1493. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ لِلْعِتْقِ، وَأَرَادَ مَوَالِيهَا أَنْ يَشْتَرِطُوا وَلاَءَهَا، فَذَكَرَتْ عَائِشَةُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم "" اشْتَرِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". قَالَتْ وَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقُلْتُ هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ "" هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "".
பாடம் : 61 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் அடிமைகளுக் குத் தர்மம் செய்தல்
1493. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீரா எனும் (அடிமைப்) பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினேன். ஆனால், அப்பெண்ணின் உரிமையாளர்கள், (பரீராவை நாங்கள் உங்களுக்கு விற்றுவிட்டாலும்) அவரின் ‘வாரிசுரிமை’ எங்களுக்கு வேண்டும் என்று நிபந்தனையிட விரும்பினார்கள்.

நான் இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ பரீராவை விலைக்கு வாங்கி (விடுதலை செய்து)விடு; வாரிசுரிமை விடுதலை செய்பவருக்குத்தான்” என்றார்கள்.21

பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது நான், “இது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப் பட்ட பொருள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது பரீராவுக்குத் தர்ம மாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என் றார்கள்.

அத்தியாயம் : 24
1494. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَ "" هَلْ عِنْدَكُمْ شَىْءٌ "". فَقَالَتْ لاَ. إِلاَّ شَىْءٌ بَعَثَتْ بِهِ إِلَيْنَا نُسَيْبَةُ مِنَ الشَّاةِ الَّتِي بَعَثْتَ بِهَا مِنَ الصَّدَقَةِ. فَقَالَ "" إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا "".
பாடம் : 62 தர்மம் (அன்பளிப்பாக) மாறி னால்..?
1494. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று “(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீங்கள் நுசைபாவுக்கு (உம்மு அத்தியாவுக்கு) தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத் துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியெனில், அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது” என்றார்கள்.


அத்தியாயம் : 24
1495. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِلَحْمٍ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ "" هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ "". وَقَالَ أَبُو دَاوُدَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعَ أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 62 தர்மம் (அன்பளிப்பாக) மாறி னால்..?
1495. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள், “இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்“ என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 24
1496. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ "" إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ، فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ "".
பாடம் : 63 செல்வர்களிடமிருந்து ஸகாத் வசூலிக்கப்பட்டு ஏழைகளுக்கு -அவர்கள் எங்கிருந்தாலும்- விநியோகிக்கப்படும்.
1496. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது, அவரிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

நீர் வேதக்கார மக்களிடம் செல்கிறீர். அவர்களிடம் நீர் போய்ச்சேர்ந்ததும், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும், “முஹம்மத் அல்லாஹ் வின் தூதர் ஆவார்கள்” என்றும் உறுதி மொழியும்படி அவர்களை அழைப்பீராக!

இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், ‘அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுகைகளை அவர்கள்மீது கடமையாக்கியுள்ளான்’ என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற் கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டு விட்டால் ‘நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்; அது அவர்களில் செல்வர்களிடமிருந்து பெறப்பட்டு, அவர்களிலுள்ள ஏழை களுக்கு விநியோகிக்கப்படவேண்டும். என அவர்களுக்கு அறிவிப்பீராக!

அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், அவர்களின் செல்வங்களில் உயர்தரமானவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்த னைக்குப் பயந்துகொள்ளும்! ஏனெனில், அவருக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.

அத்தியாயம் : 24
1497. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ "". فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ، فَقَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى "".
பாடம் : 64 ஸகாத் கொடுப்பவர்களுக்காகத் தலைவர் பிரார்த்திப்பது அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) அவர்களின் செல்வங்களி லிருந்து தர்மத்தைப் பெற்று அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக; அதன் மூலம் அவர்களை மேம்படுத்துவீராக; அவர் களுக்காகப் பிரார்த்தனை புரிவீராக. நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (9:103)
1497. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் யாரேனும் ஒரு கூட்டத்தார் தமது ஸகாத் பொருட் களைக் கொண்டுவந்தால், “இறைவா! இன்னாரின் குடும்பத்தாருக்கு நீ அருள் புரிவாயாக!” என்று பிரார்த்திப்பவராக நபியவர்கள் இருந்தார்கள். என் தந்தை (அபூஅவ்ஃபா) தமது ஸகாத்தைக் கொண்டுவந்தார். அப்போது “இறைவா! அபூஅவ்ஃபாவின் குடும்பத்தார்க்கு அருள் புரிவாயாக” என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 24
1498. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَّ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ بِأَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَدَفَعَهَا إِلَيْهِ، فَخَرَجَ فِي الْبَحْرِ، فَلَمْ يَجِدْ مَرْكَبًا، فَأَخَذَ خَشَبَةً فَنَقَرَهَا فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ، فَرَمَى بِهَا فِي الْبَحْرِ، فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ، فَإِذَا بِالْخَشَبَةِ فَأَخَذَهَا لأَهْلِهِ حَطَبًا ـ فَذَكَرَ الْحَدِيثَ ـ فَلَمَّا نَشَرَهَا وَجَدَ الْمَالَ "".
பாடம் : 65 கடலிலிருந்து கிடைப்பவை ‘அம்பர்’ எனும் வாசனைத் திரவியம் (மீனம்பர்) புதையலில் சேராது. ஏனெனில், அது கடலலைகள் ஒதுக்கும் ஒரு பொருளாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.22 அம்பரிலும் முத்துகளிலும் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் (குமுஸ்) உள்ளது என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறி யுள்ளார்கள். (இது தவறாகும். ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள் புதையலுக்குத்தான் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் என்றார்கள்; தண்ணீரில் கிடைப்பவற்றுக்கு அல்ல.
1498. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் ஒருவர் தம் சமூகத் தைச் சேர்ந்த சிலரிடம் ஆயிரம் பொற் காசுகள் (தீனார்) கடன் கேட்டார். (அதற்கு ஒருவர் இசைந்து) அவருக்குப் பணத்தைக் கொடுத்தார். கடன் வாங்கியவர் (பின்னர் கடனைச் செலுத்துவதற்காக) கடல் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், கடலில் செல்ல எந்த வாகனமும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு ஆயிரம் பொற்காசுகளையும் அதில் வைத்து அடைத்து கடலில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டார்.

ஒரு நாள் அவருக்குக் கடன் கொடுத்த மனிதர் புறப்பட்டு (அவ்வழியே) வந்த போது மரக்கட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு, அதைத் தம் வீட்டாருக்கு விறகுக்காக எடுத்துச்சென்றார். அதை(க் கோடரியால்) பிளந்தபோது தமது பொருளைப் பெற்றுக்கொண்டார்.23

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1499. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْعَجْمَاءُ جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمُسُ "".
பாடம் : 66 புதையல்களில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) உண்டு. இமாம் மாலிக் (ரஹ்), இப்னு இத்ரீஸ் (ரஹ்) ஆகியோர் கூறினார்கள்: புதையல் என்பது அறியாமைக் காலத் தில் புதைத்து வைக்கப்பட்ட பொருளாகும். அது குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) கொடுக்க வேண்டும். கனிமச் சுரங்கம் புதையலில் சேராது. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் “சுரங்கத் தில் ஏற்படும் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் உள்ளது” எனக் கூறினார்கள். ஆனால், சுரங்கத்திலிருந்து வரும் ஒவ்வோர் இருநூறு (திர்ஹங்)களில் ஐந்து (திரஹங்)களை (இரண்டரை சதவீதம்) ஸகாத்தாக உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் வசூலித்தார்கள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட பூமியில் கிடைக்கும் புதையலுக்கு ஐந்தில் ஒரு பாகம் (தீர்வை) உண்டு. சமாதான (ஒப்பந்தம் செய்துகொண்ட) பூமியில் கிடைக்கும் புதையலில் (இரண்டரை சதவீதம்) ஸகாத் உண்டு. எதிரிகளின் பூமியில் பிறர் தவறவிட்ட பொருளை எடுத்தால், அதைப் பிறருக்கு அறிவித்துவிடுங்கள். அது எதிரிகளின் பூமியிலிருந்து எடுக்கப்பட்டால் அதில் ஐந்தில் ஒரு பாகம் (தீர்வை) உண்டு. அறிஞர்களில் சிலர், சுரங்கம், அறியாமைக் காலத்தில் புதைக்கப்பட்ட புதையலைப் போன்றதுதான். (அதிலும் ஐந்தில் ஒரு பாகம் உண்டு.) ஏனெனில், சுரங்கத்திலிருந்து ஏதேனும் கிடைத்தாலும், (புதையலைக் குறிக்கும் ‘ரிகாஸ்’ எனும் சொல்லில் இருந்து பிறந்த) ‘அர்கஸ’ எனும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கின் றனர். ஆனால், ஒருவருக்கு அன்பளிப்பாக ஏதேனும் கிடைத்தாலோ, ஒருவர் அதிக மான இலாபம் ஈட்டினாலோ, ஒருவரின் விளைச்சல் அதிகமானாலோகூட அப்போ தும் ‘அர்கஸ்(த்)த’ எனும் இச்சொல்லே ஆளப்படுகிறது. (ஆனால், இவற்றி லெல்லாம் ஐந்தில் ஒரு பங்கு கிடையாதே!) இவ்வாறு (சுரங்கமும் புதையல்தான் என்று) செல்பவர்கள், கனிமப் பொருளை மறைப்பது குற்றமாகாது என்றும், (அவ்வாறு மறைக்கும்போது) ஐந்தில் ஒரு பாகம் செலுத்த வேண்டியதில்லை என்றும் கூறி முரண்படுகின்றனர்.24
1499. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வாயில்லாப் பிராணி(களால் ஏற்படும் இழப்பு)களுக்கு இழப்பீடு கிடையாது. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்) உண்டு.25

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1500. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ ـ رضى الله عنه ـ قَالَ اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً مِنَ الأَسْدِ عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ يُدْعَى ابْنَ اللُّتْبِيَّةِ، فَلَمَّا جَاءَ حَاسَبَهُ.
பாடம் : 67 “ஸகாத்தின் பணியாளர்களுக் கும் (ஸகாத் நிதி வழங்கலாம்)” (9:60) எனும் இறைவசனமும், ஸகாத் வசூலகர்களிடம் தலைவர் கணக்குக் கேட்பதும்
1500. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு லுத்பிய்யா என்றழைக்கப்படும் ‘அஸ்த்’ கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை, பனூ சுலைம் எனும் கோத்திரத்தாரிடம் ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து) வந்ததும் அவரிடத்தில் கணக்குக் கேட்டார்கள்.

அத்தியாயம் : 24
1501. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ نَاسًا، مِنْ عُرَيْنَةَ اجْتَوَوُا الْمَدِينَةَ، فَرَخَّصَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَقَتَلُوا الرَّاعِيَ وَاسْتَاقُوا الذَّوْدَ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ، وَتَرَكَهُمْ بِالْحَرَّةِ يَعَضُّونَ الْحِجَارَةَ. تَابَعَهُ أَبُو قِلاَبَةَ وَحُمَيْدٌ وَثَابِتٌ عَنْ أَنَسٍ.
பாடம் : 68 வழிப்போக்கர்களுக்காக ஸகாத் ஒட்டகங்களையும் அவற்றின் பாலையும் பயன்படுத்துதல்
1501. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘உரைனா’ குலத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது, மதீனாவின் பருவநிலை ஒத்துக்கொள்ளாமல் நோயுற்றனர். எனவே, ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகங்கள் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் (அங்கு சென்று அவ்வாறே குடித்து குணமடைந்தபிறகு) ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்று விட்டனர்.

செய்தியறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்து வர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும், (பல கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களின் கைகளையும் கால் களையும் வெட்டினார்கள்; கண்(இமை) களின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர் களைக் கருங்கற்கள் நிறைந்த ‘ஹர்ரா’ எனுமிடத்தில் (பற்களால்) கற்களை (பற்றி)ப் பிடித்துக்கொண்டிருக்கும்படி விட்டு விட்டார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 24
1502. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ غَدَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ لِيُحَنِّكَهُ، فَوَافَيْتُهُ فِي يَدِهِ الْمِيسَمُ يَسِمُ إِبِلَ الصَّدَقَةِ.
பாடம் : 69 தலைவர் தம் கைகளால் ஸகாத் ஒட்டகங்களுக்கு அடை யாளமிடல்
1502. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று ஊட்டுவதற்காக ஒரு நாள் காலை அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா எனும் குழந்தையை அவர்களிடம் கொண்டுசென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூடிடும் கருவியைக் கொண்டு ஸகாத் ஒட்டகங்களுக்கு, தம் கையால் அடையாளமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

அத்தியாயம் : 24
1503. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنَ الْمُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ.
பாடம் : 70 நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கத்துல் ஃபித்ர்) கடமை ஆகும்.26 நோன்புப் பெருநாள் தர்மம் கடமை யாகும் என அபுல்ஆலியா, அதாஉ, இப்னு சீரீன் (ரஹ்) ஆகியோர் கருது கின்றனர்.
1503. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்களில் அடிமை, சுதந்திர மானவர், ஆண், பெண், சிறியவர், பெரிய வர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு ‘ஸாஉ’ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.27

அத்தியாயம் : 24
1504. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَرَضَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَلَى كُلِّ حُرٍّ أَوْ عَبْدٍ، ذَكَرٍ أَوْ أُنْثَى، مِنَ الْمُسْلِمِينَ.
பாடம் : 71 நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களில் அடிமை, அடிமையல்லாதார் அனைவர்மீதும் கடமை.
1504. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்களில் சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய அனை வருக்காகவும் ஒரு ‘ஸாஉ’ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவு தீட்டாத (வாற்)கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

அத்தியாயம் : 24
1505. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُطْعِمُ الصَّدَقَةَ صَاعًا مِنْ شَعِيرٍ.
பாடம் : 72 (நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ‘ஸாஉ’ அளவு தீட்டாத (வாற்)கோதுமை
1505. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (நோன்புப் பெருநாள்) தர்ம மாக ஒரு ‘ஸாஉ’ அளவு தீட்டாத (வாற்) கோதுமையை உணவுக்காகக் கொடுத்து வந்தோம்.

அத்தியாயம் : 24
1506. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ الْعَامِرِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ.
பாடம் : 73 நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு ஸாஉ உணவுப் பொருள்.
1506. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாஉ அளவு ஏதேனும் உண வையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பாலாடைக் கட்டியையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு உலர்ந்த திராட்சையையோ வழங்கி வந்தோம்.

அத்தியாயம் : 24
1507. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِزَكَاةِ الْفِطْرِ، صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ. قَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ فَجَعَلَ النَّاسُ عِدْلَهُ مُدَّيْنِ مِنْ حِنْطَةٍ.
பாடம் : 74 நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு ஸாஉ அளவுப் பேரீச்சம் பழம்.
1507. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளை யிட்டார்கள்.

பிறகு மக்கள் ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகரமாக அரை ஸாஉ அளவு தீட்டிய (மணிக்) கோதுமையை ஆக்கினார்கள்.28

அத்தியாயம் : 24
1508. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ يَزِيدَ الْعَدَنِيَّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ حَدَّثَنِي عِيَاضُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُعْطِيهَا فِي زَمَانِ النَّبِيِّ صلى الله عليه وسلم صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ، فَلَمَّا جَاءَ مُعَاوِيَةُ وَجَاءَتِ السَّمْرَاءُ قَالَ أُرَى مُدًّا مِنْ هَذَا يَعْدِلُ مُدَّيْنِ.
பாடம் : 75 (நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை.
1508. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ, அல்லது ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுத்து வந்தோம்.

முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சி யில் ஷாம் (சிரியா) நாட்டு உயர் ரகக் கோதுமை (தாராளமாகக்) கிடைத்தபோது, இதில் (தீட்டிய உயர் ரகக் கோதுமையில்) ஒரு ‘முத்’து (தீட்டாத கோதுமையில்) இரண்டு ‘முத்’துகளுக்கு ஈடாகும் என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.29

அத்தியாயம் : 24
1509. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِزَكَاةِ الْفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ.
பாடம் : 76 பெருநாளு(டைய தொழு கை)க்கு முன்பே (பெருநாள்) தர்மத்தைக் கொடுத்தல்
1509. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன் னால் கொடுத்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.


அத்தியாயம் : 24
1510. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا أَبُو عُمَرَ، عَنْ زَيْدٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ. وَقَالَ أَبُو سَعِيدٍ وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالأَقِطُ وَالتَّمْرُ.
பாடம் : 76 பெருநாளு(டைய தொழு கை)க்கு முன்பே (பெருநாள்) தர்மத்தைக் கொடுத்தல்
1510. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாஉ உணவுப் பொருளை (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மமாகக் கொடுத்துவந்தோம்.

அக்காலத்தில் தொலி நீக்கப்படாத கோதுமையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன.

அத்தியாயம் : 24
1511. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ فَرَضَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَدَقَةَ الْفِطْرِ ـ أَوْ قَالَ رَمَضَانَ ـ عَلَى الذَّكَرِ وَالأُنْثَى، وَالْحُرِّ وَالْمَمْلُوكِ، صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، فَعَدَلَ النَّاسُ بِهِ نِصْفَ صَاعٍ مِنْ بُرٍّ. فَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُعْطِي التَّمْرَ، فَأَعْوَزَ أَهْلُ الْمَدِينَةِ مِنَ التَّمْرِ فَأَعْطَى شَعِيرًا، فَكَانَ ابْنُ عُمَرَ يُعْطِي عَنِ الصَّغِيرِ وَالْكَبِيرِ، حَتَّى إِنْ كَانَ يُعْطِي عَنْ بَنِيَّ، وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا، وَكَانُوا يُعْطُونَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ.
பாடம் : 77 சுதந்திரமானவன் மீதும் அடிமையின் மீதும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாகும். முஹம்மத் பின் முஸ்லிம் அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: விற்பனைக்காக உள்ள அடிமை களுக்கு விற்பனைப் பொருள் என்ற முறையில் ஸகாத் கொடுக்க வேண்டும். (மனிதர்கள் என்ற முறையில்) அவர்களுக் காக நோன்புப் பெருநாள் தர்மமும் கொடுக்க வேண்டும்.
1511. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆண், பெண், அடிமை, சுதந்திரமான வர் ஆகிய அனைவர்மீதும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ தீட்டாத (வாற்)கோதுமை யையோ பெருநாள் -அல்லது ரமளான்- தர்மமாக நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித் தார்கள்.

அரை ஸாஉ தீட்டிய (மணிக்)கோதுமை, ஒரு ஸாஉ தீட்டாத (வாற்)கோதுமைக்குச் சமம் என மக்கள் கருதினார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழத்தையே கொடுத்துவந்தார்கள். மதீனா நகர மக்களுக்குப் பேரீச்சம் பழத் தட்டுப்பாடு வந்தபோது, தீட்டாத (வாற்)கோதுமையைக் கொடுத்தார்கள்.

(தம் குடும்பத்திலுள்ள) சிறியவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும், (அவருடைய பணியாளராக நானிருந்ததால்) என் குழந்தைகளுக்காகவும் கொடுத்துவந்தார்கள். இந்தத் தர்மத்தைப் பெற்றுக்கொள்பவருக்கெல்லாம் கொடுத்துவந்தார்கள். மேலும், பெரு நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்தத் தர்மத்தைக்) கொடுத்துவந்தார்கள்.

அத்தியாயம் : 24
1512. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَدَقَةَ الْفِطْرِ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ عَلَى الصَّغِيرِ وَالْكَبِيرِ وَالْحُرِّ وَالْمَمْلُوكِ.
பாடம் : 78 நோன்புப் பெருநாள் தர்மம் சிறியவர்களுக்காகவும் பெரிய வர்களுக்காகவும் (ஏழைகளுக் குக்) கொடுக்கப்பட வேண்டும்.
1512. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர்மீதும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழமோ அல்லது ஒரு ஸாஉ தீட்டாத (வாற்)கோதுமையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாக (கொடுப்பதை)க் கடமையாக்கினார்கள்.

அத்தியாயம் : 24