஉ’ எனுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறலானார்கள்.

மக்காவை அடைந்ததும் இஹ்ராமி லிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் தமது கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்துப் பலியிட்டார்கள். (பெருநாளன்று) பெரிய கொம்புகளை உடைய, கறுப்பு நிறம் கலந்த வெள்ளை நிற செம்மறி ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத் தார்கள்.


அத்தியாயம் : 25
1715. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ. وَعَنْ أَيُّوبَ عَنْ رَجُلٍ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ ثُمَّ بَاتَ حَتَّى أَصْبَحَ، فَصَلَّى الصُّبْحَ، ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ الْبَيْدَاءَ أَهَلَّ بِعُمْرَةٍ وَحَجَّةٍ.
பாடம் : 119 ஒட்டகங்களை நிற்கவைத்து அறுத்தல் இப்னு உமர் (ரலி) அவர்கள், “அதுவே (ஒட்டகத்தை நிற்கவைத்து அறுப்பதே) முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை” என்று கூறுகிறார்கள். “(குர்ஆனில் 22:36ஆவது வசனத்திலுள்ள) ‘ஸவாஃப்ப’ எனும் வார்த்தைக்கு ‘நிற்கவைக்கப்பட்ட நிலையில்’ என்றுதான் பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1715. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தின் போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். துல்ஹுலைஃபா வில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழு தார்கள். இரவில் அங்கேயே தங்கிவிட்டு, விடிந்ததும் சுப்ஹு தொழுதார்கள். பிறகு தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறி ‘அல்பைதாஉ’ எனுமிடத்தை அடைந்த போது ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1716. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُمْتُ عَلَى الْبُدْنِ، فَأَمَرَنِي فَقَسَمْتُ لُحُومَهَا، ثُمَّ أَمَرَنِي فَقَسَمْتُ جِلاَلَهَا وَجُلُودَهَا. قَالَ سُفْيَانُ وَحَدَّثَنِي عَبْدُ الْكَرِيمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أَقُومَ عَلَى الْبُدْنِ، وَلاَ أُعْطِيَ عَلَيْهَا شَيْئًا فِي جِزَارَتِهَا.
பாடம் : 120 குர்பானி பிராணியை அறுப்ப வருக்குக் கூலியாக அதில் எதையும் கொடுக்கக் கூடாது.
1716. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களைப் பலியிடுவதற்கு) என்னை நியமித் தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார் கள். அவ்வாறே நான் செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் (ஏழைகளுக்குப்) பங்கிட்டுவிடுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன்.

மற்றோர் அறிவிப்பில், “குர்பானி பிராணிகளைக் கவனித்துக்கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என அலீ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 25
1717. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، وَعَبْدُ الْكَرِيمِ الْجَزَرِيُّ، أَنَّ مُجَاهِدًا، أَخْبَرَهُمَا أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهُ أَنْ يَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ يَقْسِمَ بُدْنَهُ كُلَّهَا، لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلاَلَهَا، وَلاَ يُعْطِيَ فِي جِزَارَتِهَا شَيْئًا.
பாடம் : 121 குர்பானி பிராணிகளின் தோல் களைத் தர்மம் செய்ய வேண்டும்.
1717. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்குமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத் தையும் (தர்மமாகப்) பங்கிடுமாறும் உரிப்ப தற்கான கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அத்தியாயம் : 25
1718. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَيْفُ بْنُ أَبِي سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ أَهْدَى النَّبِيُّ صلى الله عليه وسلم مِائَةَ بَدَنَةٍ، فَأَمَرَنِي بِلُحُومِهَا فَقَسَمْتُهَا، ثُمَّ أَمَرَنِي بِجِلاَلِهَا فَقَسَمْتُهَا، ثُمَّ بِجُلُودِهَا فَقَسَمْتُهَا.
பாடம் : 122 குர்பானி ஒட்டகங்களின் சேணங்கள் தர்மம் செய்யப்பட வேண்டும்.
1718. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட் டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங் களை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக் குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களை (ஏழைகளுக்கு)ப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட் டார்கள்; அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அத்தியாயம் : 25
1719. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ كُنَّا لاَ نَأْكُلُ مِنْ لُحُومِ بُدْنِنَا فَوْقَ ثَلاَثِ مِنًى، فَرَخَّصَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" كُلُوا وَتَزَوَّدُوا "". فَأَكَلْنَا وَتَزَوَّدْنَا. قُلْتُ لِعَطَاءٍ أَقَالَ حَتَّى جِئْنَا الْمَدِينَةَ قَالَ لاَ.
பாடம் : 123 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நாம் இப்றாஹீமுக்கு (புனித) ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து (பின்வருமாறு) கட்டளையிட்டதை எண்ணிப்பார்ப்பீராக: நீர் எனக்கு எதனை யும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக் கும் அதில் ருகூஉ, சுஜூத் செய்(து தொழு)வோருக்கும் அதைத் தூய்மை செய்துவைப்பீராக! மேலும், ஹஜ் செய்ய வருமாறு மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலுள்ள பாதைகள் ஒவ்வொன்றிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வருவார்கள். அவர்கள் தங்களுக்குரிய பலன்களைக் காண்பதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில், அவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகள் மீது அவன் பெயரைச் சொல்லி குர்பானி கொடுப்பதற்காகவும் (அவர்கள் வருவார்கள்). எனவே, அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக்கொடுங்கள்! பின்னர் அவர்கள் (தலைமுடி மழித்து, நகம் வெட்டி, குளித்து)த் தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி, (அந்தப் புனிதமான) தொன்மை ஆலயத்தை தவாஃபும் செய்யட்டும்! இதுவே (ஹஜ்ஜின் வழிபாட்டு முறை யாகும்)! அல்லாஹ்வால் புனிதப்படுத்தப் பட்டவற்றுக்கு யார் கண்ணியமளிக்கி றாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் சிறந்ததாகும். (22:26-30) பாடம் : 124 குர்பானி ஒட்டகங்களில் உண் ணப்படுபவையும் தர்மம் செய்யப்படுபவையும் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டை யாடிய குற்றத்திற்குப் பரிகாரமாகவோ நேர்ச்சையாகவோ குர்பானி கொடுப்பவர் கள் அவற்றின் இறைச்சியை உண்ண லாகாது; மற்றப் பிராணிகளை உண்ணலாம் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜில் (கொடுக்கப் படும் குர்பானியை) உண்ணலாம்; பிறருக்கு உண்ணக்கொடுக்கலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1719. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ‘மினா’வில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்குமேல் குர்பானி பிராணிகளின் இறைச்சியை உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள், “உண்ணுங்கள்; சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி எங்களுக்கு அனுமதி வழங்கியதும் நாங்கள் உண்ணலானோம்; சேமித்துவைக்கலானோம்.

‘மதீனா வரும்வரை (உண்டோம்)’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்களா என அதாஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.58


அத்தியாயம் : 25
1720. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ، وَلاَ نَرَى إِلاَّ الْحَجَّ، حَتَّى إِذَا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ إِذَا طَافَ بِالْبَيْتِ ثُمَّ يَحِلُّ. قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا فَقِيلَ ذَبَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ. قَالَ يَحْيَى فَذَكَرْتُ هَذَا الْحَدِيثَ لِلْقَاسِمِ. فَقَالَ أَتَتْكَ بِالْحَدِيثِ عَلَى وَجْهِهِ.
பாடம் : 123 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நாம் இப்றாஹீமுக்கு (புனித) ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து (பின்வருமாறு) கட்டளையிட்டதை எண்ணிப்பார்ப்பீராக: நீர் எனக்கு எதனை யும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக் கும் அதில் ருகூஉ, சுஜூத் செய்(து தொழு)வோருக்கும் அதைத் தூய்மை செய்துவைப்பீராக! மேலும், ஹஜ் செய்ய வருமாறு மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலுள்ள பாதைகள் ஒவ்வொன்றிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வருவார்கள். அவர்கள் தங்களுக்குரிய பலன்களைக் காண்பதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில், அவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகள் மீது அவன் பெயரைச் சொல்லி குர்பானி கொடுப்பதற்காகவும் (அவர்கள் வருவார்கள்). எனவே, அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக்கொடுங்கள்! பின்னர் அவர்கள் (தலைமுடி மழித்து, நகம் வெட்டி, குளித்து)த் தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி, (அந்தப் புனிதமான) தொன்மை ஆலயத்தை தவாஃபும் செய்யட்டும்! இதுவே (ஹஜ்ஜின் வழிபாட்டு முறை யாகும்)! அல்லாஹ்வால் புனிதப்படுத்தப் பட்டவற்றுக்கு யார் கண்ணியமளிக்கி றாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் சிறந்ததாகும். (22:26-30) பாடம் : 124 குர்பானி ஒட்டகங்களில் உண் ணப்படுபவையும் தர்மம் செய்யப்படுபவையும் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டை யாடிய குற்றத்திற்குப் பரிகாரமாகவோ நேர்ச்சையாகவோ குர்பானி கொடுப்பவர் கள் அவற்றின் இறைச்சியை உண்ண லாகாது; மற்றப் பிராணிகளை உண்ணலாம் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜில் (கொடுக்கப் படும் குர்பானியை) உண்ணலாம்; பிறருக்கு உண்ணக்கொடுக்கலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1720. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப் பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கிய தும், குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் தவாஃப் செய்துவிட்டு இஹ்ராமி லிருந்து விடுபட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மாட்டிறைச்சி எங்களிடம் கொண்டுவரப் பட்டது. “இது என்ன?” என நான் கேட்டேன். மக்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரின் சார்பாகப் பலியிட்டார் கள்” என்று சொல்லப்பட்டது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இந்த ஹதீஸை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், “உமக்கு இந்த ஹதீஸை அறிவித்த அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) சரியாகவே அறிவித்துள்ளார்” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1721. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَمَّنْ حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ وَنَحْوِهِ. فَقَالَ "" لاَ حَرَجَ، لاَ حَرَجَ "".
பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1721. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின் போது), குர்பானி கொடுப்பதற்குமுன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அது போன்றவற்றைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை! குற்றமில்லை” என்றார்கள்.


அத்தியாயம் : 25
1722. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" لاَ حَرَجَ "". قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ "" لاَ حَرَجَ "". قَالَ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" لاَ حَرَجَ "". وَقَالَ عَبْدُ الرَّحِيمِ الرَّازِيُّ عَنِ ابْنِ خُثَيْمٍ أَخْبَرَنِي عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ الْقَاسِمُ بْنُ يَحْيَى حَدَّثَنِي ابْنُ خُثَيْمٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ عَفَّانُ أُرَاهُ عَنْ وُهَيْبٍ، حَدَّثَنَا ابْنُ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ حَمَّادٌ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ وَعَبَّادِ بْنِ مَنْصُورٍ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1722. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம், “நான் கல்லெறிவதற்கு முன்பே ‘தவாஃபுல் இஃபாளா’ (தவாஃபுஸ் ஸியாரத்) செய்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்” என்றதும், அவர்கள் “குற்றமில்லை” என்றார்கள்.

மேலும் அவர், “நான் கல்லெறிவதற்கு முன்பாகவே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அப்போதும் அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

இதே ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிட மிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1723. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ. فَقَالَ "" لاَ حَرَجَ "". قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ. قَالَ "" لاَ حَرَجَ "".
பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1723. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் மாலை நேரம் வந்தபின் கல்லெறிந்தேன்” என்று கேட்டார். அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகவே தலையை மழித்துவிட்டேன்” என்றபோதும் அவர்கள், “குற்றமில்லை” என்றே கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1724. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِالْبَطْحَاءِ. فَقَالَ "" أَحَجَجْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" بِمَا أَهْلَلْتَ "". قُلْتُ لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم. قَالَ "" أَحْسَنْتَ، انْطَلِقْ فَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ "". ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ، فَفَلَتْ رَأْسِي، ثُمَّ أَهْلَلْتُ بِالْحَجِّ، فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ، حَتَّى خِلاَفَةِ عُمَرَ ـ رضى الله عنه ـ فَذَكَرْتُهُ لَهُ. فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ الْهَدْىُ مَحِلَّهُ.
பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1724. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் இருந்தபோது (ஹஜ்ஜுக்காக) நான் (யமன் நாட்டிலிருந்து) வந்தேன். அப்போது அவர்கள், “ஹஜ் செய்ய நாடிவிட்டீரா?” எனக் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். “எதற்காக இஹ்ராம் கட்டினீர்?” என அவர்கள் கேட்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக” என்றேன். அவர்கள், “நன்றே செய்தீர். போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா- மர்வாவையும் தவாஃப் செய்யும்!” என்றார் கள்.

பிறகு நான் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவுப்) பெண்களில் ஒருவரிடம் வந்தேன்; அவர் எனது தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன்.

இந்த அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறிவந்தேன். உமர் (ரலி) அவர்களிடம் இது பற்றி நான் கூறியதும் அவர்கள், “நாம் இறைவேதத்தை எடுத்துக்கொண்டால், அதுவோ (ஹஜ் மற்றும் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகின்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக்கொண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை” என்று கூறினார்கள்.60

அத்தியாயம் : 25
1725. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ ـ رضى الله عنهم ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ "" إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ "".
பாடம் : 126 இஹ்ராமின்போது தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைப்பதும் (பின்னர்) தலையை மழித்துக்கொள்வதும்
1725. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்து விட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்; ஆனால், நீங்கள் உம்ரா செய்தபிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே, என்ன காரணம்?” எனக் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலையும் தொங்கவிட்டுவிட்டேன்; எனவே, குர்பானி கொடுக்காத வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது!” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1726. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، قَالَ نَافِعٌ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ حَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّتِهِ.
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1726. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித் தார்கள்.


அத்தியாயம் : 25
1727.
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1727. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனக் கூறினார்கள். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (பிரார்த்தி யுங்கள்)” என்றார்கள்.

அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர் களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்...” என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று ஒரு தடவையோ இரண்டு தடவைகளோ நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நான்காவது தடவையில், “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்...” எனக் கூறியதாகக் காணப்படுகிறது.


அத்தியாயம் :
1728. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ "". قَالُوا وَلِلْمُقَصِّرِينَ. قَالَ "" اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ "". قَالُوا وَلِلْمُقَصِّرِينَ. قَالَهَا ثَلاَثًا. قَالَ "" وَلِلْمُقَصِّرِينَ "".
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1728. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப் பாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)” என்றனர்.

(மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப் பாயாக!” என்று பிரார்த்தித்தபோது தோழர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்...” என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும் அதைக் கூறியபோது “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக!)” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1729. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ حَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَطَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ، وَقَصَّرَ بَعْضُهُمْ.
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1729. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களு டைய தோழர்களில் ஒரு கூட்டத்தாரும் (ஹஜ்ஜில்) தலையை மழித்துக்கொண்டனர். வேறுசிலர் முடியைக் குறைத்துக்கொண்டனர்.


அத்தியாயம் : 25
1730. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مُعَاوِيَةَ ـ رضى الله عنهم ـ قَالَ قَصَّرْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ.
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1730. முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முடியை (மர்வாவில் வைத்து) கத்தரிக் கோலால் (கத்தரித்துக்) குறைத்தேன்.62

அத்தியாயம் : 25
1731. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ أَمَرَ أَصْحَابَهُ أَنْ يَطُوفُوا بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ يَحِلُّوا، وَيَحْلِقُوا أَوْ يُقَصِّرُوا.
பாடம் : 128 ‘தமத்துஉ’ ஹஜ் செய்பவர் உம்ராவுக்குப்பின் தலை முடி யைக் குறைத்துக்கொள்ளல்
1731. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்தபின், இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென் றும் பிறகு தலையை மழித்துக்கொள் ளவோ முடியைக் குறைத்துக்கொள்ளவோ வேண்டுமென்றும் (‘தமத்துஉ’ செய்த) தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அத்தியாயம் : 25
1732. وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ طَافَ طَوَافًا وَاحِدًا، ثُمَّ يَقِيلُ ثُمَّ يَأْتِي مِنًى ـ يَعْنِي يَوْمَ النَّحْرِ ـ. وَرَفَعَهُ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ.
பாடம் : 129 துல்ஹஜ் பத்தாம் நாள் ‘தவாஃபுஸ் ஸியாரத்’ செய்தல்63 நபி (ஸல்) அவர்கள் தவாஃபுஸ் ஸியாரத்தை இரவுவரை தாமதமாக்கினார்கள் என ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் தவாபுஸ் ஸியாரா செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1732. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரேயொரு தவாஃப் செய்துவிட்டு மதிய ஓய்வு மேற்கொண்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மினாவுக்கு வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்த தாக (இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாக) மற்றோர் அறிவிப்பில் காணப்படு கிறது.


அத்தியாயம் : 25