1344. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ "" إِنِّي فَرَطٌ لَكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي وَاللَّهِ لأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ ـ أَوْ مَفَاتِيحَ الأَرْضِ ـ وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا "".
பாடம் : 72
உயிர்த்தியாகி (ஷஹீத்)களுக்கு இறுதித் தொழுகை
1344. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவிப்பதைப் போன்று ‘உஹுத்’ போர் உயிர்த்தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார் கள்.
பிறகு சொற்பொழிவுமேடை (மிம் பர்)க்குத் திரும்பி வந்து, “உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன்.
மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை கற்பிப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும், நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொரு வர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 23

1345. حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ.
பாடம் : 73
இருவரை அல்லது மூவரை ஒரே குழியில் அடக்கம் செய்வது
1345. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், உஹுத் போரில் (உயிர் நீத்தவர்களில்) இரண்டி ரண்டு நபர்களைச் சேர்த்து (ஒரே கப்றில்) அடக்கம் செய்தார்கள்.

1346. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ادْفِنُوهُمْ فِي دِمَائِهِمْ "". ـ يَعْنِي يَوْمَ أُحُدٍ ـ وَلَمْ يُغَسِّلْهُمْ.
பாடம் : 74
உயிர்த் தியாகிகளை நீராட்ட வேண்டியதில்லை என்ற கருத்து
1346. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இவர்களை -உஹுத் போரில் இறந்தவர்களை- அவர்களின் இரத்தத் துடனேயே அடக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மேலும், அவர்களை நபி (ஸல்) அவர்கள், நீராட்டவில்லை.

1347. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ " أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ ". فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ " أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ ". وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ، وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسِّلْهُمْ.
பாடம் : 75
அடக்கத் தலத்தின் உட்குழியில் முதலில் வைக்கப்படுபவர்
(‘உட்குழி’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்லஹ்த்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு, ‘விலகுதல்’ என்பது சொற்பொருளாகும்.) உட்குழியானது, குழியின் (நடுவிலிருந்து விலகி) ஓர் ஓரத்தில் அமைவதால் இப்பெயர் வரலாயிற்று.
நீதி வழுவும் ஒவ்வொருவரையும் ‘முல்ஹித்’ (விலகியவர்) என்பர். (குர்ஆனில் 18:27ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள) ‘முல்(த்)தஹத்’ எனும் சொல்லுக்கு ‘ஒதுங்கும் இடம்’ என்பது பொருள்.
(உட்குழியாக இல்லாமல்) சமமாக இருந்தால் அக்குழிக்கு ‘ளரீஹ்’ என்பது பெயர்.
1347. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர் களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் ‘கஃபன்’ இட்டுவிட்டு, “இவர் களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்பார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும், அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைப்பார்கள்.
மேலும், “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் நீராட்டப்படவில்லை; இவர் களுக்கு நபி (ஸல்) அவர்கள் (இறுதித்) தொழுகை நடத்தவுமில்லை.

1348. وَأَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِقَتْلَى أُحُدٍ " أَىُّ هَؤُلاَءِ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ ". فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى رَجُلٍ قَدَّمَهُ فِي اللَّحْدِ قَبْلَ صَاحِبِهِ. وَقَالَ جَابِرٌ فَكُفِّنَ أَبِي وَعَمِّي فِي نَمِرَةٍ وَاحِدَةٍ. وَقَالَ سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنَا مَنْ، سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه.
பாடம் : 75
அடக்கத் தலத்தின் உட்குழியில் முதலில் வைக்கப்படுபவர்
(‘உட்குழி’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்லஹ்த்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு, ‘விலகுதல்’ என்பது சொற்பொருளாகும்.) உட்குழியானது, குழியின் (நடுவிலிருந்து விலகி) ஓர் ஓரத்தில் அமைவதால் இப்பெயர் வரலாயிற்று.
நீதி வழுவும் ஒவ்வொருவரையும் ‘முல்ஹித்’ (விலகியவர்) என்பர். (குர்ஆனில் 18:27ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள) ‘முல்(த்)தஹத்’ எனும் சொல்லுக்கு ‘ஒதுங்கும் இடம்’ என்பது பொருள்.
(உட்குழியாக இல்லாமல்) சமமாக இருந்தால் அக்குழிக்கு ‘ளரீஹ்’ என்பது பெயர்.
1348. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களைக் காட்டி, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும், அவரது உடலை அவருடனிருந்தவருக்கு முன்பாக கப்றின் உட்குழியில் வைத்தார்கள். இவ்விதம் என் தந்தையும் என் தந்தையின் சகோதரரும் ஒரே துணியில் ‘கஃபன்’ இடப்பட்டார்கள்.26
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.

1349. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" حَرَّمَ اللَّهُ مَكَّةَ، فَلَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي وَلاَ لأَحَدٍ بَعْدِي، أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، لاَ يُخْتَلَى خَلاَهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا، وَلاَ تُلْتَقَطُ لُقَطَتُهَا إِلاَّ لِمُعَرِّفٍ "". فَقَالَ الْعَبَّاسُ ـ رضى الله عنه ـ إِلاَّ الإِذْخِرَ لِصَاغَتِنَا وَقُبُورِنَا. فَقَالَ "" إِلاَّ الإِذْخِرَ "". وَقَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لِقُبُورِنَا وَبُيُوتِنَا "". وَقَالَ أَبَانُ بْنُ صَالِحٍ عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مِثْلَهُ. وَقَالَ مُجَاهِدٌ عَنْ طَاوُسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ لِقَيْنِهِمْ وَبُيُوتِهِمْ.
பாடம் : 76
அடக்கத் தலத்தில் ‘இத்கிர்’ போன்ற புற்களைப் போடுதல்
1349. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ் மக்காவைப் புனிதமாக்கி யுள்ளான். எனக்கு முன்புள்ள யாருக் கும் (இங்கு போர் புரிதல்) அனுமதிக்கப் படவில்லை; எனக்குப் பின்பும் யாருக் கும் அனுமதிக்கப்படமாட்டாது. எனக் குக்கூட பகலில் சற்று நேரம் (மக்கா வெற்றிக்காக) அனுமதிக்கப்பட்டது.
எனவே, இனி மக்காவில் உள்ள புற்கள் பிடுங்கப்படக் கூடாது; மரங்கள் வெட்டப்படக் கூடாது; வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப்படக் கூடாது; அறிவிப்புச் செய்பவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களைப் பொறுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “இத்கிர் என்ற புல்லைத் தவிரவா? அது நம் சவக்குழிகளுக்கும் பொற்கொல்லர்களுக்கும் தேவைப்படு கின்றதே?” என்றதும் நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் என்ற புல்லைத் தவிர” என்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நம் சவக்குழிகளுக்கும் வீடுகளுக்கும் (இத்கிர் புல்லைப்) பயன்படுத்தலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்கள். ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரலி) அவர்களும் இதைப் போன்றே அறிவிக்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நம் உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்தலாம்” என்று கூறியதாக தாவூஸ் (ரஹ்) அவர்கள் மற்றோர் அறிவிப்பில் தெரிவிக்கிறார்கள்.

1350. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ بَعْدَ مَا أُدْخِلَ حُفْرَتَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، فَوَضَعَهُ عَلَى رُكْبَتَيْهِ، وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ، فَاللَّهُ أَعْلَمُ، وَكَانَ كَسَا عَبَّاسًا قَمِيصًا. قَالَ سُفْيَانُ وَقَالَ أَبُو هَارُونَ وَكَانَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَمِيصَانِ، فَقَالَ لَهُ ابْنُ عَبْدِ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ، أَلْبِسْ أَبِي قَمِيصَكَ الَّذِي يَلِي جِلْدَكَ. قَالَ سُفْيَانُ فَيُرَوْنَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَلْبَسَ عَبْدَ اللَّهِ قَمِيصَهُ مُكَافَأَةً لِمَا صَنَعَ.
பாடம் : 77
ஏதேனும் காரணத்திற்காகப் பிரேதத்தைச் சவக்குழியிலி ருந்தோ உட்குழியிலிருந்தோ வெளியில் எடுக்கலாமா?
1350. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை (மரணித்து) சவக்குழிக்குள் வைக்கப்பட்டபிறகு அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்; அவரது சடலத்தை வெளியே எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவரது சடலம் வெளியே எடுக்கப்பட்டது.
உடனே அதைத் தம் முழங்கால்கள்மீது வைத்து, அதன்மீது தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது மேலங்கியை அதற்கு அணிவித்தார்கள். (இவ்வாறு நபியவர்கள் செய்ததற்குக் காரணம் என்ன என்பதை) அல்லாஹ்வே நன்கறிவான். (இருந்தாலும், நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (அவர் பத்ரில் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டு ஆடையின்றி இருந்தபோது) அப்துல்லாஹ் பின் உபை ஓர் மேலங்கியை அணிவித்தார் (என்பது காரணமாக இருக்கலாம்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சுஃப்யான் பின் உயைனா, அபூஹாரூன் (ரஹ்) ஆகியோர் கூறியிருப்பதாவது:
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது இரு மேலங்கிகள் இருந்தன. அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உபையின் (முஸ்லிமான) புதல்வர், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மேனி யைத் தழுவியுள்ள உங்களது மேலங்கியை என் தந்தைக்கு அணிவியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
“அப்துல்லாஹ் பின் உபைக்கு நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அணிவித்தது, அவர் (பத்ர் போரின் போது கைதான அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு) உதவியதற்கான பிரதி உபகாரம்தான் என்றே பலரும் கருது கின்றனர் என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1351. حَدَّثَنَا مُسَدَّدٌ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِي إِلاَّ مَقْتُولاً فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَإِنِّي لاَ أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَىَّ مِنْكَ، غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَإِنَّ عَلَىَّ دَيْنًا فَاقْضِ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا. فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ، وَدُفِنَ مَعَهُ آخَرُ فِي قَبْرٍ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ الآخَرِ فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ.
பாடம் : 77
ஏதேனும் காரணத்திற்காகப் பிரேதத்தைச் சவக்குழியிலி ருந்தோ உட்குழியிலிருந்தோ வெளியில் எடுக்கலாமா?
1351. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போர் நடக்கவிருந்தபோது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, “நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (நாளைய போரில்) முதலில் நான்தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். எனக்குப்பின் நான் விட்டுச்செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிரவுள்ள மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரிய வராகக் கருதவில்லை. என்மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன் சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்” என்றார்கள்.
மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொரு வரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் என் தந்தை அடக்கத் தலத்தில் இருப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் அடக்கத் தலத்திலிருந்து வெளியில் எடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர்போல -அவரது காதைத் தவிர- உடம்பு அப்படியே இருந்தது.

1352. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ شُعْبَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ دُفِنَ مَعَ أَبِي رَجُلٌ فَلَمْ تَطِبْ نَفْسِي حَتَّى أَخْرَجْتُهُ فَجَعَلْتُهُ فِي قَبْرٍ عَلَى حِدَةٍ.
பாடம் : 77
ஏதேனும் காரணத்திற்காகப் பிரேதத்தைச் சவக்குழியிலி ருந்தோ உட்குழியிலிருந்தோ வெளியில் எடுக்கலாமா?
1352. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையுடன் இன்னொருவர் அடக்கம் செய்யப்பட்டார்; ஆயினும், எனது மனம் அதை விரும்பவில்லை. எனவே, அவரது உடலை வெளியில் எடுத்து, அதைத் தனி கப்றில் அடக்கம் செய்தேன்.

1353. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجْمَعُ بَيْنَ رَجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ ثُمَّ يَقُولُ "" أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ "". فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ فَقَالَ "" أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ يَوْمَ الْقِيَامَةِ "". فَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ وَلَمْ يُغَسِّلْهُمْ.
பாடம் : 78
உட்குழியுடன் கூடிய கப்றும் உட்குழியில்லாத கப்றும்
1353. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு நபர்களாகச் சேர்த்து, (ஒரே ஆடையில் கஃபன் இட்டுவிட்டு), “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்ட தும், அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்தார்கள். பிறகு “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அவர் களை அடக்குமாறு கட்டளையிட்டார் கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் நீராட்டவில்லை.

1354. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ عُمَرَ انْطَلَقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي رَهْطٍ قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى وَجَدُوهُ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ عِنْدَ أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ ابْنُ صَيَّادٍ الْحُلُمَ فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ ثُمَّ قَالَ لاِبْنِ صَيَّادٍ " تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ ". فَنَظَرَ إِلَيْهِ ابْنُ صَيَّادٍ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ. فَقَالَ ابْنُ صَيَّادٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَرَفَضَهُ وَقَالَ آمَنْتُ بِاللَّهِ وَبِرُسُلِهِ. فَقَالَ لَهُ " مَاذَا تَرَى ". قَالَ ابْنُ صَيَّادٍ يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ " ثُمَّ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنِّي قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا ". فَقَالَ ابْنُ صَيَّادٍ هُوَ الدُّخُّ. فَقَالَ " اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ ". فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ دَعْنِي يَا رَسُولَ اللَّهِ أَضْرِبْ عُنُقَهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنْ يَكُنْهُ فَلَنْ تُسَلَّطَ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْهُ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ ". وَقَالَ سَالِمٌ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ انْطَلَقَ بَعْدَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ إِلَى النَّخْلِ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ وَهُوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ ابْنُ صَيَّادٍ فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ مُضْطَجِعٌ، يَعْنِي فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْزَةٌ أَوْ زَمْرَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ فَقَالَتْ لاِبْنِ صَيَّادٍ يَا صَافِ ـ وَهْوَ اسْمُ ابْنِ صَيَّادٍ ـ هَذَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم. فَثَارَ ابْنُ صَيَّادٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ". وَقَالَ شُعَيْبٌ فِي حَدِيثِهِ فَرَفَصَهُ رَمْرَمَةٌ، أَوْ زَمْزَمَةٌ. وَقَالَ إِسْحَاقُ الْكَلْبِيُّ وَعُقَيْلٌ رَمْرَمَةٌ. وَقَالَ مَعْمَرٌ رَمْزَةٌ.
பாடம் : 79
இஸ்லாத்தை ஏற்ற சிறுவன் இறந்துவிட்டால் அவனுக்கு இறுதித் தொழுகை நடத்தப்படுமா? (பருவமடையாத) சிறுவனிடம் இஸ்லாத்தை எடுத்துச்சொல்லலாமா?27
ஹசன் அல்பஸ்ரீ, ஷுரைஹ், இப்ராஹீம் அந்நகஈ, கதாதா (ரஹ்) ஆகியோர், “தாய், தந்தை இருவரில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டால் அவர் களின் குழந்தை அந்த முஸ்லிமுடன் தான் சேர்க்கப்படும்” எனக் கூறுகின்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (மக்காவில்) பலவீனவர்களில் ஒருவரான தம் தாயாருடன்தான் இருந்தார்; அப்போது தம் சமூகத்தா(ரான குறைஷி ய)ரின் மதத்தில் இருந்த தந்தையுடன் இருக்கவில்லை. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இஸ்லாம்தான் உயர்ந்தது; அது ஒரு போதும் தாழ்ந்து விடாது” என்று கூறினார்கள்.28
1354. 1355 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் ஒரு குழுவுடன் சென்றபோது, அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். பருவ வயதை நெருங்கிவிட்டிருந்த இப்னு ஸய்யாத் ‘பனூ மஃகாலா’ குலத் தாரின் மேட்டுப் பகுதியில் சிறுவர்களு டன் விளையாடிக்கொண்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் (அவனைக்) கையால் தட்டுகின்ற வரை, (நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் வந்திருப்பதை) அவன் உணரவில்லை.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அவனி டம், “நான்தான் இறைத்தூதர் என நீ உறுதிகூறுகின்றாயா?” எனக் கேட்டார் கள். இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர் களை நோட்டமிட்டுவிட்டு, “நீர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் நபி என நான் உறுதிகூறுகின்றேன்” என்று சொன்னான்.
பிறகு இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் தூதர் என நீர் உறுதிகூறுகின்றீரா?” எனக் கேட்டான். நபி (ஸல்) அவர்கள் (எதுவும் கேட்காமல்) அவனை விட்டுவிட்டு, “நான் அல்லாஹ்வையும் அவனு டைய தூதர்களையும் நம்பியுள்ளேன்” எனக் கூறினார்கள். பிறகு “(உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு இப்னு ஸய்யாத், “எனக்கு மெய்யான செய்திகளும் (சில சமயம்) பொய்யான செய்திகளும் உதிக்கின்றன” என்றான். நபி (ஸல்) அவர்கள், “உனக்கு இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, “நான் (உனக்காக) ஒன்றை மனதில் மறைத்துவைத்துள்ளேன் (அது யாது)?” எனக் கேட்டார்கள். (அப்போது நபியவர்கள் ‘அத்துகான்’ எனும் (44ஆவது) அத்தியாயத்தின் 10ஆவது வசனத்தை மனதிற்குள் நினைத்துக்கொண்டார்கள்.)
அதற்கு இப்னு ஸய்யாத், “அது (‘அத்துகான்’ என்பதை) ‘துக்’ என (அரைகுறையாக)ச் சொன்னான். உடனே நபி (ஸல்) அவர்கள், “தூர விலகிப் போ! நீ உனது எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்றார்கள்.29
அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்! இவனது கழுத்தை வெட்டிவிடு கிறேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உமக்குக் கொடுக்கப்பட வில்லை; இவன் அவனாக இல்லை யெனில் இவனைக் கொல்வதில் உமக்கு எந்தப் பலனும் இல்லை” எனக் கூறினார்கள்.
பின்னர் (மற்றொரு சந்தர்ப்பத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருக்கும் பேரீச்சம் தோட்டத்திற்குச் சென்றனர். இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன் ஒளிந்திருந்து அவனிடமிருந்து எதை யேனும் செவியேற்க வேண்டும் என நபியவர்கள் திட்டமிட்டார்கள். அங்கு இப்னு ஸய்யாத் ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக்கொண்டு எதையோ முணுமுணுத்தபடி படுத்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்.
அப்போது இப்னு ஸய்யாதின் தாய், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈச்ச மரங்களிடையே ஒளிந்து ஒளிந்து வருவதைப் பார்த்துவிட்டார். உடனே இப்னு ஸய்யாதிடம், “ஸாஃபியே! -இது அவனுடைய பெயர்- “இதோ, முஹம்மத் (வந்து விட்டார்)” என்று கூறியதும், இப்னு ஸய்யாத் குதித்தெழுந்தான்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண், அவனை(ப் பேச)விட்டி ருந்தால் அவன் (தனது நிலையை) வெளிப்படுத்தியிருப்பான்” எனக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், (‘அவனை விட்டுவிட்டார் கள்’ என்பதைக் குறிக்க ‘ரஃபள’ எனும் சொல்லுக்குப் பதிலாக) ‘ரஃபஸ’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. (‘முணுமுணுப்பு’ என்பதைக் குறிக்க சில அறிவிப்புகளில்) ‘ரம்ரமா’ என்றும், ‘ஸம்ஸமா’ என்றும், வேறுசில அறிவிப்புகளில் ‘ரம்ஸா’ என்றும் இடம்பெற்றுள்ளது.

1356. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ وَهْوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ "" أَسْلِمْ "". فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهْوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم. فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ يَقُولُ "" الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ "".
பாடம் : 79
இஸ்லாத்தை ஏற்ற சிறுவன் இறந்துவிட்டால் அவனுக்கு இறுதித் தொழுகை நடத்தப்படுமா? (பருவமடையாத) சிறுவனிடம் இஸ்லாத்தை எடுத்துச்சொல்லலாமா?27
ஹசன் அல்பஸ்ரீ, ஷுரைஹ், இப்ராஹீம் அந்நகஈ, கதாதா (ரஹ்) ஆகியோர், “தாய், தந்தை இருவரில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டால் அவர் களின் குழந்தை அந்த முஸ்லிமுடன் தான் சேர்க்கப்படும்” எனக் கூறுகின்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (மக்காவில்) பலவீனவர்களில் ஒருவரான தம் தாயாருடன்தான் இருந்தார்; அப்போது தம் சமூகத்தா(ரான குறைஷி ய)ரின் மதத்தில் இருந்த தந்தையுடன் இருக்கவில்லை. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இஸ்லாம்தான் உயர்ந்தது; அது ஒரு போதும் தாழ்ந்து விடாது” என்று கூறினார்கள்.28
1356. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவர் திடீரென நோயுற்றார். எனவே, அவரை நலம் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றபோது, அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக் கொள்” என்றார்கள். உடனே அவர் தம்மருகிலிருந்த தந்தையைப் பார்த்தார். அப்போது அவர், “அபுல்காசிம் (நபி (ஸல்) அவர்களின்) சொல்லுக்குக் கட்டுப்படு!” என்றதும், அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறி னார்கள்.

1357. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ عُبَيْدُ اللَّهِ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ كُنْتُ أَنَا وَأُمِّي، مِنَ الْمُسْتَضْعَفِينَ أَنَا مِنَ الْوِلْدَانِ، وَأُمِّي، مِنَ النِّسَاءِ.
பாடம் : 79
இஸ்லாத்தை ஏற்ற சிறுவன் இறந்துவிட்டால் அவனுக்கு இறுதித் தொழுகை நடத்தப்படுமா? (பருவமடையாத) சிறுவனிடம் இஸ்லாத்தை எடுத்துச்சொல்லலாமா?27
ஹசன் அல்பஸ்ரீ, ஷுரைஹ், இப்ராஹீம் அந்நகஈ, கதாதா (ரஹ்) ஆகியோர், “தாய், தந்தை இருவரில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டால் அவர் களின் குழந்தை அந்த முஸ்லிமுடன் தான் சேர்க்கப்படும்” எனக் கூறுகின்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (மக்காவில்) பலவீனவர்களில் ஒருவரான தம் தாயாருடன்தான் இருந்தார்; அப்போது தம் சமூகத்தா(ரான குறைஷி ய)ரின் மதத்தில் இருந்த தந்தையுடன் இருக்கவில்லை. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இஸ்லாம்தான் உயர்ந்தது; அது ஒரு போதும் தாழ்ந்து விடாது” என்று கூறினார்கள்.28
1357. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் சிறுவனாகவும், என் தாயார் பெண்ணாகவும் இருந்ததால் நானும் என் தாயாரும் (சமுதாயத்தின்) பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்களாக (மக்காவில்) இருந்தோம்.

1358. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ ابْنُ شِهَابٍ يُصَلَّى عَلَى كُلِّ مَوْلُودٍ مُتَوَفًّى وَإِنْ كَانَ لِغَيَّةٍ، مِنْ أَجْلِ أَنَّهُ وُلِدَ عَلَى فِطْرَةِ الإِسْلاَمِ، يَدَّعِي أَبَوَاهُ الإِسْلاَمَ أَوْ أَبُوهُ خَاصَّةً، وَإِنْ كَانَتْ أُمُّهُ عَلَى غَيْرِ الإِسْلاَمِ، إِذَا اسْتَهَلَّ صَارِخًا صُلِّيَ عَلَيْهِ، وَلاَ يُصَلَّى عَلَى مَنْ لاَ يَسْتَهِلُّ مِنْ أَجْلِ أَنَّهُ سِقْطٌ، فَإِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ كَانَ يُحَدِّثُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ "". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه – {فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا} الآيَةَ.
பாடம் : 79
இஸ்லாத்தை ஏற்ற சிறுவன் இறந்துவிட்டால் அவனுக்கு இறுதித் தொழுகை நடத்தப்படுமா? (பருவமடையாத) சிறுவனிடம் இஸ்லாத்தை எடுத்துச்சொல்லலாமா?27
ஹசன் அல்பஸ்ரீ, ஷுரைஹ், இப்ராஹீம் அந்நகஈ, கதாதா (ரஹ்) ஆகியோர், “தாய், தந்தை இருவரில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டால் அவர் களின் குழந்தை அந்த முஸ்லிமுடன் தான் சேர்க்கப்படும்” எனக் கூறுகின்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (மக்காவில்) பலவீனவர்களில் ஒருவரான தம் தாயாருடன்தான் இருந்தார்; அப்போது தம் சமூகத்தா(ரான குறைஷி ய)ரின் மதத்தில் இருந்த தந்தையுடன் இருக்கவில்லை. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இஸ்லாம்தான் உயர்ந்தது; அது ஒரு போதும் தாழ்ந்து விடாது” என்று கூறினார்கள்.28
1358. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறந்துவிட்ட எல்லாக் குழந்தை களுக்கும் இறுதித் தொழுகை நடத்தப் படும். அது விபசாரிக்குப் பிறந்ததாக இருந்தாலும் சரியே! ஏனெனில், அது இயற்கையாகவே இஸ்லாத்தில்தான் பிறக்கிறது.
குழந்தையின் பெற்றோர் முஸ்லிம் களாக இருந்து, அல்லது குறிப்பாகத் தந்தை மட்டும் முஸ்லிமாகவும் தாய் வேற்று மதத்தவளாகவும் இருந்து, அவர்களின் குழந்தை பிறந்தபோது சப்தமிட்டு, பிறகு இறந்தால் அதற்கு இறுதித் தொழுகை நடத்தப்படும்; சப்தமிடவில்லையாயின் அதற்குத் தொழுகையில்லை; ஏனெனில், அது குறைபேறு (கருச்சிதைவு) ஆகும்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போன்றே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர் களாகவோ அக்னி ஆராதனையாளர்களாகவோ மாற்றிவிடுகின்றனர்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனது (நிலையான) இயற்கை மார்க்க மாகும்; அல்லாஹ்வின் படைப்புக்கு மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” (30:30) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

1359. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ "". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه {فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ}
பாடம் : 79
இஸ்லாத்தை ஏற்ற சிறுவன் இறந்துவிட்டால் அவனுக்கு இறுதித் தொழுகை நடத்தப்படுமா? (பருவமடையாத) சிறுவனிடம் இஸ்லாத்தை எடுத்துச்சொல்லலாமா?27
ஹசன் அல்பஸ்ரீ, ஷுரைஹ், இப்ராஹீம் அந்நகஈ, கதாதா (ரஹ்) ஆகியோர், “தாய், தந்தை இருவரில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டால் அவர் களின் குழந்தை அந்த முஸ்லிமுடன் தான் சேர்க்கப்படும்” எனக் கூறுகின்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (மக்காவில்) பலவீனவர்களில் ஒருவரான தம் தாயாருடன்தான் இருந்தார்; அப்போது தம் சமூகத்தா(ரான குறைஷி ய)ரின் மதத்தில் இருந்த தந்தையுடன் இருக்கவில்லை. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இஸ்லாம்தான் உயர்ந்தது; அது ஒரு போதும் தாழ்ந்து விடாது” என்று கூறினார்கள்.28
1359. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அவ்வாறே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக் கின்றன. விலங்குகள் அங்கக் குறைவு டன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர் களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர் கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களா கவோ கிறித்தவர்களாகவோ அக்னி ஆராதனையாளர்களாகவோ மாற்றிவிடு கின்றனர்.”
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனது (நிலையான) இயற்கை மார்க்க மாகும்; அல்லாஹ்வின் படைப்புக்கு மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும்” (30:30) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

1360. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَبِي طَالِبٍ "" يَا عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ "". فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ، أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ الْمَقَالَةِ، حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَا وَاللَّهِ لأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْكَ "". فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ {مَا كَانَ لِلنَّبِيِّ} الآيَةَ.
பாடம் : 80
இணைவைப்பாளர் மரணத் தறுவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறினால்...
1360. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது, நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “என் தந்தையின் சகோதரரே! லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி யம் கூறுவேன்” எனக் கூறினார்கள்.
அப்போது அபூஜஹ்லும் அப்துல் லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூ தாலிபே! (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக் கப்போகின்றீரா?” எனக் கேட்டனர்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசிப் பேச்சாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக் கின்றேன்)” என்று கூறியதோடு, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் வின் மீதாணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள்.
அப்போது “இணைவைப்பாளர்கள் நரகவாசிகள் என்பது தெளிவான பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்கூட அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கை கொண்டோருக்கும் தகாது” (9:113) எனும் வசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான்.

1361. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ مَرَّ بِقَبْرَيْنِ يُعَذَّبَانِ فَقَالَ "" إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ "". ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً فَشَقَّهَا بِنِصْفَيْنِ، ثُمَّ غَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً. فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، لِمَ صَنَعْتَ هَذَا فَقَالَ "" لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا "".
பாடம் : 81
அடக்கத் தலத்தில் ஈரமான பேரீச்ச மட்டையை நட்டுவைப்பது
புரைதா பின் அல்ஹஸீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள், தமது அடக்கத் தலத்தில் இரண்டு பேரீச்சமட்டைகளை நட்டுவைக்குமாறு இறுதி விருப்பம் தெரிவித்தார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களது அடக்கத் தலத்தின் மீது கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந் ததைப் பார்த்த இப்னு உமர் (ரலி) அவர்கள், (ஒரு சிறுவனிடம்), “சிறுவரே! இதை அகற்றிவிடும்! அவருக்கு அவருடைய நற்செயல்கள்தான் நிழல் கொடுக்கும்” எனக் கூறினார்கள்.
காரிஜா பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் உஸ்மான் (ரலி) அவர் களது (ஆட்சிக்) காலத்தில் இளைஞர் களாக இருந்தோம். அப்போது யார் உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர் களது அடக்கத் தலத்தைக் குதித்துத் தாண்டுகிறாரோ அவரே எங்களில் அதிக தூரம் குதித்துத் தாண்டுபவரா யிருந்தார்.
உஸ்மான் பின் ஹகீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
காரிஜா எனது கையைப் பிடித்து என்னை ஒரு அடக்கத் தலத்தின் மீது உட்கார வைத்துவிட்டு, “அடக்கத் தலத் தின்மீது அசுத்தம் செய்பவராக அமர்வதுதான் வெறுக்கத் தக்கது” எனத் தம் தந்தையின் சகோதரர் யஸீத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றார்.
“இப்னு உமர் (ரலி) அவர்கள் அடக்கத் தலங்கள் (கப்று)மீது உட்காருபவராக இருந்தார்கள்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1361. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இருவரின் அடக்கத் தலங்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால், ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர் களில் ஒருவரோ, சிறுநீர் கழிக்கும்போது (உடலை) மறைக்காதவர்; இன்னொரு வரோ கோள்சொல்லித் திரிந்தவர்” என்று கூறினார்கள்.
பின்னர் ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார் கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1362. حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنِي جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الْغَرْقَدِ، فَأَتَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ، وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ، فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ ثُمَّ قَالَ "" مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ، مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلاَّ كُتِبَ مَكَانُهَا مِنَ الْجَنَّةِ وَالنَّارِ، وَإِلاَّ قَدْ كُتِبَ شَقِيَّةً أَوْ سَعِيدَةً "". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ، فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَأَمَّا مَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ قَالَ "" أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ السَّعَادَةِ، وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ الشَّقَاوَةِ ""، ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى} الآيَةَ.
பாடம் : 82
அடக்கத் தலத்தின் அருகில் ஒருவர் (அமர்ந்து) உபதேசம் செய்வதும் அவரைச் சுற்றி அவருடைய நண்பர்கள் அமர்ந் திருப்பதும்
“அந்நாளில் அவர்கள் அடக்கத் தலங்களிலிருந்து வெளியேறுவார்கள்” (70:43) எனும் இறைவசனத்(தின் மூலத்)தில் (அடக்கத் தலங்கள் என்பதைக் குறிக்க) ‘அல்அஜ்தாஸ்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘மண்ணறைகள்’ (கப்றுகள்) என்பது பொருள்.
“அடக்கத் தலங்கள் தோண்டப்படும்போது” (82:4) எனும் வசனத்(தின் மூலத்)தில் இடம்பெற்றுள்ள ‘புஅஸிரத்’ எனும் சொல்லுக்கு ‘தோண்டி எடுத்தல்’ என்பது பொருளாகும். நீர்த் தொட்டியைத் தலைகீழாகத் தோண்டுவதற்கும் இச்சொல்லைப் பயன்படுத்துவர்.
“பலிபீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போன்று” (70:43) எனும் வசனத்(தின் மூலத்)தில் இடம்பெற்றுள்ள ‘யூஃபிளூன’ என்பதற்கு ‘விரைவார்கள்’ என்பது பொருள். (பலிபீடங்கள் என்பதைக் குறிக்கும் ‘நுஸுப்’ என்பதை) ‘நஸ்ப்’ என அஃமஷ் (ரஹ்) உச்சரித்துள்ளார். இதற்கு, ‘நட்டுவைக்கப்பட்டுள்ள பொருள்’ என்பது அர்த்தம். ஆனால், ‘நுஸ்ப்’ என்பதே ஒருமைதான். ‘நஸ்ப்’ (நட்டு வைத்தல்) என்பது வேர்ச்சொல்லாகும்.
“எக்காளம் ஊதப்படும். உடனே அவர்கள் அடக்கத் தலங்களிலிருந்து தம் இறைவனை நோக்கிப் புறப்படுவார்கள் (யன்சிலூன்)”. (36:51)
1362. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ‘பகீஉல் ஃகர்கத்’ எனும் பொது மையவாடியில் ஒரு பிரேத நல்லடக்கத்தில் கலந்துகொண்டோம் அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும், நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலை குனிந்தவர்களாகத் தமது கைத்தடியால் தரையைக் கீறியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள்.
“உங்களில் ‘யாரும்’ அல்லது ‘பிறந்து விட்ட எந்த உயிரும்’ தமது இருப்பிடம் சொர்க்கமா, அல்லது நரகமா என்று எழுதப்படாமலிருப்பதில்லை; அவ்வாறே, அது நற்பேறற்றதா, நற்பேறு பெற்றதா என்றும் எழுதப்படாமல் இருப்பதில்லை” எனக் கூறினார்கள்.
அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியாயின், ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டதன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நற்செயல்கள் புரியாமல் நாங்கள் இருந்துவிடமாட்டோமா? ஏனெனில், நம்மில் யார் நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் அந்த நல்லவர்களின் செயலின் பக்கம் செல்லப்போகிறார்; யார் நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் அந்தக் கெட்டவர்களின் செயலின் பக்கம் செல்லப்போகிறார்” என்று சொன்னார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “யார் நற்பேறு பெற்றவர்களோ அவர்களுக்கு நற்செயல் எளிதாக்கப்படும்; யார் நற்பேறற் றவர்களோ அவர்களுக்குக் கெட்ட செயல் எளிதாக்கப்படும்” என்று கூறினார்கள்.
பிறகு “எவர் தானதர்மம் கொடுத்து, இறையச்சத்துடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகின்றாரோ...” என்று தொடங்கும் (92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

1363. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا مُتَعَمِّدًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ".
பாடம் : 83
தற்கொலை செய்தவர் குறித்து வந்துள்ளவை
1363. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே (இஸ்லாம் அல்லாத மார்க்கத் தில்) ஆகிவிடுவார். யார் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள் கிறாரோ அவர் அதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார்.
இதை ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.