1178. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبَّاسٌ الْجُرَيْرِيُّ ـ هُوَ ابْنُ فَرُّوخَ ـ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحَى، وَنَوْمٍ عَلَى وِتْرٍ.
பாடம் : 33 உள்ளூரில் இருக்கும்போது ‘ளுஹா’ தொழுவது நபி (ஸல்) அவர்களைப் பற்றி (அவர்கள் ‘ளுஹா’ தொழுததாக) இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள் ளார்கள்.
1178. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, (இரண்டு ரக்அத்கள்) ‘ளுஹா’ தொழுகை தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள்) எனக்கு அறிவுறுத்தினார் கள். அவற்றை நான் இறக்கும்வரை கை விடமாட்டேன்.


அத்தியாயம் : 19
1179. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيَّ، قَالَ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ـ وَكَانَ ضَخْمًا ـ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي لاَ أَسْتَطِيعُ الصَّلاَةَ مَعَكَ. فَصَنَعَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم طَعَامًا، فَدَعَاهُ إِلَى بَيْتِهِ، وَنَضَحَ لَهُ طَرَفَ حَصِيرٍ بِمَاءٍ فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ. وَقَالَ فُلاَنُ بْنُ فُلاَنِ بْنِ جَارُودٍ لأَنَسٍ ـ رضى الله عنه ـ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى فَقَالَ مَا رَأَيْتُهُ صَلَّى غَيْرَ ذَلِكَ الْيَوْمِ.
பாடம் : 33 உள்ளூரில் இருக்கும்போது ‘ளுஹா’ தொழுவது நபி (ஸல்) அவர்களைப் பற்றி (அவர்கள் ‘ளுஹா’ தொழுததாக) இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள் ளார்கள்.
1179. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உடல் பருமனாக இருந்த ஓர் அன்சாரித் தோழர் (இத்பான் பின் மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் நின்று தொழ முடிவதில்லை” என்று கூறினார். எனவே, அவர் நபியவர்களுக் காக உணவு சமைத்துத் தமது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார்.

(அவரது இல்லத்திற்கு நபி (ஸல்) அவர்கள் சென்றபோது) அவர்கள் தொழுவதற்காக அவர் (பாயொன்றை விரித்து, பதப்படுத்துவதற்காக அந்தப்) பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். நபி (ஸல்) அவர்கள் அதன்மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அப்துல் ஹமீத் பின் முன்திர் பின் அல்ஜாரூத் (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுவார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை” என விடையளித்தார்கள்.

இதை அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34

அத்தியாயம் : 19
1180. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ حَفِظْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَشْرَ رَكَعَاتٍ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ فِي بَيْتِهِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ، وَكَانَتْ سَاعَةً لاَ يُدْخَلُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهَا.
பாடம் : 34 லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவது
1180. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுத பத்து ரக்அத் (சுன்னத்) தொழுகைகளை நான் நினைவில் வைத்துள்ளேன். (அவை:) லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள். லுஹ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள். மஃக்ரிப் தொழுகைக் குப்பின் தமது வீட்டில் இரண்டு ரக்அத் கள். இஷா தொழுகைக்குப்பின் தமது வீட்டில் தொழுத இரண்டு ரக்அத்கள். சுப்ஹு தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள்.

சுப்ஹுக்குமுன் உள்ள அந்த நேரம் நபி (ஸல்) அவர்களிடம் (அந்நியர்) யாரும் செல்ல முடியாத நேரமாகும்.35


அத்தியாயம் : 19
1181. حَدَّثَتْنِي حَفْصَةُ، أَنَّهُ كَانَ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ وَطَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ.
பாடம் : 34 லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவது
1181. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை அறிவிப்பாளர் பாங்கு சொல்லி, ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டால், நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள் என என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


அத்தியாயம் : 19
1182. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ. تَابَعَهُ ابْنُ أَبِي عَدِيٍّ وَعَمْرٌو عَنْ شُعْبَةَ.
பாடம் : 34 லுஹ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுவது
1182. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்குமுன் நான்கு ரக்அத்களும் சுப்ஹு தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்களும் தொழாமல் இருந்ததில்லை.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 19
1183. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ الْمُزَنِيُّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" صَلُّوا قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ "". ـ قَالَ فِي الثَّالِثَةِ ـ لِمَنْ شَاءَ كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً.
பாடம் : 35 மஃக்ரிப் தொழுகைக்குமுன் தொழுவது
1183. அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “மஃக்ரிப் தொழு கைக்குமுன் (இரு ரக்அத்கள் சுன்னத்) தொழுங்கள்” என (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும்போது, அதை (எங்கே) மக்கள் (அவசியம் பின்பற்ற வேண்டிய) ஒரு ‘சுன்னத்’தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும்தான்” என்றார்கள்.


அத்தியாயம் : 19
1184. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، قَالَ سَمِعْتُ مَرْثَدَ بْنَ عَبْدِ اللَّهِ الْيَزَنِيَّ، قَالَ أَتَيْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ فَقُلْتُ أَلاَ أُعْجِبُكَ مِنْ أَبِي تَمِيمٍ يَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ. فَقَالَ عُقْبَةُ إِنَّا كُنَّا نَفْعَلُهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قُلْتُ فَمَا يَمْنَعُكَ الآنَ قَالَ الشُّغْلُ.
பாடம் : 35 மஃக்ரிப் தொழுகைக்குமுன் தொழுவது
1184. மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (எகிப்தின் ஆளுநராயிருந்த) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் சென்று, “அபூதமீம் (அப்துல்லாஹ் பின் மாலிக்-ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்துவந்தோம்” என்று விடையளித்தார்கள். “இப்போது ஏன் நீங்கள் செய்வதில்லை?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அலுவல்களே காரணம்’ என்றார்கள்.36

அத்தியாயம் : 19
1185. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ الأَنْصَارِيُّ، أَنَّهُ عَقَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، وَعَقَلَ مَجَّةً مَجَّهَا فِي وَجْهِهِ مِنْ بِئْرٍ كَانَتْ فِي دَارِهِمْ. فَزَعَمَ مَحْمُودٌ أَنَّهُ سَمِعَ عِتْبَانَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيّ َ ـ رضى الله عنه ـ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ كُنْتُ أُصَلِّي لِقَوْمِي بِبَنِي سَالِمٍ، وَكَانَ يَحُولُ بَيْنِي وَبَيْنَهُمْ وَادٍ إِذَا جَاءَتِ الأَمْطَارُ فَيَشُقُّ عَلَىَّ اجْتِيَازُهُ قِبَلَ مَسْجِدِهِمْ، فَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ إِنِّي أَنْكَرْتُ بَصَرِي، وَإِنَّ الْوَادِيَ الَّذِي بَيْنِي وَبَيْنَ قَوْمِي يَسِيلُ إِذَا جَاءَتِ الأَمْطَارُ فَيَشُقُّ عَلَىَّ اجْتِيَازُهُ، فَوَدِدْتُ أَنَّكَ تَأْتِي فَتُصَلِّي مِنْ بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلًّى. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" سَأَفْعَلُ "". فَغَدَا عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ بَعْدَ مَا اشْتَدَّ النَّهَارُ فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَذِنْتُ لَهُ فَلَمْ يَجْلِسْ حَتَّى قَالَ "" أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ "". فَأَشَرْتُ لَهُ إِلَى الْمَكَانِ الَّذِي أُحِبُّ أَنْ أُصَلِّيَ فِيهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَكَبَّرَ وَصَفَفْنَا وَرَاءَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ وَسَلَّمْنَا حِينَ سَلَّمَ، فَحَبَسْتُهُ عَلَى خَزِيرٍ يُصْنَعُ لَهُ فَسَمِعَ أَهْلُ الدَّارِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِي فَثَابَ رِجَالٌ مِنْهُمْ حَتَّى كَثُرَ الرِّجَالُ فِي الْبَيْتِ. فَقَالَ رَجُلٌ مِنْهُمْ مَا فَعَلَ مَالِكٌ لاَ أَرَاهُ. فَقَالَ رَجُلٌ مِنْهُمْ ذَاكَ مُنَافِقٌ لاَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقُلْ ذَاكَ أَلاَ تَرَاهُ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ "". فَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. أَمَّا نَحْنُ فَوَاللَّهِ لاَ نَرَى وُدَّهُ وَلاَ حَدِيثَهُ إِلاَّ إِلَى الْمُنَافِقِينَ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ "". قَالَ مَحْمُودٌ فَحَدَّثْتُهَا قَوْمًا فِيهِمْ أَبُو أَيُّوبَ صَاحِبُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَتِهِ الَّتِي تُوُفِّيَ فِيهَا وَيَزِيدُ بْنُ مُعَاوِيَةَ عَلَيْهِمْ بِأَرْضِ الرُّومِ، فَأَنْكَرَهَا عَلَىَّ أَبُو أَيُّوبَ قَالَ وَاللَّهِ مَا أَظُنُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَا قُلْتَ قَطُّ. فَكَبُرَ ذَلِكَ عَلَىَّ فَجَعَلْتُ لِلَّهِ عَلَىَّ إِنْ سَلَّمَنِي حَتَّى أَقْفُلَ مِنْ غَزْوَتِي أَنْ أَسْأَلَ عَنْهَا عِتْبَانَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ إِنْ وَجَدْتُهُ حَيًّا فِي مَسْجِدِ قَوْمِهِ، فَقَفَلْتُ فَأَهْلَلْتُ بِحَجَّةٍ أَوْ بِعُمْرَةٍ، ثُمَّ سِرْتُ حَتَّى قَدِمْتُ الْمَدِينَةَ فَأَتَيْتُ بَنِي سَالِمٍ، فَإِذَا عِتْبَانُ شَيْخٌ أَعْمَى يُصَلِّي لِقَوْمِهِ فَلَمَّا سَلَّمَ مِنَ الصَّلاَةِ سَلَّمْتُ عَلَيْهِ وَأَخْبَرْتُهُ مَنْ أَنَا، ثُمَّ سَأَلْتُهُ عَنْ ذَلِكَ الْحَدِيثِ فَحَدَّثَنِيهِ كَمَا حَدَّثَنِيهِ أَوَّلَ مَرَّةٍ.
பாடம் : 36 கூடுதலான தொழுகைகளைக் கூட்டாகத் தொழுவது நபி (ஸல்) அவர்கள் குறித்து (அவர்கள் இவ்வாறு தொழுவித்ததாக) அனஸ் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித் துள்ளனர்.37
1185. மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவிருக்கிறது. (நான் சிறுவனாக இருந்தபோது) அவர்கள் என் வீட்டிலிருந்த ஒரு கிணற்றிலிருந்து (ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை (பாசத்தோடு) உமிழ்ந்ததை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.38

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் பத்ர் போரில் கலந்துகொண்ட வர்களில் ஒருவரான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் என் சமுதாயத்தாரான பனூ சாலிம் குலத்தாருக்கு (இமாமாகத்) தொழுகை நடத்திவந்தேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க்கும் என் குலத்தாரு(டைய பள்ளிவாசலு)க்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கில் தண்ணீர் ஓடியது. ஆகவே, அதைக் கடந்து அவர்களின் பள்ளிவாசலுக்கு வருவது எனக்குச் சிரமமாகிவிட்டது.

எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ் வின் தூதரே!) நான் என் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் என் சமுதாயத்தாருக்கும் இடையே வெள்ளநீர் வழிந்தோடுகிறது. என்னால் அதைக் கடக்க முடியவில்லை. எனவே, தாங்கள் வந்து எனது வீட்டில் தொழுகை நடத்த வேண்டும் என்றும் அவ்விடத்தை நான் (எனது) தொழுமிட மாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அல்லாஹ் நாடினால்) அவ்வாறே செய்கிறேன்” என்று கூறினார்கள்.

மறுநாள் நண்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் என்னிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்குள் வர) அனுமதி கோரினார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன். (வீட்டில் நுழைந்த தும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்காரக்கூட இல்லை. “(இத்பானே!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள் (என் வீட்டில்) எந்த இடத்தில் தொழ வேண்டுமென நான் விரும்பினேனோ அந்த இடத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்று (தொழுகைக்காக) ‘தக்பீர்’ கூறினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு ‘சலாம்’ கொடுத்தார்கள். அவர்கள் ‘சலாம்’ கொடுத்தபோது நாங்களும் ‘சலாம்’ கொடுத்தோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்திருந்த ‘கஸீர்’ எனும் (கோதுமைக் குறுணைக் கஞ்சி) உணவி(னை உண்பத)ற்காக அவர்களை நான் இருக்க வைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருப்பதைக் கேள்விப்பட்ட கணிசமான மக்கள் எனது வீட்டில் திரண்டுவிட்டனர்.

அவர்களில் ஒருவர், “மாலிக் பின் துக்ஷுன் என்ன ஆனார் (அவர் ஏன் வரவில்லை)?” என்று கேட்டார். அங்கி ருந்த மற்றொரு மனிதர், “அவர் அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர் (முனாபிக்). (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க அவர் வரவில்லை)” என்று கூறினார்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவ்வாறு சொல்லாதீர் கள்! அல்லாஹ்வின் அன்பை நாடி அவர், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறியதை நீர் பார்க்கவில்லையா?”’ என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மனிதர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவரது நேசமும் அவரது உரையாடலும் நயவஞ்ச கர்களுடன் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்” என்றார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் வின் அன்பை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் மக்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்களிடையே நபித்தோழர் அபூஅய்யூப் (காலித் பின் ஸைத்-ரலி) அவர்களும் இருந்தார்கள். -அன்னார் அப்போது நடைபெற்ற (கான்ஸ்டன்டி நோபிள்) போரிலேயே இறந்தார்கள். அப்போது கிழக்கு ரோமில் யஸீத் பின் முஆவியாவே அவர்களுக்கு ஆளுநராக இருந்தார்.- இந்த ஹதீஸை நான் கூறியபோது அதை அய்யூப் (ரலி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் கூறிய செய்தியை நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் சொல்லியிருக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்று அவர்கள் கூறினார்கள்.

இ(வ்வாறு அவர்கள் கூறிய)து எனக்குப் பெரும் கவலையளித்தது. “இந்தப் போரிலிருந்து அல்லாஹ் என்னை உயிரோடு திரும்பச் செய்து, இத்பான் (ரலி) அவர்களை அன்னாருடைய சமூகத் தாரின் பள்ளிவாசலில் உயிருடன் நான் கண்டால், இதுபற்றி அவரிடம் கேட்காமல் இருக்கப்போவதில்லை என்று அல்லாஹ் வின் மீது ஆணையிட்டு சபதம் செய்து கொண்டேன். நான் (ஊர்) திரும்பி ஹஜ்ஜுக்கோ உம்ராவுக்கோ இஹ்ராம் கட்டினேன். பின்னர் நான் மதீனா சென்றேன். பனூ சாலிம் கூட்டத்தாரிடம் சென்றேன். அங்கே வயது முதிர்ந்து பார்வையும் இழந்து இத்பான் (ரலி) அவர்கள் தம் சமுதாயத்திற்குத் தொழுவித் துக்கொண்டிருந்தார்கள்.

தொழுது சலாம் கொடுத்ததும் அவர்களுக்கு முகமன் கூறி, நான் யார் என்ற விவரத்தையும் கூறினேன். பிறகு இந்த ஹதீஸைப் பற்றி (திரும்ப) விசாரித்தேன். முதலில் எனக்கு அறிவித்தவாறே மீண்டும் எனக்கு அந்த ஹதீஸை அன்னார் அறிவித்தார்கள்.39

அத்தியாயம் : 19
1187. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، وَعُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اجْعَلُوا فى بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا "". تَابَعَهُ عَبْدُ الْوَهَّابِ عَنْ أَيُّوبَ.
பாடம் : 37 கூடுதலான தொழுகைகளை வீட்டில் தொழுவது
1187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) அடக்கத் தலங்களாக ஆக்கிவிடாதீர்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 19

1188. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ أَرْبَعًا قَالَ سَمِعْتُ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم وَكَانَ غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ غَزْوَةً ح.
பாடம் : 1 மக்கா மற்றும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு
1188. நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கேற்ற வரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியேற்றுள்ளேன்.2


அத்தியாயம் : 20
1189. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صلى الله عليه وسلم وَمَسْجِدِ الأَقْصَى "".
பாடம் : 1 மக்கா மற்றும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு
1189. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல் களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக் கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 20
1190. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ "".
பாடம் : 1 மக்கா மற்றும் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு
1190. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 20
1191. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ـ هُوَ الدَّوْرَقِيُّ ـ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ لاَ يُصَلِّي مِنَ الضُّحَى إِلاَّ فِي يَوْمَيْنِ يَوْمَ يَقْدَمُ بِمَكَّةَ، فَإِنَّهُ كَانَ يَقْدَمُهَا ضُحًى، فَيَطُوفُ بِالْبَيْتِ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ خَلْفَ الْمَقَامِ، وَيَوْمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ، فَإِنَّهُ كَانَ يَأْتِيهِ كُلَّ سَبْتٍ، فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَرِهَ أَنْ يَخْرُجَ مِنْهُ حَتَّى يُصَلِّيَ فِيهِ. قَالَ وَكَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَزُورُهُ رَاكِبًا وَمَاشِيًا.
பாடம் : 2 ‘குபா’ பள்ளிவாசல்3
1191. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் இரண்டு நாட்கள் தவிர வேறு நாட்களில் ‘ளுஹா’ தொழுகை தொழமாட்டார்கள்:

1. அவர்கள் மக்காவுக்கு வரக்கூடிய நாள். அந்நாளில் முற்பகல் (ளுஹா) நேரத்தில் வந்து, கஅபாவை ‘தவாஃப்’ செய்து ‘மகாமு இப்ராஹீம்’ எனும் இடத்திற்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

2. ‘குபா’ பள்ளிவாசலுக்குச் செல்லும் நாள். அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ‘குபா’ பள்ளிவாசலுக்குச் சென்று நுழைந்ததும் தொழாமல் வெளியே வரமாட்டார்கள்.

மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குபா’ பள்ளிவாசலுக்கு நடந்தும் ஊர்தியிலும் வரும் வழக்கம் உடைய வராக இருந்தார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.


அத்தியாயம் : 20
1192. قَالَ وَكَانَ يَقُولُ إِنَّمَا أَصْنَعُ كَمَا رَأَيْتُ أَصْحَابِي يَصْنَعُونَ، وَلاَ أَمْنَعُ أَحَدًا أَنْ يُصَلِّيَ فِي أَىِّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ، غَيْرَ أَنْ لاَ تَتَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا.
பாடம் : 2 ‘குபா’ பள்ளிவாசல்3
1192. மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்:

நான் என் தோழர்கள் செய்ததைப் போன்றே செய்கிறேன். இரவிலோ பகலிலோ தாம் நாடிய எந்த நேரத்தில் யார் தொழுதாலும் நான் தடுக்கமாட்டேன். ஆயினும், (சரியாக) சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ (தொழுவதற்காக) நீங்கள் தேர்ந்தெடுக் காதீர்கள்.4

அத்தியாயம் : 20
1193. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ كُلَّ سَبْتٍ مَاشِيًا وَرَاكِبًا. وَكَانَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَفْعَلُهُ.
பாடம் : 3 ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘குபா’ பள்ளிவாசலுக்குச் செல்வது
1193. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘குபா’ பள்ளிவாசலுக்கு நடந்தும் ஊர்தியிலும் வருவார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் செய்வார்கள்.

அத்தியாயம் : 20
1194. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا. زَادَ ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ.
பாடம் : 4 ‘குபா’ பள்ளிவாசலுக்கு நடந் தும் ஊர்தியிலும் செல்வது
1194. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘குபா’வுக்கு நடந்தும் ஊர்தியிலும் செல்வார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களின் அறி விப்பில், “அங்கே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்” என்றும் (இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகக்) கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம் : 20
1195. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ "".
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் அடக் கத் தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு
1195. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பர்)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.5

இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 20
1196. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي "".
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் அடக் கத் தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு
1196. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது சொற் பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ தடாகத் தின் மீது அமைந்துள்ளது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 20
1197. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، سَمِعْتُ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ بِأَرْبَعٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي قَالَ "" لاَ تُسَافِرِ الْمَرْأَةُ يَوْمَيْنِ إِلاَّ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ. وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الأَقْصَى وَمَسْجِدِي "".
பாடம் : 6 பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல்6
1197. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறிதயாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னை வியப்பில் ஆழ்த்தின; எனக்கு மகிழ்ச்சி அளித்தன. (அவை:)

1. ஒரு பெண், கணவனோ (மண முடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரோ உடன் இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்குப் பயணம் செய்யக் கூடாது.

2. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாது.

3. சுப்ஹு தொழுததிலிருந்து சூரியன் உதிக்கும்வரையும், அஸ்ர் தொழுததிலிருந்து சூரியன் மறையும்வரையும் தொழக் கூடாது.

4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் மக்திஸ்), எனது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்றப் பள்ளிவாசல்களுக்கு (அதிக நன்மையை நாடிப்) புனிதப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.

அத்தியாயம் : 20